சிக்கினார் சிதம்பரம் – ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பிடிபட்டார்

ஏர்செல் மேக்சிஸ் ஊழல் - ப சிதம்பரம் அமைச்சகக் குழுவுக்கு (CCEA) அனுப்பாமல் தனது அதிகார வரம்பை மீறி அனுமதி அளித்தார்

1
3829
ஏர்செல் மேக்சிஸ் ஊழல் - ப சிதம்பரம் அமைச்சகக் குழுவுக்கு (CCEA) அனுப்பாமல் தனது அதிகார வரம்பை மீறி அனுமதி அளித்தார்
ஏர்செல் மேக்சிஸ் ஊழல் - ப சிதம்பரம் அமைச்சகக் குழுவுக்கு (CCEA) அனுப்பாமல் தனது அதிகார வரம்பை மீறி அனுமதி அளித்தார்

முடிவாக ப சிதம்பரத்தின் பெயர் மத்திய புலனாய்வு துறையினரால் [சி பி ஐ]  ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. வியாழக் கிழமை அன்று சி பி ஐ அதிகாரிகள்  ப சிதம்பரம், அவர் மகன் கார்த்தி அவர் உறவினர் பழனியப்பன் ஆகியோர் பெயர்களை குற்றப் பத்திரிகையில் சேர்த்துவிட்டனர். அதிகாரிகள் 2 ஜி சிறப்பு நீதிமன்றத்தில் எட்டாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்தி,ரிகையை மூன்று இரும்புப் [டிரங்கு] பெட்டிகளில் வைத்து கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.  அந்த குற்றப் பத்திரிகையில்  சிதம்பரம் தனது  அதிகார வரம்புக்கு மீறிய செயல்களை செய்தார்.  தனது மகனுடைய  நிறுவனங்களின் இலாபத்துக்காக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார். பல சதி செயல்களில் ஈடுபட்டார் என ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பல பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு மே மாதம் FIPB அனுமதி பெறுவதில் ப சிதம்பரம் செய்த விதிமீறல்களைச் சுட்டிக் காட்டி அவர் மீது 2G அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

சி பி ஐ சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் மொத்தம் பதினெட்டு பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஆறு நிறுவனங்கள் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை கண்டபடி மீறி 2006இல் மலேஷியாவின் மேக்சிஸ் நிறுவனம் சென்னையில் உள்ள ஏர்செல் நிறுவனத்தை எடுத்துக்கொள்ளும்படி செய்தன என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றப் பத்திரிகையில்– நிதி அமைச்சகத்தின் முன்னாள் செயலர்கள் அஷோக் ஷா, அஷோக் சாவ்லா , மேக்சிஸ் உரிமையாளர் டி அனந்த கிருஷ்ணன், அவருடைய நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரால்ஃப்  மார்ஷல், ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். இவர்கள் தவிர நிதி அமைச்சகத்தின் இணை செயலர் , முன்னாள் துணை செயலர் தீபக் குமார் சிங், முன்னாள் அண்டர் செகரட்டரி ராம் சரண், ஏர்செல் தலைமை நிர்வாகி வி ஸ்ரீனிவாசன்  சிதம்பரம் குடும்பத்தின் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் எஸ். பாஸ்கர ராமன போன்றோரும் இந்த குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இரு நிறுவனங்கள் [Advantage Strategic Consultingமற்றும் Chess Management Services] இரண்டு மில்லியன் டாலர் வரை மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்தும் அதன் துணை நிறுவனங்களிடம் இருந்தும் பெற்று கொண்டன என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கார்த்தியின் தந்தை  ப சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தைத் தவறாக பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பான முறைகேடாக அனுமதி பெற்றுதந்ததால் கார்த்தியின் நிறுவனங்களுக்கு பணம் குவிந்தது.  மேலும் மேக்சிசின் வேறு பல நிறுவனங்களான Astro All Asia, Maxis Mobile SDM, Bumi Armada Berhad மற்றும் Bumi Armada Navigation Berhadஆகியனவும் இந்த குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவையும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் இருந்து  முறைகேடாக அனுமதி பெற்று பணத்தை கைமாற்றியதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

நீதிபதி சைனி முன்பு குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த மூத்த அரசு வக்கீல் ஏ கெ கோயலும் சி பி ஐ துறையின் புலனாய்வு அதிகாரி எஸ் கெ சின்ஹாவும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள  முன்னாள் நிதி அமைச்சக அதிகாரிகள் ஐவரையும்  கைது செய்து விசாரிக்க தாங்கள் நிதி அமைச்சகத்திடம் இருந்து அனுமதி கோரி காத்திருப்பதாகத் தெரிவித்தனர். அப்போலோ மருத்துவமனை குழுமத்துடன் இணைந்த சிந்தூரி ஸெக்யூரிட்டீஸ் பற்றியும் துப்பறிந்து வருவதால் விரைவில் இன்னொரு துணை குற்றப் பத்திரிகையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றுஅரசு வக்கீல் தெரிவித்தார். சிறிய விவாதத்துக்கு பிறகு நீதிபதி சைனி வரும் 31ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

சி பி ஐ தனது குற்றப் பத்திரிகையில்2006இல் ஏர்செல் நிறுவனத்தை அபகரிக்க FIPB எனப்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை முறைகேடாக பெற்று தந்தார் என்று ப சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது.  மேக்சிசின் அந்நிய முதலீட்டு விண்ணப்பம் 3,600 கோடிக்கானது  அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த ப சிதம்பரத்துக்கு அறுநூறு கோடி வரை மட்டுமே அனுமதிக்க கூடிய அதிகாரம் இருக்கிறது. அதற்கு மேல் தொகை அதிகரித்தால் அதை பொருளாதார நடவடிக்கைகளுக்கான அமைச்சகக் குழு [Cabinet Committee on Economic Affairs (CCEA)] தான் முடிவு செய்யும்.அதற்கு அனுமதியும் அளிக்கும். ஆனால் ப சிதம்பரம் இந்த விண்ணப்பத்தை அந்த அமைச்சகக் குழுவுக்கு (CCEA) அனுப்பாமல் தனது அதிகார வரம்பை மீறி தானே அனுமதி அளித்தார். இது தான் இவர் மீதுள்ள முக்கியமான குற்றச்சாட்டு ஆகும்.

அந்த காலத்தில் டெலிகாம் துறையில் அனுமதிக்கப்பட்ட அந்நிய முதலீட்டின் அளவு 74 சதவீதம் மட்டுமே ஆனால் மேக்சிஸ் ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து 99.3 சதவீத பங்குகளை வாங்கியது. இந்தியாவில் எழுபது சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக அறிவித்த மேக்சிஸ் நிறுவனம்அதே நாளில் மலேஷியாவில்99.3 % பங்குகளை வாங்கி இருப்பதாக அறிவித்தது.

தந்தை ப சிதம்பரத்தின் மேசையில் கோப்பு கையெழுத்தாகாமல் காத்திருந்த போதே கார்த்தியின் நிறுவனம் 1.16 கோடி ருபாய் பெற்றுள்ளது. முதலில் அவருடைய அட்வான்டேஜ் நிறுவனம் மூலமாக இருபத்தாறு இலட்ச ரூபாயும் பின்பு அவருடைய செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் மூலமாக மிச்ச தொகையும் அவருக்கு வந்து சேர்ந்துள்ளது. இதற்காக அவர்  பெயர் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்பிரமணியன் சுவாமி கார்த்தியின் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். அவருடைய அட்வாண்டேஜ் நிறுவனம் பற்றிய உண்மைகளை அமபலப்படுத்தினார். கார்த்திக்கு சிங்கப்பூரில் இருக்கும் அட்வாண்டேஜின் துணை நிறுவனங்களை பற்றியும் எடுத்து கூறினார். 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் நாள் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கார்த்தி நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் ஏர்செல் டெலிவென்ச்சரில் இருந்து இருபத்தாறு இலட்ச ருபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதற்கான ஆவணங்களைக் காண்பித்தார்.

2012 ஆம் ஆண்டு மே மாதம் FIPB அனுமதி பெறுவதில் ப சிதம்பரம் செய்த விதிமீறல்களைச் சுட்டிக் காட்டி அவர் மீது 2G அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். ஆறு வருடங்கள் கழிந்த பின்பு  2018இல்  உச்ச நீதிமன்றம் சி பி ஐ மற்றும் அமலாக்க துறையினரிடம் இந்த வழக்கை  ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 2017இல் அமலாக்க துறை கார்த்தி மீது அவர் வங்கி கணக்கில் இருக்கும் 1.16 கோடி ருபாயை ஆதாரமாக கொண்டு  கருப்பு பண வழக்கில் அவரைக் குற்றம் சாட்டி 2G நீதிமன்றத்தில் அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் ப சிதம்பரத்தை விசாரிக்காமல் இருப்பதால் இந்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாமல் இருப்பதாக தெரிவித்தது.

1 COMMENT

  1. ‘சிக்கினார் சிதம்பரம்’, சரிதான். ஆனால் இது போன்ற தகவலில் யார்யார் எத்தனை எக்கினார், தகராற்றில் தக்கினார் என்பதும் அனைவருக்கும் அறிவுபூர்வமாக, சரித்திரம் சார்ந்ததாக, அப்பட்டமானதுதானே?

    சஞ்சல மனமும், பஞ்சபூதமும்– ஏன், பூலோகமெல்லாமுமே படும் சர்வாவஸ்தையில், திரும்பி உங்களிடமே இவ்வாறு இரைந்துகொள்ளத் தோன்றுகிறது: ‘கொஞ்சம் கதையை மாற்றித்தான் கொடுங்களேன்!’ “ஆதி மனிதன் காதைக்குப் பின் அடுத்த காதை இதுதான், ஆதாம் ஏவாள் ஜோடனைக்குப் பின் அடுத்த ஜோடனை இதுதான்!”*– இது போல இன்னும் எத்தனை தடவைதான் இதே கிளர்ச்சிகரமான பாவனையில் கிடந்து படித்துத் தவிக்கப் போகிறோம்?

    எடுத்துக் காட்டாக, நம் நாட்டு ஹாக்கி– கால்பந்து போன்றதைக் கடுகளவும் கணிக்க வேண்டாம்!– வீரர்களின் படையெடுப்பின் பரபரப்பூட்டும் வர்ணனையை எப்படியெல்லாம் சகித்துக் கொண்டிருக்கிறோம்! “இதோ, இவர் (கோலுக்கு {goal}) இத்தனை அருகே வந்துவிட்டார்… அதோ, அவர் அவ்வளவு உள்ளே அணுகி விட்டார்…” ‘ஆஹா, இனிய கனவு இனி நனவாகிவிடும்’ என எத்தனை தடவை ஆதாரமற்ற ஆரவாரத்தில் ஆழ்ந்திருக்கிறோம்! ஏமாறும் முகத்தை ஏந்திப் பார்க்கையில், ஏனைய வீரரனைவரும் கடைசியாகக் கோலைக் (goal) கோட்டை விட்டுவிடுவதைப் பார்க்கத் துணிவில்லாமல் எத்தனை தடவை தலையைத் தொங்கப் போட்டு இருக்கிறோம்!

    எதிர்ப் படையோரின் கட்டுக்கோப்பான அம்சங்களின் முன்னே தென்படும் நம்மோரின் நற்குணாதிசயங்கள் யாவன? பட்டெனப் பளிச்சிடுவது, தொளதொளக் கால்சராயும் தொய்ந்து தேய்ந்து போன கைகால்களும் மனக் கனமும்தான்! இவற்றுடன் எங்குப் போய்ச் சேர முடியும்? எப்படி வெற்றி கொள்ள வியலும்?

    இதனால்தான் உங்களிடம் இந்த விண்ணப்பம்: ஆதாம் ஏவாளோரின் சரிதையில் ஆணவம், அற்பாசை, ஆடம்பரம், ஆரவாரம், அடிதடி மற்றும் அலங்கோலம் தவிர, அடக்கமோ, அனுசரணையோ, அழகோ, அற்புதமோ, ஆக்கப்பூர்வமோ கிடையாது, கிட்டாது. வேறெப்படி எனக் கேட்காமல், நன்றாக நீங்களாகவே யோஜித்துத் தகவல்களை இராமபிரான், கண்ணபிரான் போன்றோரின் நன்னடக்கையின் பின்னணியில் வழங்குங்கள். நாமாக நன்றாகப் பின்னர், ‘இராமா, கிருஷ்ணா’ வென்று அக்கடாவென்று அமர்ந்து கொள்ளலாம்!

    —————————————
    *நன்றி: “ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இதுதான், ஆதாம் ஏவாள் ஜோடிக்குப் பின் அடுத்த ஜோடி இதுதான்!”– 1962வில் வெளியான பழம்பெரும் தமிழ்ப் படம் ‘பலே பாண்டியா’வின் பாடலொன்றின் ஜனரஞ்சக வரிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here