வெள்ள நிவாரணம் & மறுசீரமைப்புப் பணிகளில் கேரள மார்க்சிஸ்ட் அரசாங்கத்தின் புரட்டு வேலைகள்

கேரள அமைச்சர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் நோக்கமென்ன?

0
1849
கேரள அரசாங்கம் வானில் எச்சரிக்கைகளை புறகணித்ததா?
கேரள அரசாங்கம் வானில் எச்சரிக்கைகளை புறகணித்ததா?

கேரளாவில் நுழைந்தமுதல் உயிர் காக்கும் பொருள்கிறிஸ்தவ வேதாகமம்

கேரள அமைச்சர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் நோக்கத்தை நன்கு அறிந்து கொண்டவர்கள் தங்களுடைய வலைத்தளங்களில் [microblogging sites]அணைகளில் தொடர்ந்து உயர்ந்து வரும் தண்ணீர் மட்டத்தைக்கூர்ந்து கவனித்து பதிவு செய்து  கொண்டே வந்தனர்.அதை அலட்சியம் செய்துவிட்டு வெள்ளம் வரச்செய்து அதனால் பாதிப்புகள் ஏற்பட்ட பின்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி [CPI-M] ஆட்சி செய்கின்ற கேரளமாநிலத்தின் முதலமைச்சரான பினராயி விஜயன் வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசிடம்  நிதி கோரி, அதில் பெரிய புரட்டுத்தனமும் செய்திருக்கிறார்.

விஜயன் முதல் நாளிலிருந்தே நரேந்திர மோடியின் அரசாங்கம் தங்களுக்கு தேவையான நிவாரண நிதியை வழங்காமல் புறக்கணித்து வருவதாக பிரதமரை குற்றம் சுமத்தினார்.  கேரள மாநிலத்தில் வெள்ளப் பாதிப்புகளை சரி செய்து அம்மாநிலத்தை சீரமைக்கவும் மறுகட்டமைப்பு செய்யவும் நாற்பது ஆயிரம் கோடிக்கு மேல் தேவைப்படுவதாகவும் அதனை தருவதற்கு மத்திய அரசு மறுப்பதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டி கொண்டிருந்தார். சாலைகளும் உள்கட்டமைப்பு வசதிகளும் மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டிய அவசியம் இருப்பதால் மிகப்பெரிய தொகை தேவைப்படுவதாக பினரயி விஜயன் தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் பதினெட்டாம் நாள் பிரதம மந்திரி மோடி கேரள மாநிலத்துக்கு வெள்ளச் சேதங்களை பார்வையிடச் சென்ற பொது முதல்வர் இந்த வெள்ளத்தால் 20,000 கோடி மதிப்பில் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.98 ஆயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கு சாலைகள் சரி செய்யப்பட வேண்டும் என்றார். இதற்கு 13 ஆயிரத்து 800 கோடி தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். ஆனால் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட பாதைகளை கணக்கெடுத்த பொதுப்பணித்துறையின் மூத்த அதிகாரிகள் 34 ஆயிரத்து 372 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் மட்டுமே  பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை மறுசீரமைக்க 5800 கோடி போதும் என்றும் தெரிவித்துள்ளனர். விஜயன் தெரிவித்த 98 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் பொதுப்பணித்துறையினர் அமைத்த 16,000 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையும் அடங்கும். இதுதவிர 82 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் கிராமங்களில் உள்ளன. மேலும் 134 சிறிய பாலங்களும் இந்த கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

நேரில் பார்த்து வந்த பிரதம மந்திரி இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை துறையின்  அதிகாரிகளை நேரில் சென்று கேரள மாநிலத்தில் சேதப்பட்ட சாலைகளை சீரமைக்க ஆகும் செலவை கணக்கிட்டு தரும்படி ஆணையிட்டார். சீரமைக்கவும் தேசிய அனல் மின் நிலையம் மற்றும் மின் வழித்தட நிலையம் போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் சேதங்களை சரி செய்யவும் மின் தடங்களின் சேதங்களை சரி செய்யவும் ஆகும் தொகை குறித்து கேட்டறிந்தார்.

கேரள மாநிலம் மத்திய அரசு கோரிய வெள்ள பாதிப்பு குறித்த தகவல்களை வழங்காமல் காலதாமதம் செய்து கொண்டே இருக்கிறது ஆனால்  அதேவேளையில் கேரள முதலமைச்சர் தங்கள் மாநிலத்தை சீரமைக்க 40 ஆயிரம் கோடிக்கு மேல் தேவைப்படுவதாக ஊடகங்களில் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.

மத்திய அரசு நிறுவனங்கள் [NHAI, NTPC, PGCIL] கேட்டுக் கொண்ட தகவல்களை மாநில நெடுஞ்சாலைத் துறையும்  மற்றும் அனல் மின் நிலையமும் மத்திய அரசுக்கு தெரிவிக்கவில்லை. கேரள முதல்வர் விஜயன் பிரதம மந்திரி இந்த தகவல்களை கேட்டு அனுப்புவார் என்பதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மேலும் மத்திய அரசு இந்த மறு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முன்வரும் என்றும் முதல்வர் நினைத்துப் பார்த்ததில்லை. கேரள முதல்வர் இந்த வெள்ளத்தை காரணம் காட்டி பெரிய அளவில் மத்திய அரசிடமிருந்து பணம் வாங்கி விடலாம் என்று கருதி இருப்பாரோ? இப்போது பிரதமர் தன்னுடைய பிரதமர் அவாஸ் யோஜனா என்ற வீடு சீரமைக்கும்  திட்டத்தின் கீழ் கேரளாவில் தரைமட்டமான வீடுகளை மீண்டும் கட்டித் தருவதாகவும் ஓரளவு பாதிப்படைந்த வீடுகளை சரி செய்து தருவதாகவும் தெரிவித்ததால் கேரளாவில் உள்ள அனைவருக்கும் குடியிருக்க வீடு கிடைப்பது உறுதியாகிவிட்டது.

மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி செய்கின்ற கேரள மாநிலத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வெள்ளத்த்தின் சேதத்தை மிகைப்படுத்திக் கூறுவதும் அதற்கான நிவாரணத் தொகையை பன்மடங்காக்கி கூறுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. லோக்சபா தேர்தல் வர இருக்கின்ற இச்சூழ்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி தன்னுடைய தேர்தல் செலவுக்கான நிதியையும் இந்த வெள்ள நிவாரண நிதியின் மூலமாகவே  பெற்றுவிட திட்டமிடுகிறது போலும்.

மனிதரால் ஏற்பட்ட இந்த வெள்ளப் பாதிப்புக்கு முக்கிய காரணம் யார் என்று வினவினால் அது மார்க்சிஸ்ட் கட்சியின் அமைச்சர் எம் எம் மோனியை தவிர வேறு எவரும் இல்லை. இவர் கேரளாவின் மின்சாரத்துறை அமைச்சர் ஆவார். இவர்தான் கேரள அணைக்கட்டுகளில் உயர்ந்து கொண்டிருந்த தண்ணீரை திறந்து விடக் கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அணைக்கட்டுகளில் தண்ணீர் உரிய நேரத்தில் திறந்து விட்டிருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. மத்திய அரசின் விண் கல்லியல் துறை மற்றும் பூமி அறிவியல் அமைச்சகம்  [Indian Meteorological Department (IMD),Ministry of Earth Sciences (MOES]]ஆகியன முன்கூட்டியே பெருமழை பெய்யும்;அணைக்கட்டுகள் நிரம்பும்; மதகுகளை திறந்து விடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்த பின்பும் மோனி அணைக்கட்டுகளில் நீரைத் திறந்து விடாமல் வைத்திருந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இடுக்கி அணையின் தண்ணீர் மட்டம் உயரும்போது மோனி என்ன செய்து கொண்டிருந்தார்? அவர் இடுக்கி அணையில் தான் இருந்தார். ஏன் தெரியுமா? தனக்கு தெரியாமல் அணைக்கட்டு பொறியாளர்கள் மதகுகளை திறந்து தண்ணீரை வெளியே விட்டுவிடக்கூடாது என்பதற்காக அங்கேயே காவல் இருந்தார். இந்த வெள்ளம் வர வேண்டுமென்று உள்ளூர திட்டமிட்டபடியே அவர் அங்கு இடுக்கி அணைக்கு காவலாக தங்கியிருந்தார். மத்திய அரசு நிறுவனங்களின் வெள்ள எச்சரிக்கைக்கு செவி சாய்த்து தண்ணீரை முதலிலேயே திறந்து விட்டு இருந்தால் இப் பெரும் சேதம் ஏற்பட்டிருக்காது என்று புனல் மின் நிலையத்தின் மூத்த பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். பெருமழை பெய்யும் போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருக்கும்போது அணையின் தண்ணீரை திறந்து விடாததே இந்த சேதத்திற்கு ஒரே காரணமாகும். அணையின் தண்ணீரை திறந்து விட கூடாது என்று அங்கேயே காவலில் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் மௌனியே இதன் முக்கிய காரண கர்த்தா.

கேரள முதலமைச்சர் மத்திய அரசு நிறுவனங்கள் தங்களுக்கு பெரு மழை வரும் என்று எச்சரிக்கை விடவில்லை என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். இடுக்கி மாவட்டத்தில் குடியிருக்கும் ஒருவர் தொடுத்த பொதுநல வழக்குக்கு உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் இந்த வெள்ளத்திற்கு தமிழ்நாட்டை குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ்நாடு தன்னுடைய முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்திய காரணத்தால்தான் தண்ணீரை திறந்து விட முடியவில்லை என்று அப்பாவியான தமிழர்கள் மீது கேரள அரசு குற்றம் சுமத்தியுள்ளது.

கேரள அரசின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பாக பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பாக வீணான புரளியை கிளப்பி விடுவதும் காரணமில்லாமல் தமிழ்நாட்டைக் குற்றம் சாட்டுவதும் தகாது என்று தமிழக அரசு தன்னுடைய பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. கேரள முதல்வர் மக்களின் கவனத்தை திசை திருப்ப இவ்வாறான போலி குற்றச்சாட்டுகளை மத்திய அரசின் மீதும் தமிழக அரசின் மீது சுமத்துகிறார்.ஐக்கிய அரபு நாடுகள் கொடுக்க வந்த100 மில்லியன் டாலராய் பிரதமர் மோடி தடுத்து விட்டதாகவும் தன் மக்களிடம் பொய் புரளியை கிளப்பி வருகிறார்.

ஆனால் ஐக்கிய அரபு நாடுகளின் அரசு மார்க்சிஸ்டுகளின் முகத்தில் கரியைப் பூசும் விதமாக தாங்கள் நூறு மில்லியன் டாலர் கொடுப்பதாக சொல்லவே இல்லை என்று தெரிவித்து விட்டனர்.வெள்ளத்துக்கான காரணம்  பற்றி தீவிரமாக விசாரித்து அறிந்தால் மாநிலத்திலுள்ள நாற்பதுக்கும் அதிகமான அணைக்கட்டுகளின் மதகுகளை திறப்பதில் ஏற்பட்ட  தாமதமே இந்த வெள்ளப் பாதிப்புக்கு காரணம் என்பது தெளிவாகத் தெரிய வருகிறது.மதகுகளை சரியான நேரத்தில் திறந்து உபரி தண்ணீரை வெளியேற்றாதது கேரளக் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் மன்னிக்க முடியாத குற்றமாகும். ஜூலை மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் பெருமழை பெய்த போதும் அதனால் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படவில்லை. ஆனால் மார்க்சிஸ்ட் ஊடகங்கள் ஆற்று நீரின் நீர்மட்டம் உயர்ந்ததால் அவை பெருக்கெடுத்து பாய்வதால் வீடுகளும் நிலமும் சரிந்து விழுவதாக க்ளோஸ் அப் ஷாட்களில் படமெடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி கேரளா மிகப்பெரிய இயற்கை பேரிடருக்குள்ளாகிவிட்டது என்று அப்பாவி பொது  மக்களை நம்பவைக்கும் தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

பெரியாறு நதிக்கு அருகிலுள்ள பகுதிகளான பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்களில் சில பகுதிகளில் உண்மையிலேயே மிகப் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது, செங்கனூர், ஆறன்முளா, திருவல்லா போன்ற பகுதிகளில் இந்துக்கள் வாழும் பகுதிகளில் மிகப்பெரிய அளவிற்கு வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, இங்குள்ள இந்துக்கள் ஆரன்முளா கோயிலுக்குள் போய் பல நாட்களாக தங்கியிருக்கின்றனர் கோவிலுக்கு வரும் சாலைகள் எல்லாம் தண்ணீரில் மூழ்கி விட்டதால்இவர்களால் கோயிலை விட்டு தங்கள் குடியிருப்புகளுக்கு திரும்ப முடியவில்லை.கேரள அரசு இந்தப் பகுதியில் சாலைகளை சரி செய்யவும் கோயிலில் அடைக்கலமாகி இருக்கும் மக்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பவும் எவ்வித நிவாரணப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. . இந்தப் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு படைகள் விரைந்தபோது அவற்றிற்கும் அனுமதி தர கேரள அரசு மறுத்துவிட்டது.

உள்ளூர் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் சேவா பாரதி ஆர்வலர்களை மீட்பு பணியில் இடுபட விடாமல் துரத்திவிட்டனர். இவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தன்னார்வலர் மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள். இயற்கை பேரிடரால் சேதம் ஏற்படும் பகுதிகளில் சேவா பாரதி அமைப்பினர் முதல் ஆளாக போய் நின்று மீட்புப் பணிகளில் ஈடுபடுவர். அதே போல இவர்கள் சென்ற போது கேரள அரசு இவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து விட்டது. இவர்கள் கொண்டு சென்ற நிவாரணப் பொருட்களையும் அபகரித்துக் கொண்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளரான கொடியேறி பாலகிருஷ்ணன் என்பவரின் உத்தரவின்பேரில் இவை அனைத்தும் நடந்தன கொடியேறி பாலகிருஷ்ணன் ஏவல் பில்லி சூனியம் செய்வினை போன்றவற்றை கேரள மாந்திரீகர். நம்முடைய செய்தி தளத்தில் கம்யுனிஸ்ட்  தன்னார்வலர் குழுக்கள் மேற்கொண்ட வெள்ள நிவாரண பணிகள் குறித்து நம்முடைய செய்தித் தளத்தில் விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்.

வேர்ல்ட் விஷன் என்ற கிறிஸ்தவ அமைப்பின் தன்னார்வலர்கள் கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். இவர்கள் தங்களுடன் டன் கணக்கில் பைபிளையும் மதமாற்றத்திற்கான  படிவங்களையும் எடுத்துக் கொண்டு வந்துள்ளனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட இப்பகுதிகளில் கிறிஸ்தவ வேதாகமம் நூல் மட்டுமே உயிர் காக்கும் முதல் பொருளாக உள்ளது. இந்துக்களை  மதம் மாற்றும் நற்செய்தியாளர்கள் மீட்புப் பணி என்ற பெயரில் இங்கு வந்து குழுமியுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதி  ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கேரள முதல்வர் அமெரிக்காவுக்கு மருத்துவ பரிசோதனைக்காக கிளம்பிவிட்டார். மற்ற அமைச்சர்களும் நிதி திரட்டப் போவதாக காரணம் காட்டி வெளிநாடுகளுக்கு பறந்துவிட்டனர். அவர்கள் அங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது நமக்கு விரைவில் தெரிய வரும். அப்போது அந்த விபரங்களையும் நம் செய்தித்தளம் வெளியிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here