குமாரசாமிக்கு இப்போது  ‘உறைக்க’ தொடங்கிவிட்டது

கண்ணை அகலத் திறந்து வைத்துக்கொண்டு தானே குமாரசாமி குழியில் விழுந்தார்

0
6337
கண்ணை அகலத் திறந்து வைத்துக்கொண்டு தானே குமாரசாமி குழியில் விழுந்தார்
கண்ணை அகலத் திறந்து வைத்துக்கொண்டு தானே குமாரசாமி குழியில் விழுந்தார்

இது அவர் தனக்கு தானே வெட்டிக்கொண்ட படுகுழி

கர்நாடகாவில் குமாரசாமியால் இன்னும் அமைச்சரகளைத் தெரிவு செய்ய இயலவில்லை என்பதன் மூலமாகவே  அங்கு காங்கிரஸ் தானே அந்த ஆட்சிக்கு  ‘பாஸ்’ என்பதை அவருக்கு உணர்த்துகிறது. கடைசியில் அவரது மனக்குரலை [மன் கி பாத்] அவரால் மூடி வைக்க முடியவில்லை. ‘’நான் இங்கு வாழும் ஆறரை கோடி மக்களுக்கு கடமைப்படவில்லை ஆனால் என்னை இப்பதவிக்கு கொண்டுவந்த காங்கிரசுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அந்தக் கட்சியின் கருணையினால் இப்பதைவியில் இருக்கிறேன்’’ என்றார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது ‘’விவசாயிகளின் கடனை ரத்து செய்வேன் அல்லது பதவியை விட்டு விலகுவேன்’’ என்றார்.

பத்திரிகையாளர்கள் குமாரசாமியின் பரிதாபநிலையை கண்டு அந்த இடத்தை விட்டு அகன்றதும் அவரது ஆதரவாளர்கள் அவரது இமேஜை தூக்கி நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனர். முதலில் அவர்கள் முதல்வர் கன்னடத்தில் சொன்னது ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றனர்.  ஆங்கிலத்திலும இதே கருத்தை தான் முதலமைச்சர் கூறினார் என்று ஆதாரங்களைக் காட்டியதும், ‘அவர் தனது கூட்டணி கட்சியினரைக் கேட்டு முடிவெடுப்பதாகக் கூறியிருக்கிறார் இதில் என்ன தவறு?’  எனக் கேட்டனர். ‘அவர் தன மக்களை பற்றி எதுவும் மரியாதை குறைவாக பேசவில்லை ; அவர் உண்மையைத்தான் சொன்னார்; அவர் காங்கிரசின் ஆதரவால் தானே முதல்வர் ஆகியிருக்கிறார்’ என்று விளக்கம் அளிததனர்.

இந்த விளக்கமெல்லாம் அவரது இக்கட்டான சூழ்நிலையை மாற்றப்போவதில்லை. பதவியேற்று ஒரு வாரம் ஆகியும் அவரும் துணை முதல்வராகப் பதவியேற்ற காங்கிரஸ்காரரும் மட்டுமே அமைச்சரவையில் இருக்கின்றனர். காங்கிரஸ் முக்கிய துறைகளை இவரிடம் கேட்பதால் இன்னும் ஒரு முடிவுக்கு வர அவரால்  இயலவில்லை. நிதி மற்றும் பொதுப்பணித்துறைகளை மட்டுமாவது காங்கிரஸ் தனக்கு தரவேண்டும் எனக் கேட்கிறது. காங்கிரசுக்குப் பேரம் பேசுவது கை வந்த கலை. காங்கிரஸ் தன முழு திறமையையும் காட்டி பேரம் பேசுவதால் குமாரசாமியால் இன்னும் அமைச்சரவை பட்டியலை வெளியிட முடியவில்லை. ஆனால் இப்படி இவர் காலம் தாழ்த்திக்கொண்டே இருக்க முடியாது. ஆப்பு அசைத்தவர் போல அவர் சிக்கிக்கொண்டார். இனி அவர் இந்தக் கூட்டணியை முறித்துக்கொண்டு தியாகி பட்டம் பெறலாம்

அவருக்கு நாம் இரக்கப்ப்படவே கூடாது. அவர் தனது கண்களை அகலத் திறந்து வைத்துக்கொண்டுதான் இந்த படுகுழியில் விழுந்தார். காங்கிரஸ் தன்னை விலை பேசும் என்பது அவருக்கு நன்றாகத்  தெரியும். அவருடைய அதிகார வெறியினாலோ அவர் தந்தை தேவே கௌடாவின் பேச்சு திறனாலோ அவர் மதி மயங்கிவிட்டார். பாரதீய ஜனதா கட்சி மட்டும் ஆட்சி பீடம் ஏறி விடக் கூடாது என்ற காங்கிரசின் எண்ணத்துக்கு  தான் பலியாவதைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை.  காங்கிரசுக்கு குமாரசாமி மீதோ அவர் தந்தையின் மீதோ அல்லது அவரது கட்சியின் மீதோ எந்த அபிமானமும் கிடையாது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பிஜேபியின் துணை அணி [B team] என்று தான் காங்கிரஸ் கட்சி ஏளனம் செய்தது. இவற்றைத்  தெரிந்து கொண்ட பின்பு தான் குமாரசாமி காங்கிரசின் வலையில் சிக்கியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி குமாரசாமிக்கு உயர் பதவியான முதலமைச்சர் பதவியை கொடுத்த பின்பு இனி வேறு எந்த சமரசமும் செய்துகொள்ள தேவை இல்லை, என்ற முடிவுக்கு வந்துவிட்டது. இனி அக்கட்சி தனது மூத்த தலைவர்களை பற்றி சிந்திக்க வேண்டும் கட்சிக்காக முதல்வர் பதவியை தூக்கி கொடுத்துவிட்டதில் அவர்கள் மன வருத்தத்துடன் இருக்கின்றனர். கூட்டணி முறிந்து போகக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் இன்னும் கொஞ்சம் விட்டுக்கொடுக்கும் அல்லது இதே காரணத்துக்காக முதலமைச்சரும் கொஞ்சம் கோபித்து கொள்வார். ஆனால் எந்த சூழ்நிலையிலும் நிர்வாகத்தில் இரு கட்சிகளும் ஒத்துப் போகாது. எதிர்பார்த்ததை விட அதிக காலம் முதல்வராக இருந்துவிட்டாலும் குமாரசாமிக்கு  இந்தப் பதவிக்காலம மறக்க முடியாத அளவுக்கு; நினைத்து நினைத்து வருத்தப்படும்படி  அமைந்துவிடும்.

காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்தே அதிகார மனோபாவத்துடன் ராஜ அதிகாரத்துடன் கட்சி நடத்தி வருவதால் அக்கட்சி குமாரசாமியை ஒரு குடிமகனைப் போலவே கருதும். ஒரு சாதாரணக் குடிமகனை ஒரு மன்னர்  தனது பெருந்தன்மையால் மன்னராக்கி தன வசப்படுத்திக்கொண்டது போல  போலப் பலரை காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவி வழங்கி தன வசப்படுத்த முயன்றதுண்டு. மன்மோகன் சிங் இதற்கு நல்ல உதாரணம் ஆவார். பி.வி.நரசிம்ம ராவிடம் காங்கிரஸ் இந்த சூழ்ச்சியை செய்து பார்த்தது ஆனால் அவரிடம் இது பலிக்கவில்லை. தனது கட்சிக்கு வெளியேயும் காங்கிரஸ் இந்த வித்தையைக் காட்டியிருக்கிறது. சந்திர சேகர், சரண் சிங், ஐ.கே. குஜ்ரால், மற்றும் தேவே கௌடா ஆகியோரை பிரதமராக்கி இருக்கிறது. தற்போது குமாரசாமி விரைவில் தன அமைச்சரவையை முடிவு செய்ய விடாமல் இழுத்தடித்து தன்னை எஜமானன் என்று காங்கிரஸ் காட்டிக்கொள்கிறது.

இனி என்ன நடக்கும்? காங்கிரசும் ஜனதா தளமும் இணைந்து ஆட்சி நடத்துவார்களா? அல்லது பீகாரில் ஜனதா தளமும் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் இணைந்த கூட்டணி முறிந்து போன பின்பு பி ஜே பி ஆதரவுடன் அதே ஜனதா தளக் கட்சி தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆனாரே. அது போல நடக்குமா? தெரியவில்லை. இந்த ஆட்சி கர்நாடகத்தில் வரும் 2019 பாராளுமன்றத் தேர்தல் வரை இருந்தாலே அது பெரிய சாதனை தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here