ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: இரண்டாவது கட்ட விசாரணையில்  சிதம்பரம்

மகன் கார்த்தியின் தொழில் பற்றி எதுவும் தெரியாது – சிதம்பரம்

0
1972
ஜுன் மாத இறுதியில் கண்டிப்பாக அடுத்த கட்ட விசாரணைக்கு வர வேண்டும்: ED
ஜுன் மாத இறுதியில் கண்டிப்பாக அடுத்த கட்ட விசாரணைக்கு வர வேண்டும்: ED

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் [FIPB] விசாரனையில் நிதியமைச்சக அதிகாரிகளையே குற்றம் சாட்டுகிறார்

ஏர்செல் மேக்சிஸ் ஊழலில்  ஆறுமணி நேர விசாரனைக்கு பிறகும் திருப்தி அடையாத அமலாக்கத் துறை அதிகாரிகள் ப சிதம்பரத்தை மீண்டும் விசாரணைக்கு வரும்படி தெரிவித்தனர்.

மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்று ப சிதம்பரத்திடம் அமலாக்க துறை (ED) அதிகாரிகள் தெரிவித்தபோது அவர் அதற்கு சாக்கு போக்கு சொல்லி தட்டி கழிக்க பார்த்தார்…

சென்னையில் உள்ள ஏர்செல் அலைபேசி நிறுவனத்தை மலேஷியா நிறுவனமான மேக்சிசுக்கு தாரை வார்த்து கொடுக்க அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம்  அனுமதி பெற்றதில் நடந்த ஊழலில் தனக்கு எதுவும் தெரியாது, தான் ஒன்றும் அறியாத அப்பாவி, மூத்த அதிகாரிகளே அனைத்துக்கும் பொறுப்பு என்பது போல ப.சிதம்பரம் விசாரணையின்  போது பதில் கூறியதாகத் தெரிகிறது. அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு காலை பதினோரு  மணிக்கு விசாரணைக்கு வந்த ப. சிதம்பரம் மாலை ஐந்து மணி வரை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

மேக்சிஸ் நிறுவனத்தில் இருந்து இரண்டு இலட்சம் டாலர்கள் வரை ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி பெற்றிருப்பது குறித்து  கேட்ட போது   அவரது தொழில் விவரங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று தடாலடியாக பதில் அளித்தார். கார்த்தி பற்றி கேட்ட கேள்விகளுக்கு அவர் பல முறை எனக்கு எதுவும் தெரியாது என்று பதிலையே கூறினார். மேக்சிஸ் விவகாரத்தில் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான அமைச்சக குழுவின் விதிகள் மீறப்பட்டிருப்பது பற்றி கேட்டபோது அதிகாரிகள் சரிபார்த்து அனுப்பிய கோப்புகளில்  தான் கையெழுத்திட்டதாகவும் அதற்கு மேல் அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துவிட்டார். ஆனால் சி பி ஐ இந்த ஊழல் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது பலரும் 2006 இல் நிதியமைச்சரின் வற்புறுத்தலின் பேரில் தான் தாங்கள் அனைத்து கோப்புகளிலும் கையெழுத்திட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் என்ற முறையில் ப சிதம்பரம் அறுநூறு கோடி ருபாய் மதிப்புடைய அந்நிய முதலீடுகளுக்கு மட்டுமே கையெழுத்திடும் உரிமை உண்டு. அதற்கும் அதிகமான தொகை என்றால் அந்த கோப்பு பொருளாதார நடவடிக்கைகளுக்கான அமைச்சக குழுவின் கையெழுத்துக்கு அனுப்பப்பட வேண்டும்  ஏர்செல் மேக்சிஸ் அனுமதி 3,500  கோடி ருபாய் மதிப்புடையது ஆனாலும் ப சிதம்பரம் அதை   அந்த குழுவுக்கு [CCEA] அனுப்பவில்லை. காரணம் என்னவென்றால் அந்த குழுவில் உள்துறை அமைச்சகமும் இணைந்துள்ளது. அதுவும் தொலைதொடர்பு விவகாரங்களை கண்காணிக்கிறது, மேக்சிஸ் நிறுவனத்தில்  பங்கு வைத்திருக்கும் ஸௌதி டெலிகாம் நிறுவனம் பாகிஸ்தான் டெலிகாம் நிறுவனத்தின்  பங்குதாரர் ஆவார். பாகிஸ்தானுடன் தொடர்பு உடைய தொலைதொடர்பு நிறுவனத்துக்கு  உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்காது. எனவே இந்த மேக்சிஸ் நிறுவன அனுமதிக்கான கோப்புகளை அந்த [CCEA] குழுவுக்கு அனுப்ப ப.சிதம்பரம் சம்மதிக்கவில்லை. என்கின்றனர் மூத்த அத்கார்கள்.

மேக்சிஸ்  நிறுவனத்தில் இருந்து ஏர்செல் நிறுவனத்துக்கு அனுமதி பெற்று வந்த தொகை Rs.3600 கோடி என்றாலும் உண்மையில் அதில் நடந்த பணப் பரிமாற்றம் Rs.4800  கோடிக்கும் அதிகமானது என்பதை தலைமை கணக்கு தணிக்கை குழு [Comptroller and Auditor General (CAG) ] கண்டுபிடித்துள்ளது. இதில் Rs.1200 கோடி ருபாய் கூடுதலாக உள்ளது.  மேக்சிஸ் நிறுவனத்தில் இருந்து 1.16 கோடி ருபாய் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தியின்  Advantage Consulting and Chess Management என்ற நிறுவனத்தின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதை  அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்று ப சிதம்பரத்திடம் அமலாக்க துறை (ED) அதிகாரிகள் தெரிவித்தபோது அவர் அதற்கு சாக்கு போக்கு சொல்லி தட்டி கழிக்க பார்த்தார் ஆனாலும்  அமலாக்கத்துறையினர் அவரை விடவில்லை. ஜுன் மாத இறுதியில் கண்டிப்பாக அடுத்த கட்ட விசாரணைக்கு வர வேண்டும் என்று அவரிடம் தெரிவித்துவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here