சிதம்பரம் கைதுக்கு பயந்து ஒடி ஒளிகிறார்
சிதம்பரத்தை விசாரணைக்காக கட்டாயப்படுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம்ஆணை பிறப்பித்த சில மணி நேரத்திலேயே சி பி ஐ அவரைக் கைது செய்து விசாரித்தால் மட்டுமே அவரிடம் இருந்து ஐ என் எக்ஸ் ஊழல் தொடர்பான உண்மைகளைப் பெற முடியும் என்றுமனு தாக்கல் செய்தது. ஜுன் மூன்றாம் தேதி நடந்த நீதிமன்ற விசாரணையில் அவர் முழு ஒத்துழைப்பு தராமல் எந்த கேள்விக்கும் பதில் சரியாக சொல்லாமல் நழுவுகிறார் என்றும் எடுத்து சொல்லி கைதுக்கான உத்தரவை சி பி ஐ வேண்டியது. இந்த மனுவை நீதிபதி பதக் முன்னிலையில் சி பி ஐ தாக்கல் செய்தது. அவர் இவ்வழக்கு விசாரணையை ஆகஸ்ட் முதல் தேதிக்கு தள்ளி வைத்திருந்தார். மே மாதம் இறுதி வரை சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்திருந்தது
மே மாத இறுதி வரை தற்காலிக முன் ஜாமீன் பெற்றிருந்த சிதம்பரத்தின் முன் ஜாமீன் கோரிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்த சி பி ஐ அதில் ஜுன் மூன்றாம் தேதி நடந்த விசாரணையில் அவர் ஒத்துழைப்பு கொடுக்காததை சுட்டிக் காட்டயிருந்தது. சி பி ஐக்காக வாதாடிய அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ப சிதம்பரம் பிடி கொடுக்காமல் நழுவி நழுவி பதில் அளித்தார். [தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் அதிகாரிகள பரிசோதித்து உறுதி செய்து காட்டிய கோப்புகளில் மட்டுமே கையெழுத்திட்டதாகவும் திரும்ப திரும்ப கூறினார். கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக இருந்த சிதம்பரம் தன்னை ஏதும் அறியாத அப்பாவி போலவே காட்டிக்கொண்டார்].
“இதுவரை சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் உண்மைத்தன்மை உள்ளன என்பதால் அவர் மீதான் குற்றச்சாட்டு ருசுவாகக் கூடிய வகையில் இருகின்றது. இதற்கு அவரை கைது செய்து விசாரித்தால் மட்டுமே உண்மைகள் வெளிகொண்டு வர முடியும். கைது செய்யாமல் இப்படியேயே நீதிமன்றத்தில் நிற்க வைத்து கேள்வி கேட்டால் அவர் ஒழுங்காக பதில் சொல்லாமல் தப்பிக்க பார்ப்பார். இந்த நீதிமன்ற விசாரணையால் அவர் வாயில் இருந்து உண்மையை வரவழைக்க இயலாது. எனவே அவரது முன் ஜாமீன் கோரிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என்று சி பி ஐ வக்கீல் தெரிவித்தார்.
ஐ என் எக்ஸ் மீடியா ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு வராமல் அமலாக்கத் துறையினரின் ஏர் செல் மேக்சிஸ் வழக்கில் கைதாகாமல் இருக்க மே முப்பதாம் தேதி சிதம்பரம் முன் ஜாமீன் கோரி பெற்றார்.
ஐ என் எக்ஸ் மீடியா வழக்கு விவரம்
ஏர்செல் மேக்சிஸ் ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறையினரும் வருமான வரி துறையினரும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகங்களில் 2015 டிசம்பர் மாதம் சோதனையிட்ட போது ஐ என் எக்ஸ் மீடியா ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கின. ராஜேஷ்வர சிங் என்ற அதிகாரியின் தலைமையில் நடந்த இந்த சோதனையில் பதினான்கு நாடுகள் மற்றும் இருபத்தியொரு வெளிநாட்டு வங்கிகளில் சிதம்பரம் குடும்பத்தினருக்கு சொத்தும் பண இருப்பும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை தவிர அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியத்திலும் [FIPB (Foreign Investment Promotion Board)] சிதம்பரம் பல்வேறு ஊழல்கள் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இவரது மகன் கார்த்திக் இலாபம் அடைந்திருப்பதும் வெளியானது. வருமான வரி துறையினரும் அமலாக்கத் துறையினரும் தாம் சேகரித்த உண்மைகளை அப்படியே பட்டியலிட்டு ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து சிதம்பரத்தையும் அவர் குடும்பத்தினரையும் விசாரிக்கும்படி சி பி ஐக்கு கோரிக்கை விடுத்தனர். இப்போது சி பி ஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது
இப்போது சிறையில் அடைபட்டிருக்கும் பீட்டரும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜியும் 2006 இல் ஐ என் எக்ஸ் மீடியாவுக்கு உரிமையாளர்களாக இருந்தனர். அவர்கள் வெளிநாட்டில் இருந்து ஐந்து கோடி மதிப்புக்கு முதலீடு பெற அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி பெற்றனர். ஆனால் சுமார் 305 கோடி ரூபாய் கொண்டு வந்துள்ளனர், இந்த தொகைக்கு முறை கேடாக அனுமதி பெற இவர்கள் இருவரும் சிதம்பரத்தையும் அவர் மகன் கார்த்தியையும் சந்தித்தனர். கார்த்தியின் நிறுவனத்துக்கு ஐந்து கோடி ருபாய் கொடுத்து சட்டத்துக்கு புறம்பாக அந்த பெருதொகையை இந்தியாவுக்குள் கொண்டு வந்தனர். இவர்கள் இருவரும் அப்பாவும் மகனுமாக தங்களை மிகவும் வற்புறுத்தி இலஞ்சம் பெற்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இப்போது பீட்டர் , இந்திராணி தம்பதியினருடன் கார்த்தியும் இந்த ஊழலில் ஈடுபட்டது சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவாகி உள்ளது. விரைவில் சிதம்பரமும் இந்த ஊழல் கோஷ்டியுடன் இணைய போகிறார். கருப்பு பணத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சிதம்பரத்தின் மீதும் ஐ என் எக்ஸ் ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளது.