திருப்பதியில் வெளியான ஊழல் – உச்ச  நீதிமன்றத்தில் பொதுநல  வழக்கு — சுப்பிரமணியன் சுவாமி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நடக்கும் ஊழல் தீவிரமாக கண்காணிக்கப்படும்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நடக்கும் ஊழல் தீவிரமாக கண்காணிக்கப்படும்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நடக்கும் ஊழல் தீவிரமாக கண்காணிக்கப்படும்

திருப்பதியில் நடந்து வரும் ஊழல் பற்றிய தகவல்கள், இந்தியாவில் மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தல்களை சந்தித்து வரும் இந்துக்களுக்கு ஒரு விடிவுகாலச் சங்கொலியாக அமைந்துவிட்டது.

திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் கோயிலில் நடந்துள்ள நிதி சார்ந்த முறைகேடுகள் பற்றிய விவரங்கள் இப்போது ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியுள்ளன. அவை இந்துக்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்துகின்றன. இத்திருக்கோயிலில் இருபது ஆண்டுகளாக தலைமை பட்டராக இருந்து வரும் ஏ. வி. ரமண தீட்சிதலு வெளிப்படுத்திய தொடர் குற்றச்சாட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) நிர்வாகத்தின் மீதும் ஆந்திர அரசின் மீதும் சேற்றை வாரி இறைக்கின்றன. அவர் தன்னுடைய குற்றச்சாட்டுகளை பொதுமக்களுக்கு ஊடகம் வாயிலாக தெரிவித்த பிறகு அந்த கோயிலில் எதுவும் சரியில்லை என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.

பல்வேறு மன்னர்கள் காலத்தில் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நகைகள் மற்றும் நவரத்தினங்கள் தொலைந்துவிட்டன இத்திருக்கோயிலின் நிதி அரசு திட்டங்களுக்கும் பொது காரியங்களுக்கும செலவிடப்படுகிறது போன்றவை இவரது முக்கிய  குற்றச்சாட்டுகள் ஆகும். மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டாண்டு காலமாக நடந்து வந்த வருடாந்திர நகை மற்றும் சொத்து கணக்கெடுப்பு முறையும் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. ஏறத்தாழ கி. பி. 1150 இல் முஸ்லிம்களின் படையெடுப்புக்கு அஞ்சி கோயில் நகைகள் பலவற்றை மடப்பள்ளியில் ஒளித்து வைத்த தகவலும் இப்போது கசிந்துள்ளது. இந்த நகைகளுக்கு கணக்கு எதுவும் கிடையாது. மேலும் இந்துக்கள் அல்லாதவரை திருக்கோயில் விதிமுறைகளுக்கு புறம்பாக திருக்கோயிலின் நிர்வாக பொறுப்புக்களில் தேவஸ்தானம் நியமித்துள்ளது. இவ்வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இத்தகவலும்  இந்துக்களை கவலை கொள்ள செய்கின்றது.

அண்மையில் வெளியான தகவலின்படி மைசூர் மகாராஜா தானமாகக்  கொடுத்த ராஜ் பிங்க் (Raj Pink) எனப் பெயரிடப்பட்டுள்ள 37.3 கேரட் எடையுடைய அரிதினும் அரிதான வைரக்கல் ஒன்று தொலைந்துவிட்டது. இந்த வைரமானது ‘பக்தர்கள் காசுகளை சாமி மீது வீசியதால் உடைந்துவிட்டதாக’ மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் தனது புலனாய்வு விசாரணை அறிக்கையில் பதிவு செய்துள்ளதாக முன்னாள் தலைமை பட்டர் கூறுகிறார்.  உண்மையில் இந்த வைரம் களவாடப்பட்டு சோதிபை (Sotheby) ஏல நிறுவனம் மூலமாக ஏலம் விடப்பட்டுள்ளது.

கோயில் நிதியை வேறு திட்டங்களுக்கு மாற்றுவதும் கோயில் தொடர்பில்லாத காரியங்களுக்கு செலவிடுவதும் புதிதல்ல. இது காலங்காலமாக தென்னாட்டில் இருந்துவரும் நடைமுறை தான் கோயில் பணத்தை எடுத்து கோயில் அதிகாரிகளுக்கு கார் வாங்குவதும் பேருந்து நிறுத்தம் கட்டுவதும் கூட நடந்துள்ளது. ஆனால் திருப்பதியில் மிகப்பெரியளவில் கொள்ளை நடந்திருக்கும் என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

திருமலையில் நடப்பது என்ன? அங்கு சோழ, பல்லவர்கள், விஜய நகர மன்னர்கள் குறிப்பாக கிருஷ்ணதேவ ராயர் கோயிலுக்கு வழங்கிய நகைகள் பலவற்றைக் காணவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதலாவதாக, ஆந்திர அரசு இக்குற்றச்சாட்டுக்கு தரும் விளக்கம் திருப்தியாக இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் வெளிவரக்  காரணமாயிருந்த தலைமை பட்டரை துணை முதல்வர் எச்சரித்துள்ளார். ஆனால் குற்றச்சாட்டுக்கு எந்த பதிலும் தரவில்லை. இந்திய அரசியல் களத்தில் இது சகஜமானது என்றாலும் இவரது கருத்தை மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை.

இரண்டாவதாக, கோயிலின்  நிர்வாக அதிகாரி. ஆகம சாஸ்திரம் அனுமதித்தால் கோயில் நகைகள் பார்வைக்கு வைக்கப்படும் என்கிறார், இது ஒரு நல்ல முடிவென்றாலும் இப்போது ஏன் இதை சொல்கிறார்கள் இதை முன்பே ஏன் செய்யவில்லை என்ற கேளிவியும் எழுகிறது. நிர்வாக அதிகாரியின் அறிக்கையும் அந்த பெரிய வைரக்கல் எப்படி உடைந்தது என்ற கேள்விக்கு விடை தரவில்லை. சாமிகள் மீது காசு எறிந்தால் வைரக்கல் உடையுமா என்ற கேள்வி பதில் அளிக்கப்படாமல் இருக்கிறது.

மூன்றாவதாக, பட்டர்களுக்கு உரிய பணி விதிகளை மாற்றி ரமண தீட்சிதலுவை பணிஒய்வு கொடுத்து அனுப்ப ஆந்திர அரசு முயற்சி செய்தது அவர் வாயை அடைக்க எடுக்கப்பட்ட பழி வாங்கும் நடவடிக்கை ஆகும். ஆனால் அவர் நீதிக்காக நீதிமன்றம சென்று போராடுவேன் என்கிறார். இதுவரை கோயில் பட்டர்களுக்கு பணிக்காலம் மற்றும் ஒய்வு பெறும் வயது என ஒரு விதிமுறையும் இல்லாதபோது இப்போது புதிதாக ரமண தீட்சிதலுவை வெளியேற்றுவதற்காகவே  இப்புதிய விதிமுறை புகுத்தப்பட்டுள்ளது.

திருப்பதியில் நடக்கும் முறைகேடுகளை மட்டும் தனியாக ஆராய்வது பயன் தராது. அனைத்து கோயில்களிலும் நடக்கும் முறைகேடுகளை பொதுவாக ஆராய்ந்து புதிய சட்டம் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு கோயிலிலும் கோயில் சொத்து கொள்ளை போகிறது. இந்தியாவில் கொள்ளை போகும் சிலைகளுக் சிற்பங்களும் வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலும் ஏல நிறுவனங்களிலும் காட்சி அளிக்கின்றன. இதை சாதாரணக் குற்றமாக கருதி விடக் கூடாது. இந்துக் கோயில்கலின் புனிதத்தைச் சிதைப்பதற்கான பெரிய சதியாகக் கருத வேண்டும்.

முஸ்லிம் படையெடுப்பாலும் பிரிட்டிஷாராலும் இந்தியாவின் கருவூலங்கள் திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டன. இப்போது அரசியல்வாதிகள் அந்த பணியை செய்துவருகின்றனர். இந்தியாவிற்கு ஏற்படும் இந்த தொடர் இழப்பை நாம் இப்போதாவது தடுத்து நிறுத்த  வேண்டும்.

திருப்பதியில் நடந்து வரும் ஊழல் பற்றிய தகவல்கள், இந்தியாவில் மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தல்களை சந்தித்து வரும் இந்துக்களுக்கு ஒரு விழிப்புணர்வு சங்கொலியாக அமைந்துவிட்டது. மதச்  சுதந்திரம் என்ற பெயரிலும் அரசியல் உரிமை சட்டங்கள் என்ற பெயரிலும் இன்று இந்து சமய நம்பிக்கை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகிறது. தனது  சொந்த மண்ணிலேயே இன்று இந்து மதம் தன இருப்புக்கு போராட வேண்டியுள்ளது.

இந்தியாவின் அரசியல் களம் நாற்றமடிக்கிறது. இங்கு உச்சநீதி மன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதியை கொண்டு நடத்தப்படும் விசாரணை ஆணையங்கள் மக்களின் சந்தேகத்தைத்தான் அதிகமாக்குகின்றன. இந்த விசாரணை ஆணையத்தின் முடிவுகள் உடனே வெளியிடப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு கிடைக்கும்படி செய்யவேண்டும். விசாரனையில் குற்றம் நடந்தது நிரூபிக்கப்பட்டால் அதற்கு காரணமானவருக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் .

இந்த விசாரணையின் முடிவு எதுவாக இருந்தாலும் மத்திய மாநில அரசுகள் திருக்கோயில்களின்  நிர்வாகத்துக்கு புதிய குழு ஒன்றை அமைத்து அனைத்து கோயில்களிலும் திறமையான வெளிப்படையான நிர்வாகம் நடைபெற ஆவன வேண்டும். அரசிடம் இருந்து கோயில் நிர்வாகம் இந்துக்களின் கைகளுக்கு மாற  வேண்டும் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தாகும். நிதி முறைகேடுகள் நடைபெறாத வகையில் வேண்டிய பாதுகாப்புடன் இந்துக்கள் நேரடியாக கோயில் நிர்வாகத்தை நடத்த வேண்டும்.

தீட்சிதலுவின் குற்றச்சாட்டு குறித்து இன்னும் விசாரணை முடிந்து நீதி வெளிவராத நிலையிலும், பெரியளவில் நடந்துள்ள ஊழல்களை மறைக்க திருப்பதி தேவஸ்தானம் அவரை பணி ஒய்வு என்ற பெயரில் அச்சுறுத்துகிறது. இதனால் அவர் இப்போது இந்து மதத்தின்  தியாகியாகி திருப்பதி  வெங்கடேஷ்வரனை வணங்கும் பக்தர்களின் அன்புக்குரியவராகி விட்டார்.

தனது டிவீட்டில் சுப்பிரமணியன் சுவாமி திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிதி முறைகேட்டை எதிர்த்து சீ.பி.ஐ விசாரணை கேட்டு நீதிமன்றத்துக்கு போகப்போவதாக தெரிவித்துள்ளார். தலைமை பட்டரை  வேலையை விட்டு நீக்கியது சட்டத்துக்கு புறம்பான செயல் என்று அவர் சாடியுள்ளார். இது தேவஸ்தானத்துக்கு பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. சுப்பிரமணியன் சுவாமி பொது நல வழக்கு தொடர்ந்து அதில அவருக்கு ஆதரவான தீர்ப்பு வந்தால் அது தேவஸ்தானத்துக்கு பெரும் தொல்லையாகிவிடும்.

திருமலை திருப்பதியில் நடக்கும் ஊழல் இந்துக்களுக்கு ஒரு முக்கியச்  செய்தியை அளிக்கிறது. மதச் சுதந்திரத்தின் விலை என்பது நித்திய விழிப்புணர்வாக இருக்கிறது. எந்நேரமும் கோயில் கொள்ளையர்களை கண்காணிப்பதே இந்துக்களின் வேலையாகப் போய்விட்டது.  இவ்வாறு சொந்தப் பணியை செய்யாமல் கோயில் காரியமாக அலைவதை நாம் தியாகியாவதற்கு கடவுள் தந்த உரிமை என்று கருதக்  கூடாது மதச்  சார்பற்ற தன்மை என்ற பெயரில் இந்நாட்டில் கோயிலை கொள்ளையடிப்பவர்  காட்டுமிராண்டியாக இருந்தாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் அதை அனுமதிக்கக்கூடாது.

திருமலை திருப்பதியில் நடந்த ஊழல் தீவிரமாக இனி கண்காணிக்கப்படும்  இது உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வருவதோடு நின்றுவிடாமல் அனைத்து இந்து கோயிலுக்குமான விடிவு காலம் பிறக்கவும் வழி வகுக்கும். எதிர்காலத்தில் கோயில் நிர்வாகம் யார் கையில் இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும். இப்போதைக்கு இந்து பக்தர்கள் பல நுறு ஆண்டுகளாக கோயிலில் இருந்து வரும் சாமி நகைகள் மற்றும் காணிக்கைகள்  பத்திரமாக பாதுகாக்கப்படுவதாக நம்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here