கார்த்தி மீது  புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு

ராஜஸ்தானைப் போல ஒடிஷாவிலும்  ஆம்புலன்ஸ் சேவையின் மூலமாக 3௦௦ கோடி ரூபாயை கார்த்திக்கு தொடர்புடைய நிறுவனம் அபகரித்தது

0
1795
கார்த்தி மீது  புதிய நிதி மோசடி வழக்கு
கார்த்தி மீது  புதிய நிதி மோசடி வழக்கு

வருமான வரி ஆணையர் ஸ்ரீவஸ்தவா சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறைகளில் புகார்.

ஒடிஷா அரசிடம் இருந்து 3௦௦ கோடி ரூபாயை  கார்த்தியின் Zigitsa என்ற நிறுவனம் ஏமாற்றி விட்டது.

ஒவ்வொரு நாளும் கார்த்தியின் ஊழல் லீலைகள் புதிது புதிதாக புற்றீசல் போல வந்து கொண்டே இருக்கின்றன. முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி ராஜஸ்தானில் ஜிகித்சா ஹெல்த் கேர் லிமிட்டட் என்ற பெயரில் ஒரு சுகாதார நிறுவனம் நடத்தினார். அதனைக் கொண்டு அம்மாநிலத்தில் பெரியளவில் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.  அது போலவே அவர் ஒடிஷாவிலும் செய்திருப்பது இப்போது தெரிய வந்துள்ளது. இன்னும் எங்கெங்கு என்னென்ன செய்திருப்பாரோ. இராஜஸ்தானில் சி பி ஐ தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஜிகித்சா ஹெல்த் கேர் நிறுவனம் இராஜஸ்தானில் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வந்தது.  அங்கும் மோசடியில் ஈடுபாடு விசாரணையில் சிக்கி கொண்டது. இப்போது ஓடிஷாவில்  ஆம்புலன்ஸ் சேவை பணியாளர்கள் ஒன்றியத்தின் (OASEU) நிதியை 3௦௦ கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது. இந்த மோசடி குறித்து சி பி ஐ விசாரணை தொடங்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் போகாத இடங்களுக்குப் போனதாகப் பொய்க் கணக்கு காட்டி பணத்தை ஏராளமாகச் சுரண்டியுள்ளனர். பணியாளர்கள் சம்பளத்தை அதிகமாகக் காட்டி மாநில அரசிடம் இருந்து பணத்தைக் கொள்ளை அடித்துள்ளனர். இந்த மோசடிகளை எல்லாம் சி பி ஐ கண்டுபிடித்து விட்டது.

எப்படி கொள்ளையடித்தனர்?

வருமான வரித் துறை ஆணையர் எஸ். கே. ஸ்ரீவஸ்தவா சி பி ஐ (CBI), வருமானத் துறையின் [புலனாய்வு பிரிவு] பொது இயக்குனர் மற்றும் அமலாக்கத் துறையினரிடம் (ED) ராஜஸ்தானில் முன்பு ஊழலில் ஈடுபட்ட கார்த்தியின்  ஜிகித்சா நிறுவனம் இப்போது ஒடிஷாவிலும் அதை போன்ற நிதி மோசடியை நடத்தியுள்ளது என ஒரு புகார் அளித்தார். உடனடியாக இந்த ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இராஜஸ்தானில் நடந்த ஊழலில் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்னா ஆகியோரிடமும் சி பி ஐ விசாரித்தது. நீதிமன்றம் இந்த குற்றச்சாட்டின் மீதி விசாரணை நடத்த அனுமதி அளித்து விட்டதால் இராஜஸ்தானில் இப்போது விசாரணை தொடங்கிவிட்டது.

இவ்வழக்கு குறித்து தெரிவித்த ஸ்ரீவஸ்தவா, “நான் புவனேஷ்வரில் அலுவலக வேலை நிமித்தமாகத் தங்கியிருந்த போது ஓடிஷா அமபுலன்ஸ் சேவை பணியாளர் ஒன்றியத்தின் அதிகாரிகள் இருவர் தாம் சேகரித்த தகவல்களை என்னிடம் ஒப்படைத்தனர். அதில் அரசு பணத்தை திட்டமிட்டே கொள்ளையைடித்த கார்த்தியின் ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தின் கொள்ளை முயற்சிகளுக்கான ஆதாரங்கள் தெளிவாக இருந்தன.  இந்த 3௦௦ கோடி கொள்ளையடித்த ஜிகித்சா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் கார்த்தி சிதம்பரம் என்பதும் தெரிந்தது.  எனவே அவரது பெயரும் குற்றம் சுமத்தப்பட்டவர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவரது பெயர்  இராஜஸ்தான் காவல் நிலையத்திலும் சி பி ஐ விசாரணையிலும் இணைக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் சிக்கிய பிறகு  கார்த்தி சிதம்பரம் பல நிறுவனங்களின் பொறுப்புகளில் இருந்து தாம் விலகிக் கொண்டு தனக்குப் பதிலாக தனது  பினாமிகளை நியமித்தார். அந்த வரிசையில் இந்த ஜிகித்சா நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்தும் விலகினார்.

மேலும் இது குறித்து  ஸ்ரீவஸ்தவா தெரிவிக்கும் போது கார்த்தி சிதம்பரம் போலி ‘பில்’களை தயார் செய்து பொய் கணக்கு காட்டி அரசிடமிருந்து அதிகளவில்  பணத்தை பெற்றிருக்கிறார் என்பதற்கு முதன்மை ஆதாரங்கள் ஏராளமாக உண்டு. இதே பாணியை பின்பற்றி அவர்கள் இராஜஸ்தானிலும் ஒடிஷாவிலும் பணம் கொள்ளையடித்தனர்.  பொய் சம்பள ‘பில்’கள்,  போகாத இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வண்டியைக் கொண்டு போய் வந்ததாக போலி ரிக்கார்டுகள்,  வவுச்சர்கள்,  எனத் தயாரித்து பொய்க் கணக்கு எழுதுவதில் கார்த்தி நிறுவனம் கில்லாடி. இன்னும் இ. எஸ். ஐ., பி எஃப்.,  போன்ற விஷயங்களில் என்னென்ன ஊழல் நடந்திருக்கிறதோ தெரியவில்லை. அவற்றையும் ஆராய வேண்டும்.  அதற்குரிய ஆவணங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்’ என்றார்.

OASEU எனப்படும் இந்த ஓடிஷா ஆம்புலன்ஸ் சேவை பணியாளரின் ஒன்றியம் அளித்த புகாரின் நகல் வருமாறு:

Complaint by the Odisha Amulance Service Employees Union by PGurus on Scribd


References:

[1] Rajasthan: FIR against Ashok Gehlot, Sachin Pilot in ambulance scamJun 10, 2014, India Today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here