ப. சிதம்பரத்தைக் காப்பாற்றத் துடிக்கும் நிதி அமைச்சகம்

ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் சிக்கிய நான்கு ஐ ஏ எஸ் அதிகாரிகளை நிதி அமைச்சகம் ஊழல் வழக்கில் இருந்து காப்பாற்றும் முயற்சி

0
3316
https://tamil.pgurus.com/why-is-finance-ministry-bent-on-saving-pc-tamil/
https://tamil.pgurus.com/why-is-finance-ministry-bent-on-saving-pc-tamil/

ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்க நிதி அமைச்சகம் தயங்குகிறது. இந்த அனுமதியை உடனே பெறவேண்டும் என்றால் பிரதமர் அலுவலகம்  நிதி அமைச்சக நடவடிக்கைகளில் தலையிட வேண்டும்.

ப சிதம்பரத்துடன் குற்ற வழக்கில் சிக்கி இருக்கும் நான்கு ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபி ஐ முனைந்துள்ளது. இதற்கு உரிய அனுமதியை வழங்காமல் நிதி அமைச்சகம் இழுத்தடிக்கிறது. நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பலர் தன் முந்தைய எஜமானனுக்கு (ப. சிதம்பரத்துக்கு) விசுவாசமாக இருப்பதால் அனுமதி வழங்க மறுக்கின்றனர். இதனால் ப சிதம்பரம் மீதான வழக்கும் விசாரணை முடிந்து தீர்ப்பு பெறுவதில் கால தாமதம் ஆகிறது. ப. சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான நிதி அமைச்சர் ஜெட்லி இந்த அனுமதியை வழங்காமல் நூறு நாட்களாக இழுத்தடிக்கிறார்.  சி பி ஐ அதிகாரிகள் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், ஓய்வு பெற்ற இரண்டு நிதித்துறைச் செயலர்கள் மற்றும் பணியிலுள்ள இரண்டு ஐ ஏ எஸ் அதிகாரிகளின் மீது ஜூலை மாதம் 19ஆம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். நவம்பர் 26ஆம் தேதிக்குள் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான துறை ரீதியான அனுமதியைப் பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நவம்பர் 26 ஆம் தேதி நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இன்னும் நிதி அமைச்சர் ஜெட்லி  உத்தரவு பிறப்பிக்கவில்லை.

சி பி ஐ யுடன் ஒத்துழைக்காமல் அதன் வேண்டுகோளை ஏற்காமல் புறக்கணிப்பது ஆரோக்கியமான அரசாங்க நடைமுறை அல்ல. இந்தக் கால தாமதத்தால் முன்னாள் அமைச்சரை வழக்கில் இருந்து காப்பற்றவும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கை  நீர்த்து போகச் செய்யவும் நிதி அமைச்சகம் திட்டமிடுகிறது. சிதம்பரத்துக்கு ஆதரவாக பல்வேறு முயற்சிகள் அங்கு நடந்து வருகின்றன. அத்துடன் ஊழல் மலிந்த ஐ ஏ எஸ் அதிகாரிகளும் தங்களைக் காப்பற்றி கொள்ளும் முயற்சியில் ப சிதம்பரத்தையும் சேர்த்து காப்பற்ற முயல்கின்றனர்.

அந்த நால்வர் யார்?

ப சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியுடன் இணைந்து குற்ற வழக்கில் தொடர்புடைய கறைபட்ட கரங்களுக்கு சொந்தக்காரரான அந்த நான்கு ஐ ஏ எஸ் அதிகாரிகளின் விவரம் வருமாறு:

  1. முன்னாள் நிதித்துறைச் செயலர் அஷோக் ஜா
  2. முன்னாள் நிதித்துறைச் செயலர் அஷோக் சாவ்லா, தற்போது தேசியப் பங்குச் சந்தையின் தலைவராக இருக்கிரார்.
  3. அஸ்ஸாம் பணி பிரிவைச் சேர்ந்த குமார் சஞ்சய் கிருஷ்ணன்
  4. பிஹார் பணி பிரிவைச் சேர்ந்த தீபக் குமார் சிங்

அக்டோபர் முதல் நாள் இவ்வழக்கு விசாரனைக்கு வந்த போது நீதிபதி ஓ சைனி சி பி ஐ இன்னும் ஜெட்லியிடம் ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி பெறாததைக் குறிப்பிட்டு கண்டித்தார். அடுத்து விசாரணைக்கு வரும் நவம்பர் 26 அன்று அனுமதி பெற்று வரவில்லை என்றால் அன்றுதான் இது குறித்து தனியாக ‘ஓர் உத்தரவு’ பிறப்பிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன்பே சி பி ஐ நிதி அமைச்சகத்திடம் பணியாளர் மற்றும் பயிற்சி துறை மூலமாக அணுகி அந்த நால்வர் மீதும் வழக்கு தொடர அனுமதி கோரியது. நூறு நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. முன்னாள் நிதி அமைச்சராக பிரனாப் முகர்ஜி இருந்த போது சி பி ஐ 2 ஜி ஊழலில் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டபோது 24 மணி நேரத்துக்குள் அனுமதி கொடுத்தார். அப்போது 2011இல் பிரனாப் முகர்ஜியின் நிதித்துறையின் கீழ் பணியாற்றிய ஐ இ எஸ் அதிகாரி ஆர் கே சந்தோலியா என்பவர் இவ்வழக்கில் சிக்கியிருந்தார். இந்த சம்பவத்தை நிதித்துறையில் இருக்கும் நேர்மையான சில மூத்த  அதிகாரிகள் நினைவு கூர்கின்றனர். இச்சம்பவத்தை வைத்து ஆராயும்போது அனுமதி வழங்குவதில் எந்த பிரச்சனையும் கிடையாது நிதி அமைச்சர் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பது தான் பிர்ச்சனை என்பது தெளிவாகிறது. இந்த அனுமதிக்கு கால தாமதம் செய்வதால் கார்த்தி மற்றும் சிதம்பரத்தின் மீதான வழக்கு நீர்த்து போகும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருதுகின்றனர். இதற்கு நிதி அமைச்சர் ஜெட்லியும் உடந்தையாக இருக்கின்றாரோ என்ற வினா நம் மனதில் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

நிதி அமைச்சகத்தில் இருந்து கொண்டே ப சிதம்பரத்தை வழக்கில் தணடனை பெறாமல் காப்பாற்றுகிறவர் யார்? என்ற கேள்விக்கு ஒரே பதில் தான் நம் கண் முன் நிற்கிறது. அது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் தான்.   இவ்வாறு ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் சிக்கியவர்களை காப்பாற்றுவது இது முதன்முறை அல்ல. தொடர்ந்து இது போல இவர் செய்து வருகிறார்.

ஊழல் சிதம்பரத்தை காக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் குறுக்கு புத்திக்காரர்களிடம் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை மீட்டு சட்டத்தின் கையில் ஒப்படைக்க வேன்டியது பிரதமர் நரேந்திர மோடியின் தலையாய கடமை ஆகும். நவம்பர் 26ஆம் தேதிக்குள் குற்றம் சாட்டப்பட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர நிதி அமைச்சகம் உடனே அனுமதி வழங்கும்படி பிரதமர் உத்தரவிட வேண்டும்.  அப்போது தான் அடுத்த வழக்கு நாள் அன்று சி பி ஐ இந்த நால்வரையும் 2 ஜி நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here