நீதிபதிகளை தர்ம சங்கடத்துக்குள்ளாக்கிய ப சிதம்பரம்

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அருகில் ப சிதம்பரம்  உட்கார்ந்துகொண்டு போட்டோவில் சேர்ந்து காட்சியளிப்பதால் அவர்களை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்குகிறாரா?

0
3490
நீதிபதிகளை தர்ம சங்கடத்துக்குள்ளாக்கிய ப சிதம்பரம்
நீதிபதிகளை தர்ம சங்கடத்துக்குள்ளாக்கிய ப சிதம்பரம்

சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறையினரிடம் பத்து வழக்குகளுக்கு மேலாக சிக்கி கொண்டிருக்கும் ப சிதம்பரம் வியாழன் அன்று ராம்நாத் கோயங்கா தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை பெரும் சங்கடத்துக்கு உள்ளாக்கினார். ஊழல் தடுப்பு வழக்கில் இவரை சி பி ஐ மற்றும் அமலாக்க துறை கைது செய்ய காத்திருக்கும் போது அவர்களின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன் ஜாமீன் பெற்றிருக்கும் ப சிதம்பரம் அந்த வழக்குகள் நடைபெறும் டில்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அருகில் அமர்ந்திருந்தார், அந்த நிகழ்ச்சி சிதம்பரத்தின் நட்பு வளையத்துக்குள் இருக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையால் நடத்தப்பட்டது. அடுத்த தலைமை நீதிபதி என்று கருதப்படும் நீதிபதி ரஞ்சன் கோகோய் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.

முதலில் சிதம்பரம் நீதிபதி ரஞ்சன் கோகோய் அருகில் அமர்ந்திருந்தார். அவர் மேடைக்கு சென்றதும் நீதிபதி சந்திர சூட் அருகில் போய் அமர்ந்துகொண்டார். சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் வக்கீலும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அபிஷேக் சிங்க்வியும் அவர்களுடன் அமர்ந்திருந்தார்.   வெள்ளிக்கிழமை அன்று இதே சிங்க்வி தான் கார்ததியின் சார்பாக சந்திர சூட் நீதிபதியாக இருந்த அமர்வு நீதிமன்றத்தில் கருப்பு பணத் தடை சட்ட வழக்கில் அமலாக்க துறையின் அதிகாரிகளுக்கு குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யும் அதிகாரம் உள்ளதா என்று சிங்க்வி கேள்வி எழுப்பி வாதாடினார்.

நிதி அமைச்சராக ப சிதம்பரம் இருந்த போது அவர் தான் இந்த கருப்பு பணத் தடை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார், ஆனால் இப்போது அவரும் அவர் மகனும் இந்த குற்றச்சாட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர். இவர்களை கைது செய்து விசாரணை செய்ய அமலாக்கத் துறை (ED) அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுக்காகக்  காத்துக் கொண்டிருக்கின்றனர். இவரோ அதே நீதிபதிகளின் அருகில் ரொம்ப வேண்டியவர் போல உட்கார்ந்து பத்திரிகைகளில் படம் வரும்படி பார்த்துக் கொள்கிறார்.

நீதிபதி சந்திர சூட் உறுப்பினராக இருக்கும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அமர்வில் சி பி ஐயை எதிர்த்து சிதம்பரம் போட்டிருக்கும் ஓர் விவரமில்லாத அற்பத்தனமான  மனு நிலுவையில் இருக்கிறது. இதே அமர்வு நீதிமன்றத்தில்  தான் கார்த்தியின் பல்வேறு வழக்குகள் நடந்தன, நடக்கின்றன. ஐ என் எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் அவரை விமான நிலையத்தில் தேடப்படும் குற்றவாளி  என்ற விளமபரம் வைக்க விடாமல் தடுக்கும் வழக்கு, வெளி நாட்டுக்கு போக அனுமதி கோரிய வழக்கு ஆகியவை நடந்தன.

ஏர்ஸல் மேக்சிஸ் மற்றும் ஐ என் எக்ஸ் வழக்குகளில் தற்போது சிதம்பரமும் கார்த்தியும் விசாரணை நீதிமன்றத்திலும் டில்லி உயர் நீதிமன்றத்திலும் சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்படாமல் இடைக்காலப் பாதுகாப்பு வெளியே நடமாடி வருகின்றனர். சி பி ஐ, அமலாக்கத் துறை  மற்றும் டில்லி போலீசார் தொடுத்துள்ளா பத்துக்கு மேற்பட்ட வழக்குகளில் சிதம்பரம் விசாரணையை சந்திக்க முடியாமல் தினறிக்கொண்டு இருக்கிறார். ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐ என் எக்ஸ் வழக்குகளில் சிதம்பரம் மீது குற்றப் பத்திரிக்கை பதிவு செய்ய சி பி ஐயும் அமலாக்கத் துறையும் முயற்சி மேற்கொண்டுள்ளது. அவர் மனைவி நளினியும் சாரதா சிட் ஃபண்டு நிறுவன ஊழலில் சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறையினரின் விசாரணையில் இருந்து வருகிறார். மேலும் ஓட்டல் அபகரிப்பு ஊழல் வழக்கு ஒன்றிலும் அவர் விசாரணையில் சிக்கியுள்ளார். கருப்பு பண சட்டத்தின் கீழ் வருமான வரி ஏய்ப்பு வழக்கில் மொத்தக் குடும்பமும் சிக்கியுள்ளது. டில்லி போலீசார் பதிவு செய்துள்ள பயங்கரவாதி இஷ்ரத் ஜெகனை என்கவுண்டரில் கொன்ற வழக்கிலும் சிதம்பரமே முக்கிய குற்றவாளி ஆகிறார்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here