மோடி அவர்களே உடனடி நடவடிக்கை தேவை

1
2445
இன்னும் ஏன் தயக்கம் பிரதமரே?
இன்னும் ஏன் தயக்கம் பிரதமரே?

அரசியலில் பெரியளவில் ஊழல் செய்து வரும் அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் அதன் விளைவு மோடியையும் அவரது பி ஜே பி கட்சியையும் பாதிக்கும்.

ஒன்றரை மணி நேரம் ‘இனிய வெற்று சொற்களை’ [ஸ்வீட் நத்திங்ஸ்] கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. சரி ஏதோ சில பயனுள்ள சொற்களும் இருந்ததாகக் கொள்வோம்.

மிக மிக முக்கிய மனிதர்கள் [வி வி ஐ பி] என்பவர்கள் பலர் பற்பல ஊழலையும் குற்றங்களையும் செய்து விட்டு சிறைப்படுத்தப் படாமல் சிட்டு குருவிகளை போல சுதந்திர வானில் பறந்து திரிவது எவ்வாறு?

  1. நேஷனல் ஹெரால்டு – டாக்டர் சுவாமி எடுத்த முயற்சியினால் மட்டுமே இந்த வழக்கு இன்று நீதிமன்ற’த்தில் விசாரிக்கப்பட்டு காங்கிரஸ் தலைவர்களை இடத்தை காலி செய்து அரசிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.  இன்னும் உங்கள் உல் துறை ராகுலின் இரட்டை குடியுரிமை சலுகையோடு விளையாடி கொண்டிருக்கிறது. அவர் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்பதை அவர் உரிமையாளராக இருக்கும் பேக் ஓப்ஸ் நிறுவத்தின் நிறுவன செயலாளராக இருக்கும் ஆவணம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.  இதை விட தெளிவாக இந்த குற்றத்தை விளக்க ஆவணம் கிடைக்காது . இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்?
  2. ராம் மந்திர் – 2௦14 தேர்தல் பிரச்சாரத்தின் போது நீங்கள் பேசிய பேச்சுக்கள் நினைவிருக்கிறதா? நிங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக இராமர் கோயில் கட்ட முயற்சிகள் எடுப்பேன் என்று ஆணித்தரமாக பேசியதை ந்மபித்தானே மக்கள் உங்களுக்கு  பி ஜே பி கட்சிக்கு வாக்களித்தார்கள்.  இந்துத்துவ ஆதரவாளர்களால் தானே நீங்கள் பிரதமர் நாற்காலியில் அமர்ந்திர்கள். நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பாக ஓரு பிரமான வாக்குமுலம் கொடுத்தது. அதில் முன்பு இராமர் கோயில் இருந்த இடத்தில் தான் மீண்டும் ஒரு கோயில் கட்டப்போவதாக தெரிவித்திருந்தது. இதற்கான தோல் பொருள் ஆய்வு துறையின் அறிக்கையும் 2௦13 ஆம் ஆண்டிலேயே பெறப்பட்டு விட்டது. இனியும் இந்த கோயில் கட்டுமானத்தை தாமதிக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை. ஆனால் நீங்கள் இதுவரை இதற்கு ஒரு துரும்பை கூட அசைக்கவில்லையே. ஏன்? ஆவணம் தெள்ளத் தெளிவாக இருந்தும் மௌனம் காப்பது ஏன்? இன்று கூட நீங்கள் உச்ச நீதி மன்றத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் இப்போது நிறைவேற்றுகிறோம் என்று சொல்லிவிட்டு கோயில் கட்டும் பணிகளை தொடங்கலாம். 
  3. வி வி ஐ பி க்களை சிறையில் அடைத்தல் –  இங்கே என்ன நடக்கிறது ? சி பி ஐ ஏர்செல் மேக்சிஸ் ஊழல் குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்காக எழுதிய உயர் மட்ட அறீக்கை ஒன்றை தனது கை வசம் வைத்திருப்பதாக ப சிதம்பரம் கையெழுத்திட்டு தெரிவித்துள்ளார். அவரை கைது செய்வதை விட்டுவிட்டு நேர்மையான அதிகாரியான ராஜேஸ்வர சிங்கை கண்காணிப்பில் வைத்திருக்கிறிர்கள். சிங் நேர்மையானவர் என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட தமிழ் நாட்டை சேர்ந்த அதிகாரி ஒருவர் இந்த வழக்கை எடுத்து துப்புதுலக்கி வருகிறார். இது ஆடியாவின் பழக்கம் இதை இப்போது நீங்கள் தொடர்கிறீர்கள். ஐ என் எக்ஸ் மீடியாவுக்கு அந்நிய முதலீடு மேம்பாட்டுக் கழகத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதில் நடந்த ஊழலில் காத்ரா மற்றும் ஆரஞ்சு டெலி காம் போன்ற நிறுவனங்களின் ஊழலையும் ராஜேஸ்வர சிங் கண்டுபிடித்து கொடுத்தார். 2௦18  ஆம் ஆண்டு மார்ச் மாதம் காத்ரா பற்றிய செய்தி வெளிவந்தது, இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உங்கள் நிதி அமைச்சர் என்ன செய்கிறார். ஐந்து நிதித்துறை செயலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வாங்க ஆறு மாதம் காக்க வைக்கிறார். அவர் ஊழல் செய்தவர்களை விசாரிக்க அனுமதி தராமல் நல்ல நேர்மையான அதிகாரியை விசாரித்து மிரட்டி வைக்க உடனடியாக அனுமதி வழங்குகிறார்.
  4. நடுத்தர வகுப்பினருக்கு வரி விடுமுறை – நடுத்தர வகுப்பினர் மீது தான் நீங்கள் அதிகம் அக்கறை செலுத்த வேண்டும். அவர்கள் தான் ஒழுங்காக அரசின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிந்து வருமான வரியை முறையாக செலுத்தி வருகின்றனர். இவர்களிடம் வரி வசூலிப்பதில் இருந்து வருமான வரித் துறையினருக்கு விடுமுறை கொடுத்து அத்துறையில் பணி செய்யும்  எண்பதினாயிரம் பேரையும் வரி ஏய்ப்பு நாடுகளில் போய் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வரும்படி உத்தரவிட்டு அனுப்புங்கள்.

இந்நாட்டின் நன்மை கருதும் நானும் என்னைப் போன்ற சிலரும் உங்களை பல நாட்களாக ஏதேனும் நடவடிக்கை எடுத்து வரி ஏய்ப்பாளர்களையும் ஊழல்வாதிகளையும் சிறையில் அடையுங்கள் மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி நடத்துவோம் என்று சொன்ன சொல்லை காப்பாற்றுங்கள் என்று வேண்டுகிறோம்.  ஆனால் எண்களின் குரல் உங்கள் காதுகளுக்கு எட்டுவதே இல்லை. இந்த செய்தி கூட உங்களை வந்து எட்டுமா என்பது தெரியவில்லை. காங்கிரஸ்காரர்கள் உங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டு உங்களை நேசிக்க தொடங்கிவிட்டார்கள். ஏனென்றால் உங்களை போல அவர்களுக்கு நன்மை செய்யக் கூடியவர் இந்த உலகத்தில் எவருமே கிடையாது. நீங்கள் அவர்களுக்கு ஆட்சியை தங்கத்தட்டில் வைத்து தர தயாராகி விட்டீர்கள்.  அதற்கு வேண்டிய அனைத்து காரியங்களையும் நீங்கள் காங்கிரசுக்கு ஆதரவாக செய்து கொண்டிருக்கிறீர்கள்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here