பி ஜி பிக்கு வெற்றி வெகு தொலைவில் இல்லை

ஆட்சியில் சீர் திருத்தங்களை விரைவாக மேற்கொண்டால் பி ஜே பி யின் வெற்றி வெகு தொலைவில் இல்லை

0
1398
ஆட்சியில் சீர் திருத்தங்களை விரைவாக மேற்கொண்டால் பி ஜே பி யின் வெற்றி வெகு தொலைவில் இல்லை
ஆட்சியில் சீர் திருத்தங்களை விரைவாக மேற்கொண்டால் பி ஜே பி யின் வெற்றி வெகு தொலைவில் இல்லை

சில விஷயங்களை பி ஜே பி அரசு சீக்கிரமாகச் செய்ய வேண்டும்.

செய்ய வேண்டியவை:

  1. அமித் ஷாவை தூக்கி எறிந்துவிட்டு ‘கை சுத்தமான’ சுறுசுறுப்பான நல்லவர் ஒருவரை தலைவர் ஆக்குங்கள்.
  2. வணிக சமுதாயத்தின் நம்பிக்கையைப் பெறுங்கள். வணிகர்களை, தொழில் அதிபர்களை நமது பங்காளிகளாகக் கருதுங்கள்.  பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக எடுங்கள். அம்பானி , அதானி தவிர வேறு பல வணிகர்களும் தொழில் அதிபர்களும் இந்தியாவில் இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொருள் மற்றும் சரக்கு வரியை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மாற்றி அமையுங்கள். தொழில் அதிபர்களை யாரோ மூன்றாம் மனிதர் போலக் கருதி அலட்சியப்படுத்தாதீர்.
  3. விவசாயிகளின் துக்கங்களை போர்க்கால நடவடிக்கை எடுத்து மாற்றுங்கள். தங்கள் துக்கங்களை பிரதமரிடம் எடுத்து கூற வேண்டும் என்று ஆயிரக் கணக்கில் திரண்டு டில்லிக்கு வந்த விவசாயிகளை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்க நேரம் இல்லாத பிரதமருக்கு சினிமா நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமணத்துக்கு மட்டும் நேரம் கிடைத்தது எப்படி? விவசாயிகளின் துக்கம் வெற்றிக்குத் தடைக் கல்.
  4. இலஞ்சம் மற்றும் ஊழலை உடனடியாக ஒழிக்க முனையுங்கள். ரஃபாலே ஊழலில் ஈடுபட்டவர்களை உடனடியாக தண்டியுங்கள். சட்ட விசாரணைக்குத் தடையாக இருக்கும்; முன் அனுமதிகளை மாற்றுங்கள். தகவல் உரிமை சட்டத்தை வலுப்படுத்துங்கள். பி ஜே பி என்பது ஊழலுக்குத் துணை போகும் கட்சி என்ற கருத்து  மக்களிடையே உருவாகிவிட்டது. அதை முதலில் மாற்றி அமைக்க வேண்டும்.
  5. அயோத்தியில் இராமர் கோயில் கட்ட சட்டப்படியான வழிமுறையைத் தேடுங்கள். அங்குள்ள முஸ்லிம்களிடம் பேசி இதற்கு நல்ல முடிவெடுக்கலாம்
  6. சட்டப் பிரிவு 350ஐ நீக்குங்கள் இதற்கு ஒரு தீர்ப்பு மட்டுமே தேவை.
  7. பி ஜே பி தொண்டர்களை களத்தில் இறங்கி வேலை பார்க்க வையுங்கள். வாக்காளர் சாவடி ஒவ்வொன்றிலும் நம் கட்சியினர் களப்பணி ஆற்ற வேண்டும்.
  8. வீர் சவர்க்காருக்கு பாரத் ரத்னா விருது வழங்குங்கள். பிரிட்டிஷாரும் மொகலாயரும் விட்டுச்சென்ற அகமதாபாத் போன்ற ஊர்ப்பெயர்களையும் முக்கியச் சாலைகளின் பெயர்களையும்  மாற்றி அமையுங்கள்.
  9. நிறைவாக, மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுவதை நிறுத்திக் கொண்டு உள்நாட்டில் பொருளாதாரம் சிறப்படைய வழி தேட வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் பி ஜே பிக்கு வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி நிச்சயம். இக்கட்சி இத்தேசத்துக்கு செய்ய வேண்டிய வரலாற்றுக் கடமை இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here