
டாடா டிரஸ்ட்டின் மேலாண் அறங்காவலரும் குற்றம் சாட்டப்பட்டவருமான ஆர் வெங்கடரமணன் ஏர் ஏஷியாவின் நிர்வாகிகளுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் அப்போதைய நிதியமைச்சர் ப சிதம்பரம், விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் ஷர்மாவிடம் பி ஜே பி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தம் மீது டில்லி உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்திருக்கும் வழக்கை எப்படி கையாளுவது என்று விவாதித்திருப்பதாகத் தெரிவிக்கின்றன. 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் நாளன்று விசாரணைக்கு வரும் வழக்கைப் பற்றி அமைச்சர்களுடன் விவாதித்ததை 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 23 தேதியிட்ட மின்னஞ்சல் தெரிவிக்கிறது.
எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் இன்று இந்த மின்னஞ்சல்கள் அமைச்சகக் கூட்டத்தின் விவரங்களையும் வழக்கு பற்றி பேசியதையும் குற்றம் சாட்டி அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என முதன் முதலாக செய்தி வெளியிட்டுள்ளது[1].
டாடா குழுமத்தை சேர்ந்த வெங்கட், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏர் ஏஷியாவின் போ லிங்கம் மற்றும் மித்து சாண்டில்யா ஆகியோருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ‘’ப சிதம்பரத்தை இன்று சந்தித்தேன். அடுத்த வாரம் நீதிமன்றத்தில் இருக்கும் தனது கொள்கைகள் குறித்து தீவிரமாக ஆதரித்துப் பேசப் போவதாகவும் அதற்கான நிரூபன வாக்குமூலம் ஒன்றையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்போவதாகவும் கூறினார் வர்த்தக துறை அமைச்சரும் இதையே தான் என்னிடம் இன்று கூறினார். சிறிது நேரத்துக்கு முன்பு அஜித் சிங் அவர்களைச் சந்தித்தேன். 5/20 விதியை நீக்குவதற்கான அடிப்படையில் தான் நாம் திட்டமிட வேண்டும் என்றார்.’’ எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பிய போ லிங்கம், ‘’ ‘’அருமையான செய்தி வெங்கட். இனி நான் தூங்குவேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். மித்து சாண்டில்யா ஒப்பந்தம் முடிந்ததும் தான் ஐந்து மில்லியன் டாலரை அஜித் சிங் தந்த ஆட்களின் பெயருக்கு அனுப்பியதாக மத்திய புலனாய்வு துறையினரிடமும் அமலாக்கத் துறையினரிடமும் தெரிவித்த செய்தி ஏற்கெனவே ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
இந்த செய்திக்கட்டுரையின் இறுதியில் ஏர் ஏஷியா ஊழலில் முன்னாள் அமைச்சர்கள் ப சிதம்பரம், அஜித் சிங், ஆனந்த் ஷர்மாவின் பங்கு பற்றி தெரிவிக்கும் மின்னஞ்சல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏர் ஏஷியா மற்றும் அவர்களின் பங்குதாரரான டாடா குழுமத்தின் உயர் அதிகாரிகள் அனுப்பிய ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை மத்திய புலனாய்வு துறையும் அமலாக்க துறையினரும் கைப்பற்றியுள்ளனர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இடைத்தரகரான தீபக் தல்வார் ஊடகங்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அனுப்பிய மின்னஞ்சல்களும் சிக்கியுள்ளன. அவற்றில் அவர் மலேஷியா ஏர் ஏஷியா விமான நிறுவனத்துக்கு உரிமம் வழங்குவதில் நடக்கும் முறைகேடுகளை பற்றிய செய்திகள் ஊடகத்தில் அதிகம் வெளிவராமல் செய்வது எப்படி என்று எழுதியுள்ளார்.
முழு மின்னஞ்சலும் கீழே தரப்பட்டுள்ளது.
Tata Venkat's Air Asia Mails Discussions With PC, Ajit Singh Anand Sharma About Swamy's Case in Oct 2013 by PGurus on Scribd
References:
[1] Bribes, mails & a secret govt note: How AirAsia landed in trouble – May 30, 2018, PGurus.com