நேஷனல் ஹெரால்டு பற்றி சுவாமிட்வீட் செய்வதற்குத் தடை கோரி காங்கிரஸ் தலைவர்கள் நீதிமன்றத்தில் மனு

நேஷனல் ஹெரால்டு வழக்கு பற்றி  சுப்பிரமணியன் சுவாமி எந்த ஒரு கருத்தையும்  டிவிட்டரில் பதிவு செய்யக் கூடாது என நீதிமன்றத்தில் காங்கிரஸ் ஒரு மனு தாக்கல் செய்தது

0
2392
நேஷனல் ஹெரால்டு வழக்கு பற்றி  சுப்பிரமணியன் சுவாமி எந்த ஒரு கருத்தையும்  டிவிட்டரில் பதிவு செய்யக் கூடாது என நீதிமன்றத்தில் காங்கிரஸ் ஒரு மனு தாக்கல் செய்தது
நேஷனல் ஹெரால்டு வழக்கு பற்றி  சுப்பிரமணியன் சுவாமி எந்த ஒரு கருத்தையும்  டிவிட்டரில் பதிவு செய்யக் கூடாது என நீதிமன்றத்தில் காங்கிரஸ் ஒரு மனு தாக்கல் செய்தது

குற்றம் சாட்டப்பட்ட  சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் மோதிலால் வோரா நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து சுப்பிரமணிய சுவாமி டிவிட்டரில் தகவல் அல்லது கருத்து பதிவு செய்வதற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த முக்கிய வழக்கில் சுவாமி ஆதாரங்களைக் கூற ஆரம்பித்த சனிக்கிழமை அன்று காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தனர். முதலில் இது குறித்து கூடுதல் தலைமை பெரு நகர் நீதித்துறை நடுவரான சமர் விஷால் அதிருப்தி அடைந்தாலும் பின்னர் சுவாமியிடம்  இந்த மனு குறித்து அவரது கருத்துக்களை தெரிவிக்கும்படி கூறினார்.

காங்கிரசார் அளித்த மனுவில் சுவாமி தனது டிவிட்டர் கருத்துக்களில் சோனியாவை ராமாயணத்து ராட்சசி தாடகை என்றும் ராகுல் காந்தியை புத்து அதாவது முட்டா பய என்றும் சுட்டியிருப்பதை குறிப்பிட்டிருந்தனர். விசாரணையில் இருக்கும்போது ஒரு வழக்கு குறித்து இவ்வாறு டிவிட்டரில் அநாகரீகமாக கருத்துக்களை பதிவு செய்வதால் அவர் கருத்து சுதந்திரத்தின் வரம்புகளை  மீறிச் செயல்படுகிறார் என்று காங்கிரஸ் வக்கீல்கள் குற்றம் சுமத்தினர். மனுதாரர் நேரம் எடுத்து கவனமாக பார்த்து அறிந்ததில் புகார்தாரர் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடப்பது குறித்து பல்வேறு பதிவுகளை சமூக வலை தளத்தில் அன்றன்று பதிவு செய்வது குற்றம் சுமத்தப்பட்டவரின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாகவும் நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிப்பதாகவும் இருக்கிறது. நீதி நிர்வாகத்துக்கு இடையுறு விளைவிக்கும் வகையில் புகார்தாரர் [சுவாமி] இந்த வழக்கு குறித்து விளம்பரம் தேடும் நோக்கத்தில் செயல்படுகிறார். விசாரணை நாளுக்கு முன்னும் பின்னும் இவ்வழக்கு குறித்து ஊடகத்தினரிடம் பேசுவது சமூக வலை தளங்களில் கருத்துக்களை கட்டவிழ்த்து விடுவது மூலமாக [மலிவான] விளம்பரம் தேடுகிறார்.’ என காங்கிரஸ் தலைவர்கள் அவரது கருத்து தெரிவித்தலுக்குத்  தடை விதிக்கும்படி கேட்டு கொண்டனர்.

குற்றம் சுமத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் சுவாமியின் டிவீட்கள் நீதிமன்றத்தில் எங்களுக்கு நியாயமாக நடக்க வேண்டிய விசாரணைக்கான உரிமைக்கு இடையூறு விளைவிக்கிறது, என்றனர். நீதி நிர்வாகத்துக்கு இடையுறு ஏற்படாத வகையில் மக்களின் பேச்சுரிமை கருத்துரிமை ஆகியவை  செயல்படுத்தபப்பட வேண்டும்  என்பதை அரசியல் உரிமை சட்டப் பிரிவு 19(1)(a), விளக்குகிறது.  இதனை நடைமுறைப்படுத்த  1971.இல் நீதிமன்ற அவமதிப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. எந்த ஒரு வழக்கும் நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது புகார்தாரர் நீதிமன்றத்தின் அன்றாட விவாதங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு எந்த அடிப்படை உரிமையும் அவருக்கு கிடையாது என்று மூன்று பக்க மனுவை வக்கீல்கள் அளித்தனர். இந்த மனுவில்  சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பற்றி அவர் பதிவு செய்த டிவீட்களின் நகல்கள் இணைக்கப்பட்டிருந்தன.

யங் இண்டியன் நிறுவனம் வருமான வரித்துறைக்கு 250 கோடி ருபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.  வருமான வரி துறையின் ஆவணங்கள் முத்திரையிடப்பட்ட உறையில் வைக்கப்படும் போது அதனை வெளியிடுவது முறை ஆகாது. பி குருஸ் இணைய தளத்தின் கட்டுரை ஒன்றையும் வக்கீல்கள் தம் மனுவில் இணைத்துள்ளனர்.

டில்லி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதி மன்றத்திலும் காங்கிரஸ் வக்கீல்கள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது சுவாமிதனிப்பட்ட வெறுப்பு கொண்டிருப்பதை அவருடைய டிவிட்கள் காட்டுவதாக பல நகல்களை எடுத்து காட்டினர்.  ஆனால் நீதிபதிகள் இந்த நகல்களை நீதிமன்றத்தில் வழங்குவதை ஆதரிக்கவில்லை. இது போன்ற ஒரு மனுவை காங்கிரஸ் தலைவர்கள் இப்போது தான் முதன் முறையாக தாக்கல் செய்துள்ளனர்.

நீதிமன்றத்திற்கு வெளியே வந்ததும் சுவாமி, இந்த மக்கள் [சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி] இன்னும் நெருக்கடி நிலை மன நிலையில் இருப்பதாகவும் அவர்களுக்கு தான் சரியான பதில் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்தார். அந்த இடத்தை விட்டு அகன்ற சில நிமிடங்களில் தன கோபத்தை காட்டும் வகையில் டிவிட்டரில்  ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் ‘;வெள்ளிக்கிழமை அன்று பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கட்டிப்பிடித்ததால் அவர் உடனே மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் .  ஏனெனில் ராகுல் ஒரு சிரிஞ்சு மூலமாக பிரதமரின் உடலில் ஏதேனும் விஷ மருந்தை செலுத்தியிருக்கலாம் என்றார்.’’

2011  ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் அரசு  2G வழக்குகள் குறித்து சுவாமி டிவிட்டரில் பதிவுகள் எதுவும் போடக் கூடாது என தடை உத்தரவு கோரி  மனு செய்தது. அப்போது சோனியா காந்தியை சிறைக்கு அனுப்புவது குறித்தும் அங்கு அவருக்கு இத்தாலிய உணவுகள் கிடைக்க செய்வது பற்றியும் சுவாமி பேசிய பேச்சுக்களை செய்தித் தாளில் இருந்து எடுத்து நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பித்தது.  அப்போது எந்த கட்டுப்பாடுமில்லாத இந்த மனிதருக்கு ‘சில கட்டுப்பாட்டு தடைகள் விதிக்க வேண்டியது அவசியம்’ என்று மத்திய அரசு வக்கீல் பி பி ராவ் வாதிட்டார். அப்போது நீதிபதிகள் சிரித்தபடியே அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here