நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவையும் ராகுலையும் வழக்கில் இருந்து விடுவிக்க காங்கிரஸ் வக்கீல்கள் நேரடி வரிக்கான மத்திய வாரியம் மூலமாக கடும் முயற்சி எடுத்துள்ளனர். நல்ல வேளை பிரதமர் சரியான சமயத்தில் தலையிட்டதால் அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.
டிசம்பர் 31ஆம் தேதி அளித்த சில மணி நேரத்திலேயே வாபஸ் பெறப்பட்ட நோட்டிசுக்கு ஜனவரி 4ஆம் தேதி பத்திரிகையாளர்களை கூட்டி வைத்து நேரடி வரிக்கான மத்திய வாரியத்தின் செயலுக்கு பாராட்டு சொல்லி “தங்களின் நேர்மையை வெளிச்சம் போட்டு விட்டதாக” நம்பி கொண்டனர்.
பி ஜே பி தலைவர் சுப்பிரமணிய சுவாமி எடுத்த முயற்சியின் காரணமாக நடத்தப்பட்டு வரும் வழக்கில் காங்கிரஸ் தலைவர்களை காப்பாற்று முயற்சியில் ப சிதம்பரம் தலைமையிலான வக்கீல் குழு மும்முரமாக இருந்தது. நேரடி வரிக்கான மத்திய வாரியம் மூலமாக ஒரு அறிக்கை அனுப்பி வழக்கின் போக்கை திசை மாற்ற திட்டமிட்டு இருந்தது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை மூடிவிட்டு யங் இண்டியன் என்ற பத்திரிகையை நடத்துவதாக சொல்லிக்கொண்டு பங்குகளை விற்றதில் சோனியாவுக்கும் ராகுலுக்குமான வழக்குத் தொல்லைகளைக் குறைக்க நேரடி வரிக்கான மத்திய வாரியம் மூலமாக ஒரு அறிக்கை அனுப்பி வழக்கின் போக்கைக் குலைக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்களின் அந்த சதி திட்டம் பிரதமரின் தலையிட்டால் முறியடிக்கப்பட்டது.
சோனியாவும் ராகுலும் 400 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கில் இருந்து விடுவிக்க முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் முயன்றார். அவர்கள் தாம் எடுத்த அனைத்து முயற்சிகளிலும் தோல்வியே தழுவினர். இப்போது உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் கடைசியாக அனுப்பிய ஒரு மனு மட்டும் நிலுவையில் உள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணை வரும் எட்டாம் தேதி செவ்வாய் கிழமை நடைபெறும். நேரடி வரிக்கான மத்திய வாரியத்தின் மூலமாக ராகுலுக்கும் சோனியாவுக்கும் நோட்டீசு அனுப்பிய செயல் தனது மேலிடத்தை காப்பாற்ற விரும்பி சதித்திட்டம் தீட்டிய சிதம்பரத்தின் தந்திர குணத்தைக் காட்டுகிறது. இந்த வாரியத்தை வற்புறுத்தி இவ்வாறு ஒரு நோட்டிஸ் அனுப்புமாறு ஆணையிட்டவர் ப. சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான இந்நாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி அவர்கள். இந்த நோட்டிசை அடுத்த விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் காட்டி வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து சோனியாவையும் ராகுலையும் காப்பாற்ற ப சிதம்பரம் திட்டமிட்டிருந்தார். ப சிதம்பரமும் அவரது வக்கீல் குழுவும் ஏற்கெனவே நீதிமன்றத்தில் எடுத்து வைத்த விவாதங்களையே இந்த நோட்டிசில் கொடுத்துள்ளனர்.
பல நேர்மையான வருமானவரி அதிகாரிகள் இந்த நேஷனல் ஹெரால்டு வழக்கில் முக்கிய மனுதாரரான சுப்பிரமணிய சுவாமியிடம் இத்தகவலை ரகசியமாக தெரிவித்தனர். உடனே சுவாமி பிரதமரிடமும் ஆர் எஸ் எஸ் தலைவரிடமும் இந்த சதித் திட்டத்தை எடுத்துரைத்தார். நமது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர்களை காப்பாற்ற துணை போகும் விஷயத்தையும் சுட்டிக் காட்டினார். உடனே மோடி இந்த நோட்டிசை ரத்து செய்ய வேண்டும் என்று ஜனவரி 3ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். நேரடி வரிக்கான மத்திய வாரியம் ஜனவரி 4ஆம் தேதி இந்த நோட்டிசை வாபஸ் பெற்றது.
ஏஞ்சல் டேக்ஸ் நிறுவனத்தின் புதிய முதலீட்டாளரிடம் இருந்து வந்த அழுத்தத்தினால் அவர்களை அமைதிப்படுத்தும் நோக்கத்தில் இந்த நோட்டிசை வருமான வரித் துறையினர் மூலம் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். ப. சிதம்பரத்துக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் இந்த நோட்டிஸ் வழங்கும் வேலையில் உற்சாகமாக ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
பிரதமர் இந்த நோட்டிசை வாபஸ் பெறும்படி உத்தரவிட்ட பிறகு காங்கிரஸ் வேறு ஒரு நாடகத்தை நடத்தியது. நேரடி வரிக்கான மத்திய வாரியம் அளித்த நோட்டிசை சில மணி நேரத்திலேயே பின்னர் திரும்பப் பெற்றுக் கொண்ட செயலைத் தாம் வரவேற்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் தெரிவித்தது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விவேக் தாங்காவும் அகமத் பட்டேலும் இதைத் தெரிவித்தனர். இவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் நேரடி வரிக்கான மத்திய வாரியம் டிசம்பர் 31 அன்று அளித்த நோட்டிசை சில மணி நேரங்களிலேயே வாபஸ் பெற்றது குறித்து அவ்வாரியத்தை பாராட்டி பேசினார். ஆனால் உண்மையில் ஆரம்பத்தில் அவர்களின் திட்டம் வேறாக இருந்தது. இந்த நோட்டிசை ரகசியமாக பெற்று ரகசியமாகவே வைத்திருந்து ஜனவரி எட்டாம் தேதி நடைபெறும் நீதிமன்ற விசாரணையின் போது அங்கு சமர்ப்பித்துவிடும் எண்ணத்தில் இருந்தனர். ஆனால் இதில் பிரதமர் தலையிட்டு நோட்டிசை வாபஸ் பெறும்படி உத்தரவிட்டதும் இவர்கள் தங்களின் பேச்சை மாற்றிவிட்டனர். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல காட்டிக் கொள்கின்றனர்.
டிசம்பர் 31ஆம் தேதி அளித்த சில மணி நேரத்திலேயே வாபஸ் பெறப்பட்ட நோட்டிசுக்கு ஜனவரி 4ஆம் தேதி பத்திரிகையாளர்களை கூட்டி வைத்து நேரடி வரிக்கான மத்திய வாரியத்தின் செயலுக்கு பாராட்டு சொல்லி “தங்களின் நேர்மையை வெளிச்சம் போட்டு விட்டதாக” நம்பி கொண்டனர்.