மோடியின் ஆட்கள் சக்திகாந்த தாசை நம்புகிறோம்

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாசை தெரிவு செய்ததற்கான காரணங்களை ஆராய்வோம்

0
1969
தாசானு தாசா சக்திகாந்த தாசா
தாசானு தாசா சக்திகாந்த தாசா

ஆக இப்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் என்பது முடிவாகி விட்டது. அவர் பொருளாதாரம், வங்கியியல் போன்ற படிப்புகள் படித்தவர் அல்ல. அந்த துறைகளில் பயிற்சி பெற்றவரும் அல்ல. இருப்பினும் மோடி அவரிடம் ஏதோ ஒரு திறமை இருப்பதை அறிந்து அவரை ஆளுநர் ஆக்கியிருக்கிறார்.  பிரதமர் மோடி,  சக்தி காந்த தாசை எதனால் ரிசர்வ் வங்கி ஆளுனராக்கினார் என்பதைக் கண்டறிய பி குருஸ் செய்தி தளம் விரும்புகிறது. கிடைத்த தகவல்களை தொகுத்து உண்மை காரணத்தை  அறிய முனைகிறது.

அரசுக்கு ரிசர்வ் வங்கியின் ஈவுத் தொகை

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் அரசுக்கு ரிசர்வ் வங்கி டிவிடென்ட் எனப்படும்  ஈவுத் தொகையை அளிக்கும். இந்த வருடமும் அந்த ஈவுத் தொகையை ஐம்பதாயிரம் கோடியாக அளித்தது.  இது முந்தைய வருடத்தில் கொடுத்த ஈவுத் தொகையை விட 63% அதிகம். போன வருடம் அரசுக்கு வங்கி கொடுத்த ஈவுத்தொகை 30,569 ருபாய் ஆகும். 2016,ஆம் வருடம் ரிசர்வ் வங்கி 65,876 ருபாய் அளித்தது.  2017 ஆம் ஆண்டில் தொகை குறைந்ததற்கு காரணம் கேட்டபோது பணமதிப்பு நீக்கத்தை அறிமுகம் செய்ததால் புதிய ருபாய் நோட்டு அச்சடித்ததில் செலவு அதிகமாகிவிட்டது எனக் கணக்கு காட்டியது.

உர்ஜித் பட்டேல் பதவி விலகியது ஏன்?

ரிசர்வ் வங்கியில் இப்போது பத்து இலட்சம் கோடி ருபாய் இருக்கிறது. இருப்பு தொகையில் ஐந்து சதவிதம் ஈவுத்தொகை என்பது ஐம்பதாயிரம் கோடி ருபாய் ஆகும். உலகமெங்கும் மத்திய வங்கிகள் 70-75% தொகையை இருப்பு தொகையாக வைத்துக்கொள்கின்றன. இந்தக் கணக்கு சற்று சிக்கலானது என்பதால் நம் வாசகர்களுக்கு எளிமையாக விளக்க முயல்வோம். தற்போது நமது ரிசர்வ் வங்கி தன வைப்பு தொகையின் 95% பகுதியை இருப்பு தொகையாக வைத்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்க மெரில் லிஞ்ச் வங்கியின் அறிக்கை, இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய இருப்பு தொகை ஒன்று முதல் மூன்று இலட்சம் கோடி என்றும் இத்தொகையை அரசுக்கு மாற்றித் தரலாம் என்றும் தெரிவித்துள்ளது.  மோடி அரசு இந்த உபரி தொகையைப் பெற்றுக்கொண்டு சில நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்று கருதுகிறது. இதற்கு உர்ஜித் பட்டேல் சம்மதிக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் பணத்தை அரசுக்குத் தர மறுக்கிறார் உர்ஜித் பட்டேல். இந்த பிரச்சனை சிறிது காலமாகவே அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே தீர்க்கப்படாத சச்சரவாக ஓடிக்கொண்டே இருந்தது. அமெரிக்க வங்கியின் அறிக்கை வந்ததும் பிரச்சனை முற்றிவிட்டது. அரசு ரிசர்வ் வங்கியின் ஆளுநரிடம் கூடுதல் தொகை கேட்டதற்கு அதனைத் தர மறுத்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் மத்திய அரசின் வற்புறுத்தலுக்கு இணங்காமல் பதவியில் இருந்து விலகி விட்டார்.

ஏன் ஆளுநர் அரசுக்கு அடி பணிய மறுத்தார்? இந்தக் கேள்விக்கு பதில் அறிவதற்கு நாம் முதலில் பணமதிப்பு நீக்கம் நிறைவேற்றப்பட்ட  காலத்துக்கு போக வேண்டும்.

பணமதிப்பு நீக்கம் முடிவான நாள் பிப்ரவரி 19, 2016

பிரதமர் நாட்டில் புழங்கும் ஐநூறு மற்றும் ஆயிரம் ருபாய் நோட்டுக்களை செல்லாது என்று பிப்ரவரி 19, 2016 அன்று அறிவித்தார். ரிசர்வ் வங்கி தான் புதிதாக ஐநூறு, இரண்டாயிரம் நோட்டுக்களை அச்சடிக்க போவதாகத் தெரிவித்தது. அதற்கு ஒன்பது மாத கால அவகாசம் இருந்தது.  அப்போது ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார். ரகுராம் ராஜன் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்துக்கு வேண்டியவராக இருந்தாலும் இந்த தகவலை அவரிடம் சொல்லவில்லை. அருண் ஜெட்லியும் தெரிவிக்கவில்லை. இந்த விஷயத்திலாவது அவர் நாட்டுப்பற்றுடன் நடந்துகொண்டார்.

பணமதிப்பு நீக்கம் பற்றி யாருக்கு தெரிந்திருந்தது?

பிரதமர் மோடியின் வீட்டில் ஒரு ரகசிய அறையில் ஆறு  அதிகாரிகள் இரவும் பகலும் இருந்து பணமதிப்பு நீக்கம் பற்றிய ஆலோசனைகளில் ஈடுபட்டனர். இவர்களில் சிலர் நிதி அமைச்சகத்தின் செயலர்களாக இருந்தும் அவர்கள் ப சிதம்பரத்திடம் எதுவும் சொல்லவே இல்லை.  இந்த ஆறு பேரில் ஹஸ்முக் ஆதியாவும் சக்தி காந்த தாசும் இருந்தனர்.  ஒருவர் வருவாய் செயலர்; மற்றவர் பொருளாதார நடவடிக்கை துறையின் செயலர் ஆவர். பண மதிப்பு நீக்கம் நவம்பர் மாதம் பதினெட்டாம் நாள் தான்  நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் பத்து நாட்களுக்கு முன்னாடியே நவம்பர் பத்தாம் தேதியே நடைமுறைக்கு  வந்துவிட்டது.

நவம்பர் எட்டு – பணமதிப்பு நீக்கம் அறிமுகமான நாள்

பண மதிப்பு நீக்கம் பற்றி  அறிவிப்பதற்கு ஆறு மணி நேரத்துக்கு முன்பு பிரதமர் மோடி ஓர் உரையை ஒலிப்பதிவு செய்தார்.  அது அனைத்து ஊடகங்களிலும் அவரது அறிவிப்புக்கு பின்னர் ஒளிபரப்பானது. பின்னர் நவம்பர் ஏழாம் தேதி இரவு ஏழரைக்கு அமைச்சரவை கூட்டம் கூடியது. அதில் பண மதிப்பு நீக்கம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து அமைச்சர்களும் அங்கேயே இருக்க பிரதமர் மட்டும் குடியரசுத் தலைவரிடம் இத்தகவலைத் தெரிவிக்க போனார். பிரதமரின் ஒலிப்பதிவு செய்யப்பட உரை அன்று இரவு 8:15க்கு ஊடகங்களில் ஒலிபரப்பானது. பிரதமர் அலுவலகம் ‘ஒரு  முக்கிய உரையை நாங்கள்  அனுப்பியவுடனே ஒளிபரப்ப வேண்டும்’ என்று அனைத்து ஊடகங்களுக்கும் முன் கூட்டியே தகவல் தெரிவித்தது.  ஊடகங்கள் அப்போது பாகிஸ்தான் சீன எல்லையில் போர் நடத்து கொண்டிருந்ததால் அது பற்றிய ஏதோ ஒரு  செய்தி எனக் கருதின. உரையில் இருந்த பண மதிப்பு நீக்கம் பற்றிய அறிவிப்பு  பேரதிர்ச்சியை அளித்தது. அதிகாரிகள் இத்தகவலை ரகசியமாக வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்ததால் வெளியே எவருக்கும் பணமதிப்பு நீக்கம் பற்றி தெரிந்திருக்கவில்லை.

நவம்பர் ஏழாம் தேதி அருண் ஜெட்லி வெளிநாட்டுக்கு பயணப்பட இருந்தார். அமைச்சக செயலர் ஒருவர் அருண் ஜேட்லியிடம் மறுநாள் ஒரு முக்கிய கூட்டம் இருப்பதாகவும் அதில் அவர் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்றும் அதனால் பயணத்தை ரத்து செய்யும்படி அதிகாரிகள் தெரிவித்தார். அவரிடம் கூட அதிகாரிகள் பணமதிப்பு நீக்கம் பற்றி தெரிவித்திருக்கவில்லை. அருணிடம் சொன்னால் அவர் ஒரு வேளை ப சிதம்பரத்திடம் சொல்லிவிட கூடும் என்று பிரதமர் நினைத்திருக்கலாம். ப சிதம்பரத்துக்கு தெரிந்துவிட்டால் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கும் இந்த ரகசியம் அமபலமாகிவிடும் என்று பிரதமர் நினைத்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் கூட சொல்லாமல் மறைத்திருக்கலாம்.

ஒரு நாள் இராஜ்ய சபையில் நரேஷ் அகர்வால் அருண் ஜெட்லியிடம் வந்து ‘’நீங்கள் எப்படி இதை என் காதில் கூட போடவில்லை?’’ எனக் கேட்டார். அவர் தன காதில் என்றது ப சிதம்பரத்திடம் என்பது சொல்லாமலே புரிந்தது.

ஜெட்லி எதுவும் அறியாத நிலையில் சக்திகாந்த தாஸ் பிரிட்டனை சேர்ந்த டே ல ரூ என்ற நிறுவனத்துடன் புதிய ருபாய் நோட்டுக்களை அச்சடிக்க ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

பண மதிப்பு நீக்கம் பற்றி அறிந்த  சோனியா காந்தி அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். ப சிதம்பரத்தை அழைத்து ‘டோஸ்’  விட்டார். இந்த உண்மை உங்களுக்கு தெரியாமல் போனது எப்படி என்று கேட்டார். காங்கிரசார் அதிர்ச்சியில் செயலிழந்து போயினர்.

நிதி அமைச்சர் பதவி விலகவில்லையே  ஏன்?

பணமதிப்பு நீக்கம் பற்றி ஆலோசனைகள் நடந்ததை தன செயலாளர்கள் தன்னிடம் தெரிவிக்காததை அறிந்த நிதி அமைச்சர் இதை பெரிய அவமானமாக கருதியிருக்க வேண்டும். உடனே தான் பதவி விலகப் போவதாகத் தெரிவித்திருக்க வேண்டும். பிரதமர் தனது  அதிகாரிகளை நம்பிய அளவுக்கு தன்னை நம்பவில்லையே என மனம் வருந்தி பதவியை விட்டு விலகியிருக்க வேண்டும்.  கொள்கை அடிப்படையில் பணி செய்யும் எவரும் இதைத் தான் செய்திருப்பர். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் தோற்று மத்த்திய அமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவர் மக்கள் ஆதவரவற்ற நிலையில் இதை செய்ய முடியுமா?  அதனால் அவர் பதவி விலகவில்லை ஆனால் வேறொன்றை செய்தார்…

பண மதிப்பு நீக்கத்தை அமல்படுத்தும் போது ஒரு வருமான வரி அதிகாரியை ஒவ்வொரு வங்கியிலும் பணி அமர்த்தி அங்கு வரும் அனைத்து பணத்தையும் படமெடுக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. வரி ஏய்ப்பாளர்களுக்கு வருமான வரி அதிகாரிகள் தெரிந்திருக்கும் என்பதால் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ படம் எடுக்க இந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் கள்ள நோட்டுகள் ஊடுருவுவதையும் இதனால் தடுத்துவிட முடியும் என்று நம்பப்பட்டது. நிறைய கள்ள  நோட்டுக்கள் ஊடுருவின என்பதும் உண்மை. இங்கு ஜெட்லி தனது  அதிகாரத்தைக் காட்டினார். வங்கிகளில் படமெடுப்பதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதனால் பணமதிப்பு நீக்கம் எதிர்பார்த்த நன்மைகளை விளைவிக்கவில்லை.

பண மதிப்பு நீக்கம் குறித்து ரகசியமாக ஆலோசனை நடத்திய ஆறு அதிகாரிகளும் ஒரு விஷயத்தை கவனிக்க தவறிவிட்டனர். புதிதாக அச்சடிக்கப்படும் ருபாய் நோட்டின் அளவு ஏ டி எம் மெஷின்களில் வைக்க ஏதுவாக இருக்க வேண்டும் என்பதை கவனிக்கவில்லை. நாட்டில் ஏறத்தாழ நான்காயிரம் ஏ டி எம் இயந்திரங்களே உள்ளன. இவற்றில் ஒவ்வொன்றையும்  புதிய நோட்டின் அளவுக்கேற்ப சரி செய்ய ஐந்து மணி நேரம்ஆயிற்று.  பணமதிப்பு நீக்க அறிவிப்புக்கு முன்னர் இதைச் செய்யவில்லை.

இன்னொரு பிரச்சனையும் எழுந்தது. அன்றாடம் வங்கியில் வந்து சேர்ந்த பணம் அங்கேயே வைக்கப்பட்டதால் சில வங்கி மேலாளர்கள் அதை பத்து முதல் முப்பது சதவிதம் வரை கமிஷன் பெற்றுக்கொண்டு கருப்பு பணத்தை வாங்கிக் கொண்டு வங்கியில் சேர்ந்திருந்த பணத்தை அவர்களுக்குக் கொடுத்தனர். திரும்பப் பெறப்பட்ட பழைய நோட்டுக்களை கணக்கெடுத்து முடிக்க இரண்டு வருடங்கள் ஆயிற்று. இவ்வாறு மாற்றப்பட்ட பணத்தில் எவ்வளவு கள்ள நோட்டு என்பது இதுவரை தெரியவில்லை.

கூட்டுறவு வங்கிகளை வைத்திருக்கும் அரசியல்வாதிகளுடன் அரசு போராடிகொண்டிருக்கும் போது சக்திகாந்த தாஸ் தினமும் பத்திரிகையாளர்களை கூட்டி புதுப்புது அறிவிப்புகளை வழங்கி கொண்டிருந்தார்.

இதனால் பண மதிப்பு நீக்கம் முற்றிலும் குளறுபடியாகிவிட்டது. இப்போது கருப்பு பணம் பழைய நிலையிலேயே செழிப்பாக இருக்கிறது. இது நடக்கும் போது இவற்றை எல்லாம் உர்ஜித் பட்டேல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அவரை தகவல் உரிமை சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட மனுக்களும் பல்வேறு பாராளுமன்ற குழுக்களும் ‘நார் நாராய்’ கிழித்து கொண்டிருந்தன.

மீண்டும் சக்தி காந்த தாசுக்கு வருவோம்

ரிசர்வ் வங்கியின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இருவரை குறித்து நமது செய்தி தளம் விரிவாக செய்தி வெளியிட்டது. சக்தி காந்த தாஸ் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்துக்கு நெருங்கியவராக இருப்பினும் அவர் அரசின் ரகசியத்தை யாரிடமும் வெளியிட மாட்டார்; அரசு சொன்னபடி கேட்டு நடப்பார் என்று நம்பிக்கை ஏற்பட்டதால்  பிரதமர் அவரை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக தெரிவு செய்திருக்கலாம். முகேஷ் அம்பானியின் ஆளாக உர்ஜித் பட்டேல் இருப்பதால் அரசுக்கு பணம் தர வேண்டாம் அவ்வாறு  தந்தால், மோடி  ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்டங்கள் என்ற பெயரில் இந்த பணம் செலவழித்து மீண்டும் ஆட்சியை பிடித்து விடுவார்  என்று நினைத்து தர மறுத்திருக்கலாம்.

மத்திய அரசு ரிசர்வ் வங்கியில் இருக்கும் பணத்தைப் பெற்று மக்களுக்கு சில நலத் திட்டங்களை அறிவித்து அடுத்த தேர்தலில் வெற்றி வாய்ப்பைப் பெற முயலகிறது.  இந்த பணத்தை பத்து ஆரோக்கியமான வங்கிகளில்  மறு முதலீடு செய்தால் அவை நாட்டு மக்களுக்கு நல்ல பலனை கொடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here