மூன்றாம் மர்ம மனிதன் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர்

பாலுக்கு பூனையை காவல் வைக்கவா ஐசிஐசிஐ வங்கிக்கு புதிய தலைவர் தேர்வு?

0
2827
பாலுக்கு பூனையை காவல் வைக்கவா ஐசிஐசிஐ வங்கிக்கு புதிய தலைவர் தேர்வு?
பாலுக்கு பூனையை காவல் வைக்கவா ஐசிஐசிஐ வங்கிக்கு புதிய தலைவர் தேர்வு?

புதிய பானையில் பழைய கள்?

தூய்மையான வெள்ளை ஆடை உடுத்தி வரும் அரசியல்வாதி ஒருவர் தனக்கு ஐசிஐசிஐ வங்கியில் மீது  உள்ள அக்கறையை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தி உள்ளார். பெட்ரோலியம் துறையில் பல நியமனங்களை ஒரு தொழில் அதிபரோடு இணைந்து முடிவெடுக்கும் ஒருவர் மோடி அரசிலும் ஐஸிஐஸிஐ வங்கியின் தலைவர் பொறுப்புக்கு தனக்கு வேண்டிய ஒருவரை ‘பொறுக்கி’ போட்டுள்ளார்.

ஜுன் 28 அன்று பிசினஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகை ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் தெரிவானது குறித்து மிகக் கவனமாக அவர் பெயரை கிரீஷ்சந்திர சதுர்வேதி என்று குறிப்பிடாமல்  செய்தி வெளியிட்டிருந்தது. எல்லோரும் தலைவராகத் தெரிவு செய்யப்படுபவர் இவர் அவர் என்று விவாதித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அமைதியாக இவர் பெயரை தலைவர் என வெளியிட்டுவிட்டனர். தொழில் அதிபர் மற்றும் அரசியல்வாதி நல்ல தந்திரக்காரர்கள்.

யார் இந்த ஜி. சி. சதுர்வேதி?

இவரது நியமனம் – நிறைய விஷயங்களை மாற்றும் முயற்சியில் எதுவுமே மாறாமல் இருந்துவிடுகிறது – என்ற உண்மையை உறுதி செய்கிறது.பெட்ரோலியம் துறைக்கு செயலர் ஆகும் முன்பு அவர் நிதி சேவை துறையில் கூடுதல் செயலராக இருந்தார் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இவருக்கு “அந்த இருவரும்” சேர்ந்து இந்த பதவியை அல்வா போல தூக்கி கொடுத்தனர்.  இந்தியாவில் பெட்ரோல் இறக்குமதி ஏராளமாக நடப்பதால் போலி நிறுவனங்களின் பெயரில் நிறைய கொள்ளை அடிக்கலாம். இப்படி நடந்ததா இல்லையா என்பதை இப்போதைய அரசு கண்டுபிடிக்க  வேண்டும்  நாங்கள் நடந்திருக்கலாம் என்ற எங்களின் கருத்தை சொல்கிறோம்.

சதுர்வேதியின் தாராள குணத்தால் மல்லையா பலன் அடைந்தாரா?

மல்லையா தனது கிங் ஃபிஷர் விமான நிறுவனத்தில் உள்ள விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பியதற்கு பணம் கொடுக்கவில்லை அதை அவர் பல காலமாக நிறுத்திவிட்டார் . இருந்தாலும் இந்த சதுர்வேதி பெட்ரோலிய துறையின் செயலராக இருந்தபோது மல்லையாவின் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களைக் கட்டாயப்படுத்தி வந்தார்  ஏன் இப்படி கட்டாயப்படுத்தினார் என்பதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.

வாங்கிய கடனை கொடுக்க மறுத்த மல்லையாவுக்கு மேலும் மேலும் கடன் வழங்கும்படி பொது துறை வங்கிகளை அப்போது நிதி சேவை துறையின் செயலராக இருந்த இந்த சதுர்வேதி கட்டாயப்படுத்தியது ஏன்? இவ்வாறு அவர் பரிந்துரைத்து வழங்கப்பட்ட கடன் தொகை எவ்வளவு இப்போது வாராக் கடனாகிவிட்டது தெரியுமா? சுமார் எண்பது சதவீதம் என்பது எங்கள் கணக்கு. அமைச்சர் சொன்னபடி அவரது முதலாளித்துவ கூட்டாளிகளுக்கு  நீங்கள் உங்கள் மூவர் கூட்டணியைச் சேர்ந்த அசோக் சாவ்லா, வின்னி மகாஜன் ஆகியோருடன் சேர்ந்து கடன்களை வாரி வழங்கவில்லையா?

வணிக வங்கியா? உண்டியல் டப்பாவா?

இந்த பின்னணி உடைய உங்களை  ஐசிஐசிஐ வங்கி எப்படி தலைவராக நியமித்தது?  வடக்கு பிரிவு இந்த நியமனத்தை எப்படி ஏற்றுக்கொண்டது? இந்த வங்கியின்  அறுபது சதவீதம் வெளிநாட்டவர்களின் முதலீடு என்பதாலும் யாருமே இதுவரை ஒரு வழக்கு கூட தாக்கல் செய்யவில்லை. அமெரிக்காவில் இருந்து முதலீடு செய்திருக்கும் ஒருவர் கூட வழக்கு போடவில்லையே ஏன்? எதிர்பார்த்த பங்கு மதிப்பில் ஐந்து சதவீதம் குறைந்தாலே என்ன ஏது என கேள்வி எழுப்பி பிரச்சனை செய்யும் இந்த காலகட்டத்தில்  இந்த வங்கியில் மட்டும் யாரும் எந்த வழக்கும் போடவிலையே என்றால் இந்த வங்கியில் முதலீடு செய்திருக்கும் ஆட்களில் பெரும்பாலோர் உள்நாட்டுக்காரர்களே என்று கருதத் தோன்றுகிறது.  அவ்வாறு முதலீடு செய்திருப்பவராக யார் என்று உங்களால் யூகிக்க முடியுமா?

மோடி அவர்களை நம்புகிறோம்

மோடி அவர்களே மக்கள் உங்களை மௌன மோடி என்று அழைக்கின்றனர். இந்த ஏமாற்றுக்காரர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுங்கள்

மௌன மோடியை எங்கள்  p gurus செய்தி தளம் மகாதீர் மோடியாக பார்க்க ஆசைப்படுகிறது. நீங்கள் நான்கு ஆண்டுகளில் செய்யாத எத்தனையோ சீர்திருத்தங்களைக்கடந்த நான்கு வாரங்களில் 94 வயது மனிதர் கொண்டுவந்துவிட்டார். . இப்போது மகாதீர் மோடி நீங்கள் என்ன செய்யப் போகிறிர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here