ரிசர்வ் வங்கி ஆளுநராக ‘ஊழலுக்கு துணை போன’ சக்திகாந்த தாஸ்

இந்திய மத்திய வங்கி ஆளுநராக வரலாற்று பட்டப்படிப்பு முடித்தவரைத் தெரிவு செய்த பரிதாபம் 

0
2617
இந்திய மத்திய வங்கி ஆளுநராக வரலாற்று பட்டப்படிப்பு முடித்தவரைத் தெரிவு செய்த பரிதாபம் 
இந்திய மத்திய வங்கி ஆளுநராக வரலாற்று பட்டப்படிப்பு முடித்தவரைத் தெரிவு செய்த பரிதாபம் 

ஆர் பி ஐ ஆளுநராக வரலாறு படித்தவர்?

பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலில் பி ஜே பி கட்சி  தோல்வியைத்  தழுவிய நிலையில் பிரதமர் செவ்வாயன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரியான சக்திகாந்த தாசை ரிசர்வ் வங்கியின் ஆளுநராகக் நியமித்தார்.  இவர் ப சிதம்பரம் போன்ற ஊழல்வாதிகளுக்கு உறுதுணையாய் நின்றவர். மேலும் இவர் நிதியியல், வங்கியியல் பட்டப்படிப்பு  படித்தவரும் கிடையாது.  இளங்கலையில் வரலாறு படித்தவர். இந்திய நிதி ஆளுகை என்பது வரலாற்றுப் பாடம் படித்தவர் கையாளும் வகையில் நொய்மையானதா?  தாஸ் ஊழலில் ஊறித் திளைத்திருக்கும் ப சிதம்பரத்துக்கு பல வகைகளிலும் உறுதுணையாய் இருப்பவர். ப சிதம்பரத்தின் பல வழக்குகளை இழுத்தடிக்க தாஸ் காரணமாய் இருந்தவர் என்பதால் அவருக்கு மத்திய அரசு வழங்கியிருக்கும் பரிசு அல்லது அன்பளிப்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி எனலாம்.

தற்போதைய நிதி அமைச்சரின் நிதி பற்றிய அறிவும் கேள்விக்குரியதே. ஏன் பிரதமர் இது போன்றவர்களை நியமிக்கிறார் என்பது புரியவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளாக சக்திகாந்த தாஸ் செய்யும் அட்டுழியங்களை நமது செய்தி தளம் வெளியிட்டு வந்துள்ளது.  அவர் தன்னுடைய பழைய ‘பாஸ்’ ப. சிதம்பரத்தை பல குற்றங்களில் இருந்து தப்புவிக்க முனைந்து செயல்பட்டார். தமிழ்நாட்டில் நில ஒதுக்கீடு  வழக்கு மற்றும்  ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கை விரைவில் முடிக்க விடாமல் இழுத்த்தடிக்க  நீதிமன்றத்தில் பொய்க் காரணங்களைத் தெரிவித்தல், இந்த வழக்கை கவிழ்க்கும் முயற்சிகளில் இறங்குதல் என பல வகையிலும் இவர் அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். அதானி, எஸ்ஸார் மற்றும் ரிலையன்ஸ் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரவாக நிலக்கரி இறக்குமதியில் முப்பதாயிரம் கோடி ருபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை விரைவாக நடத்த விடாமல் முயற்சிகள் செய்தார். அப்போது இவர்  மத்திய வருவாய் புலனாய்வு துறையின் வருவாய் செயலாளராக இருந்தார்.

ஒரு சமயம் பிரதமர் சக்திகாந்த தாசை பொருளாதார நடவடிக்கை குழுவுக்கு மாற்றினார். அங்கு போன அவர் பணமதிப்பு நீக்கத்தை நடைமுறைப்படுத்தும் பணிகளைக் குழப்பி விட்டார். தினமும் பத்திரிகையாளர்களை அழைத்து புதுப்புது விதிகளாக தெரிவிப்பார். நல்ல திட்டமிடல் இல்லாததால் இந்த பணமதிப்பு நீக்கம் என்னும் அருமையான திட்டம் மக்களிடையே செல்வாக்குப் பெற முடியாமல் போயிற்று. நிறைவாக ஒரு நாள் வங்கிக்கு வந்து பணம் மாற்றுவோர் விரலில் மை குறி வைக்கப்படும் என்றார். இவ்வாறு கோமாளித்தனமான நடவடிக்கைகளை அறிவித்து மக்களிடம் வெறுப்பை பெறுகின்ற வகையில் இத்திட்டத்தை  குழப்பிவிட்டார். தற்போதைய நிதி அமைச்சரின் நிதி பற்றிய அறிவும் கேள்விக்குரியதே. ஏன் பிரதமர் இது போன்றவர்களை நியமிக்கிறார் என்பது புரியவில்லை.

கேள்விக்குரிய செயல்பாடுகள்

சக்திகாந்த தாஸ் ஊழல்வாதிகளுடன் நெருக்கமானவர் என்பது உலகறிந்த ரகசியம்.

கருணாநிதி ஆட்சி காலத்தில் அவர் தமிழ்நாட்டில் பணி செய்த போது நில ஒதுக்கீட்டு ஊழலில் சிக்கிக் கொண்டார். 2007இல் அமெரிக்க நிறுவனமான சான்மினா எஸ் சி ஐ கார்ப்பரேஷனுக்கு நூறு ஏக்கர் நிலத்தை 1970 இல் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மாற்றினார். ஒதுக்கீடு செய்தார். இச்செய்தியை நமது செய்தி தளத்தில் வெளியிட்ட போது நிதி அமைச்சகம் வரிந்து கட்டிக் கொண்டு வந்து பதில் தர முயன்றது.

2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன பழைய முதலாளி ப. சிதம்பரத்தைக் காப்பாற்றுவதற்காக அமலாக்கத் துறையின் வக்கீலாக வாதாடி வந்த கே கே வேணுகோபால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில்  பொய் சொல்ல மறுத்துவிட்டதால் ஒரே இரவில் அவரை தூக்கி எறிந்துவிட்டு தமக்கு சாதகமாக செயல்படும் வக்கீலை நியமித்தார். வருவாய்த் துறை உச்ச  நீதிமன்றத்தில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்துவிட்டதால் ராஜேஸ்வர சிங்கை இடம் மாற்றலாம் என்று தெரிவித்தது. இந்த பொய்யை சுப்பிரமணியன் சுவாமி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  ப. சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான அருண் ஜெட்லியில் ஆதரவு இல்லாமல் சக்திகாந்த தாஸ் இவ்வளவு தூரத்துக்குப் போயிருக்க முடியாது என்று சுவாமி தனது மனுவில் தெரிவித்திருந்தார். சக்திகாந்த தாசின் வருவாய் துறை  தெரிவித்த கருத்தை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டு ராஜேஸ்வர சிங்கை ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரனை வரை திரும்பவும் சி பி ஐ யில் சேர்க்கும்படி உத்தரவிட்டது.

2015 இல் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சக்திகாந்த தாசை ஒத்துழைப்பு நல்கும்படி பல முறை சி பி ஐ கேட்டும் இவர் ப சிதம்பரத்தைக்  காப்பாற்றும் ஒரே நோக்கத்துடன்  பல பித்தலாட்டங்களை செய்து நழுவி கொண்டே போய்விட்டார்.

பிரதமர் உத்தரவு பிறப்பித்த பிறகும் தாஸ் நிலக்கரி இறக்குமதி ஊழலை விசாரிக்க தனது வருவாய் புலனாய்வு துறையின் ஒத்துழைப்பைத்   தரவில்லை. விசாரணையை ஆரம்பிக்க பத்து மாதங்கள் கால தாமதம் செய்தார். நிலக்கரி இறக்குமதி தொடர்பான வங்கி கணக்குகள் பணப் பரிமாற்ற விவரங்களை இவரது துறையினர் நிலக்கரி நிறுனங்களிடம் இருந்து  கேட்டு பெற்று சி பி ஐக்கு  அளித்திருக்க வேண்டும் அந்த பணியை இவர் அந்த துறையை விட்டு வெளியேறும் வரை செய்யவே இல்லை..

சக்திகாந்த தாஸ் ஒய்வு பெற்ற பின்பும் அருண் ஜெட்லி இவரை நிதி கமிஷனில் உறுப்பினராக்க பரிந்துரை செய்தார்.  பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் முதன்மை செயலராக இருக்கும் ஒடிஷாவை சேர்ந்த பி கே மிஸ்ரா என்பவர் சக்திகாந்த தாசும் தனது மாநிலத்தவர் என்பதால் ஆரமபத்தில் இருந்தே இவருக்கு ஆதரவாகக் காய்களை நகர்த்தி வந்தார். இப்போது இவரை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆக்கியிருக்கிறார். சரத் பவார் விவசாயத் துறை அமைச்சராக இருந்த போது ஏழு வருடங்கள் அவரிடம் செயலராக பணி புரிந்த மிஷ்ரா பின்னர் பிரதமர் அலுவலகத்தின் செல்வாக்கு மிகுந்த செயலாளர் ஆனார்.

சக்திகாந்த தாசை போன்ற திறமையற்ற அதிகாரிகளின் நியமனமும் அவர்களின் குழப்பமான செயல்பாடுகளும் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய வெறுப்பே பி ஜே பி யின் சட்டமன்ற தோல்விகளுக்கு முக்கிய காரணம் ஆகும். இவ்வளவு நடந்த பிறகும் மோடி அவர்கள் இன்னும் தன போக்கை மாற்றிக்கொள்ள முன்வரவில்லை. கல்லூரியில் வரலாற்றை பாடமாக எடுத்து படித்து வந்த ஒருவரை இந்தய ரிசர்வ் வங்கியின் ஆளுனராக்கி இருக்கிறார். இவரது திறமையற்ற செயல்பாடு அரசின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையையும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கடும் பாதிப்பை உண்டாக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here