ஹெரால்டு  ஹவுசை உடனே காலி செய்யும்படி சோனியாவுக்கு  உத்தரவு

யங் இண்டியாவின் பேரில்  தில்லுமுல்லு செய்த சோனியாவுக்கும் ராகுலுக்கும் தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம்

0
1138
யங் இண்டியாவின் பேரில்  தில்லுமுல்லு செய்த சோனியாவுக்கும் ராகுலுக்கும் தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம்
யங் இண்டியாவின் பேரில்  தில்லுமுல்லு செய்த சோனியாவுக்கும் ராகுலுக்கும் தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம்

மேல்முறையீட்டு மனுக்களை அடுத்தடுத்து அனுப்பிக் கொண்டிருந்த சோனியாவுக்கும் ராகுலுக்கும் டில்லி உயர் நீதி மன்றம் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளது. ஏ ஜே எல் நிறுவனத்தை நடத்துவதாக சொல்லிக் கொண்டிருந்த இருவரையும் ஹெரால்டு ஹவுசை உடனடியாக காலி செய்து விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது.

வெறும் ஐம்பது இலட்சம் செலவில் யங் இண்டியன் நிறுவனத்தை நடத்திக் கொண்டு 400 கோடிக்கும் அதிகமான ஹெரால்டு ஹவுசின் சொத்து மதிப்பை சுரண்ட திட்டமிட்டதாக சோனியாவையும் ராகுலையும் நீதிமன்றம்  தனது  தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது.

சோனியாவும் ராகுலும் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையை  நடத்திய  ஏ ஜே எல் [Associated Journals Limited ] பதிப்பகத்துக்காக அரசு ஒதுக்கீடு செய்த கட்டிடத்தில் அந்த பத்திரிகையை நடத்தாமல் யங் இண்டியன் என்ற பத்திரிகையை நடத்துவதாகக் கூறி பொய் புரட்டுகள் எல்லாம் செய்து அந்தச் சொத்தை அபகரிக்க திட்டமிட்டதற்கு டில்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உடனடியாக அந்தக் கட்டிடத்தைக் காலி செய்து தரும்படி வியாழன் அன்று உத்தரவிட்டது. தனி நபர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று அந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி  இரு நபர் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ராஜேந்திர குமாரும் [தலைமை நீதிபதி] வி கே ராவும்  இன்று ஏ ஜே எல் கட்டிடத்தை காலி செய்யும்படி உத்தரவிட்டனர்.

நீதிபதிகளின் 63 பக்க தீர்ப்பு சோனியா மற்றும் ராகுலின் பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்துத் தெரிவித்திருந்தது.. 2018 டிசம்பர் மாதம் நகர் மேம்பாட்டு அமைச்சகம் மூலமாக ஹெரால்டு ஹவுசை காலி செய்ய வேண்டும் என நீதிபதி சுனில் உத்தரவிட்டார். அதை எடுத்துக்காட்டி இருவர் அமர்வு நீதிமன்றம் ‘ஏ ஜே எல் நிறுவனம் யங் இண்டியா பத்திரிக்கை நடத்துவதாகக் கூறியதைக் கருத்தில் கொண்டு அதை இந்நீதிமன்றம் புரிந்துகொள்கிறது. ஆனால்  யங் இண்டியன் என்பது ஒரு தர்ம ஸ்தாபனம், அறக்கட்டளை என்று சொல்லிக்கொண்டு ஏ ஜே எல் நிறுவனத்தின் 99% பங்குகளை வாங்கியிருப்பது பல விஷயங்களை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறது. இந்த பங்குகளை இவர்கள் வாங்கிய விதமும் கேள்விக்குரியதாகும்.’ என்று தனது  தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சுப்பிரமணிய சுவாமி அவர்கள் தொடுத்த இவ்வழக்கில் இருவர் அமர்வு நீதிமன்றத்தின் நுணுக்கமான பார்வை இவ்வழக்கின் குற்றவியல் தன்மையை நிரூபித்துக் காட்டியுள்ளது. ஏ ஜே எல் நிறுவனத்தின் சார்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான அபிஷேக் சிங்க்வியும் நகர் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசு வக்கீல் துஷார் மேத்தாவும் மோதினர். நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஏ ஜே எல் தொடர்பான பல தகவல்களை காங்கிரஸ் தலைவர்கள் பல தருணங்களில் நீதிமன்றத்துக்குச்  சரியாகத் தராமல் திட்டமிட்டு மறைத்திருப்பதாக இன்றைய தீர்ப்பு குற்றம் சுமத்தியது. மேலும் ஏ ஜே எல் நிறுவனத்தின் பங்குகளை யங் இண்டியனுக்கு மாற்றியிருப்பதில் சுய இலாபத்துக்காக  அநேக தில்லுமுல்லு வேலைகள் நடந்திருப்பதாகவும்  நீதிமன்றம் குற்றம் சாட்டியது.

வெறும் ஐம்பது இலட்சம் செலவில் யங் இண்டியன் நிறுவனத்தை நடத்திக் கொண்டு 400 கோடிக்கும் அதிகமான ஹெரால்டு ஹவுசின் சொத்து மதிப்பை சுரண்ட திட்டமிட்டதாக சோனியாவையும் ராகுலையும் நீதிமன்றம்  தனது  தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது.

சோனியாவின் வக்கீல் டாக்டர் சிங்க்வி ஏ ஜே எல் பங்குகளை யங் இண்டியனுக்கு மாற்றுவதில் எந்தத்  தவறும் இல்லை என்று வாதிட்டாலும், மாற்றியிருக்கும் முறைகளைக் காணும்போது இந்த மாற்றம் என்பது முறைகேடானது; சுயநலம் மிக்கது;  என்பதை நீதிமன்றம் உணர்ந்துகொண்டது. உண்மையில் டாக்டர் சிங்க்வியின் வாதத்தை தனி நபர் அமர்வு நீதிமன்றம் புறக்கணிக்க வேண்டும் அதனால் புறக்கணித்துவிட்டது. நிறுவனத்தின் மற்ற பங்குதாரரிடம் இருந்து ஒருவரை மட்டும் தனியே பிரித்து பாதுகாக்கும் முறை பின்பற்றப்பட்டதை நீக்கும்படி உத்தரவிடாமலேயே சிங்க்வியின் வாதத்தைப் புறக்கணித்துவிட்டார். இவ்வாறு பங்குகளை முறைகேடாக மாற்றுவதற்கான அவசியம் என்ன வந்தது . இந்த முறைகேடான மாற்றுதலை நம் நீதிமன்றத்தின் மூன்பு சரியானது நியாயமானது என்று எடுத்துரைக்க வேண்டிய அவசியம் என்ன ? காங்கிரஸ் வக்கீல்கள் கூறுவது போல இந்த வாதம் எளிமையாக புரிந்துகொள்ளும்படியும்  தெளிவாகவும்  விளக்கப்படவில்லை. ஆனால் இந்த மாற்றுதல் என்பது முறைகேடானது; சட்டத்துக்குப் புறம்பானது என்பது மட்டும் நீதிமன்றம் அளித்த பல தீர்ப்புகளால்  தெளிவாகிறது.

டில்லி உயர் நீதிமன்றத்தில் இருவர் அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து இனி கடைசி புகலிடமாக காங்கிரஸ் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகுவர். ஏற்கெனவே 413 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரித்தற்காக சோனியா மற்றும் ராகுல் மீதான வருமான வரி ஆணை குறித்த வழக்கின் இறுதி மேல்முறையீடு  உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. முதன்மை  வழக்கில் வரும் மார்ச் முப்பதாம் நாள் காங்கிரஸ் வக்கீல்களை சுப்பிரமணிய சுவாமி குறுக்கு விசாரணை செய்ய இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here