ராகுலுக்கு வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி; வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு

யங் இண்டியன் பத்திரிகையின் இயக்குனர் பொறுப்பை மறைத்ததையும் 154 கோடி வருமானத்தை ஒளித்ததையும் கண்டுபிடித்து விட்டதால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்து விட்டது

0
2092
யங் இண்டியன் பத்திரிகையின் இயக்குனர் பொறுப்பை மறைத்ததையும் 154 கோடி வருமானத்தை ஒளித்ததையும் கண்டுபிடித்து விட்டதால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்து விட்டது
யங் இண்டியன் பத்திரிகையின் இயக்குனர் பொறுப்பை மறைத்ததையும் 154 கோடி வருமானத்தை ஒளித்ததையும் கண்டுபிடித்து விட்டதால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்து விட்டது

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான ராகுல் மற்றும் சோனியாவின் பெயர் களங்கப்படும் அளவிற்கு ஆதாரங்கள் குவிகின்றன

2011 – 12 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திமீதுவருமானவரித்துறை தொடுத்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க தில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. 8-8-2016 புதன்கிழமை அன்று உயர்நீதிமன்றம் மறுப்பை வெளியிட்டது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் யங் இண்டியன் பத்திரிகையின் இயக்குனராக இருந்து வந்த உண்மையை ராகுல்காந்தி மறைத்தது அம்பலமாகிவிட்டது.

2011 ஆம் ஆண்டில் ராகுலுக்கு கிடைத்திருக்கக்கும்  414கோடி ருபாய் வருமானத்தை மறைத்ததற்காக யங் இண்டியன் நிறுவனத்தின் சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும்2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்வருமானவரித் துறை ரூ.250 கோடி அபராதம் விதித்திருந்தது.வருமான வரித்துறை யங் இண்டியன் நிறுவனத்தின் இயக்குனராக ராகுல் காந்தி இருந்ததை மறைத்து விட்டார் என்ற உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது.

2011 – 12 ஆண்டுகளில் வருமான வரிக் கணக்கை தாங்கள் மறுமதிப்பீடு செய்யப் போவதாக ராகுல் காந்திக்கு 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வருமானவரித்துறை ஒரு கடிதம் அனுப்பியது. இக்கடிதம் கண்டவுடன் ராகுல் டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகி வருமானவரித்துறை தன் மீது அபாண்டமாக பழி சுமத்துவதாக வழக்குத் தொடுத்தார். ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவரை வழக்கிலிருந்து விடுவிக்கவில்லை. மேலும் ராகுல் காந்தி ஊடகங்கள் தன்னைப்பற்றி அவதூறாக செய்தி பரப்புவதை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

மத்திய அரசின் வக்கீல் [additional solicitor general]துஷார் மேத்தா விவாதத்தைக் கேட்ட பிறகு நீதிபதிகள்  எஸ். ரவீந்திரன் மற்றும் ஏ,கே, சாவ்லா ஆகியோரைக் கொண்ட அமர்வு நீதிமன்றம் இவ்வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மத்திய  அரசு வக்கீல் அடுத்த விசாரணை வரும் வரை வருமானவரித்துறை ராகுல் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டார்.

அரவிந்த் தட்டார்/ தத்தார்/ தடார்  தலைமையிலான ராகுலின் வழக்கறிஞர் குழு யங் இண்டியன் நிறுவனத்திலிருந்து ராகுலுக்கு எவ்வித வருமானமும் வராத காரணத்தினாலும்வருமான வரி மேல்முறையீட்டு ஆணையத்தில்இந்த வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாலும்  டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து இவ்வழக்குக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

பி ஜே பி யின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி 2012ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் நேஷனல் ஹெரால்டு ஊழல் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டார். யங் இண்டியன்  என்ற ரகசிய நிறுவனத்தின் இயக்குனராக தான் இருப்பதை 2011- 12 க்கான வருமான வரி கணக்குக் காட்டும் போது ராகுல் தந்திரமாக மறைத்து விட்டார்.செயல்படாத நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் மொத்த சொத்துக்களையும் அபகரிக்க ராகுல் காந்தி தீட்டிய மோசடி திட்டத்தினை சுப்பிரமணியன் சாமி அம்பலப்படுத்தி விட்டார். வருமான வரித்துறையின் கருத்துப்படி 2011 -12 ஆண்டுக்கான ராகுலின் வருமான மதிப்பீட்டில் அவர் 2010 ஆம் ஆண்டு முதல் . யங் இண்டியன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வந்ததை மறைத்துவிட்டார்.

யங் இண்டியன் நிறுவனத்தில் ராகுலுக்கு இருந்த பங்குகளின் மூலம் அவருக்கு ஆண்டொன்றுக்கு 154 கோடி வருமானம் வந்திருக்க வேண்டும்; அவர் தன் வருமானவரிக் கணக்கில் தெரிவித்தது போல வெறும் 68 லட்சம் மட்டும் கிடையாது; கூடுதல் வருமானம் கிடைத்து இருக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கணக்கிட்டுள்ளது.

வருமான வரித்துறையின் சட்டப்பிரிவு 147 இன் கீழ் வருமானவரித்துறை இவ்வழக்கை தொடுத்துள்ளது . இச்சட்டப்பிரிவு முதல் மதிப்பீட்டில் தவறவிடப்பட்ட வருமானத் தொகையை மீண்டும் மதிப்பீடு செய்ய அனுமதி வழங்குகிறது.மறு மதிப்பீட்டின் படி வரி நிர்ணயம் செய்யப்படும்.

ராகுலின் வழக்கறிஞர் குழு வருமானவரித்துறையினர் முதல் முறை விசாரித்தபோது எந்த நிறுவனத்தின் மூலமாவது அவர் இலாபம் அடைகிறாரா என்று கேட்டதாகவும் அவர் அதற்கு உரிய பதிலை அளித்து விட்டதாகவும் தெரிவித்தனர்.‘யங் இண்டியன் நிறுவனம் இருபத்தைந்தாவது பிரிவாக அவருடைய வருமானவரிக் கணக்கில் இடம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் இலாப நோக்கமற்று நடத்தப்படும் நிறுவனம் என்பதால் இயக்குனருக்கு அதில் எவ்வித இலாபமும் இல்லை’, என்று வாதிட்டனர்.

2011 -12 க்கான வருமான வரி மதிப்பீட்டின்படி அவர் தன்னுடைய உண்மையான வருமானத்தை மறைத்ததால் அவருக்கு 250 கோடி அபராதம் தொகை விதித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அது குறித்து ராகுல் காந்தி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது2018 மார்ச் மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் ராகுல் பத்து கோடி ரூபாய் நிலை வைப்பு தொகையாக வங்கியில் வைத்தால் மட்டுமே அவர் மீதான 250 கோடி வருமான வரி அபராதத் தொகை வழக்கு மேல்முறையீட்டுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here