அபுதாபியின் அமீரகம் விருப்பங்களை நிறைவு செய்ய முன்பிருந்த காங்கிரஸ் ஆட்சி செய்த திரை மறைவு ஒப்பந்தங்களைச் சுட்டிக்காட்டி சுரேஷ் பிரபுவுக்கு சுவாமி கடிதம்.
டாடாவின் விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் பி ஜே பியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செயல்படாமல் முடங்கி விட்ட ஜெட் ஏர்வேசை நாட்டின் நலன் கருதி ஏர் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
ஐக்கிய அமீரகத்தின் அலைபேசி நிறுவனமான எடிசாலட் தான் லஞ்சம் கொடுத்து பெற்றிருந்த 2ஜி உரிமத்தையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் இழந்துவிட்டது.
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திடம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை எடுத்து நடத்தும்படி பேசி வரும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் விமானப் போக்குவத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவை இவ்விவகாரத்தில் தலையிட விடாமல் விலக்கி வைக்கும்படி சுவாமி பிரதமருக்கு டிவிட்டர் மூலமாகத் தகவல் அனுப்பினார். சுரேஷ் பிரபுவிடம் இவ்விவகாரத்தை அமைச்சரவையில் வைத்து விவாதித்து நல்ல முடிவெடுக்கும்படி வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
I urge Namo to tell Jaitely and Jayant Sinha to lay off trying to parcel off Jet Airways to Spice Jet. It smells of favouritism and misuse of official position that will damage BJP’s reputation
— Subramanian Swamy (@Swamy39) April 25, 2019
தொழிலில் நொடித்து போய் விட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வான் தடங்களை எடுத்துக்கொள்ளும்படி ஸ்பைஸ் ஜெட் உரிமையாளர் அஜய் சிங்கிடம் பேசி வரும் அருண் ஜெட்லியும் வேறு சில அதிகாரிகளும் பேசி வருகின்றனர். இது மிகவும் தவறு என அவர்களைக் குற்றம் சாட்டி சுரேஷ் பிரபுவுக்கு சுவாமி கடிதம் எழுதியுள்ளார். முறைகேடான இந்த பேச்சுவார்த்தை கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்பதால் இவர்களை மேற்கொண்டு இந்த விவகாரத்தில் பேச விடக் கூடாது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஏர் இந்தியாவுடன் இணைத்து இரண்டையும் ஒன்றாக்கி நடத்தலாம் என்று சுவாமி ஆலோசனை வழங்கினார். முந்தைய காங்கிரஸ் அரசு ஐக்கிய அமீரகத்தின் எதிஹாட் விமான நிறுவனத்துடன் செய்து கொண்ட முறைகேடான ஒப்பந்தங்களால் தான் இன்று இந்திய விமான நிறுவனத்துக்கு இப்பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
“ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மூடுவதால் விமானப் பயணிகள் வேறு நிறுவனங்களின் சேவையை ஏற்க வேண்டும். நாட்டில் விமானப் பயணிகள் பெருகி வரும் இக்கால கட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் விமான சேவைகள் இவர்களை குறி வைக்க கூடும். பல் வெளி நாட்டு விமான நிறுவனங்கள் குறைந்த பயணிகளை கொண்டு விமானத்தை இயக்கி வருகின்றன. அவை இனி இந்திய விமானப் பயணிகளை தமதாக்கி கொள்ள குறி வைக்கும். எனவே ஜெட் ஏர்வேசின் சேவையை நிறுத்தியதால் இந்திய விமானப் பயணிகள் சரியான சேவை கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர்.
கைமாறாகக் கொடுத்தது?
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது எதிசாலட் என்ற டெலிகாம் நிறுவனத்துக்கு 2 ஜி உரிமம் வழங்குவதற்காக பெற்றுக்கொண்ட இலஞ்சப் பணத்துக்கு கைமாறாக அரபு நாட்டின் எதிஹாட் விமான நிறுவனத்துக்கு முறை கேடாக சில சலுகைகள் வழங்கப்பட்டன. இதை எதிர்த்து அப்போதே சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
“எதிஹாட்டுக்கு அளவுக்கு அதிகமாக சலுகைகளை [வான் எல்லையை] வழங்கியது நியாயமற்றதாகும். இது நம்முடைய உள்நாட்டு பயணிகளுக்கு துரோகம் செய்வதாக அமைந்தது. அவர்களுக்கு இதனால் நன்மைகளை விட இழப்புகளே அதிகம் ஆயிற்று. நாட்டின் நலனுக்கும் குந்தகம் விளைவிப்பதாக அமைந்தது” என்று சுவாமி ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். [No: 883 of 2013].
“இப்போது இம்மனு மீதான விசாரணை முடிவுக்கு வர உள்ளது. இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு பூட்டு போட்டாகிவிட்டது. இது நீதிமன்றத்தில் உள்ள எனது வழக்கை, வாதத்தை இன்னும் உறுதிப்படுத்துகிறது”, என்றார். சுவாமி அவர்கள் பல முறை எதிஹாட்டுனான் ஒப்பந்தங்களின் தீமைகளை எடுத்துரைத்தும் காங்கிரஸ் ஆட்சி செவி சாய்க்கவில்லை. அதன் விளைவாக இன்று இந்தியாவுக்கு அதாவது இந்திய நிறுவனமான ஜெட் ஏர்வேசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அமீரகத்தின் அலைபேசி நிறுவனமான எடிசாலட் தான் லஞ்சம் கொடுத்து பெற்றிருந்த 2ஜி உரிமத்தையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் இழந்துவிட்டது. உச்ச நீதிமன்றம் அனைத்து 2 ஜி உரிமத்தையும் ரத்து செய்துவிட்டது. அரபு நாட்டு ஷேக்குகளிடம் இருந்து இலஞ்சம் வாங்கியிருந்த காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு நன்மை செய்யும் வகையில் எதிஹாட் விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு விமானத் தடங்களில் சலுகை காட்டினர். பல விமானத் தடங்கள் அபு தாபி வழியாக போனதாள் எதிஹாட் இதனால் நல்ல பலன் அடைந்தது. ஆனால் இந்திய பயணிகள் சிரமத்துக்குள்ளாயினர்.
பி ஜே பி ஆட்சிக்கு வந்த பிறகு 2௦14 ஆம் ஆண்டின் இறுதியில் திமுக தலைவரான கருணாநிதியின் மகள் வயிற்று பேரன்களான மாறன் சகோதர்கள் நட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த தங்களுடைய ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை பி ஜே பி கட்சிக்கு வேண்டியவரான அஜய் சிங்கிடம் ‘ஒரு மாதிரி’ பேசி விற்றுவிட்டனர். அஜய் சிங் இந்த நிறுவனத்தை வெறும் இரண்டு ருபாய் மட்டுமே கொடுத்து வாங்கினார் என்ற செய்தி பின்னர் வெளியாயிற்று. பி ஜே பி தலைவர் அமரர் பிரமோத் மஹாஜன்னுக்கு நெருக்கமானவராக விளங்கிய அஜய் சிங்தான் 2௦௦௦ இல் பி ஜே பி கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை உருவாக்கினார். பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மாறன் சகோதரர்களின் சண் குழுமம் அஜய் சிங்கிடம் இருந்து 2008 ஆம் ஆண்டின் மத்தியில் வாங்கிக் கொண்டது.
மீண்டும் பி ஜே பி ஆட்சி மலர்ந்ததும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை மாறன் சகோதரர்கள் அஜய் சிங்கிடமே விற்று விட்டனர். [அதாவது திருப்பி கொடுத்து விட்டனர்]. பிரமோத் மகாஜன் மறைவுக்கு பின்னர் இப்போது அஜய் சிங் நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு நெருக்கமாகிவிட்டார்.