சிலர் சிறப்பானவராக பிறக்கின்றனர்; சிலர் சிறப்புகளை சாதித்து பெறுகின்றனர் சிலர் மீது சிறப்புக்கள் திணிக்கப்படுகின்றன என்றார் வில்லியம் ஷேக்ஸ்பியர்
ஆனால் ஊழல் மேதையான சிதம்பரம் இந்த வாசகத்தை மாற்றி அமைக்க வந்துள்ளார்.
சிலர் சிறப்பானவராக பிறக்கின்றனர்; சிலர் சிறப்புக்களை தம் சாதனையால் அடைகின்றனர். சிலர் என்ன விலை கொடுத்தாலும் சிறப்புகளை வாங்கி கொள்கின்றனர்.
நான் இதை முன்பும் சொல்லி இருக்கின்றேன் இப்போது திரும்பவும் சொல்கின்றேன்.இந்திய அரசியல்வாதிகள் அனைவரின் ஒரே கனவு ஒரு நாளாவது பிரதமர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்பது தான். ஆனால் நேரு குடும்பத்தார் இருக்கும் வரை அது நிறைவேறாது. இந்திரா காந்தி காலத்தில் விசுவாசத்துக்கு முக்கியத்துவம் வர ஆரம்பித்தது. அதனால் அவருக்கு பிறகு சில ராஜ விசுவாசிகள் பிரதமர் ஆயினர். ராஜீவ் காந்தியின் ஆணைக்குட்பட்டு அப்போது [பினாமி] பிரதமராக பி வி நரசிம்ம ராவ் இருந்தார். இவ்வாறு பிரதமர் பதவி கிடைப்பது திறமையினால் அல்ல; விசுவாசி என்று நேரு குடும்பத்தார் கருதும் நம்பிக்கையால் மட்டுமே. இது வெறும் அதிர்ஷ்டம் தான். ஆனால் பணம் என்பது மலையையும் மனத்தையும் மாற்றி அமைக்கும் அபார சக்தி பெற்றது.
ஒரு ட்விட்டர் செய்தியில் கார்த்தி சிதம்பரம் அளித்துள்ள தகவல் அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. அவரே வலிய வந்து வாக்குமூலம் கொடுத்திருப்பது போல இந்த டிவிட்டர் வாசகம் காணப்படுகிறது. ஒருவர் உங்களிடம் எத்தனை பாஸ்போர்ட் இருக்கிறது என்று கேட்டதற்கு ‘கார்த்தி எனக்கு பாஸ்போர்ட் தேவையில்லை எனக்கு ஆறு லட்சம் கோடி சொத்து இருப்பதால் நான் பாஸ்போர்ட் இல்லாமலே மற்ற நாடுகளுக்கு போய் வரலாம் நான் ஒரு சர்வதேச குடிமகன்’ என்று டிவிட்டரில் பதில் அளித்துள்ளார்.
கார்த்திக்கு மட்டும் தனியாக ஆறு லட்சம் கோடி ருபாய் சொத்து எப்படி வந்தது– இதை நான் ஒரு கணக்கு போட்டு காண்பிக்கிறேன். புலனாய்வு அமைப்புக்கள் அதன் விவரத்தை நுணுகி ஆராய்ந்து உண்மையை வெளியே கொண்டு வரட்டும்.
வெளிநாடுகளுடனான வணிக தொடர்பில் சந்தேகத்துக்கிடமான தொகை வித்தியாசம் மட்டுமே ஐம்பது கோடியில் இருந்து எழுபத்தைந்து கோடிக்குள் ஆகும்.
தேசிய பங்கு சந்தையில் நடத்திய ஊழல்
- பங்கு சந்தை ஊழல்
பினாமி உரிமை
- தனியார்
- *தனியார் நிறுவனங்கள்
- ரியல் எஸ்டேட் மனையடி விற்பனை
வெளிநாட்டு சொத்துக்கள்
- இருபத்தியொரு வங்கி கணக்கு
- இருபத்தி ஒன்பது சொத்துக்கள்
பித்தலாட்டங்கள் (லஞ்சம்)
- வங்கி கடன்கள்
- இறக்குமதி இன்வாய்சில் நடத்திய பித்தலாட்டங்கள்
வெளிநாட்டில் இருக்கும் சொத்துக்கள்
சிதம்பரம் குடும்பத்தாருக்கு வெளிநாட்டில் இருக்கும் சொத்து மதிப்பு குறித்து ஏற்கெனவே இந்த செய்தி தளம் விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது. இது வரையில் கணிக்கப்பட்டுள்ள மதிப்பு இருபது முதல் இருபத்தைந்து கோடி வரை என்பதாகும். அதாவது மூன்று முதல் நான்கு பில்லியன் டாலர்,
கமிஷன் தொகை
ஐ சி ஐ சி ஐ வங்கி வீடியோகான் நிறுவனத்துக்கு நாற்பதாயிரம் கோடி கடன் கொடுத்ததில் அதன் தலைமை நிர்வாகி சந்தா கோச்சாருக்கு கிடைத்த கமிஷனே பத்து சதவீதம் என்றால் ‘கடன் கொடு’ என்று உத்தரவிட்ட நிதி அமைச்சகப் பிரமுகருக்கு எவ்வளவு அதிகமாக கிடைத்திருக்கும் என்று சிந்தித்து பாருங்கள். அவருக்கு கிடைத்தது 25% ஆகும். இந்தியாவின் NPA அளவு ருபாய் பத்து இலட்சம் கோடி. இந்த கமிஷன் தொகை இரண்டரை இலட்சம் கோடி [அதாவது நாற்பது பில்லியன் டாலர்].
2008 – 2010 ஆம் ஆண்டுகளுக்குள் இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடந்த ஊழல் பற்றி வருவாய் புலனாய்வு துறையினர் கண்டுபிடித்த உண்மைகளை நமது செய்தி தளம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டுள்ளது.இந்தொனேஷியாவில் இருந்து நேராக இந்தியாவுக்கு கப்பல் வந்துவிடும் ஆனால் இன்வாய்சில் அது சிங்கப்பூர், ஹாங்காங், துபாய் சுற்றி வந்ததாக போலி கணக்கு காட்டப்படும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இப்படி ஒரு ஊழல். அந்த ஆட்சியில் என்னென்ன வகையில் ஊழல் செய்து பணத்தை கொள்ளையடிக்க முடியுமோ அத்தனை வகையிலும் பித்தலாட்டங்கள் செய்து கொள்ளையடித்தனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இது ஒரு உதாரணம் மட்டுமே
பினாமி உரிமை
உண்மையான் உரிமையாளர்களை மறைத்து பினாமி உரிமையாளர்களை வைத்து தேசிய பங்கு சந்தை நடவடிக்கைகளில் ப சிதம்பரம் கலந்து கொண்டு பெரியளவில் ஊழல்களில் ஈடுபட்டார். ஐ சி ஐ சி ஐ வங்கியில் நாற்பது சதவிதம் அந்நிய முதலீட்டாளர்கள் இருந்தனர். ஹெச் டி ஏஃப் சி வங்கியில் முப்பத்தி நான்கு சதவீதம் பேர் அந்நிய முதலீட்டாளர்கள், இவர்கள் போலிகளாக இடம்பெற்றனர். ஐ சி ஐ சி ஐ வங்கியில் கமிஷன் பெற்ற சந்தா கோச்சார் கதை வெளியே வந்து இத்தனை நாளாகியும் அவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பி இருப்பது விஷயத்தை ஆறப் போடும் முயற்சி ஆகும்.
மேற்கண்ட ஊழல் விவகாரங்களில் பெரும்பான்மை ப சிதம்பரம் மேற்பார்வையில் நடந்தவை ஆகும். மேலே விவரிக்கப்பட்டுள்ளவற்றையும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத உண்மைகளையும் ஆராய்ந்தால் கார்த்தி சொன்னது போல அவருக்கு மட்டும் தனியாக அறுபது இலட்சம் கோடி சொத்து இருக்கும் என்பது உண்மை தான்.
நிறைவு
மேலே காணும் மதிப்பீடு என்பது ஓரளவுக்கு மட்டும் தான் சிதம்பரத்தின் பித்தலாட்ட நடவடிக்கைகளை எடுத்து காட்ட உதவும். இன்னும் ஏராளமான ஊழல்கள் வெளியே தோண்டி எடுக்கப்படாமல் புதைந்து போயுள்ளன. அமலாக்கத் துறையும் சி பி ஐயும் இன்னும் ஐ என் எக்ஸ் மீடியா ஊழல் ஏர்செல் மேக்சிஸ் ஊழல் என்பவனவற்றை மட்டும் சொல்லி கொண்டிருப்பதில் பயனில்லை. மற்ற ஊழல்களையும் கண்டுபிடித்து சட்டப்படி ப சிதம்பரம் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.