ஹிந்துக்களுக்கு வேண்டியது இந்தியாவிலிருந்து சுதந்திரம்

ஹிந்துகளுக்கான கைலாச தேசத்தை ஆதரித்து ஒரு சுயாதீன கருத்துரை

2
2244
ஹிந்துக்களுக்கு வேண்டியது இந்தியாவிலிருந்து சுதந்திரம்
ஹிந்துக்களுக்கு வேண்டியது இந்தியாவிலிருந்து சுதந்திரம்

ஹிந்துக்களின் பாரத தேசத்திலிருந்து ஒவ்வொரு நாடாகவும் ஒவ்வொரு பகுதியாகவும் பிரித்து தனித்தனி ஹிந்துக்கள் அல்லாத நாடாக மாற்றினார்கள். இது தொடங்கியது இஸ்லாமிய படை எடுப்பு காலத்தில். அதாவது சுமாராக 900 வருடங்களுக்கு முன். இவ்வாறு முதலில் பிரித்து எடுக்கப்பட்ட ஹிந்துக்கள் முழவதுமாக இனப்படுகொலை செய்யப்பட்டு ஹிந்துக்கள் அல்லாத நாடுகளாக மாற்றப்பட்டவை ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளும் இன்றைய பாக்கிஸ்தானின் சில பகுதிகளுமே ஆகும். பின்னர் கிறிஸ்தவ பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இவற்றின் பெரும்பகுதிகள் பெரும்பாண்மை முஸ்லிம்கள் பகுதிகள்லாயின. இதற்கு கிறிஸ்தவ ஆட்சியும் துணை. ஏனெனில் அவர்கள் ஒருவரை ஒருவர் சகோதர மதங்களின் பிரதிநிதிகள் (people of the books) என்று கருதுவது இன்றளவும் உண்மை.

இரு சமுதாயங்களை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். இவை பறையர்கள் மற்றும் வன்னியர்கள். இவர்கள் இன்று பெரும்பாலும் எதிரும் புதருமாக ஆகிவிட்டார்கள்.

மேலும் இதனுடன் நிறுத்தாமல் கிறிஸ்தவ ஆங்கிலேயர் பாரதத்திலிருந்து பர்மாவையும் இலங்கையையும் 1937-ல் பிரித்து தனி நாடுகளாக அறிவித்தனர். இந்த பிரிவினைவாத செயலுக்கு இந்திய அரசு சட்டம், 1935, என்று பெயரிட்டு அதை மறைத்துவிட்டார்கள். இதுவே பிற்காலத்தில் தமிழர்கள் பர்மாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் அகதிகளாக மாறி இந்தியாவிற்கு உயர் பிழைப்பதற்காக ஓடி வரும் நிலைக்கு அடிப்படை காரணமாயின. பர்மாவிலிருந்து தமிழர்கள் அடித்து துரத்தப்பட்டனர். அதுவரை உலக பண பட்டுவாடா அனைத்தையுமே தமிழர்கள் தான் தாங்கள் நடத்திய உலகளாவிய வங்கிகள் மூலம் நடத்தி வந்தார்கள். இதை உடைக்க கிறிஸ்தவ ஆங்கிலேயர் செய்த சதியில் இதுவும் ஒன்று. இதை அடிப்படையாகக் கொண்டு நேருவின் மகள் இந்திரா தனது ஆட்சியில் தமிழர்களின் வங்கிகளை தேசியமயமாக்குதல் என்ற பெயரில் தன் வசம் படுத்திக்கொண்டால்.

கிறிஸ்தவ வெள்ளைக்காரன் அன்று செய்த கொடுமைகள் இன்றும் பாரதிய மக்களை அதுவும் முக்கியமாக தமிழர்களை தாக்கத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக இலங்கை தமிழ் இந்துகள் இனப்படுகொலையும் அதற்கு துணை சென்ற காங்கிரஸ்-தி.மு.கா. கூட்டணி ஆட்சியும்.

பாரதத்தின் வீழ்ச்சி அடிப்படையில் தமிழ் ஹிந்துக்களின் வீழ்ச்சியின் கதையே. ஆனால் இதை அறியாமல் பாரதநாட்டின் முதன்மை புதல்வர்கள் இன்று தனது பாரத தாயையே பழித்து வாழும் கொடுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் அவர்களின் குருகுல கல்வி முறையை கிறிஸ்தவ வெள்ளைக்காரன் அழித்ததுவே. இன்று “மதச்சார்பற்ற” பாடமுறை என்ற பெயரில் தங்களை உலகாள வைத்த சைவ ஹிந்து மத நெறிகளை மறக்க அடித்துவிட்டார்கள. சைவ ஹிந்து மத வாழ்க்கை முறை மற்றும் பண்பாட்டை மறந்த நாள் முதல், அதாவது சைவ நெறிக்காத்த சோழர்-பாண்டியர் ஆட்சிகளின் வீழ்ச்சிக்கு பிறகு, இன்றுவரை தமிழன் அடிமையாகவே உள்ளான்.

பறையர்களும் வன்னியர்களும்

இரு சமுதாயங்களை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். இவை பறையர்கள் மற்றும் வன்னியர்கள். இவர்கள் இன்று பெரும்பாலும் எதிரும் புதருமாக ஆகிவிட்டார்கள். இதற்கும் காரணம் கிறிஸ்தவ ஆங்கிலேயர் விதைத்த சதியே. வன்னியர்கள் பெரும்பாலும் படைகளில் பணியாற்றி வந்தார்கள். இதனாலேயே இவர்கள் படையாச்சி என்ற பெயரைப் பெற்றார்கள். இது இன்றைய இந்திய இராணுவ வேலையைப் போன்றது.

பறையர் சமுதாயத்தினரே ஊர்க் காவலர்களாக ஊள்ளுர் பாதுகாப்பு பணியில் கொடிகட்டி பறந்தார்கள். இன்றும் இதன் சான்றாக பல தமிழ் மாவட்டங்களில் இவர்கள் தலையாரி என்று அழைக்கப்பட்டு ஊர் காவலை பரம்பரை தொழிலாகவே செய்து வருகிறார்கள். அதாவது கிறிஸ்தவ வெள்ளைக்காரன் ஊர்க்காவலை தன்னகப்படுத்தும் வரை இவர்களே இன்றுள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சமம். இது மட்டுமின்றி பல கிராமங்களில் தலையாரியே கணக்குப்பிள்ளையாகவும், நிலம் அளக்கும் அதிகாரியாகவும் (surveyor, சர்வேயர்) இருந்துள்ளனர். இந்த முறை எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் வீ.ஏ.ஓ. (VAO, Village Administrative Officer) என்கிற கிராம நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படும் வரை தமிழக ஊர்களில் பலவற்றிலும் விளங்கி வந்த நடைமுறையாக இருந்துள்ளது.

இவர்கள் இரு சமுதாயமும் கிறிஸ்தவ வெள்ளைக்காரணை எதிர்த்ததின் விளைவே பிரிட்டிஷ் இவர்களின் பாரம்பரிய தொழில்களை இவர்களிடமிருந்து பிடுங்கி இவர்களை பின்தங்கியவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் மாற்றினார்கள். அது மட்டுமின்றி அவர்களின் பாட முறை சார்ந்த “மதச்சார்பற்ற” கல்வியில் (Macauley’s system of English education) பொய்யாக அதுவரை இல்லாத ஜாதி வேறுபாட்டையும் வெறியையும் உருவாக்கியும் அதை ஏற்றியும் பிரிவினையை விதைத்து வளர்ந்தனர். இதுவே இன்று வன்னியர் பறையர் ஜாதி வேற்றுமையாகவும் வெறுப்பாகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தொடரும்…

2 COMMENTS

  1. தமிழர்களின் வரலாற்றில் உள்ள சீர்கேடுகளை மிக அருமையாக எடுத்துக்காட்டியுள்ளீர். கட்டூரை ஆசிரியருக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். மேலும் இந்தக் கட்டூரை விரிவடைந்து ஒரு புத்தகமாக வெளிவர வேண்டும் என்பது என் அவா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here