வெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்

2ஜி ஊழல் வெளிவந்தபோது உச்சநீதிமன்றம் உரிமங்களை ரத்து செய்தது

2
7592

ஒரே சமயத்தில் நடந்த இரண்டு ஊழல்கள் – 2ஜி & ஏர்லைன்ஸ்

இரண்டு ஊழலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு

2ஜி ஊழல் வெளிவந்தபோது உச்ச நீதிமன்றம் ஒளிக்கற்றை உரிமங்களை ரத்து செய்தது. இலஞ்சம் கொடுத்தவர்கள் உரிமம ரத்தானதால் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டனர்.  மேலே உள்ள வீடியோ இதனை தெளிவுபடுத்துகிறது.

மலிவான ஒளிக்கற்றையை வாங்க இலஞ்சம் கொடுத்த இரண்டு ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு அவர்கள் கொடுத்த இலஞ்சப்பணத்துக்கு பதிலாக புதிய விமான நிறுவனம் ஒன்றை வெளிநாட்டு ஏர்லைன் நிறுவனத்துடன் சேர்ந்து ஆரம்பிக்க அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் உரிமம் வழங்கப்பட்டது. மேலும் அவற்றின் பங்குகளை மிடில் ஈஸ்ட் ஏர்லைன்சுக்கு விற்கவும் அனுமதிக்கப்பட்டது. இது தவிர  ஒரு இந்திய விமானம ஒன்றும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி இரண்டு விமான நிறுவனங்களுக்கு இன்னொரு மிகப்பெரிய நிறுவனத்துடன் சேர்ந்து கூட்டு தொழில் முறையில் புதிய விமான நிறுவனங்களைத் தொடங்க அனுமதி அளித்தது. விமான நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டதும் மிகப்பெரிய தொழில் நிறுவனம் இனி விமானப் போக்குவரத்து தொழிலில் ஈடுபடுவதில்லை என்ற முடிவுடன் இருந்தது. பின்பு அவையிரண்டும் அமைதியாக இரண்டு சர்வதேச விமான நிறுவனங்களுடன் கூடதுச் சேர்ந்து  இந்தியாவில் விமானப் போக்குவரத்து தொழிலைத் தொடங்கின. இது 2ஜிக்காக  இலஞ்சம் கொடுத்தவருக்கு ஒரு வகையில் இழப்பீடாக அமைந்தது.

அதே சமயம் இன்னொரு ஊழல் பேர்வழிக்கு,, மத்திய கிழக்கு நாடுகளுடன் நீண்டகாலத்  தொடர்பு இருந்ததால் இந்தியாவில் இருக்கும் ஒரு மிகப்பெரிய விமானப்போக்குவரத்து நிறுவனத்திடம் இருந்து பெரும்பான்மையான பங்குகளை வாங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் ஏர் இந்தியாவின்  இலாபகரமான வழித்தடங்களையும் பெறவும்  ஒப்பந்தம் ஏற்பட்டது

ஏர் இன்டியா அதிக விலைக்கு வாங்கிய தனது புதிய விமானம் ஒன்றை மத்திய கிழக்கு விமான நிறுவனத்துக்கு குறைந்த விலைக்கு விற்றுவிட்டது. இதுவும் 2ஜி ஊழலில் பங்கேற்றவருக்கு அவர் கொடுத்த இலஞ்சத்துக்கு பதிலாக கொடுத்த இழப்பீடாகும்.

ஏர் இன்டியா ஒவ்வொரு விமானத்தையும் பதிமூன்று மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கிற்று. இந்த விலையை அந்த காலகட்டத்தில் விமானம் வாங்கிய கோ ஏர் மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் கொடுத்ததில்லை. இத்தகவலை  நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய புலனாய்வு துறை [சி.பி.ஐ] இந்த குற்ற நடவடிக்கைகளை உறுதி செய்ய விமான விற்பனை தொடர்பான கணக்குகளையும் மற்ற ஆவணங்களையும் சோதனை செய்து வருகிறது.

2ஜி ஊழலை உலகுக்கு வெளிப்படுத்தியதில் தீவிரமாக செயல்பட்ட சுப்பிரமணியன் சுவாமிக்கு இவ்வழக்கில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. இலஞ்சம் கொடுத்தவர்களுக்கு பெருத்த அடி விழுந்ததும் உண்மை

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு புதிய விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதுதன்  புதிய விமானத்தையும் இந்திய விமான நிறுவனங்களின் பங்குகளையும் மத்திய கிழக்கு விமான நிறுவனத்துக்கு விற்றதை கண்ட சுவாமி இதில் ஏதோ சூது இருக்கிறது என்பதை உணர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இது குறித்து கடிதங்கள் எழுதி விளக்கம் கேட்டார். ஆனால் பலனில்லை. இறுதியில் இது குறித்து அறிய அவர் உச்ச நீதிமனறத்தில் பொது நல வழக்கொன்றைத்  தாக்கல் செய்தார்.  .

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. ஏர் ஏஷியாவுக்கு எதிராக இப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை கூட சுவாமியின் பொது நல வழக்கின் விளைவு தான்.

இலஞ்சத்துக்கு எதிராக விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய இந்தியாவின் கோரிக்கையாக இருக்கிறது.   ஊழல் செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு  விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

2 COMMENTS

  1. all are acting. nobody is serious in fighting corruption. when big wigs or big money is involved in corruption investigation faults. finished. case closed. judiciary is also rotting in corruption.

  2. how true!! Similarly, the stock of wealth of Rahulgandhi and Sonia ghandi should also be investigated,what about The Famous Maran brothers? pl.investigate .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here