ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தை அபகரிக்க சிலர் முயற்சி

ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கே சுவாமிகளின் உயில் பற்றி தெரியாத மர்மம்

1
3984
ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கே சுவாமிகளின் உயில் பற்றி தெரியாத மர்மம்
ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கே சுவாமிகளின் உயில் பற்றி தெரியாத மர்மம்

ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் என்பது  ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தில் விசிஷ்டாத்வைதத்தை பரப்புகின்ற ராமானுஜர் மற்றும் வேதாந்த தேசிகர் வழி வந்தவர்கள் உருவாக்கிய ஆசிரமம் ஆகும். இந்த ஆசிரமத்தின் ஆசாரியராக இருந்தவர் மார்ச் மாதம் திருநாடு அடைந்துவிட்டார். [காலமாகிவிட்டார்]. ஆண்டவன் சுவாமிகள் மறைந்த பிறகு அவர் எழுதியதாக ஒரு உயிலை ஒரு குழுவினர் காண்பித்து அந்த மூன்று தனி நபர் கொண்ட குழுவை தான் ஆசார்யார் அடுத்த நிர்வாகக் குழுவாக  நியமித்து இருப்பதாகவும் இந்த மூவரில் ஒருவர் அடுத்த சுவாமிகள் ஆகலாம் என்றும் அந்த உயிலில் குறிப்பிட்ட இருப்பதாக தெரிவித்தனர்

இந்தக் குழுவில் இருக்கும் முதல் நபர் ஆண்டவன் ஆசிரமத்தின் சிஷ்யாள் கூட .இல்லை. ஆசிரமத்தோடு சுமார் 50 ஆண்டுகளாக நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கும் வேத விற்பன்னர் ஒருவர் நம்மிடம் பெயர் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையோடு சில செய்திகளைத் தெரிவித்தார். சுவாமிகள் எழுதியதாக சொல்லப்படும் உயிலை எவரும் பகிரங்கமாக காட்டவில்லை. ஸ்ரீ காரியத்துக்கு கூட அந்த உயிலை பற்றிய தகவல் தெரிந்திருக்கவில்லை.[ஸ்ரீ காரியம் என்பவர்,  மடத்தில் சுவாமிகளுக்கு அடுத்த நிலையில் உள்ள செயலாளர் ] அவருக்கே சுவாமிகள் எழுதிய உயில் தெரியவில்லை என்றால் இப்படி ஒரு உயில் போலியாகத் தயாரிக்கப்பட்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.

மூவர் குழுவில் இருப்பவர்கள் தங்களின் விருப்பங்களுக்கு கட்டுபட்டு நடக்கக் கூடிய ஒருவரை அடுத்த ஆச்சாரியராக கொண்டுவர முயல்கின்றனர். இந்தக் குழுவில் இருப்பவர்கள் தொழிலதிபர் சார்டர்ட் அக்கவுண்டன்ட் மற்றும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஆவார். இவர்களில் எவரும் வேத பாராயணம் செய்பவர்கள் இல்லை. மடத்தின் சமய சம்பிரதாயங்களில் முன் அனுபவமோ அறிவோ உடையவர்கள் இல்லை.

ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் சிஷ்யாள் சபா என்ற பெயரில் அடியவர்கள் ஒன்றிணைந்து இந்த மடத்தை அந்த நிர்வாகக்குழுவிடம் இருந்து திரும்பப் பெறும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர் இந்த சிஷ்யர்கள் இந்த மாதம் சென்னையிலும் ஸ்ரீரங்கத்திலும் இரண்டு நாட்கள் பெருந்திரளாகக் கூடி கூடிப் பேசினர். இந்த இரண்டு கூட்டத்திலும் சுவாமிகள் எழுதியதாக சொல்லப்படும் போலியானது என்பதும் உடனடியாக அந்தக் குழுவிடம் இருந்து மடத்தை மீட்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையே அந்த நிர்வாகக் குழுவுக்கு சிஷ்யர்களுக்கும் கடுமையான வாட்சப் யுத்தமும் நடந்து வருகிறது மடத்தில் சமய சம்பிரதாய கைங்கரியங்களை விட வர்த்தக நடவடிக்கைகளை அதிகம் நடக்க இருப்பதாக தோன்றுகிறது மடத்துக்கு சொந்தமான இடங்களை விற்கவும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு பள்ளியை விலைக்கு வாங்கி வர்த்தக ரீதியாக அதை நடத்தவும் அந்தக் குழு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது

சுவாமிகள்  எழுதிய உயில் உண்மை என்றால் அதை பகிரங்கமாக மடத்தில் இருப்பவர்களுக்கு ஏன் காட்டக் கூடாது சுவாமிகள் மறைந்து நான்கு மாதங்கள் ஆன பின்பும் மடத்தில் சமய நடவடிக்கைகள் எதுவும் தொடங்கவில்லை. அதற்கு என்ன காரணம். பள்ளிக்கூடம் ஒன்றை விலைக்கு வாங்குவதும் மடத்து நிலங்களை விற்க முனைவதும் உண்மைதானா. சுவாமிகளின் பெயரை இந்த குழுவினர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆசிரமத்தில் மத சம்பிரதாய போக்குக்கு இவர்கள் ஆதரவாக இருப்பதாக தெரியவில்லை.சம்பிரதாயச் சார்பற்ற நிர்வாகக் குழு ஒன்று எவ்வாறு பல நூற்றாண்டுகள் பழமையான மடத்தின் சமய சம்பிரதாயங்களை நடத்தி வைக்க முடியும்,

பிஜேபியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி ‘’நான் இந்த ஆசிரமத்தை நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். விரைவில் இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகி மீண்டும் இந்த மடத்தை சமயாச்சாரியார்கள் இடம் ஒப்படைப்பேன் என்றார். அடுத்த சில வாரங்களில் ஆண்டவன் சுவாமிகள் மடத்தை சிஷ்யர்களே திரும்பப் பெற ஆவன செய்யப்படும். வைஷ்ணவ சமயத்தை பரப்பவும் ஆசிரமத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அல்லது இந்த மடம் சில வர்த்தக ஆர்வலர்களின் பேராசைக்கு இரையாகிவிடும்.

1 COMMENT

  1. திரு டி.கே. சிவகுமார் அவர்களின் ஹவாலா ஏஜண்ட்கள் அப்ருவராக ஆனபின் அடுத்து சுப்ரீம் கோர்ட் தானே இந்த வழக்கை அரசியல் சாயம் பூச சந்தர்ப்பம் அளிக்காமல் இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும்.
    இது தவிர கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகாவில் சித்தராமையா முதன்மைப் திரியாய் இருந்தபோது நடந்த அரசியல் கொலைகளையும் சுப்ரீம் கோர்ட் விசாரணை தேவை . குற்றவாளிகள் சாட்சிகளை அழிக்க அவகாசம் கொடுக்கக்கூடாது.
    திரு ப.சிதம்பரம் அவருடைய மனைவி திருமதி நளினி சிதம்பரம் இவர்கள் வழக்கறிஞர்கள். திரு.ப.சி. அவர்கள் முன்னாள் கேபினெட் மந்திரியாக இருந்து இவர் ஊழல் செய்தார் என்று நிரூபணமானால் அவர்களிருவருடைய சட்ட படிப்பு டிகிரி யை அவர்களிடமிருந்து திரும்ப பிடுங்கி அது தவிர பார் கவுன்சில் மெம்பர்ஷிப்பை ரத்து செய்யவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here