ஆதியாவுடனான நால்வர் குழு மீது குற்றம் சுமத்திய சுவாமி
ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தை காப்பாற்றுவதற்காக நிதி செயலர் ஹஸ்முக் ஆதியாவும் அவருடன் இணைந்து இன்னும் நான்கு அதிகாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரியான ராஜேஷ்வர் சிங்கை மிரட்டி அவரை பதவியில் இருந்து இறக்க முயல்வதாக பாரதீய கட்சியின் மூத்த தலைவர் சுப்பரமணியன் சுவாமி புதன்கிழமை அன்று ஊடகவியலார் முன்னிலையில் குற்றம் சுமத்தினார். நிதி அமைச்சகம் ராஜேஷ்வர் சிங் துபாயில் உள்ள ஐ எஸ் ஐ ஏஜென்ட்டுடன் [Inter-Services Intelligence (ISI)] தொடர்பு கொண்டிருப்பதாக ரா உளவு அமைப்பு [Research and Analytical Wing (RAW)] தெரிவித்திருக்கிறது என்று ஒரு அறிக்கையை தயார் செய்து கொடுத்திருப்பது அவரைப் பதவியில் இருந்து இறக்கச் செய்யும் சதி திட்டம் ஆகும் என்று அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். சுவாமியின் இந்த சந்திப்பு முடியும் வேளையில் நிதி அமைச்சகம் ராஜேஷ்வர் சிங்கின் மீது அளித்து அறிக்கை போலியானது என்றும் அது 2016இல் றா அமைப்பிடம் இருந்து பெறப்பட்டது என்பதையும் அமலாக்கத் துறை உறுதி செய்தது.
ஹஸ்முக் ஆதியா வங்கி மோசடியில் வெளிநாட்டில் போய் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் நீரவ் மோடியிடம் தங்க பிஸ்கட் பெற்றவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர்.
“அனைத்து பித்தலாட்டங்களிலும் தேர்ச்சி பெற்ற ஹஸ்முக் ஆதியாவுடனான நால்வர் குழு தமக்கு வேண்டியவரான ப. சிதமபரத்தின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த ஒரே காரணத்துக்காக நேர்மையான அதிகாரியான ராஜேஷ்வர் சிங்கின் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி அவரை பதவியில் இருந்து இறக்க முனைகிறது. ஊழலுக்கு எதிரான அரசு நடத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி இந்த நால்வரையும் கைது செய்து அவர்களை அரசுப் பணியில் இருந்து அப்புறப்படுத்தி அவர்களின் இந்த கேவலமான செயல்களை ஒடுக்க வேண்டும்” என்றார் சுவாமி.
அமலாக்கத்துறையின் இயக்குனர் கர்னால் சிங்குக்கு இந்த அறிக்கை போலியானது என்பது தெரியும். அவர் ஏற்கெனவே றா (RAW) அமைப்பின் தலைவருக்கு எழுதி இது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதை தெரிந்துகொண்டார். இந்த உண்மை தெரிந்ததும் ஹஸ்முக் ஆதியா அமைதியாகிவிட்டார். கர்னல் சிங் மத்திய அரசின் வக்கீலான கூடுதல் சொலிசிட்டர் ஜெனெரல் விக்ரம்ஜித் பானர்ஜியும் ராஜேஸ்வர சிங்குக்கு எதிராக வாதாடியதற்கு அவரை கடிந்து கொண்டார். பானர்ஜியை முந்தைய காங்கிரஸ் அரசு நியமித்ததால் அவர் ப சிதம்பரத்தின் நண்பரான முதன்மை வக்கீல் ஆர். பாலாவுடன் இணைந்து இங்கு செயல்படுகிறார் என்பதையும் எடுத்துக்காட்டி சுவாமி கண்டித்தார்.
ஹஸ்முக் ஆதியா வங்கி மோசடியில் வெளிநாட்டில் போய் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் நீரவ் மோடியிடம் தங்க பிஸ்கட் பெற்றவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர். இவர் அமலாக்கத் துறையில் பிரச்னைகளை தீர்க்க போகிறாராராம். நீரவ் மோடிக்கு எதிராக இருந்த வருமான வரி அறிக்கையை ஒரு வருட காலம் வெளியே விடாமலும் வருவாய் உளவு துறையை [Directorate of Revenue Intelligence (DRI)] அவர் மீது நடவடிக்கை எடுக்க விடாமலும் ஒரு வருட காலம் அமைதி காக்கும்படி செய்தவர். ஆதியா தான் என்று அவர் மீது குற்றம் சுமத்திய சுவாமி, பிரதமர் மோடி இந்த நான்கு அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களின் செயல்பாடுகளை முடக்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது தான் இந்த ஊழல் வழக்குகளில் விசாரணை சுமுகமாக நடந்து தீர்ப்பு விரைவில் வரும் என்றார்.
இந்த நால்வர் குழுவில் இருக்கும் ஒருவருடன் நிரந்தரமாக தொடர்பு வைத்திருக்கும் இடைத் தரகர் உபேந்திரா ராய் போன்றவர்களை இந்த அதியா ஊக்குவிப்பதையும் சுவாமி கண்டித்தார். “எஞ்சிய மூவரின் பெயரையும் நான் விரைவில் அறிவிப்பேன். மும்பையில் வரும் ஜுலை மாதம் எட்டாம் நாள் நடக்கும் கூட்டத்தில் ஊழல் செய்வதில் கில்லாடிகளான காங்கிரஸ் தலைவர்கள் ப சிதம்பரம் மற்றும் அகமது பட்டேலுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் மற்ற மூன்று அதிகாரிகளின் பெயர்களையும் அறிவிப்பேன்”, என்றார்.
காலையில் நீதிமன்றத்துக்கு வந்த சுவாமி ஏ எஸ் ஜி பானர்ஜி சிதம்பரத்தை காப்பாற்ற வேண்டி அற்பத்தனமான காரணங்களை காட்டி மனு போட்டு கால தாமதம் செய்வதை கடுமையாக எதிர்த்தார். உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ராவும் சஞ்சய் கிஷான் கவுலும் இந்த ஏர்செல் மேக்சிஸ் வழக்கை முடிக்க காலக்கெடு விதித்திருப்பதால் வழக்கை இழுத்தடிக்கவும் ராஜேஷ்வர் சிங்கை பதவியில் இறக்கவும் செய்யப்படும் முயற்சிகள் யாவும் முடக்கப்படும் , என்றார். ‘’முத்திரையிடப்பட்ட உறையினும் இருக்கும் எந்த தகவலைக் குறித்தும் அரசு ஆய்வு நடத்தலாம். இதற்கு முன்னறிவிப்பு எதுவும் தரத் தேவையில்லை’’என்று நீதிமன்றம் அறிவித்துவிட்டது. இந்த வழக்கு ஆறு மாதத்துக்குள் முடிய வேண்டும் என்றும் அறிவித்துவிட்டது ஹஸ்முக் ஆதியா இதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போலி அறிக்கைகளை கொடுத்து வழக்கை இழுத்தடிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. இது குறித்து நான் பிரதமரை சந்தித்து இந்த நால்வரின் செயல்பாடுகளை அடக்குவேன்’’ என்றார் சுவாமி பத்திரிகையாளர் சநதிப்பில் இருக்கும்போதே அந்த ஒரு மணி நேரத்துக்குள் அமலாக்கத் துறை ராஜேஷ்வர் சிங்கின் மீதான குற்றசாட்டு போலியானது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துவிட்டது.
நீதிமன்றத்தில் முதலில் அரசு வக்கீலான ஏ எஸ் ஜி விக்ரம்ஜித் பானர்ஜி நீதிபதிகளிடம் முத்திரையிடப்பட்ட உறையை கொடுத்தார். அங்கிருந்த ராஜேஷ்வர் சிங்கும் இரண்டு ரகசிய ஆவணங்களை நீதிபதிகள் வசம் ஒப்படைத்தார். அவற்றில் ஒன்று ஐ எஸ் ஐ ஏஜென்ட்டாக துபையில் வசிக்கும் ஒர் இந்தியர் எப்போதோ ராஜேஷ்வர் சிங்குக்கு தொலைபேசியில் அழைத்ததும் சிங் அது குறித்து உடனே தனது துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததுமான விவரங்கள் அடங்கிய உறை.. றா என்ற உளவு அமைப்பு கொடுத்ததாக் சொல்லப்படும் அறிக்கைக்கு பின்னர் அந்த ஏஜென்ட் இந்தியாவுக்கு பத்து முறை வந்துவிட்டார். உபேந்திரா ராய் தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த றா அறிக்கை குறித்து டிவிட் செய்துள்ளார். அடுத்தது, உபேந்திர ராய் மாதிரியான இடைத்தரகர்களைக் கொண்டு தன் மீது போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி தனது பதவி உயர்வை நிறுத்தி வைத்தது குறித்து ராஜேஸ்வர சிங் ஹஸ்முக ஆதியாவுடன் நடத்திய உரையாடலின் பதிவு.
அமலாக்கத்துறையின் இயக்குனர் வெளியிட்ட அறிக்கையை கீழ் காண்க:

References:
[1] Crooked Chidambaram gang again engineers fake petitions against ED Officer Rajeshwar Singh – Jun 7, 2018, PGurus.com
[2] Is Finance Secretary Hasmukh Adhia shielding PNB scamsters Nirav Modi and Mehul Choksi? Mar 21, 2018, PGurus.com
[3] ‘Siding with Scamsters’: ED Joint Director Makes Scathing Attack on Revenue Secy Hasmukh Adhia – Jun 27, 2018, News18.com