அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப சிதம்பரம் தனது அதிகார வரம்பை மீறி அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை மேக்சிசுக்கு பெற்றுத்தர செய்த எட்டு முறை கேடுகள் இதோ:
மத்தியப் புலனாய்வு நிறுவனம் [சி பி ஐ] ஜுலை 19ஆம் நாள் ப சிதம்பரத்தின் மீது குற்றப்புலனாய்வு பத்திரிகை சமர்ப்பித்த சிறிது நேரத்திலேயே அவர் இதை வன்மையாக எதிர்ப்பேன் என்று டிவிட்டரில் பதிவு செய்தார். வன்மையாக என்றால் எவ்வளவு வன்மையாக? மேலே கார்ட்டுனில் காட்டியிருப்பது போலவா? ஏர்செல் மேக்சிஸ் ஊழல் என்பது இப்போது ஊரறிந்த விஷயம். மேக்சிசுக்கு அனுமதி பெற நீங்கள் செய்த தகிடு தத்தங்களை நாங்கள் வரிசையாக பட்டியல் இடுகிறோம். நீங்கள் ஒவ்வொன்றுக்கும் உங்களின் தெளிவான பதிலை கூறுங்கள் பார்ப்போம்.
சிதம்பரமும் அவர் மகன் கார்த்தியும் செய்த சட்ட மீறல்களையும் முறை கேடுகளையும் ஒவ்வொன்றாக விவரிப்போம்.
ஏர்செல் மேக்சிஸ் ஊழல் என்றால் என்ன?
- 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மலேசியாவில் உள்ள மிக பெரிய நிறுவனமான மேக்சிஸ் மொரிஷியஸ் நாட்டில் உள்ள தனது துணை நிறுவனம் வழியாக அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்துக்கு சென்னையில் உள்ள ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கிறது. ஏர்செல் நிறுவனத்தில் எண்ணூறு மில்லியன் டாலர் முதலீடு செய்ய போவதாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்தது. அதாவது 3600 கோடி ருபாய்
- FIPB எனப்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அன்றைய தலைவரான ப சிதம்பரத்துக்கு அறுநூறு கோடி ருபாய் வரை மட்டுமே அனுமதி வழங்க அதிகாரம் இருந்தது. ஆனால் மேக்சிஸ் 3600 கோடிக்கு விண்ணப்பித்து இருந்ததால் அவருக்கு அதை அனுமதிக்கும் அதிகாரம் இல்லை . அந்த அனுமதியை Cabinet Committee on Economic Affairs (CCEA)எனப்படும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான அமைச்சரவை குழு தான் வழங்க வேண்டும். ஆனால் இந்தக் குழுவுக்கு அனுமதி கேட்டு அந்த விண்ணப்பத்தை அனுப்பவில்லை என் தெரியுமா? 2006 இல் சவூதி நாட்டின் டெலிகாம் நிறுவனமும் மேக்சிசில் கணிசமான பங்குகளை வைத்திருந்தது. இந்த சவூதி டெலிகாம் நிறுவனம் பாகிஸ்தான் டெலிகாம் நிறுவனத்திலும் பங்குகள் வாங்கி இருந்தது. ஆக இந்த விண்ணப்பத்தை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பினால் அதில் உறுப்பினராக இருக்கும் உள்துறை அமைச்சகமும் மற்றும் மத்திய உளவுப் பிரிவும் இந்த விண்ணப்பத்தை நிராகரித்துவிடுவார்கள். பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்திருக்கும் சவூதி நிறுவனம் ஒன்றை தன் பங்குதாரராக கொண்டிருக்கும் மேக்சிசுக்கு இந்தியாவில் டெலிகாம் துறையில் கால் பதிக்க அனுமதி மறுக்கப்படும் என்பது ப சிதம்பரத்துக்கு உறுதியாகத் தெரியும் எனவே அவர் முறைப்படி அங்கு அனுப்பாமல் விதிமுறைகளுக்குமாறாகதானே அனுமதி வழங்கிவிட்டார்.
- சி சி இ ஏ குழுவைத் தவிர்ப்பதனால் 3600 கோடி என்ற தொகையை கடிதங்களில் குறிப்பிடுவதை ப சி. தவிர்த்தார். ஒரு சில கடிதங்களில் அல்லது கோப்புகளில் தொகையை குறைத்து 180 கோடியாக காட்டியிருந்தனர். குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செய்தனர்.
இது என்ன பித்தலாட்டம் சிதம்பரம் சார்?
- அந்த நேரத்தில் டெலிகாம் துறையில் அனுமதிக்கப்பட்ட அந்நிய முதலீடு74% மட்டுமே. மேக்சிஸ் நிறுவனம் இந்த அளவில் மட்டும் பங்குகளை வாங்கி கொண்டதாக கணக்கு காட்டி விட்டு மீதியை சென்னையில் உள்ள சிந்தியா ஸெக்யூரிட்டிஸ் அன்று இன்வெஸ்ட்மென்ஸ் பிரைவீட் லிமிட்டட் நிறுவனம் வாங்கியதாகக் கணக்கு காட்டினர். இந்த சிந்தியா நிறுவனம், அப்பொலோ மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளரான சுனிதா ரெட்டிக்கு சொந்தமானது. இது என்ன பொய்யும் புரட்டும் ப சிதமபரம் சார்?
- அதே நாளில் மேக்சிஸ் தனது நாட்டில் மலேஷிய பங்கு சந்தையில் தான் ஏர்செல்லின் 3 சத வீதப் பங்குகளை வாங்கி இருப்பதாக அறிவித்தது. அத்துடன் சிந்தியா செக்யுரிட்டிஸ் நிறுவனமும் தங்களுடன் இணைந்திருப்பதாக அறிவித்தது. இதற்கு என்ன அர்த்தம் சிதம்பரம் சார்?
- ஏர்செல் பங்குகளை விற்றதில் இருந்த வித்தியாசம் இன்னொரு முக்கிய விஷயம் ஆகும். மேக்சிசுக்கு எழுபத்து நான்கு சதவீதப் பங்குகளை விற்றதில் 3600 கோடி கிடைத்ததாக கணக்கு காட்டிய வர்கள் மீதி 26 சதவீதப் பங்குகளை வெறும் முப்பத்து நான்கு கோடிக்கு விற்றதாகக் கணக்கு காட்டியுள்ளனர். அது எப்படி நடந்தது? மீதி 26 சதவீதப் பங்குகளை 1200 கோடி ருபாய்க்கு அல்லவா விற்றிருக்க வேண்டும். அது எப்படி சிதம்பரம் சார் ஒரே நிறுவனத்தின் பங்குக்கு ஒரே நேரத்தில் இரண்டு விதமாக விலை வைக்க முடியும் ?
- பின்னர் 2016 ஆம் ஆண்டு மே மாதம் சி ஏ ஜி தணிக்கையாளர்கள் சிதம்பரம் செய்த பித்தலாட்டங்களை எல்லாம் அம்பலப்படுத்தினர். மலேசியாவில் இருந்து ஏர்செல்லுக்கு வந்தது 3600 கோடி அல்ல மொத்தம் 4769 கோடி என்ற உண்மையை ஊரறிய உரைத்தனர். இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?
- தன தந்தையார் ப சிதமபரம் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் பங்குகளை வாங்க அனுமதி அளித்தவுடன் கார்த்தி இரண்டு மில்லியன் டாலர் [16 கோடி ருபாய்] தனது நிறுவனங்களின் வங்கி கணக்கு வழியாக இலஞ்சமாகப் பெற்றார். அவர் தந்தையின் சட்ட மீறலுக்கு மகன் அளிக்கும் சட்டப் பூர்வமான ஆதாரம் இது. மறுக்க முடியுமா சிதம்பரம் சார்.
சிதம்பரம் சார்மேற் கூறிய எட்டு முறைகேடுகளுக்கும் என்ன விளக்கம் தரப் போகிறிர்கள்? கடந்து இரண்டு ஆண்டுகளாக நீங்கள் பத்திரிகைகளில் என்னென்னவோ எழுதுகிறீர்கள் டிவிட்டரில் சூடாக கருத்து தெரிவிக்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள் இதற்கெல்லாம் என்ன பதில்? இன்றைக்கு நாங்கள் கேட்கிறோம். நாளைக்கு மக்கள் கேட்பார்கள். என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?