ஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலில் டி எம் கிருஷ்ணாவின் கச்சேரி ரத்து

அமெரிக்காவில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு கோவில் நிர்வாக குழு சனாதன தர்மப் பாதுகாப்பு படையினரின் முயற்சியால் அந்தக் கோயிலில் ஏற்பாடு செய்ய செய்திருந்த டி எம் கிருஷ்ணாவின் இசைக்கச்சேரி ரத்து

0
2701
ஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலில் டி எம் கிருஷ்ணாவின் கச்சேரி ரத்து
ஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலில் டி எம் கிருஷ்ணாவின் கச்சேரி ரத்து

அமெரிக்காவில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு கோவில் நிர்வாக குழு சனாதன தர்மப் பாதுகாப்பு படையினரின் முயற்சியால் அந்தக் கோயிலில் ஏற்பாடு செய்ய செய்திருந்த டி எம் கிருஷ்ணாவின் இசைக்கச்சேரி ரத்து.

சென்ற ஒரு வார காலமாகவே பிரபல கர்நாடக சங்கீத வித்வான்கள் கர்நாடக முறையில் உள்ள பழைய சாதுக்களின் கீர்த்தனைகளை சற்று மாற்றி கிறிஸ்தவ கீதங்களாகப் பாடி வருவது பற்றி பல கட்டுரைகளை வாசித்தேன். டி. எம். கிருஷ்ணாவும் மாதத்திற்கு ஒரு பாட்டாவது இயேசுகிறிஸ்து பற்றியும் அல்லாஹ் பற்றியும் தன்னால் பாட முடியும் என்று சவால் விட்டிருந்தார். கர்நாடக சங்கீதத்தை கொண்டு இவர்கள் பிற மதப் பாடல்களை பாடுவது தவிர்க்கப்பட வேண்டியதாகும். ஏனெனில் கர்நாடக சங்கீதம் என்பது இந்துக்களின் பக்தியை வெளிப்படுத்தும் கருவியாகும். மூல மொழியில் எழுதப்பட்ட கீர்த்தனைகளையும் கீதங்களையும் வேறு ஒரு காரணத்துக்காக மாற்றிப் பாடுவதை விட இந்த இசை வல்லுனர்கள் தாங்களே சொந்தமாக இசை அமைத்து பிற மதப் பா டல்களைப் பாடலாம். அதில் நாம் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஞாயிற்றுக்கிழமை இரவு கோயிலில் டி எம் கிருஷ்ணாவின் கச்சேரி இருப்பதாக கேள்விப்பட்டதும் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். உடனே அதற்கான காாரணத்தைையும் அதிருுப்தியையும் குறிப்பிட்டு டி எம் கிருஷ்ணாவின் கச்சேரியை எதிர்த்து நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு அலைபேசி மூலமாக தகவல் அனுப்பினேன். இது குறித்து பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதையும் கூறி எச்சரிக்கை செய்தேன்.

மறுநாள் இந்த குழுக்களுக்கும் என்னுடைய கருத்தை அஞ்சல் மூலமாக அனுப்பினேன். உடனே அவர்கள் எனக்கு பேராதரவு நல்கினர். இரண்டு பேர் கோவில் குழுவுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து உடனே கடிதமும் எழுதின்ர. இந்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும்போதே நான் முகநூலிலும் என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தேன். சில நிமிடங்களில் பலர் தங்களுடைய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தெரிவித்து கிருஷ்ணாவின் கச்சேரி ரத்து செய்யப்பட வேண்டும் என்ற என்னுடைய கருத்துக்கு ஆதரவு நல்கினர்.

நூற்றுக்கணக்கானோர் கோவிலுக்கு அலைபேசி மூலமாக குறுஞ்செய்தி , மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் மூலமாக தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

சில மணி நேரத்தில் விஷ்ணு குடிபாடியும் ராஜகுருவும் மாலை நேரத்திற்குள் கடிதம் எழுதி அதை மின்னஞ்சலில் கோயில் நிர்வாகக் குழுவுக்கு அனுப்பிவிட்டனர் .இவற்றாலும் பலன் கிடைக்கவில்லை என்றால் கடைசி முயற்சியாக கிருஷ்ணா குடிபாடியு ம் நானும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி உள்ளூர் இந்துக்களையும் நியூஜெர்சியில் இருக்கும் இந்துக்களையும் அழைத்துக்கொண்டு ஒரு ஊர்வலமாகச் சென்று நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம்.

செவ்வாய்க்கிழமை காலை நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் கிருஷ்ணாவின் கச்சேரி ரத்து செய்யப்பட்டு விட்டதாக எனக்கு ஒரு தகவல் அனுப்பி இருந்தார். 24 மணி நேரத்தில் நாங்கள் இதை சாதித்து விட்டோம். பின்பு மற்ற குழுக்களுக்கு இந்த செய்தி தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். வ்இத்தகைய மகிழ்ச்சியை நான் இதற்கு முன்பு கண்டதே இல்லை. இருந்தாலும் முறைப்படி அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம் என்று நான் அவர்களிடம் தெரிவித்தேன் .இப்போது நாங்கள்தான் சனாதன தர்மத்தை பாதுகாக்கும் படையினராக செயல்பட்டு வருகிறோம். o.s. அருண், நித்தியஸ்ரீ மகாதேவன் போன்றோர் கிறிஸ்தவ பாடலை பாடுவதற்காக அதன் மூலம் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் முயற்சியில் பக்தி கீதங்கள் சற்று மாற்றி கிறிஸ்துவ கீதங்கள் போல் பாடி வருகின்றனர். இவர்களை இனி அமெரிக்காவில் எந்த கோயிலிலும் சங்கத்திலும் பாட விடக்கூடாது என்று முடிவு செய்துள்ளோம் .மோகன் தயாள், சந்திரமோகன், ராம் சாஸ்திரி போன்றோர் இத்தகு முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் .அமெரிக்காவில் அவர்களின் நிகழ்ச்சி பட்டியல் குறித்து தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

நாம் அனைவரும் இணைந்து கரங்கோர்த்து நின்றால் நம்முடைய சனாதன தர்மத்தின் சமயம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த மரபுகளை காப்பாற்ற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here