சுவாமி கேட்ட வழிபாட்டுரிமைக்கு உச்சநீதிமன்றம் பதில்

இஸ்லாமும் மசூதியும் ஒருங்கிணைந்ததா என்ற தீர்ப்பு வெளியான பின்பு அயோத்தியில் ராமர் வழிபாடு செய்வதற்கான வேண்டுகோளை முன் வைக்கும் படி உச்ச நீதிமன்றம் சுவாமியிடம் தெரிவித்தது

0
2060
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் முன்பு இதற்கான தீர்ப்பை வெளியிடுவாரா?
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் முன்பு இதற்கான தீர்ப்பை வெளியிடுவாரா?

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் முன்பு இதற்கான தீர்ப்பை வெளியிடுவாரா?

முஸ்லிம்கள் மசூதிகளில் தான் வழிபாடு நடத்த வேண்டும் என்ற கேள்விக்கான பதில் என்னெவென்று  தீர்ப்பு  வெளியான  பின்பு சுப்பிரமணிய சுவாமி அயோத்தியாவில் உள்ள ராமஜென்ம பூமியில் தான் வழிபடுவதற்கான அடிப்படை உரிமையைக் கோரி வேண்டுகோள் விடுக்கலாம் என்று புதன்கிழமையன்று உச்சநீதிமன்றம் அவரிடம் தெரிவித்தது. ஜூலை 20ஆம் நாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சிறப்பு நீதிமன்றம் ராம ஜென்மபூமி மற்றும் பாபர் மசூதி என்ற பெயர் குறித்து நடைபெறும் விவாதத்தின் மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இஸ்லாமும் மசூதியும் ஒன்றிணைந்து அல்ல என்று 1994 இல் வந்த தீர்ப்பின் அடிப்படையில் இதற்கு தீர்ப்பு வழங்காமல் நிறுத்திவைக்கப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களாக சுப்ரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் தனக்கு அயோத்தியில் இராமரை  வழிபட அடிப்படை உரிமை இருப்பதாகவும். அங்கு இராமர் வழிபாடு செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். அவருடைய வேண்டுகோளை ஏற்று விசாரணையை தொடங்க உச்சநீதிமன்றம் இன்னும் நாள் குறிக்க வில்லை.இதற்கிடையே கடந்த புதன்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் அவர் மற்றொரு மனுவின் விசாரணை முடிந்து தீர்ப்பு பிறகு இவர் வழிபாட்டு உரிமை கோரி வேண்டுகோள் விடுக்கலாம் என்று தெரிவித்தது. இது குறித்து சுவாமி தனது டிவிட்டர் பதிவில் தனது ரிட் மனுவுக்கு நீதிமன்றம் நேர்மையாக நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் வழக்கில் ஆரம்பகால மனுதாரர் களில் ஒருவரான எம் சித்திக் இப்போது காலமாகிவிட்டதால் அவருடைய சட்டப்படியான வாரிசு இந்த வழக்கை எடுத்து நடத்தி வருகிறார் அவர் 1994இல் இஸ்மாயில் ஃபரூக்கி தொடுத்த வழக்கில் இஸ்லாமியர் தங்கள் வழிபாடுகளை செய்வதற்கான இடமாக மசூதிகளை மட்டும் கொள்வது சரியல்ல என்று ஒரு தீர்ப்பு வெளியானதை எடுத்துக்காட்டியுள்ளார்

ஏ எம் கான்வில்கார் மற்றும் டி ஓய சந்திர சூட் என இரண்டு நீதிபதிகள் கொண்ட நடுவர் நீதிமன்றம் முக்கிய விஷயத்தில் தீர்ப்பு வெளியான பின்பு சுவாமி தன் வழிபாட்டு உரிமை கோரி ரிட் மனு அளிக்கலாம் என்று தெரிவித்தது இதற்கு முன்பே சுவாமி உச்சநீதிமன்றத்திலும் தன்னுடைய வழிபாட்டு உரிமை கோரி மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.

சுவாமி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே பாபர் மசூதி நிலத்துக்கான வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டு ராமஜென்ம பூமியில் நிபந்தனையற்ற வழிபாட்டை நடத்துவது தனது  அடிப்படை உரிமை என அவர் அளித்திருந்த மனு தனி மனுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் நடுவர் நீதிமன்றத்துக்கு  உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்களை வந்திருந்தன. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் இரண்டுக்கு ஒன்று என்ற விகிதாச்சாரக் கணக்கில் 2010ல் ராம ஜென்மபூமி என்ற குறிப்பிடப்பட்ட அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா என்ற மூன்று அமைப்புகளுக்கு சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தது.

கடந்த எட்டு ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அயோத்தி கோயில் தொடர்பான  இந்த மேல்முறையீட்டு மனுக்களின் மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. எனவே சுப்ரமணிய சாமி அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் இந்துக்கள்  நிபந்தனையற்ற வழிபாடு நடத்தவும் இராம பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கவும் வேண்டும் என்று வழக்குத் தொடுத்தார். நடுவர் நீதிமன்றம் அவருடைய மனுவை முக்கிய மனுவாக ஏற்றுக் கொண்டது.

சமீபத்தில் தீபக் மிஸ்ரா தலைமையிலான நடுவர் நீதிமன்றம் ராம ஜென்மபூமியா  பாபர் மசூதியா என்ற பெயர் குறித்த விவகாரத்திற்கு தான் முதலில் விசாரணை நடைபெறும் என்றும் சுவாமியின் வழிபாடு குறித்த மனுவை வேறு நீதிமன்றம் மூலமாக விசாரிக்கலாம் என்றும் தெரிவித்துவிட்டது. அரசியல் உரிமை நீதிமன்றத்தில்1994ல்  இந்த வழக்குக்கு தேவையான  குறிப்பிடத்தக்க தீர்ப்பு ஒன்று வெளியானது. அந்த தீர்ப்பில் முஸ்லிம் மனுதாரர்கள் வழிபாட்டுக்கான இடமாக  இஸ்லாமியர்களுக்கு மசூதி மட்டுமே உரியதா என்று கேள்வி எழுப்பியிருந்தனர். வரும் அக்டோபர் இரண்டாம் நாள் அன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வுபெறப் போவதால் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்குக்கான சட்ட ஆதாரங்களை விவாதித்து முடித்துவிடலாம். இப்போது முடியவில்லை என்றால் அரசியல் முக்கியத்துவம் உள்ள இந்த வழக்கு மீண்டும் அடுத்த நடுவர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.அப்போது தீர்ப்பு வர இன்னும் காலதாமதம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here