URI The Surgical Strike  என்ற இந்திப்படம் 1௦௦ கோடி வசூலை எட்டியது

URI The Surgical Strike படம் வெளியான முதல் வாரத்திலேயே எழுபது கோடி வசூலை எட்டிவிட்டது.

0
2030
URI The Surgical Strike படம் வெளியான முதல் வாரத்திலேயே எழுபது கோடி வசூலை எட்டிவிட்டது.
URI The Surgical Strike படம் வெளியான முதல் வாரத்திலேயே எழுபது கோடி வசூலை எட்டிவிட்டது.

வட கிழக்கில் இருக்கும் மியான்மருக்கும் இந்தியாவுக்கும் இடையே மணிப்பூரில் தீவிரவாத தளங்களில் நடந்த தாக்குதல் முதற்கொண்டு இந்திய வீரர்கள் பட்ட துன்பங்கள் சந்தித்த சவால்கள் என பல விஷயங்கள் இப்படத்தில் காட்டப்படுகின்றன.

URI The Surgical Strike படம் வெளியான முதல் வாரத்திலேயே எழுபது கோடி வசூலை எட்டிவிட்டது.

தன் மைத்துனரின்  இறுதி சடங்கின் போது அவரது குழந்தைகளை கட்டி தழுவ விரும்பும்  விஹான் நமக்கு இதனை நினைவூட்டுகிறார். இருந்தாலும் அவர் ஒரு கட்டுப்பாடான இராணுவ அதிகாரி என்பதால் மனம் கலங்குவதை வெளிக்காட்டவில்லை. தலையையும் தோளையும் விரைப்பாக வைத்தபடி கண்ணில் ஒரு துளிக் கண்ணீரை மட்டும் வெளிப்படுத்துகிறார்.

2௦16ஆம் ஆண்டு காஷ்மீரில் பாகிஸ்தானின் தீவிரவாதிகளை அடக்க நடத்திய ராணுவத் தாக்குதலைப் பற்றிய படம் என்பதால் ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினரையும் கவர்கின்றது.

இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்டுள்ள சுமார் 2௦௦௦ திரையரங்கின் நான்கு சுவர்களுக்குள் நாட்டுப்பற்று சுடர் விட்டு பிரகாசிக்கிறது.

வர்த்தக அறிக்கையின் படி இப்படம் இந்த ஆண்டின் குடியரசு தினத்துக்குள் அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்களை திரட்டிவிடும் அவர்கள் ரசித்து மகிழ்ந்து நாட்டுப் பற்றில் திளைத்து குடியரசு தினக் கொண்டாட்டங்களில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கு பெறுவார்.

இப்படத்தில் நடித்துள்ள விக்கி கௌஷல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர்.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் படம் இந்திய எல்லைப் பகுதியில் நடக்கும் தாக்குதலைப் பற்றிய முதல் படமும் அல்ல. ஏற்கெனவே நிறைய படங்கள்

இராணுவ அதிகாரியின் கடமை உணர்ச்சி, நாட்டுப் பற்று மற்றும் மிடுக்கான தோற்றம் பற்றி நிறைய படங்கள் இந்தியில் வெளிவந்துள்ளன. 1962ஆம் ஆண்டு, 1965 – 1971 ஆண்டுகளில் நடந்த போர்கள், கடைசியாக கார்கிலில் நடந்த போர் என பல போர்களைப் பற்றிய படங்கள் வந்து நல்ல வசூலை பெற்று தந்துள்ளன.

இவ்வாறு பல படங்கள் வெளிவந்த நிலையில் இந்தப் படத்தில் காணப்பட்ட  வேறுபாடு என்னவென்றால், இந்தப் படம் எடுத்திருந்த விதம் அது போர் பிரச்சனையை எடுத்துக்காட்டியிருந்த கோணமும் வெகு பொருத்தமாகவும் புதிதாகவும் இருந்தது.

படம் பார்ப்பவரின் கற்பனைக்கு இடமளிக்கும் வகையில் அவர்களும் இப்பிரச்சனை குறித்து சிந்திக்கும் விதத்தில் இப்படம் புதுமையாக எடுக்கப்பட்டிருந்தது. மேலும் உண்மையிலேயே நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் செயல்பாடுகளை  நினைவூட்டும் விதத்தில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் இயக்குனர் சினிமாவுக்காக சில மாற்றங்கள் செய்திருந்தாலும் அதற்கு பதிலாக படம் பார்த்துவிட்டு போகின்றவர் மனதில் தேசியம் என்ற கனமான உணர்வை ஏற்றிவிடுகிறார். பாராளுமன்றத் தேர்தலை நாடு சந்திக்க இருக்கும் இந்த சூழலில் இப்படம் வெளியானது வெகு பொருத்தமாக அமைந்துவிட்டது. நாட்டுப்பற்றும் தேசியவாதமும் இரு கண்களாகப் போற்றப்பட்டு புதிய இந்தியாவை நரேந்திர மோடியும் அவருடைய ஆட்களும் உருவாக்க இப்படம் பயன்படும்.

படம் இந்த தாக்குதல் நடப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு தொடங்குகிறது. 2௦16ஆம் ஆண்டு ஊரி என்ற இடத்தில் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. பல பிரிவுகளாகப் படம் பிரிக்கப்பட்டுள்ளது. இறுதியில் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் போர்க் கருவிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை அழிக்கப்பட்டதொடு படம் முடிவடைகிறது.

மேஜர் விகான் சிங்க ஷெர்கில் என்ற பெயரில் கடமை தவறாத ராணுவ அதிகாரியாக விக்கி கௌஷல்  நடித்திருக்கிறார். ஒரு அதிகாரிக்குரிய கண்டிப்பும் சிந்தனையும் உள்ளவராக தனது முக பாவங்களையும் உடல்மொழியையும் வெளிப்படுத்துகிறார். தன் உடம்பைக் கட்டுக்கோப்பாக பராமரித்துள்ளார். ஒரு தேர்ந்த இராணுவ அதிகாரியின் தோரணை அவரது நடிப்பில் மிளிர்கிறது. இலட்சியவாதியாக தேசியவாதியாக அவர் நடிக்கும் போது அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்துவிடுகிறது.

Naya Hindustan Hai, Ghar Mei Ghusega Bhi Aur Marega Bhi” என்று  அவர்  பேசும் வசனங்கள் படம் பார்ப்பவரிடம் மகிழ்ச்சியைத் தூண்டுகின்றன. “Vihaan Sath Ho To Koi Marr Nahi Sakda”  என்று   அவர் தன் சக இராணுவ வீரருடன் பேசும் வசனத்தை மிகப் பெரிய கர கோஷத்துடன் ரசிக்கின்றனர்.

முதல் காட்சியிலேயே இப்படம் பலவீனமானவர்களுக்கு உரியது அல்ல என்பதை இயக்குனர் ஆதித்யா தார் நிருபிக்கின்றார்.

ஆரம்பத்தில் மணிப்பூரில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட காட்சியில் இருந்து தொடங்கும் இப்படம் பின்னர் வட கிழக்கில் இந்திய மியான்மர் எல்லையில் பயங்கரவாதத் தளங்கள் இருந்ததையும் அவற்றை இந்திய ராணுவம் அழித்ததையும் காண்பிக்கின்றது.

அங்கிருந்து மேஜர் விஹான் ஷெர்கில் தனது தாயாரின் மறதி நோயின் காரணமாக அவரைக் கவனித்துக் கொள்ள விரும்பி பணியில் இருந்து ஒய்வு பெற விரும்புகிறார். [தாயாராக ஸ்வரூப் சம்பத் நடித்திருக்கிறார்] அப்போது ஒரு விருந்தில் பிரதமர் இவரை டில்லியில் பணி புரியும்படியும் அங்கிருந்து நாட்டுக்கும் சேவையாற்றலாம் அவரது அம்மாவையும் கவனித்து கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பிக்கிறார்.

இந்த சமயத்தில் காஷ்மீரின் அடிவாரத்தில் ஊரி என்ற பகுதியில் உள்ள உள்ள இராணுவ முகாமில் பாகிஸ்தானின் தீவிரவாதிகளின் தாக்குதல் நடக்கிறது.

இங்கிருந்து தான் படம் சூடு பிடிக்கிறது. இந்த ஊரி தாக்குதலில் விஹானுடன் சிறு வயது முதல் பழகி வந்த நண்பரும் அவருடைய மைத்துனருமான கேப்டன் கரன் கஷ்யப் கொல்லப்படுகிறார்.  உடனே விஷான் தான் இங்கு பொறுப்பேற்று பதில் தாக்குதல் நடத்த அனுமதி கேட்கிறார். உண்மையில் ஊரியில் தீவிரவாதிகன் ஆயுதக் கிடங்கை அழித்ததில் அங்கு நடந்த  தாக்குதலில் யாரும்  சாகவில்லை.  ஆனால் படத்தில் அவ்வாறு காண்பித்துள்ளனர்.

தாக்குதலுக்கு முன்பு விஹான் தன தலைமை அதிகாரியிடம் ‘sir aap aksar kahte hain na, farz aur farzi ke beech sirf ‘aa’ ka antar hota hai aur main ‘aa ki matra’ ban kar rahna nahin chahta“என்று வீர மொழி பேசி விடை பெறுகிறார். [கடமை என்பதற்கும் தவறானவர் என்பதற்கும் ஆ என்ற ஒரு எழுத்து மட்டுமே வித்தியாசம் என்பீர்கள். அந்த ஒரு எழுத்தாக நான் இருக்க மாட்டேன் என் கடமையை தவறாமல் செய்து முடிப்பேன் என்று வீர வசனம் பேசி செல்கிறார்].

நல்ல வேளை தலைமை அதிகாரி விஹானிடம் இந்த திடீர் தாக்குதல் பற்றிய ரகசியம் உனக்கு எப்படி தெரிந்தது. இது பிரதமருடன் முக்கிய ராணுவத்தலைமை அதிகாரிகள் கலந்து பேசி எடுக்கும் முடிவல்லவா என்று கேட்டு சிரமப்படுத்தவில்லை.

இந்த சிறப்பு கூட்டம் பிரதமருடன் நடப்பதற்கு முன்பாக விஹானின் முன்னாள் சக இராணுவ வீரர் ஒருவர் ஊரி பகுதியில் நடந்து விட்ட தாக்குதல் குறித்து இனி என்ன செய்யலாம் என்று ஆலோசனைக் கூட்டம் நடக்கப் போவதாக தெரிவிக்கிறார். அப்போது விஹான் புரிந்துகொள்கிறார். நம்மவர்கள் பதிலடி தரத் தயார் ஆகிறார்கள் என்று ஊகிக்கிறார்.

தனது தலைமை அதிகாரியின் அனுமதி கிடைத்த பிறகு பிரதமரின் அலுவலக அதிகாரியான கோவிந்த் பரத்வாஜுடன் கலந்து ஆலோசித்து பிரதமரிடமிருந்து சிறப்பு ஆணைகளைப் பெற்றுத் தானே தாக்குதலை நடத்துகிறார். கருடன் ஆளில்லா விமானங்களின் உதவியால் கதாநாயகி பல்லவி [யாமி கவுதம்] தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கும் இடங்களை அறிந்து விஹானிடம் தெரிவிக்கிறாள்.  பின்பு பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்னும் பதிலடி தாக்குதல் நடக்கிறது. தீவிரவாதிகளின் ஆயுத முகாம் அழிக்கப்படுகிறது.

அண்மையில் பிரதமர் மோடி தன்னுடைய பேட்டி ஒன்றில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்ற தாக்குதல் நடந்த போது தான் மிகுந்த பரபரப்புடன் இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் பிரதமர், ‘ஊரியில் நமது ஜவான்கள் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட போது எனக்குள் கோபமும் ஆத்திரமும் வந்தது. நமது இராணுவத்தில் இருப்போருக்கும் இன்னும் அதிகமாக ஆத்திரம் இருந்ததை அறிந்துகொண்டேன். இழந்த உயிர்களுக்கு நீதி வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர். அவர்களிடம் சரியான பதிலடி கொடுக்க ஒரு திட்டம் தீட்டும்படி  கூறினேன்.  அவர்களுக்கு முழு சுதந்திரமும் அளித்தேன். திட்டம் வெற்றி பெற்றது’ என்றார்.

மேலும் அவர் இது பற்றி குறிப்பிடுகையில் “இரண்டு முறை தாக்குதலுக்கான நாள் மாற்றப்பட்டது. ஒரு சிறிய அசம்பாவிதம் கூட திட்டத்தைப் பாழாக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். முழு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட நிலையில் தான் இந்த அதிரடி தாக்குதலை நடத்துவது என முடிவு செய்திருந்தோம். மிகப் பெரிய இடர்ப்பாடான செயற்பாடு என்பதால் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. ரகசியம் பாதுகாக்கப்பட்டது. ஒரு வேளை தாக்குதல் நடத்த முடியாமல் போனால் என்ன செய்வது கடைசி நேரத்தில் எவ்வாறு திட்டங்களை மாற்றி அமைப்பது, என்னென்ன தடைகள் ஏற்படக் கூடும், தாக்குதல் நடத்தும் இடத்தின் வரைபடம், மற்றும் அமைப்பு ஆகியவையும் கவனத்தில் கொண்டு செயலாற்றினர்.. நாள் முடிவானது. அங்கு தாக்குதலில் ஈடுபடப் போகும் முக்கிய வீரர்கள் யார் என்ற பட்டியல் தயாரானது. இருட்டில் தாக்குதல் நடத்தி விட்டு விடியும் முன்பு திரும்பி விட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. .

“… தாக்குதல் நடந்த போது நான் அவர்களோடு எப்போதும் தொடர்பில் இருந்தேன்.  ஆதிகாலையில் தொடர்பு அறுந்துவிட்டது. ஒரு மணி நேரம் மிகுந்த பரபரப்புடன் இருந்தேன். பொழுது விடிந்து ஒரு மணி நேரமாகிவிட்டது. அந்த நேரத்தை கடத்துவது எனக்கு மிகவும் சிரமமாக தோன்றியது. என்னால் அவர்களுடன் பேச முடியவில்லை. அவர்களும் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை. என்னுடைய முக்கிய குறிக்கோள் தாக்குதலில் ஈடுபடும் எனது வீரர்கள் அனைவரும் பத்திரமாகத்  திரும்பி வர வேண்டும் என்பதே” என்றார்.

படத்தின் முதல் பகுதி சோகம், பாசம், வீரம் என பல்சுவை கலவையாக இருந்தாலும் பிற்பகுதியில் பெரும்பகுதி தாக்குதல் காட்சிகள் மட்டுமே. அவை பார்வையாளர்களிடம் மிகுந்த  பரபரப்பை ஏற்படுத்தின. எங்கும் பார்வையாளர்களின் கவனம் திசை திரும்பி விடாத வகையில் ஒரே வேகத்தில் படம் சென்றது.

கதாநாயகியாக நடித்திருக்கும் யாமி கவுதமிக்கும் நர்சாக வரும் ஜேஸ்மினுக்கும் இன்னும் சில காட்சிகளில் வாய்ப்பு  அளித்திருக்கலாம். இவர்கள் இருவரும் படத்தில் சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

யாமியின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு  இவரை விசாரிப்பதும் யாமி அப்போது சுருக்கமாக பதில் அளிப்பதும் அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது. .

வன இலாகா அதிகாரி சீரத் கவுராக வரும் கீர்த்தி குல்கர்னி குறைந்த  நேரமே வந்தாலும் தன பங்கை நிறைவாக செய்து பார்வையாளர்களின் மனதில் நிற்கிறார்.

பரேஷ் ராவல் பிரதமர் அலுவலகத்தின் முக்கிய அதிகாரி வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆட்டோ ரிக்க்ஷாவில் அவர் “வார் ரூமுக்கு’’ போகும் காட்சி வெகு யதார்த்தம். பிரதமராக நடித்த ரஜித் கபூர், ரவீந்தர் அக்நிஹோத்ரியாக நடித்த யோகேஷ் சோமன், மேஜர் கரன் கஷ்யபாக நடித்த மோஹித் ரைனா ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலமாக கதாபாத்திரங்களை நமது கண் முன் கொண்டு வருகின்றனர்.

மோஹித் ரைனாவுக்கு சிறப்பாக ஒரு தனி பாராட்டு அளிக்க வேண்டும். பரேஷ்  ராவல் அடிக்கடி செல் போன்களை உடைத்து கொண்டே இருக்கிறார். ஏன் இப்படி செய்கிறார் என்பது காட்டப்படவில்லை. பெரிய ஆரவாரத்துடன் இருக்கும் இவர் கடைசியில் இளம் அறிவியலாளரின் அறிவுக்கும் வழிகாட்டுதலுக்கும் மதிப்பளித்து அவருடன் இணைந்து கருடன் ஆளில்லா விமானத்தின் செயற்பாடு குறித்து அறிந்துகொள்கிறார். அந்த தகவல்களின் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொள்கிறார். மற்றும் குண்டு வெடிக்கும் மையப்பகுதியில் இருந்து அவருடன் இணைந்து செயல்படுகிறார். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கில் பங்கேற்ற பேர் சொல்லி புகழப்படாத வீரர்களை நோக்கி ‘நீங்கள் எங்களுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கலாம்’ என்று அடிக்கடி இவர் ‘பஞ்ச் டயலாக்’ பேசுகிறார்.

இந்தப் படத்தில் நம்மை நெகிழ வைக்கும் சில காட்சிகளும் உண்டு

இயக்குனர் ஆதித்யா தார் திறமையாக சில காட்சிகளை அமைத்துள்ளார். அந்த காட்சிகள் நம் முகத்தில் புன்னகையையோ கண்களில் கண்ணீரையோ வரவழைக்கின்றன. பல ராணுவ வீரர்கள் தங்களுக்கு பிரியமானவர்களை சந்தித்து பேசும்போது இதுவே கடைசி தடவையாகக் இருக்கலாம் என்ற எண்ணத்தில் மனம் நெகிழ உரையாடுவார். தன் மைத்துனரின்  இறுதி சடங்கின் போது அவரது குழந்தைகளை கட்டி தழுவ விரும்பும்  விஹான் நமக்கு இதனை நினைவூட்டுகிறார். இருந்தாலும் அவர் ஒரு கட்டுப்பாடான இராணுவ அதிகாரி என்பதால் மனம் கலங்குவதை வெளிக்காட்டவில்லை. தலையையும் தோளையும் விரைப்பாக வைத்தபடி கண்ணில் ஒரு துளிக் கண்ணீரை மட்டும் வெளிப்படுத்துகிறார். தாக்குதலை வெற்றிகரமாக முடித்ததும் விஹானின் தாயார் அவரை அடையாளம் கண்டு கொண்டதும் அவர் முகத்தில் ஒரு வெற்றி புன்னகை தோன்றுகிறது.

பாகிஸ்தானின் அதிகாரியாக நடிக்கும்  ராகேஷ் பேடி தன்னுடைய பணியாளர்களிடம் நடத்தும் உரையாடலில் அவரை ஒரு கோமாளி போல காட்டியிருக்கின்றனர். பாகிஸ்தானின் பெரிய ஆட்கள் எல்லோரையும் இந்தியர்களுக்கு அறிவிலும் திறமையிலும் இணையற்றவர்களாக காண்பித்துள்ளனர். படத்தின் நாட்டுப்பற்றை உறுதி செய்யும் வகையில் பின்னணி இசை பொருத்தமாக அமைந்திருக்கிறது.

படத்தில் படைப்பாற்றலை விடவும் தொழிநுட்ப அறிவு அதிகமாக காணப்படுகிறது. துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு, மோதல் சண்டை, தாக்குதல் நடத்தும் காட்சிகள் ஆகியன யதார்த்தமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இராணுவ வீரர்களின் நிழல் போல கேமரா அவர்களை தொடர்ந்திருப்பது ரசனைக்குரியது. பின்னணி இசையும் ஒலிப்பதிவும் மிக அற்புதமாக வெகு பொருத்தமாக செய்யப்பட்டுள்ளது. ஆயுதங்களின் ஓசையும் துப்பாக்கி ரவைகள் பாயும் வேகமும் ஒலிப்பதிவில் தெரிகிறது. ஆனால் ரகசிய தாக்குதலுக்கு கொஞ்சமும் பொருந்தாத வகையில் காலடி சத்தமும் தேவையற்ற பயங்கரமான ஒலிகளும் உள்ளன. அவை சற்றும் பொருத்தமில்லாமல் காணப்படுகின்றன.

மொத்தத்தில் இந்திய ராணுவத்தின் தியாகத்தையும் பெருமையையும் இளையோருக்கு உணர்த்தும் அற்புதமான படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here