மொகலாயப்பேரரசு மீது இடது சாரி விடுதலை இயலாருக்குள்ள மோகம்

மொகலாயர் ஆட்சி மட்டுமே இந்தியாவின் பொற்காலம் என்று பெருமைப்படுவதற்கு சரியான காரணம் எதுவும் கிடையாது

0
2907
மொகலாயர் ஆட்சி மட்டுமே இந்தியாவின் பொற்காலம் என்று பெருமைப்படுவதற்கு சரியான காரணம் எதுவும் கிடையாது
மொகலாயர் ஆட்சி மட்டுமே இந்தியாவின் பொற்காலம் என்று பெருமைப்படுவதற்கு சரியான காரணம் எதுவும் கிடையாது

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதிதயநாத் அக்பரை விட சிறந்த மன்னர் மகாராணா பிரதாப் என்று சொன்னதற்கு இடது சாரி – விடுதலை இயலார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஹம்பியில் எஞ்சி கிடக்கும் சிதிலங்கள் அவர்களின் ஆட்சி சிறப்பை கட்டிடக்கலையின் மகிமையை நமக்கு இன்னும் உணர்த்தி கொண்டிருக்கின்றன. இந்த சிறப்புகள் பற்றி இடது சாரி – கல்வியியலார் கொஞ்சமும் பாராட்டுவது கிடையாது.

முன்னாள் குடி அரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனது பேருரையில் ‘’டில்லியை முஸ்லிம் அரசர்கள் கைப்பற்றும் வரை இங்கு 12 ஆம் நுற்றாண்டு வரை பல பேரரசுகள் ஆட்சி செய்துகொண்டிருந்தன என்றார். இது இடது சாரி – விடுதலை இயலார்களுக்கு பீதி ஏற்படுத்திவிட்டது. இந்த திகைப்பும் பீதியும் குடியரசு தலைவர் ஆர் எஸ் எஸ் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசியதால் இன்னும் அதிகமாகிவிட்டது. மதச்சார்பற்றோர் கூட்டத்தை சேர்ந்தோர் முஸ்லிம் ஆட்சியாளர்களை ஒரு போதும். ‘படையெடுத்து வந்து நம் நாட்டை அபகரித்தோர்’ என்று குறிப்பிடுவதில்லை. பாபருக்கு முன்பிருந்து தொடங்கி பின்னர் அந்த மொகலாயப் பேரரசு முடிவடையும் வரை இருந்த ஆட்சியாளர்களை அவர்கள் அவ்வாறு சொல்வது கிடையாது. இந்தியா விடுதலை அடைந்த பிறகு  தாங்கள் எழுதி வெளியிட்ட பெரிய பெரிய பாட நூல்களிலும் பத்திரிகைகளிலும் மொகலாயர் காலம் இந்தியாவின் பொற்காலம் என்றே விளக்கி வந்தனர்.

முகலாயர் ஆட்சியில் கலை, இலக்கியம் மற்றும்  கட்டிடக்கலைகளில் சில விதிமுறைகளை தொழில் நுட்பங்களை பின்பற்றி வந்தது உண்மை தான். அவர்கள் காலத்திய பல படைப்புகள் இன்னும் நம்மிடையே இருக்கின்றன. அவர்களின் பங்களிப்புகளில் மிகவும் முக்கியமானவை தாஜ்மகாலும் செங்கோட்டையும் ஆகும். அதே வேளையில் அவர்கள் இந்துக்களை  இரண்டாம் தரக்குடிமக்களாகக்கருதி அவர்களிடம் வரி வசூல் செய்ததும் இந்து கோயில்களை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு அங்கிருந்த கோயில் கருவூலங்களைக்கொள்ளையடித்ததும்  நடந்துள்ளது. பிறகு ஏன் இடது சாரி வரலாற்றாசிரியர்கள் நமது வரலாற்றை எழுதும் போது இந்திய ஆட்சியாளர்களின் பங்களிப்பைக்குறைத்தும் அல்லது சில சமயம்  அவர்களின் ஆட்சியை மொகலாயர் ஆட்சியுடன் சமமாகக்காட்டியும் [உயர்த்தி கூறாமல்]  நம்முடைய வரலாற்றை எழுதுவதில் கொள்கை ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

மொகலாயர் ஆட்சி முன்று நுற்றாண்டுகளுக்கு சற்று அதிகமாகவே இருந்தது. பதினெட்டாம்நூற்றாண்டில் அவுரங்கசீப் மரணத்துடன் ஒரு முடிவுக்கு வந்தது. The Mughal World: Life in India’s Last Golden Age என்ற நூலை எழுதிய ஆப்ரஹாம் எராளி என்பவர் மிகுந்த உற்சாகம் அடைந்து தம் நூலில் பதினேழாம் நூற்றாண்டில் இந்தியா உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாகவிளங்கியது [உலகின்மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பங்கு இந்தியாவின் பங்களிப்பாகும்] உலகின் தொழிற்சாலை உற்பத்தியில் இந்தியா மட்டுமே  கால் பங்கை அளித்து வந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பெருமைகள் அனைத்தையும் மொகலாயருக்கு மட்டுமே அளிப்பது தவறான போக்காகும். ஏனெனில் மொகலாயர் நாட்டின் அனைத்து பகுதிகளையும் ஆட்சி செய்யவில்லை அவர்கள் வடக்கில் மட்டுமே ஆண்டனர்.

இதில் பிரச்சனை என்னவென்றால் மதச் சார்பற்ற கல்வியாளருருக்கு மொகலாயர் ஆட்சி மட்டுமே பொற்கால ஆட்சி ஆகும். அதற்கு முன்னும் பின்னும் ஆண்ட அரசர்களை அவர்கள் வசதியாக மறந்து விடுவர். அதற்குப் பிறகு விஜயநகர பேரரசு மூன்று நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தது. ஹம்பியில் எஞ்சி  கிடக்கும் சிதிலங்கள் அவர்களின் ஆட்சி சிறப்பை கட்டிடக்கலையின் மகிமையை நமக்கு இன்னும் உணர்த்தி கொண்டிருக்கின்றன. இந்த சிறப்புகள் பற்றி இடது சாரி – கல்வியியலார் கொஞ்சமும்  பாராட்டுவது  கிடையாது. இந்தியாவில் முஸ்லிம் ஆதிக்கம் வளர்ந்து கொண்டு வருவதை தடுக்க சிருங்கேரி மடத்தை சேர்ந்த வித்யாரண்யர் என்பவர் விஜயநகர் சாம்ராஜ்யம் உருவாகக்காரணமாய் இருந்தார் என்பதால் இடது சாரி விடுதலை இயலார் இது பற்றி கண்டுகொள்வதில்லை. அந்த நேரத்தில் வடக்கே ஆட்சி செய்து வந்த மொகலாயரை தக்கான பீட பூமியின்  பாண்டிய மன்னர்களும் யாதவ அரசர்களும் எதிர்த்தனர். விஜயநகர பேரரசு மூன்று பேரரசுகளால் தாக்கு பிடித்து வந்து பின்பு சங்கமப்பேரரசாக ஆட்சி செய்தது.

மௌரியப் பேரரசு குறுகிய காலமே  [322 Ce – 187 BCE] ஆண்டாலும் அது அந்தக் காலத்தில் இந்தோ கங்கை சமவெளியில்  இருந்து வந்த அரசுகளுள் மிக முக்கியமானப் பேரரசு ஆகும். பிந்துசாரா மன்னன் தனது அரசை தென்பகுதி வரை விரிவுபடுத்தினான். அந்தக் காலத்தில் வாழ்ந்த மிக முக்கியமானவர்களில் இருவர் சாணக்கியரும் மன்னன் அசோகனும் ஆவர். மௌரியர் காலத்தில் புத்த மதம் செல்வாக்கு பெற்றது.

குப்தப் பேரரசு மூன்று நூற்றாண்டுகளையும்[319 CE – 650 CE] கடந்து ஆட்சி நடத்தியது. அது இந்திய வரலாற்றின் பொற்கால ஆட்சி ஆகும். இந்திய துணை கண்டம் முழுவதும் குப்தரின் ஆட்சி பரவி இருந்தது. இந்த காலத்தில் ராமாயணம், மகாபாரதம் ஆகியன எழுத்து வடிவம் பெற்றதாக சொல்கின்றனர். கலை, இலக்கியம் அறிவியல்  போன்ற துறைகளில் பல் அறிஞர்கள் வாழ்ந்த காலம் அது. அப்போது காளிதாஸ், விஷ்ணு ஷர்மா, வாத்ஸ்யாயனர்,  முக்கியமாக ஆர்யபட்டர் போன்ற மிகப்பெரிய விற்பன்னர்கள் வாழ்ந்தனர்.

இந்த பட்டியல் நீண்டு கொண்டே இருப்பினும் சோழர் பற்றி குறிப்பிடவில்லை என்றால் அது முழுமை பெறாததாகிவிடும். தென்னிந்தியாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அரச பரம்பரை சோழ அரச பரம்பரை ஆகும். அசோகர் காலத்தில் சோழர்களின் ஆட்சி பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. இவர்கள் 13ஆம் நூற்றாண்டு வரை ஆட்சியில் இருந்தனர். தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அரசாண்ட சோழ அரசர்கள் இலக்கியத்தில் புது மாற்றம் கொண்டு வந்தனர். மக்களாட்சி முறையும் மன்னராட்சி முறையும் இணைந்து ஒரு மைய ஆட்சி முறையைப் புகுத்தியதில் இவர்கள் முன்னோடிகள் ஆவர். சோழர்களின் கட்டிடக் கலை தென் கிழக்கு ஆசியா எங்கும் பறந்து விரிந்து காணப்படுகிறது.

இத்தகைய வளமான பாரம்பரியம் நமக்கு இருக்கும்போது ஏன் பொற்கால ஆட்சி என்ற பெருமையை மொகலாயர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும்? யோகி ஆதித்யநாத், தனது உரையில் ‘மகாராணா பிரதாப் அக்பரை விட சிறந்த அரசர்’ என்றதும் இடது சாரி விடுதலை இயலார் கொதித்து எழ வேண்டிய அவசியம் இல்லை. மொகலாய பேரரசர்களை உயர்வாகக் கருதி பாதுகாக்க விரும்பும் இந்த மதச் சார்பற்ற கல்வியியலார் இந்து மதத்தை சேர்ந்த இந்திய மன்னர்களோடு மொகலாய மன்னர்களை ஒப்பிடுவதை கூட தாங்கி கொள்ள இயலாமல் பதறுகின்றனர். இது ஒரு பாரபட்சமான மனநிலையை தான் காட்டுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here