ப. சிதம்பரத்தையும் பிரணாய் ராயையும் காப்பாற்றும் நோக்கத்தில் வருவாய் துறையும் சி பி டி டியும் சதித்  திட்டம்

என் டி டிவியிடம் ஐ ஆர் எஸ் பெண் அதிகாரிகள் இலஞ்சம் வாங்கிய வழக்கை முடிக்க முயற்சி

0
1946
என் டி டிவியிடம் ஐ ஆர் எஸ் பெண் அதிகாரிகள் இலஞ்சம் வாங்கிய வழக்கை முடிக்க முயற்சி
என் டி டிவியிடம் ஐ ஆர் எஸ் பெண் அதிகாரிகள் இலஞ்சம் வாங்கிய வழக்கை முடிக்க முயற்சி

சி பி டி டி(CBDT) எனப்படும் நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தில் உள்ள ஊழல் பேர்வழிகள் சிலரின் உதவியுடன் அவர்களுக்கு உயர் பதவி பெற்று தருவதாகப் பேராசை காட்டி ப. சிதம்பரம் ஐ ஆர் எஸ் பெண்  அதிகாரிகளுக்கு இலஞ்சம் வாங்கியதற்கு வரி செலுத்தாத வழக்கை முடித்து விடத் திட்டமிடுகிறார்.

வருவாய் துறையும் சி பி டி டியும் கறை படிந்த கரங்களை உடைய ஐ ஆர் எஸ் அதிகாரிகளைக் காப்பாற்ற துடிப்பது ஏன்?

ப. சிதம்பரம் தன்னைக் காட்டிக்கொடுத்த எஸ் கே ஸ்ரீவஸ்தவா மீது பல பொய் வழக்குகளை போட்டார்.

என் டி  டிவியில் பணியாற்றிய ஒருவரின் மனைவியும் இன்னொருவரும் ஐ ஆர் எஸ் முடித்த பெண் அதிகாரிகள். இவர்களுக்கு இலஞ்சம் கொடுத்த விவகாரத்தில் ப சிதம்பரமும் என் டி டிவியின் பிரணாய் ராயும் சேர்ந்து மாட்டிக்கொண்டனர். எனவே தங்களை இவ்வழக்கில் இருந்து விடுவித்து கொள்ள விரும்பிய இவர்கள் இந்த இரண்டு பெண் அதிகாரிகளின் வழக்கையும் முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் உதவியை நாடினர். இவர்களின் உதவியுடன் தங்களுக்கு எதிரான சாட்சியங்களை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சுமணா சென் மற்றும் அஷிமா நேப் என்ற  பெண் அதிகாரிகள் இருவர் மீதும் இலஞ்ச வழக்கு பதிவாகியுள்ளது . இவர்கள் மீதான் கிரிமினல் வழக்கை முடித்து வைக்க பி சி மோடி போன்ற உயர் அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளனர். சுமணா சென் என் டி டிவிக்கு  வருமான வரி விதிக்கும் பிரிவின் தலைவராக இருந்தார். அப்போது வருமானத்தை குறைத்துக் காட்டி வரியின் அளவை குறைக்க இலஞ்சம் பெற்றார். அப்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். இவரது கணவர் அபிஷார் ஷர்மாவும் அப்போது என் டி டிவியில் பணியாற்றி வந்தார்.

என் டி டிவியில் நடந்த வரி ஏய்ப்புக்காக இந்த நிறுவனம் ஐ ஆர் எஸ் அதிகாரிக்கு அளித்த இலஞ்சமும் வருமான வரி ஆணையர் எஸ் கே ஸ்ரீவஸ்தவா வழியாக அம்பலமானது. இதனால் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தின் கடுங்கோபத்துக்கு ஸ்ரீவஸ்தவா ஆளானார்.

ப. சிதம்பரம் தன்னைக் காட்டிக்கொடுத்த எஸ் கே ஸ்ரீவஸ்தவா மீது பல பொய் வழக்குகளை போட்டார். அவை அனைத்தையும் பிரதமர் மோடியின் நேர்மையான வழிகாட்டுதலால் முறியடித்து ஸ்ரீவஸ்தவா வெளியே வந்தார். அடுத்து, பிரதமர் மோடியின் அலுவலகம் இந்த பெண் அதிகாரிகளின் மீது வழக்கு தொடுக்க அனுமதி வழங்கியது. இந்த அனுமதி தங்களுக்கு பேராபத்தில்  முடிந்துவிடும் என்பதை நன்குணர்ந்த ப. சிதம்பரமும் என் டி டிவியும் இப்போது நிதி அமைச்சகத்தின் வருவாய் துறை மற்றும் சி பி டி டி மூலமாக பேச்சு வார்த்தை நடத்தி வழக்கை முடித்து வைக்க முயற்சிகள் செய்து வருகின்றனர்.

சுமனா சென், அஷிமா நேப், மற்றும் அவரது வில்லங்கமான கணவர் அபிஹார் ஷர்மா ஆகியோர் மீதான வழக்குகளை முடிக்க ஏ பி பாண்டேயின் தலைமையில் இயங்கும் வருவாய் துறை மற்றும் பி சி மோடியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சி பி டி டி ஆகிய இரண்டும் ப. சிதம்பரத்தின் முயற்சிகளுக்கு துணை நிற்கின்றன. இந்த வழக்கு விசாரணை தொடங்கினால் அது அடுத்து சென்று தட்டுவது ப சிதம்பரம் மற்றும் பிரணாய் ராயின் வீட்டு கதவுகளாகத் தான் இருக்கும். இதற்கு பயந்த இருவரும் நீதிமன்றத்துக்கே வர விடாமல் துறை அளவிலேயே இந்த வழக்கை முடித்துவிட பார்க்கின்றனர். பிரதமர் உத்தரவின் பேரில் நிதி அமைச்சகம் அனுமதி வழங்கி நடத்தப்படும் இவ்வழக்கை வெறும் அதிகாரிகளின் துணை கொண்டு எப்படி  முடிக்க முயல்கின்றனர் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

இந்த வழக்கு நல்ல முறையில் நடந்து ஐ ஆர் எஸ் அதிகாரிகளான சுமணா சென், அஷிமா நேப் மற்றும் அவரது கணவரும் பத்திரிகையாளருமான  அபிஷார் வர்மா ஆகியோர் தண்டிக்கப்பட்டால் பிறகு என் டி  டிவியையும் அதன் உரிமையாளர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராயையும் ப. சிதம்பரத்தால் கூட காப்பாற்ற இயலாது. இதனை நன்கு தெரிந்து வைத்திருப்பதால் அடுத்த தலைவராக நியமிக்கட்ட இருக்கும் தற்போதைய நிர்வாகி பி சி மோடி மூலமாக இந்த வழக்கை வருமான வரி துறையினர் விசாரணைக்குப் பதிவு  செய்துவிட்டால் என்ன நேரிடுமோ என்று அஞ்சுகிறார். வழக்கு விசாரணை தொடங்கிவிட்டால் இந்த வழக்கு தாமாகவே பெரிய வக்கீல்களின் கைகளுக்கு போய்விடும். . இந்த வழக்கில் ப சிதம்பரம் குற்றம் சாட்டப்பட்ட இவர்களுக்கு உதவியாக இருந்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படும்.

சுமனா சென் பேரில் இந்த வழக்கு டில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த போது அவர் தோற்றுப் போனார். அப்போது வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்த இரண்டு பெண் அதிகாரிகளுக்கு எதிராகக் வழக்கு தொடுக்க நிதி அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னரே நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியது. என் டி  டிவியிடம் இருந்து இலஞ்சமாக பெற்ற பணத்துக்கு ஐ ஆர் எஸ் அதிகாரிகள் இருவரும் அபிஷார் ஷர்மாவும் வருமான வரி செலுத்தவில்லை. என்பதை சுட்டிக் காட்டி வருமான வரி துறை அவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளது. 21 மாதங்களுக்கு முன்பு ஐ ஆர் எஸ் அதிகாரிகளான சுமணா சென் , அஷிமா நேப் மற்றும் அவரது கணவர் அபிஷார் வர்மா ஆகியோர் தாம் இலஞ்சமாகப் பெற்ற தொகைக்கு வருமான வரி செலுத்தவில்லை என்று இவர்கள் மூவர மீதும் 3௦-௦3-2௦17 அன்று டில்லி காவல் துறையின் முதன்மை ஆணையர் அசோக் குமார் இந்த குற்றவியல் வழக்கைப் பதிவு செய்தார். இந்த வழக்கை நடத்தவும் விசாரனையைத் தொடங்கவும்   நிதி அமைச்சகம் அனுமதி வழங்கிய பிறகு அதனை திரும்பப் பெற இயலாது என்பதால் இந்த வழக்கை முடித்து வைப்பது இயலாத காரியம். ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் ப. சிதம்பரமும்  மற்ற சிலரும் வீண் முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்பதே சரி.

என் டி டிவியை காப்பாற்றத் துடிக்கும் ப. சிதம்பரத்துக்கு முதலில்  இந்த ஐ ஆர் எஸ் அதிகாரிகளை காப்பாற்றினால் மட்டுமே அவர் நினைத்தது நடக்கும். இதற்காக ப. சிதம்பரம் சார்பில் பி சி மோடி கடந்த பத்து நாட்களாக முதன்மை ஆணையர் அனில் குமாரிடம்  இந்த வழக்கை முடித்துவிடும்படி வற்புறுத்தி  வருகிறார். அரசு கோப்புகளை அழித்துவிடுங்கள்,  அல்லது உங்களுக்கு முன்பு இருந்த அதிகாரி வழங்கிய அனுமதியை ரத்து செய்துவிடுங்கள் என்று அணில் குமாரிடம் பி சி மோடி வலியுறுத்தி வருவதாக  தகவல்கள் கசிந்துள்ளன.

பி சி மோடியின் பெரு முயற்சி ஏன்?

ஸ்ரீ ஆதித்யா விக்ரம் [1981]  பி சி மோடிக்கு நேர் முந்திய ஆண்டின் பணிப்பிரிவைச் சேர்ந்தவர். அவரைக்  கடந்து பி சி மோடி சி பி டி டியின் தலைவராக வர முயற்சி செய்துகொண்டிருக்கிறார். இவர் நிர்வாக பிரிவைச் சேர்ந்தவர்.. ஆனால் இந்த குற்றவியல் வழக்குகளை கவனிக்க வேண்டியவர் துப்பறியும் பிரிவை சேர்ந்த  ஸ்ரீ சுஷில் சந்திரா என்பவர் ஆவார். இந்த இலஞ்ச வழக்கில் ஏதேனும் தகுந்த சட்டப் பிரிவுகளை அறிய வேண்டும் என்றால் அவரிடம் தான் கேட்கப்படுமே தவிர பி சி மோடியிடம் அல்ல.  ஆனால் இந்த நுட்பம் கூடப் புரியாமல் பி சி மோடி இந்த வாழ்க்கை விசாரணைக்குக் கொண்டு போகாமல் முடித்து வைக்க முயல்கிறார். இவற்றை அறியும் போது 31-12- 2௦18 அன்று சோனியாவுக்கும் அவரது மகன் ராகுலுக்கும் ஆதரவாக நேஷனல் ஹெரால்டு வழக்கில் அவர்களைக் காப்பாற்ற விரும்பி வில்லங்கமான சுற்றறிக்கை ஒன்றை வருவாய் துறையில் இருந்து அனுப்ப உதவியவர் யாராக இருக்கும் என்பது  இப்போது யாரும் சொல்லாமலே நமக்குப் புரிகிறது.

ப சிதம்பரமும் என் டி டிவியும் இணைந்து இந்த வழக்கை உடைக்க அனைத்து முயற்சிகளும் நேற்று எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் எஸ் கே ஸ்ரீவஸ்தவா ஐ ஆர் எஸ் தலைமை ஆணையர் கீதா மொஹ்நாணி ஐ ஆர் எஸ் [1985]  என்பவரைச் சந்தித்து  இந்த வழக்கை முடித்து வைக்கும் முயற்சிகளை முடக்கிப் போடும்படி எடுத்து கூறினார்.  இதனால் ப. சிதம்பரத்தின் முயற்சிகள் தோல்வி அடைந்தன.

உடனே சுமனா சென்னும் அஷிமா நேப்பும் வருவாய் துறை செயலர் ஏ பி பாண்டேயை அணுகி தங்களை ஸ்ரீவஸ்தவா பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்; மிரட்டினார்; உறவு கொண்டார்;  என்று பொய்யுரைகளைக் கூச்சம் இல்லாமல் பரப்பினர். உடனே பி சி மோடி மறுநாள் அதாவது இன்று 19ஆம் தேதி வருமான் வரி துறை அலுவலகம் இயங்கும் என்று ஆணை பிறப்பித்தார். இன்று வருமான வரி துறையின் மூலமாக காலை பத்து மணிக்கு இந்த வழக்கை முடித்து விடப் போவதாக ஒரு அறிக்கை தயாரிக்க முடிவு செய்துள்ளார், இந்த அறிக்கையை வெளியிட்டவுடன் ஐ ஆர் எஸ் அதிகாரிகளான சுமனா சென், அஷிமா நேப் மற்றும் அவர் கணவர் அபிஷார் வர்மா ஆகியோர் என் டி டிவி வருமான வரியைக் குறைத்து செலுத்த அனுமதி அளிப்பதற்காக வணங்கிய இலஞ்சப் பணத்தை இவர்கள் மறைத்ததும் அதை அரசுக்கு தெரிவிக்காமல் அதற்கு வரி செலுத்தாமல் மறைத்ததும் இனி குற்றமாக கருதி விசாரிக்கப்பட் மாட்டாது.

சனிக்கிழமை அன்று காலை பத்து மணிக்கு வருவாய் துறை செயலர் அவர் விரும்பிய அறிக்கையை அளிக்கலாம்  என்று, அதை வாங்கி வருவதற்காக அனில்குமார் ஐ ஆர் எஸ் அவர்களின் வீட்டுக்கு முதன்மை ஆணையர் பாலா சென்றுள்ளார். இந்த உத்தரவை கேட்டு எரிச்சல் அடைந்த அனில்குமார் தன இளையர்களைக் கொண்டு இந்தப் பணியை\ செய்யும்படி தெரிவித்துவிட்டு அவர் விடுப்பு எடுத்துகொண்டு போய்விட்டார்.

சுமனா சென், அஷிமா நேப் மற்றும் அபிசார் வர்மா ஆகியோர் தாம் இலஞ்சமாக பெற்ற பணத்துக்கு வருமான வரி செலுத்தவில்லை என்பது உண்மையாக இருக்கும் போது அவர்கள் வழக்கில் இருந்து தப்பிக்க முயல்வது ஏன்? செலுத்தி இருந்தால் ஏன் வழக்கை சந்திக்க அஞ்ச வேண்டும்? இதற்கு என்ன காரணம் என்றால் அவர்கள் இரண்டு முறை நீதிமன்றத்தால் குட்டுப் பட்டுவிட்டனர். ஒரு முறை டில்லி உயர் நீதிமன்றம் இவர்களை கண்டித்திருக்கிறது. மறு முறை உச்ச நீதிமன்றம்  இவர்கள் மீது விசாரணையை ஆரம்பிக்க நிதி அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே சூடு பட்ட பூனையைப் போல நீதிமன்றத்தை நினைத்தாலே தொலை தூரம் விலகி ஒடுகின்றனர்.  ஆனால் ப சிதம்பரம் தன கூட்டாளி அர்விந்த் மோடி மூலமாக பி சி மோடியிடம் அடுத்த தலைவர் நீங்க தான் என்று சொல்லி வைத்திருப்பதால் அவர் இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு போய்விடாமல் தடுக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.

வருவாய் துறை

வருவாய் துறையிலும் சி பி டி டியிலும் நேர்மையான நியாயமான அதிகாரிகள் பலர் இருக்கலாம். ஆனால் ப சிதம்பரம் மற்றும் பிரணாய் ராய் போன்ற விஷச்  செடிகள்  ஆயிரம் வருஷத்துக்கு ஒரு முறை தான் முளைக்கும். இந்த விஷச் செடியை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியாவிட்டால் நாடு முழுவதும்  நச்சுக் காற்றை பரப்பி மக்கள் அனைவரையும் அந்த நச்சு காற்றை சுவாசிக்க வைத்துவிடும். வாங்கிய பணத்துக்கு வரி செலுத்தாத சுமணா சென், அஷிமா நேப் மற்றும் அபிஷார் வர்மா ஆகியோருக்காக பரிந்து பேசி அவர்கள் மீது வழக்கு இல்லாமல் செய்வதில் ஆர்வம் காட்டும் ப சிதம்பரம் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால் உண்மையில் இவர்கள் மாட்டினால் அடுத்து மாட்டப் போவது அவர் தான்.

வருவாய் துறையிலும் சி பி டி டியிலும் சட்டம் என்பது மலிவான் பொருளாக விற்பனைக்கு உள்ளது. வருவாய் துறை செயலர் ஏ பி பாண்டே ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் ஈடுபட்ட தனக்கு முன்பு பொறுப்பேற்றிருந்த ப சிதம்பரத்தின் கூட்டாளிகளான அசோக் சாவ்லா ஐ ஏ எஸ் மற்றும் அசோக் ஜா ஐ ஏ எஸ் போன்றோரின் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து தர்மத்தை காப்பாற்றுவாரா? அல்லது தப்பு செய்த இவர்களைத் தப்ப விடுவாரா? காலம் பதில் சொல்லும்.

எனினும் சட்டம் தன கடமையைச் செய்யும்

இந்த அதிகாரிகள் மீது வழக்கு தொடர நிதி அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும் என  டில்லி உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் நகல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here