டி கே சிவகுமாரின் ஹவாலா ஏஜெண்டுகள் அப்ரூவராக மாறினர்

ப. சிதம்பரம் மற்றும் அகமது பட்டேல் விசாரணை வளையத்துக்குள் வருகின்றனர்

1
3357
சிவகுமார் தவிர சச்சின் நாராயணன், சுனில் குமார் சர்மா, ஆஞ்சநேயர் ஹனுமந்தையா, ராஜேந்திரன் ஆகிய நால்வர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
சிவகுமார் தவிர சச்சின் நாராயணன், சுனில் குமார் சர்மா, ஆஞ்சநேயர் ஹனுமந்தையா, ராஜேந்திரன் ஆகிய நால்வர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் மேலிடத்துக்கு பணம் எவ்வாறு அனுப்பப்பட்டது என்ற தகவல்கள் இரண்டு ஹவாலா ஏஜெண்டுகளிடமிருந்து கிடைத்துள்ளன இந்த விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸின் செல்வாக்குப் பெற்ற தலைவர்களில் ஒருவரான டி கே சிவகுமார் பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளார். மத்திய  புலனாய்வு அமைப்புகள் பல வாரங்களாக தொடர்ந்து ஆய்வு செய்த பிறகு டெல்லி தலைவர்களான அகமது பட்டேல் மற்றும் ப. சிதம்பரம் போன்றோருக்கு கர்நாடகாவில் இருந்து பணம் போன உண்மைகள் தெரிய வந்துள்ளன இந்த ஹவாலா நெட் ஒர்க் தொடர்புடைய இருவர் பெயர்கள் அடையாளம் காணப்பட்டன. இவ்விருவரும் கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பணப் பரிமாற்றத்திற்கு சிவகுமாருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் இப்போது அப்ரூவராக மாறி அனைத்து உண்மைகளையும் அம்பலப்படுத்தி விட்டனர்.

முக்கிய குற்றவாளியான சிவகுமார் தவிர சச்சின் நாராயணன், சுனில் குமார் சர்மா, ஆஞ்சநேயர் ஹனுமந்தையா, ராஜேந்திரன் ஆகிய நால்வர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ப. சிதம்பரம் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்காக ஒவ்வொரு எம்எல்ஏவுக்கு சிவகுமார் மூலமாக இரண்டு கோடி ரூபாய் தர ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் பணப் பரிமாற்றத்தை கர்நாடகாவின் உள்ளூர் அரசியல்வாதிகள் எதிர்த்த காரணத்தால் சிவக்குமாரால் அப்போது சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்க முடியவில்லை.  அதனால் ப.சிதம்பரத்தை அந்த மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. பின்னர் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய முயற்சிகளை எடுத்தார் பெல்லாரி ரெட்டி சகோதரர்களிடம் இருந்து சிதம்பரம் பெற்ற கள்ளப்பணம் அனைத்தும் சிவக்குமார் மூலமாகவே டில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது சிவக்குமார் இவ்வாறு பல்வேறு நபர்களிடம் இருந்து சிதம்பரத்துக்கும் அகமத் பட்டேலுக்கும் பல கோடி ரூபாயை பெற்றுத் தந்துள்ளார். இவை அனைத்தும் காங்கிரஸ் மேலிடத்துக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.

சிபிஐயில் சிக்கிய அகமத் பட்டேல், டி கே சிவகுமார் ஆகியோருடன் மறைந்த விலாஸ்ராவ் தேஷ்முக் என்பவரும் தொழில் கூட்டாளி ஆக இருந்ததை அப்ரூவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். டெல்லியில் உள்ள தனது முதலாளிகளை திருப்திப்படுத்துவதற்காக டி கே சிவகுமார் கோடிக்கணக்கில் பணத்தை அவர்கள் சொன்ன இடத்தில் கொடுத்து வாங்கி இருக்கிறார். இந்த பணப் பரிவர்த்தனை அவர்கலுக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்கவும் நடைபெற்றுள்ளது. அவர்கள் இந்தக் கேவலமான பணப்பரிமாற்ற பாதையை ராஜ்யசபா பதவிக்காக தெரிவு செய்ததை அப்ருவர்கல் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறி விட்டனர். பணத்தை பெட்டி பெட்டியாக கொண்டு செல்வதற்கு சிவக்குமார் ஷர்மா ட்ரான்ஸ்போர்ட் கம்பெனி என்ற நிறுவனத்தில் உள்ள கனரக வாகனங்களை பயன்படுத்தியிருக்கிறார். இதுதவிர சிவக்குமார் இந்தப் பணத்தை துபாய் மற்றும் சிங்கப்பூருக்கும் கொண்டு சேர்த்திருக்கிறார்.

போன வாரம் நம்முடைய இணையதளம் சிவகுமார் மூலமாக அகமத் பட்டேலும் சிதம்பரமும் கள்ளப்பணத்தை கடத்தினர் என்ற தகவலை செய்தியாக வெளியிட்டிருந்தது. மத்தியப் புலனாய்வு அமைப்புகளால் கண்டுபிடிக்கப்பட்ட விரிவான செய்தியை நம் இணையதளம் வெளியிட்டிருந்தது.2002 இல் நடைமுறைக்கு வந்த கருப்புப் பண தடைச் சட்டம் [Prevention of Money Laundering Act (PMLA) Act, 2002.]மற்றும் 2015 வரிவிதிப்பு சட்டம் ,புதிய கறுப்பு பண சட்டம் (Undisclosed Foreign Income and Assets)ஆகியவற்றின் கீழ் இந்த ஊழல் பெருச்சாளிகளை கைது செய்ய சிபிஐ ஆவன செய்து வருகின்றது. இந்தியாவுக்கு வெளியே உள்ள வருமானத்தின் விபரங்களை கொடுக்காத காரணத்தால் பிரிவு 139 இன் கீழ் சிவக்குமார் கைது செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு சிவக்குமார் கைதாகி தண்டிக்கப்பட்டால் அவர் அபராதத்துடன் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறவேண்டியிருக்கும்.

ப சிதம்பரம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் சூட்டோடு சூடாக சிபிஐயும் அமலாக்கத்துறையின் ப சிதம்பரத்துக்கும் சிவகுமாருக்கும் இருந்த  பணப் பரிவர்த்தனைகளை தோண்டத் தொடங்கிவிட்டது ஏற்கெனவே அமலாக்கத் துறை மோயின் குறைஷி,ககன் தவான், ஸ்டெர்லிங் பயோ டெக் உரிமையாளர்கள் போன்றோரை கைது செய்ததும் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான வழக்கு சூடு பிடித்துவிட்டது அமலாக்கத்துறை சிவக்குமாரை விரைவில் கைது செய்து பெரிய அளவில் கருப்பு பணத்தை இரண்டு முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு அவர் நாடு முழுக்க கொண்டு சென்று உரியவர்களிடம் அல்லது மற்றவர்களிடம் கொடுத்த விவரங்களை உறுதி செய்யும்.

ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் வருமானவரித்துறை கர்நாடக காங்கிரஸ் தலைவரும் நீர் ஆதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை அமைச்சருமான சிவக்குமார் மீது ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்தது. இந்தக் குற்றச்சாட்டு பெங்களூருவில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. கள்ளப் பணக் கடத்தலுக்காக சிவக்குமார் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவை தவிர டில்லியில் சிவக்குமார் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் கணக்கு காட்டாத பணம் நிறைய பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

முக்கிய குற்றவாளியான சிவகுமார் தவிர சச்சின் நாராயணன், சுனில் குமார் சர்மா, ஆஞ்சநேயர் ஹனுமந்தையா, ராஜேந்திரன் ஆகிய நால்வர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்களில் சுனில் குமார் சர்மா என்பவர் sharma travels நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார் ஆஞ்சநேய ஹனுமந்தையா டெல்லியில் உள்ள கர்நாடகா பவனில் அரசு பணியாளராக இருக்கின்றார். ராஜேந்திரா தற்போது சர்மாவின் கீழ் பணி செய்தாலும் அவரும்  முன்னாள் கர்நாடக அரசு பணியாளர் ஆவார். ஆக இந்நால்வரும் சிவகுமாருக்கு ஹவாலா பணப் பரிமாற்றத்தில் உறுதுணையாக இருந்துள்ளனர்.

கடந்த பத்தாண்டுகளாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு சிவக்குமார் பண நோட்டுகளை கத்தை கத்தையாக பெட்டியில் வைத்து கொண்டு சென்று பத்திரமாக அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். சிவக்குமார் இந்தப் பணப் பரிமாற்றத்திற்கு டெல்லியில் இருந்து பெங்களூருக்கு குறிப்பிட்ட சில நபர்களை  பயன்படுத்தி தனியொரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தைக் கொண்டு  கணக்கில் காட்டப்படாத பணத்தை இடம் மாற்றியுள்ளார். இவ்வாறு அவர் சுமார் எட்டரை கோடி ரூபாயை டெல்லியில் குறிப்பாக நான்கு இடங்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார் என்பதை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. அந்த நான்கு இடங்களில் மூன்று சஃப்தர்ஜங் என்கிலேவிலுள்ள வீடுகள் ஆகும். இந்த மூன்று அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளில் 107 ஆம் நம்பர் வீடு சிவகுமாருக்கு சொந்தமானது. பதினேழாம் நம்பர் வீடு சச்சின் நாராயணனால் வாங்கப்பட்டது 201 ஆம் எண் உள்ள வீடு இறந்து போன சுரேஷ் சர்மாவுக்கு சொந்தமானது ஆக இந்த மூன்று வீடுகளும் பணம் கடத்திய மூவருக்கும் சொந்தமானது என்பதால் இவர்கள் தத்தம் வீடுகளில் பணப் பெட்டிகளை கொண்டு போய் வைத்து பிறகு தக்க தருணம் பார்த்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளுக்கு இடம்  மாற்றி உள்ளனர் என்பதை வருமான வரி துறையின்  துணை இயக்குனர் தன்னுடைய புகாரில் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

ஹவாலா ஏஜெண்டுகளாக இருந்து இன்றைக்கு அப்ரூவராக மாறியவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உண்மைகளை கக்கத் [கொட்டத்] தொடங்கி விட்டனர். டெல்லியில் உள்ள சிவக்குமார் மற்றும் ஷர்மா நாராயணன் வீடுகள் தவிர கர்நாடகா பவன் என்ற அரசு இல்லமும் இந்தப் பணப் பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவியுள்ளது. ஊடகத்தை சேர்ந்தவர்களை நன்கு பழகி வைத்திருந்த சிவக்குமார் பல பத்திரிகை மற்றும் டிவி நிறுவனங்களுக்கும் அதிக அளவில் பணத்தை கொண்டு சேர்த்துள்ளார் என்ற விவரங்கள் இனி விளக்கமாக நம்முடைய செய்தித் தளத்தில் சொல்லப்படும்.

1 COMMENT

  1. அஹமது படேல் தாவூது பினாமின்னு உலகத்துக்கே தெரியுமே? சோனியா அந்தாளு எல்லாம் கூட்டு. குஜராதில் நின்று ராஜ்யசபா எம்பி ஆகிற அளவுக்கு தில்லு உள்ள ஆளு..!! சோனியா என்ற விஷ செடியின் ஆணிவேர். சிதம்பரம் ஒரு சில்லி வேர்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here