வினை விதைத்த ப. சிதம்பரம் முன்ஜாமீன் வேண்டி நீதிமன்றங்களுக்கு மாறி மாறி ஒட்டம்

ப. சிதம்பரம் கைதுக்கு பயந்து 2 ஜி நீதிமன்றத்துக்கும் டில்லி உயர் நீதிமன்றத்துக்கும் அடுத்தடுத்து வருகை

0
1980
ப. சிதம்பரம் கைதுக்கு பயந்து 2 ஜி நீதிமன்றத்துக்கும் டில்லி உயர் நீதிமன்றத்துக்கும் அடுத்தடுத்து வருகை
ப. சிதம்பரம் கைதுக்கு பயந்து 2 ஜி நீதிமன்றத்துக்கும் டில்லி உயர் நீதிமன்றத்துக்கும் அடுத்தடுத்து வருகை

ப சிதமபரம் மீதான பல்வேறு வழக்குகளுக்கும் விசாரணை தொடங்கிவிட்டதால் அடுத்து தன்னை கைது செய்து சிறையில் தள்ளிவிடுவார் என்ற அச்சத்தினால் அவர் முன் ஜாமீன் கேட்டு ஒவ்வொரு நீதிமன்றமாக ஏறி இறங்குகிறார்

வினை செய்தவன் வினை அறுப்பான் என்ற முதுமொழி ப. சிதம்பரம் வாழ்க்கையில் உண்மையாகி வருகிறது. ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐ என் எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் டில்லி உயர் நீதிமன்றத்த்துக்கும் 2ஜி நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணை நடந்து வருவதால் அதில் சி. பி. ஐ (CBI) மற்றும் அமலாக்கப் பிரிவினரிடம் (ED) கைதாக வாய்ப்பிருப்பதால் அங்கும் முன்ஜாமீன் கேட்டு நேற்று இரண்டு நீதிமன்றங்களுக்கும் இடையில் புதன்கிழமை அன்று  மாறி மாறி ஒடினார்.  ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐ என் எக்ஸ் மீடியா ஊழல் வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை சி.பி.ஐ முன் ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பியது. ஏர்செல் மேக்சிஸ் வழக்குக்காக அவர் வரும் ஜுன் மாதம் ஐந்தாம் தேதி அமலாக்கத் துறையினர் முன் ஆஜராக வேண்டும்.

புதனன்று காலை ஒன்பதரை மணிக்கு சிதம்பரம் தன் வக்கீல்களான  கபில் சிபல் மற்றும்  அபிஷேக் சிங்வியுடன்  2ஜி நீதிமன்றத்துக்கு வந்தார். வரும் ஜுன் மாதம் ஐந்தாம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய நீதிபதி தடை விதித்தார். விசாரணைக்கு அழைக்கும்போதெல்லாம் வந்து ஒத்துழைக்க வேண்டும் என்றார். ஆனால் அத்துடன் ப சிதம்பரத்தால் நிம்மதி பெருமூச்சு விட முடியவில்லை.  சில மணி நேரங்களில் அவருக்கு மறுநாள் ஐ என் எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் சி பி ஐ முன் ஆஜராக வேண்டுமென்று அழைப்பாணை  வந்துவிட்டது.  சைனி இதற்கு முன்பு ப சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கு மார்ச் 23 அன்று முன்ஜாமீன் அளித்தார். உச்ச நீதிமன்றம் ஆறு  மாதங்களுக்குள் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையினர் ஏர்செல் – மேக்சிஸ் வழக்கை முடிக்க வேண்டுமென்று உத்தரவிட்ட பின்பு நீதிபதி சைனி எப்படி முன்ஜாமீன் வழக்கை விசாரணைக்கு ஏற்கிறார் என்பது புரியவில்லை.

சிதம்பரம் தன்னுடைய வழக்கிற்கு தொடர்புடைய ஆதாரங்கள்  அனைத்தும் ஆவணங்களாக இருப்பதால் அவை முன்பிருந்த அரசிடம் தான் இருக்கின்றன என்றும் தன்னிடம் எதுவும் இல்லை என்றும் அதனால் வரவேண்டிய தேவையில்லை என்றும் தெரிவித்திருந்தார். அமலாக்கத்துறைக்காக வாதிடும் அரசு வழக்கறிஞர் நிதேஷ் ரானா சிதம்பரத்தின் கருத்தை மறுத்து அமலாக்கத்  துறையினர் அழைப்பாணை அனுப்பியும் அவர் இன்று கூட விசாரணைக்கு வரவில்லை என்பதை கண்டித்தார்.

பிற்பகல் ஒன்றரை மணிக்கு சிதம்பரம் அதே இரண்டு வக்கீல்களுடன் முன்ஜாமீன் கேட்டு டில்லி உயர் நீதிமன்றம் விரைந்தார். இந்த வழக்கில் அவர் சிறப்பு நீதிபதி சுனில் ரானா விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றத்தை அணுகவில்லை.

உயர் நீதிமன்றத்தில் ஒரு நாடகம் நடந்தது. முதலில் நீதிபதி எஸ். பி. கார்க் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அவர் அந்த வாழக்கை விசாரிக்க மறுத்துவிட்டதால் தலைமை நீதிபதி கீதா மிட்டல் மேசைக்கு வந்தது அவர் இந்த வழக்கை நீதிபதி ஏ. கெ. பதக்குக்கு இடம் மாற்றினார். அந்த நீதிபதி தனக்கு  காலையில் வேறு சில அவசரப் பணிகள் இருப்பதால் பிற்பகல் மூன்று மணிக்கு விசாரிப்பதாக கூறினார். சிபல் தனக்கு அதில் சில சிரமங்கள் இருப்பதாகத் தெரிவத்த பின்னர்  இரு தரப்பினரும் ஒத்துக்கொண்டு மறுநாள்   காலை பத்தரை மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகப் பேசி முடித்தனர்.

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றமும் அவர் குடும்பத்தினர் – மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி மீதான கருப்பு பண வழக்கில் தடை விதிக்க மறுத்துவிட்டது.

வருமானவரித் துறையினர் தொடுத்த வழக்கில் சிதம்பரம் குடும்பத்தினர் வேண்டியபடி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவோ விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு நோட்டிசு அனுப்பியபிறகு ஜுலை மாதம் ஐந்தாம்  தேதிக்கு  ஒத்தி வைக்கவோ நீதிபதி எஸ். பாஸ்கரன் மறுத்துவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here