நேஷனல் ஹெரால்டு வழக்கை விரைவுபடுத்திய சிறப்பு நீதிமன்றம்

சிறப்பு நீதிமன்றம் நேஷனல் ஹெரால்டு வழக்கை ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது

0
1636
சிறப்பு நீதிமன்றம் நேஷனல் ஹெரால்டு வழக்கை ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது
சிறப்பு நீதிமன்றம் நேஷனல் ஹெரால்டு வழக்கை ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது
சு ரு க் க ம்

  • சு.சுவாமி ஆவணங்கள் அளிக்க அனுமதி
  • அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப ஆணை
  • காங்கிரஸ் தலைவருக்கு கிடுக்கி பிடி
  • சோனியாவும் ராகுலும் இனி தப்பிக்க இயலாது

ENGLISH VERSION

பி. ஜே. பி. தலைவரான சுப்பிரமணியன் சுவாமிக்கும் காங்கிரஸ் தலைவருக்கும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆவணங்கள் அளிப்பது தொடர்பாக இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணைகளும் குறுக்கு விசாரணைகளும் சனிக்கிழமை ஒரு முடிவுக்கு வந்தது. வரும் ஜுலை 21 முதல் மனுதாரர் சுவாமி தனது ஆவணங்களை நீதிமன்றத்தில் அளிக்கலாம் என்றும் அவை தொடர்பான அதிகாரிகளுக்கு அழைப்பாணை [சம்மன்] அனுப்பி அவற்றின் உண்மைத்தன்மையை உறுதி செய்யலாம் என்றும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம் கூடுதல் தலைமை பெருநகர் நீதிபதி (Addl. Metropolitan Magistrate) சமர் விஷால் சோனியா காந்தி தான் முக்கிய குற்றவாளி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது மறுக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி அனுப்பியிருந்த மனுவை விசாரனைக்கு ஏற்க மறுத்துவிட்டார்.

சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றம் நேஷனல் ஹெரால்டு வழக்கை ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி அளித்த ஆவணங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சோனியாவும் ராகுலும் 2016 இல் இருந்து கடுமையாக எதிர்த்து வந்தனர். 2016 ஜனவரி மாதம் விசாரணை நீதிமன்றம் சுவாமி தனது ஆவணங்களை அளிக்கலாம் என்று ஆணையிட்டிருந்தது ஆனால் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தை கேட்காமலேயே விசாரணை நீதிமன்றம் இவ்வாறு ஆணையிட்டது செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டது. பிறகு சுப்பிரமணியன் சுவாமி  தனது ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளும்படி மீண்டும் புதிதாக ஒரு மனு அளித்தார்  நீதிமன்றம் அந்த ஆவணங்கள் மேலோட்டமானவையாக உள்ளன என்றும் குறிப்பிட்டனவாக இல்லை என்றும் கூறி நிராகரித்துவிட்டது.

பின்பு சுவாமி இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 294 இன் கீழ் நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். அதில் தான் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை சோனியா காந்தி ஏற்கெனவே அளித்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்ட சோனியாவின் ஆவணங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறதா மறுக்கிறதா எனக் கேட்டிருந்தார்… இவ்வழக்கு தொடர்பாக  2015 டிசம்பர் மாதம் சோனியாவும் ராகுலும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பதை டில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.  அப்போது காங்கிரஸ் வழக்கறிஞர்கள் இந்த மனுவை முட்டாள்தனமானது என்று தெரிவித்தனர்   இவ்வழக்கு விசாரணையை தடுக்க அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். அங்கு அவசரத்தில் காங்கிரஸ் தலைவர்களை குற்றம் சாட்ட ஏதுவான ஆவணங்களை சமர்ப்பித்து விட்டநற் என்று சட்ட நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர். சோனியாவை தப்பிக்க விடக் கூடாது என்பதற்காகத்  திட்டமிட்டு சுவாமி இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 294 இன் கீழ் வழக்கு தொடர்ந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.  சோனியா காந்தி இந்த ஆவணங்கள் ஏற்றுக் கொண்டால் அவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற வழக்கை  ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும் மறுத்துவிட்டால் அவர் நீதிமன்றத்தில் பொய்யான வாக்கு மூலம் கொடுத்ததாக வழக்கு அவருக்கு எதிராக மாறிவிடும். அவர் ஒத்துக்கொண்டாலும் சிக்கல்; மறுத்தாலும் சிக்கல் என்ற  நிலையில் இப்போது சோனியாவை சிக்க வைத்து விட்டார் சுவாமி.

— [தீர்ப்பு நகல்]

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்துக்கொண்டிருக்கும் இந்த வழக்கில் சுவாமி இனி தன்னிடமிருக்கும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் அளிக்கலாம் என்றும அவற்றின் உண்மைத்தன்மையை உரிய அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பி வரவழைத்து உறுதி செய்யலாம் என்றும் கூடுதல் தலைமை பெரு நகர் நீதிமன்றத்தின் நீதிபதி சமர் விஷால் தெரிவித்தார். நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் வெளியீட்டு நிறுவனம், மற்றும் யங் இண்டியன்  நிறுவனத்தின் ஆவணங்கள் தவிர சோனியாவுக்கும் ராகுலுக்கும் சொந்தமான யங் இண்டியன் நிறுவனத்தின் வரி கட்ட வேண்டிய வருமானத்தை  415  கோடியில் இருந்து 249 கோடிக்கு குறைத்து கணக்கில் காட்டியதற்காகவும்  அதற்குரிய ஆவணங்களை அளிக்கும்படி சுவாமி கேட்டிருக்கிறார்.

நாட்டின் பல பகுதிகளிலும் பல நகரங்களில் உள்ள அசோசியேட் ஜர்ணல்ஸ் லிமிட்டட் நிறுவனத்துக்கு சொந்தமான ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய  நிலங்களையும் சொத்துக்களையும் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் அபகரித்துக்கொண்டனர் என்பதை வருமான வரி மதிப்பீட்டு ஆணை தெளிவாகத் தெரிவித்துள்ளது.  வருமான வரி அலுவலகம் விதித்த 249 கோடி அபராதத்தொகையை எதிர்த்து மேல் முறையிடு செய்ய பத்து கோடி ரூபாய் வைப்புத்தொகை கட்ட வேண்டும் என்று யங் இண்டியன் நிறுவனத்க்கு டில்லி உயர் நிதிமன்றம் ஆணையிட்டது. மேலும்  காங்கிரஸ் கட்சி அசோசியேட் ஜர்ணல்ஸ் லிமிடட் நிறுவனத்துக்கு தொன்னூறு கோடி ருபாய் கடன் அளித்திருப்பதாக தெரிவித்ததை முற்றிலும் தவறு என மறுத்துள்ளது.

‘’இந்த சூழலில் வழக்கு விசாரணை இழுத்துக்கொண்டு போவதை தடுக்க விசாரணையை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு மனுதாரர் தன்னை அரசு தரப்பு வழக்கறிஞர் விசாரிக்க முதல் சாட்சியாக்கிக்கொண்டு இவ்வழக்கிற்கு அடித்தளம் அமைக்க வேண்டும்.  அதன் பிறகு மற்ற சாட்சிகளும் அதிகாரிகளும் அழைக்கப்பட்டு ஆவணங்களின் உறுதித்தன்மையை நிறுவுவதற்கு தேவையான விசாரிக்கப்படுவர்’’. என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புது டில்லியில் பாட்டியாலா ஹவுசில் உள்ள  கூடுதல் தலைமை பெருநகர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு கீழே முழுமையாக தரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here