ஆரிய திராவிட புரட்டு: எப்படி “92 தலைசிறந்த அகில உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்” அடிப்படை கணக்கை கோட்டைவிட்டனர்

ஆரிய இடப்பெயர்ப்பு (படையெடுப்பு) அறிவியல் பூர்வமாக நிருபணம் ஆகிவிட்டதாக “92 தலைசிறந்த அகில உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்” கருதுவதாக எழுதியுள்ளார்கள்

2
3765
ஆரிய இடப்பெயர்ப்பு (படையெடுப்பு) அறிவியல் பூர்வமாக நிருபணம் ஆகிவிட்டதாக “92 தலைசிறந்த அகில உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்” கருதுவதாக எழுதியுள்ளார்கள்
ஆரிய இடப்பெயர்ப்பு (படையெடுப்பு) அறிவியல் பூர்வமாக நிருபணம் ஆகிவிட்டதாக “92 தலைசிறந்த அகில உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்” கருதுவதாக எழுதியுள்ளார்கள்

ஆங்கிலத்தில் மேலும் அறிவியல் பூர்வமான விவரங்களுக்கு மருத்துவர் பிரியதர்சியின் கட்டுரைகளை இங்கு பார்க்கவும். அறிவியல் பூர்வமான விவரமான ஆராய்ச்சி கணக்குப்பட்டியல், சர்வதேச அறிவியல்  பத்திரிக்கைகளில் வெளியான பின்  இங்கு வெளியாகும்.

ஆங்கில மாத இதழான அவுட்லுகில் (Outlook-ல்) ஒரு தலையங்க கட்டுரை வெளியாகி உள்ளது. அதில் ஆரிய இடப்பெயர்ப்பு (படையெடுப்பு) அறிவியல் பூர்வமாக நிருபணம் ஆகிவிட்டதாக “92 தலைசிறந்த அகில உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்” கருதுவதாக எழுதியுள்ளார்கள். இப்படி கூறும் இந்த அறிவியல் மேதைகள் வேண்டுமென்றே அடிப்படை மரபியல் புத்தகங்களில் உள்ள அடித்தள கூற்று ஒன்றை உதாசீனம் செய்தே இந்த தவறான கருத்துக்கு வந்துள்ளார்கள் என்பதை இக்கட்டுரையில் காண்போம். மேலும் அவர்கள் எப்படி போலி அறிவியலை பயன்படுத்தி ஒரு இனவாதக் கொள்கையைப் பரப்புகிறார்கள் என்றும் பார்ப்போம்.

இதற்காக மொழியியல் என்று அறிவியலல்லாத ஒரு துறையை அறிவியல் என்று ஆதாரமில்லாமல் கூறி அதன் மேல் புரட்டை நிலைநிறுத்துகிறார்கள். நம் மக்களும் அறிவியல் எது அறிவியலல்லாத துறைகள் எது என்று அறியாமல் ஏமாறுகிறார்கள்.

அந்த 92 ஆராய்ச்சியாளர்களில் ஒரு இந்திய ஆராய்ச்சியாளர் உள்ளார். இவர் சிந்து-சரஸ்வதி சமவெளி நாகரிக மக்களை முழுமையாக துரத்திவிட்டு இமயத்திற்கும் வடக்காக உள்ள காய்ந்த புல்வெளி பாலைவனத்திலிருந்து வந்த மக்கள் பிடித்துக்கொண்டார்கள் என்று கூறியுள்ளார். எப்படியோ அந்த காய்ந்த  புல்வெளி பாலைவனத்தில் போய் ஐனத்தொகை புற்றீசல் போல பெருகி இருந்ததாக நம்மை நம்பிக்கைக்கொள்ள சொல்கிறார்கள். அவர் கூறியதாக அவுட்லுக் எழுதியது, “நீங்கள் இந்த மரபியல் கூறுகளை வட இந்திய மக்களிடம் இப்பொழுது காணயியலாது ஆனால் தென்னிந்திய மக்களிடம் காணலாம்.”

இப்படிப்பட்ட கருத்தை அவர் எதை வைத்து கூறுகிறார் என்று பார்த்தால் உங்களுக்கே சிரிப்பு வரும். இரண்டே இரண்டு பழங்கால சிந்து-சரஸ்வதி சமவெளி காலத்து அணுக்கூறுகள் கிடைத்ததிலிருந்து இவர்கள் இவ்வாறு முடிவெடுத்துள்ளார்களாம்,

இது எப்படி இருக்கிறது என்றால் அவுட்லுக் பத்திரிக்கை இரண்டு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை மட்டும் நீங்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறீர்கள் என்று கேட்டுவிட்டு இந்தியாவே ராகுலுக்கத்தான் வாக்களிக்க உள்ளது என்று கூறுவது போலாகும். இது ஒரு அடிப்படை முறைகேடு. இருப்பினும் “92 தலைசிறந்த அகில உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்” தன்னுடன் இந்த சதியில் கூட்டு என்ற ஆதங்கத்தில் இவ்வாறு பிதற்றியுள்ளார்.

நாம் ஒரு கற்பனையான உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். அதாவது டில்லி மக்கள் சென்னை வந்து குடியேறுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். டில்லி மக்கள் சென்னையில் 95 சதவீத அளவாக மாற சென்னை வாசிகளை விட 19 மடங்கு (அதாவது 95 / 5 = 19) அளவு எண்ணிக்கையில் வரவேண்டும். இது கணக்கின் நிதர்சனம்.

டில்லியாவது ஒரு பெரிய மாநகரம். ஒரு பேச்சிற்காவது சென்னையை விட 19 மடங்குக்கு மேல் ஜனத்தொகை என்று கதைக்கட்டலாம். ஆனால் காய்ந்த தார் பாலைவனத்திலிருந்து அத்துணை பேர் வந்தார்கள் என்றால் அது கேலிக்கூத்தாக இல்லை? இருப்பினும் அந்த “92 தலைசிறந்த அகில உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்” உங்களை இந்த கட்டுக்கதையை ஒப்புக்கொள்ளச் சொல்கிறார்கள்!

சிந்து-சரஸ்வதி சமவெளி நாகரிகத்தின் மத்திய பகுதிகளில் மட்டுமே 5 மில்லியன் மக்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்படியானால் குறைந்தது 19 முறை 5, அதாவது 95 மில்லியன், மக்களா அதுவும் ஒரு காய்ந்த புல்வெளி பாலைவனத்திலிருந்து இமயத்திற்கும் வடக்கிலிருந்து வந்தார்கள்? அக்காலத்தில் மொத்த உலகத்திலேயே 95 மில்லியன் மக்கள் இருந்திட வாய்ப்பே இல்லை. இருப்பினும் இவர்கள் உங்களை அறிவியல் என்ற  பெயரில் இந்த கட்டுக்கதையை நம்பச் சொல்கிறார்கள்.

இந்த கட்டுக்கதைகளுக்கு தொல்லியியலோ பழங்கால மக்கள்தொகை கணக்கு ரீதியாகவோ எந்த ஆதாரமும் இல்லை, மற்றும் பிற துறைகளிலும் வேறு ஆதாரங்களுமில்லை. இவ்வாறு இருப்பினும் அந்த “92 தலைசிறந்த அகில உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்” உங்களை அறிவியலை விட்டு அறிவியல் அற்ற மொழியியலை ஏற்றுக்கொள்ள சொல்கிறார்கள். அவர்கள் முழுமையான அறிவியல் துறையாக இல்லாத தொல்லியியலை ஏற்கச் சொன்னால் கூட அது உசிதமாக இருந்திருக்கும் ஆனால் அவர்கள் கூறுவதோ அறிவியல் அற்ற மொழியியலை

இத்தகைய ஒழுக்கமற்ற, ஊழல் மற்றும் பாரபட்சமான கருத்துக்கள் இப்பொழுது அறிவியல் அற்ற கலை துறைகளிலிருந்து அறிவியலையும் தழுவும் ஒரு கொடிய சர்வதேச பிணியாக  வளர்ந்துள்ளது.

இதைத்தான் மைக்கல் பெட்ராகிளியா என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் அவரது சக ஆராய்ச்சி அணியினரும் ஒரு அறிவியல் விமர்சனத்தில் பெரும் குறையாக முன்னிருத்துகிறார். மரபியல் ஆராய்ச்சியாளர்கள் பழங்கால மக்களின் மரபணு மாதிரிகளை உருவாக்குவதில் மிக உயர்ந்த தெளிவான அறிவுடன் செயல்பட வேண்டும் என்று நாசூக்காக எழுதுகின்றனர்.

இந்த “92 தலைசிறந்த அகில உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்” நாம் மேலே பார்த்ததுப்போல அடிப்படையே தகராறு. அப்படி இருக்க உயர்ந்த தெளிவான அறிவுடன் செயல்பட அவர்களால் எப்படி முடியும்.

அன்னல் அம்பேத்கர் 1946ல் வெளியிட்ட புத்தகத்தில் (“சூத்திரர்கள் யார்?” தலைப்பில்) ஆரிய-திராவிட கட்டுக்கதையை ஒரு கிறிஸ்தவ வெள்ளைகார சதி என்று கூறுகிறார்: “இந்த ஆரிய-திராவிட கோட்பாடு அறிவியலை கேலிக்கூத்தாக மாற்றுகிறது. இது உண்மையை வெளிப்படுத்துவதற்கு அல்ல. மாறாக முன்கூட்டியே கோட்பாடு முடிவெடுக்கப்பட்டு அதை நிரூபிக்க உண்மைகளை திரிப்பதாகும்.”

அன்று முதல் இன்று வரை கிறிஸ்தவ வெள்ளையர்களும் அவர்கள் கைக்கூலிகளான அறிவியல் நிபுணர்களும் இடதுசாரியினரும் திருந்த நினைக்ககூட இல்லை.

(இந்தக் கட்டுரையை திருத்தங்கள் மீளாய்வு செய்ததற்கு திரு கிருஷ்ணமூர்த்தி ஐயாவுக்கு நன்றி!)

மேலும் விவரங்களுக்கு:

  1. Menon S, Mishra S (2018) We Are All Harappans. https://www.outlookindia.com/. Available at: https://www.outlookindia.com/magazine/story/we-are-all-harappans/300463 [Accessed August 4, 2018].
  2. Witzel M, Menon S, Mishra S (2018) After Meluhha, The Melange. https://www.outlookindia.com/. Available at: https://www.outlookindia.com/magazine/story/after-meluhha-the-melange/300465 [Accessed August 4, 2018].
  3. Menon S, Mishra S “Harappans United Regions Across 2 Million Sq KM.” https://www.outlookindia.com/. Available at: https://www.outlookindia.com/magazine/story/harappans-united-regions-across-2-million-sq-km/300464 [Accessed August 5, 2018].
  4. Falconer DS, Mackay TFC (1996) Introduction to Quantitative Genetics (Pearson Education India).
  5. Priyadarshi P (2014) In Quest of the Dates of the Vedas (Partridge) Available at: http://www.amazon.in/Quest-Dates-Vedas-Comprehensive-Indo-European/dp/1482834251?_encoding=UTF8&psc=1&redirect=true&ref_=oh_aui_detailpage_o00_s00 [Accessed July 25, 2017].
  6. Kak S (2018) Playing With Zero and Ancient History – Subhash Kak – Medium. Medium. Available at: https://medium.com/@subhashkak1/playing-with-zero-and-ancient-history-96b3aa1b277 [Accessed August 4, 2018].
  7. Priyadarshi P (2018) A Critical Appraisal of Narasimhan et al 2018 bioRxiv. The Aryan Invasion Issues. Available at: https://aryaninvasionmyth.wordpress.com/2018/04/29/a-critical-appraisal-of-narasimhan-et-al-2018-biorxiv-by-p-priyadarshi/ [Accessed April 29, 2018].
  8. Murali KV (2018) There are lies, damned lies and (Harvard’s “Third” Reich and Co’s) statistics – PGurus. PGurus. Available at: https://www.pgurus.com/there-are-lies-damned-lies-and-harvards-third-reich-and-cos-statistics/ [Accessed April 29, 2018].
  9. Malhotra R, Nīlakantan̲ A (2011) Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines (Amaryllis) Available at: https://books.google.com/books/about/Breaking_India.html?hl=&id=MqjTZwEACAAJ.
  10. An anatomy of an international scientific hit job by “92 top scientists and researchers from around… (2018) The Rational Hindu. Available at: https://therationalhindu.com/an-anatomy-of-an-international-scientific-hit-job-by-92-top-scientists-and-researchers-from-around-a44324152c16 [Accessed August 5, 2018].
  11. Scerri EML, et al. (2018) Did Our Species Evolve in Subdivided Populations across Africa, and Why Does It Matter? Trends Ecol Evol 0(0). doi:10.1016/j.tree.2018.05.005.
  12. Ambedkar BR (1946) Who Were the Shudras? How they came to be the Fourth Varna in the Indo-Aryan Society (Thackers).

2 COMMENTS

  1. This tamil translation is not good enough. Subject weightage is good. Relevant tamil translation needs more attention. This is my humble suggestion

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here