சுனந்தா மர்ம மரண வழக்கு – குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்

எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுக்காக சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்ட்டுள்ளது. இறந்துகிடந்த சுனந்தா புஷ்கரின் வழக்கு அந்த நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது

0
1477
சுனந்தா புஷ்கரின் வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது
சுனந்தா புஷ்கரின் வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது

CLICK HERE TO FOR THE ENGLISH VERSION

காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தன மனைவியை தற்கொலைக்கு தூண்டினார் என்று குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (Metropolitan Magistrate) இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தர்மேந்திரா சிங் இந்த வழக்கை கூடுதல் தலைமை பெருநகர் நீதிபதி சமர் விஷாலுக்கு மாற்றினார் அவர் இவ்வழக்கை வரும்   28ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வார்.

‘’சசி தரூர் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் இந்த வழக்கு அரசியல்வாதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு, நீதிபதி சமர் விஷால் விசாரிக்கும்படி மாற்றப்படுகிறது. வழக்கு வரும் 28ஆம் தேதி முதல் விசாரணைக்கு வரும்’’ என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சட்ட ஆலோசகர்களின் கவனத்துக்கு பிறகு இவ்வழக்கு இந்த கூடுதல் அமர்வு நீதிபதியிடம் மாற்றப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு வரை சசி தரூருக்கு சிறைத்தண்டனை கிடைக்கலாம்.

நீதிமன்றத்தில் இருந்த சுப்பிரமணியன் சுவாமி ஊடகங்களிடம் பேசும்போது, இப்போது தான் வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளது. விசாரணை தொடங்கியபிறகு நான் கண்டிப்பாக தலையிடுவேன். குற்றச்சாட்டு வரைவின் போதே சசி தரூர் பல குற்றங்களை செய்துள்ளார் அவற்றை அப்போது தெரிவிப்பேன். என்றார்.

மேலும் ‘சசி தரூர் தன மனைவி சுனந்தாவின் சவப் பரிசோதனையில் தலையிட்டது முதல் சசி தரூர் தனக்கு எதிரான ஆதாரங்களை அழிக்க முயன்றது வரை அதற்கான ஆதாரங்கள் என்னிடம் போதுமான அளவு உள்ளன’’ என்று குறிப்பிட்டார். எய்ம்ஸ் மருத்துவமனை (AIIMS) அளித்த அறிக்கையில் சுனந்தாவின் உடம்பில் பன்னிரெண்டு காயங்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளதை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவருவேன், என்றார். முதனிலை ஆய்வு குழுவில் இருந்த மூத்த காவல் துறை அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது சந்தேகத்துக்கிடமாக நடந்துகொண்டதையும் நீதிமன்றத்தில் தெரிவிப்பேன், என்றார்.

இந்த வழக்கில் இணை ஆணையர் விவேக் கொகியாவின் பங்கு ஏற்கெனவே ஊடகங்களில் வெளிவந்துள்ளது. எய்ம்ஸ் அறிக்கையில் கூட சுனந்தா இறந்தபோது அவர் அறையிலிருந்த படுக்கை விரிப்பு ஆய்வுக்கு அளிக்கப்படவில்லை என்று டில்லி போலீசார் மீது குற்றம் சுமத்தியிருந்தது. பதினோரு மாதங்கள் கழித்து டில்லி போலிசார் ஒட்டலில் இருந்து இந்த படுக்கை விரிப்பை வாங்கி எய்ம்ஸ் மருத்துவமனையிடம் ஆய்வுக்கு கொடுத்தனர்.

திருவனந்தபுரத்தின் லோக் சபா உறுப்பினரான சசி தரூர் தன மனைவி  சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டியதற்கான நான்கரை வருடப் பழைய வழக்கில் குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதால் அவரை நகர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று இம்மாதம் பதினான்காம் தேதி அன்று டில்லி போலீசார் தெரிவித்திருந்தனர்.

ஏறத்தாழ மூவாயிரம் பக்கம் உள்ள குற்றப்பத்திரிகையில் சசி தரூரை மட்டுமே போலீசாரால்  குற்றம் சாட்டப்பட்டவராகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர் தன மனைவியிடன் கொடுமையாக நடந்துகொண்டார் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திடம் அவர் ஒரு ஒரு குற்றவாளி என்பதால் அவருக்கு அழைப்பாணை [summon] அனுப்பி அவரை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் இந்த குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. இத்தம்பதியினரின் வீட்டு வேலைக்காரரான நாராயணன் சிங் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

சுனந்தா புஷ்கர் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம 17ஆம் தேதி ஏழு நட்சத்திரத் தகுதி பெற்ற ஒட்டல் லீலாவில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.  இந்த மரணம் தொடர்பாக அவரது கணவர் சசி தரூர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 498 [A]யின் படியும் [ஒரு பெண்ணை அவளது கணவன் அல்லது உறவினர் கொடுமைப்படுத்துதல்] மற்றும்  306 இன் படியும் [தற்கொலைக்கு தூண்டுதல்] குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 498A பிரிவின் கீழ் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் மூன்றாண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும். 306 பிரிவின்படி  தற்கொலைக்கு தூண்டும் வழக்கில் பத்தாண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும்

சிறப்பு அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா நீதிமன்றத்தில் ‘’சுனந்தா  தற்கொலைக்கு தூண்டப்பட்டிருந்தால் அதற்கு முன்னர் அவர் கொடுமைப்படுத்தப்பட்டிருப்பார். இந்த மரணம் அவர்களுக்கு திருமணமாகி ஏழு வருடங்களுக்குள் நடந்திருப்பதால் இந்த வழக்கைத் தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் கொண்டுவந்து விசாரிக்க முகாந்திரங்கள் இருக்கின்றன’’ என்றார்.

இந்திய சாட்சிகள் சட்டம் 113A பிரிவின் கீழ் திருமணம் நடந்து ஏழு வருடங்களுக்குள் ஒரு பெண் இறந்திருந்தால் ‘அந்த வழக்கில் மற்ற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு  அந்த  தற்கொலை கணவன் அல்லது உறவினரின் தூண்டுதலின் பேரால் நடந்தது  என ஊகிக்க முடியும்’’.

அரசு தரப்பு வாதத்தின்படி குற்றப்பத்திரிகையில் சுனந்தா மனதளவிலும் உடலளவிலும் கொடுமைக்கு ஆளாகியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையின் நகல் உடனடியாக யாருக்கும் கிடைக்கவில்லை. எவரும் குற்றம் சாட்டப்படாத நிலையில் போலிசாரால் முதல்நிலை தகவல் அறிக்கை [FIR] தயாரிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here