2019 இலும் நான் மோடியை ஆதரிக்க விரும்புவது ஏன்?

என்னுடைய சுயநலம் சார்ந்த முன்னுரிமைகளுக்காக நான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் மோடியை தான் ஆதரிப்பேன்

0
3360
என்னுடைய சுயநலம் சார்ந்த முன்னுரிமைகளுக்காக நான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் மோடியை தான் ஆதரிப்பேன்
என்னுடைய சுயநலம் சார்ந்த முன்னுரிமைகளுக்காக நான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் மோடியை தான் ஆதரிப்பேன்

அதற்கான காரணங்களை உங்களுக்கு சொல்லுகிறேன்.

  1. இந்தியா ஒரு வலிமையான திறமையான நாடாக உருவாகுவதை காண விழைகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிரிவினைவாதிகள் மற்றும் ஊடுருவல்காரர்களையும் தானே முடிவெடுத்து எதிர்க்கும் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும்  இந்திய ராணுவத்துக்கு வழங்கியுள்ளது. மேலும் இந்தியாவுக்கு தேவையான ஆயுதங்களையும் இதர தளவாடங்களையும்  வாங்கவும் முழு  உரிமை அளித்துள்ளது.

இந்த அரசு காலதாமதமாகிக் கொண்டு வரும் ‘ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்’ என்ற திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தும் என்று நம்புகிறேன்.

  1. இறையாண்மைக்கு இடையூறு விளைவிக்கும் சமுக மற்றும் அரசியல் எழுச்சிகள் எதுவும் பெரியளவில் இல்லாத அமைதிச் சோலையாக இந்தியாவைக் காண விரும்புகிறேன். சமூக விரோத சக்திகளாக அடையாளம் காணப்பட்ட சில தொண்டு நிறுவனங்கள், சமய அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிற்கு எதிராக மோடி அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுத்தது எனக்கு அவர் மீது அளவற்ற நம்பிக்கையை அளித்தது.

இந்த நிறுவனங்கள் மிகவும் ஆபத்தானவை என்பதால் அவை திரும்பவும் முகிழ்க்காத வகையில் பிரதமர் தொடர்ந்து இவற்றின் மீதான தனது கிடுக்கிப்பிடியை இறுக்குவார் என்றே நான் நம்புகிறேன். .

  1. நம் நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் சுத்தமான குடிநீர், தடையற்ற மின் வசதி, நல்ல சாலை வசதி, பள்ளிக் கூடங்கள் போன்ற அடிப்படை வசதிகள் வர வேண்டுமென்று விரும்புகிறேன். மோடி இவற்றை செய்து வருவதற்காக அவருக்கு நன்றி சொல்கிறேன். இந்தியாவை உலகில் முதன்மை சூரிய சக்தி உற்பத்தியாளராக உருவாக்க முயற்சி எடுத்த  மோடி அரசுக்கு நன்றி

ஏழைகளுக்கு ஆதரவாக பிரதான் மந்திரி உஜ்ஜவாளா யோஜனா, பிரதான் மந்திரி சஹாஜ் பிஜ்லி ஹர கர் யோஜனா, [ஸௌபாக்யா] , பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா போன்ற திட்டங்கள் நல்ல முறையில் செயல்படுவது கண்டு மகிழ்கிறேன்.

அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து தந்துவிட்டபடியால் இனி பிரதமரின் குழு உள்கட்டமைப்பு, உடல்நலம், ராணுவம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாடு போன்றவற்றில்

அக்கறை கொள்ளும் என்று நம்புகிறேன். அடுத்து 2004 இல் நடந்த அரசு வந்துவிட்டால் இப்போது பிரதமர் ஆரம்பித்து வைத்திருக்கும நலத்திட்டங்களைச் சரியாக செயல்படுத்த மாட்டார்கள்  எனவே இனி வரும்  தேர்தலில் அவர்கள் வெற்றி பெறக் கூடாது என்று கருதுகிறேன்.

மோடி அரசு கொண்டு வந்த தேசிய உடல்நலப் பாதுகாப்பு திட்டம் ஒரு துணிவான முயற்சி ஆகும். இதன் முலமாக குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் முதல்  ஐம்பது இலட்சம் வரை மருத்துவக்  காப்பீடு கிடைக்கும். உலகின் மிக சிறந்த உடல்நலப் பாதுகாப்புப் பொது திட்டமாக போற்றப்படுகிறது.

  1. அரசு வரிப்பணத்தை முறையாக பயனுள்ளதாக செலவழிக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

அரசுக்கு பயன்படும் வகையில் ஜன தன யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக முந்நூறு மில்லியன் வங்க [bank] கணக்குகளை தொடங்கி வைத்த Direct Benefit Transfer (DBT) திட்டம் வரி செலுத்துவோரின் பணம் சட்டத்தின் ஓட்டைகளின் வழியாக கசிந்துவிடாமல் இருக்க உதவுகிறது.

பணம் வீணாகாமல் இருக்க இது போன்ற இன்னும் பல நல்ல புதுமையான திட்டங்களை அரசு அறிமுகம் செய்யும் என்று நம்புகிறேன்.

  1. இந்தியாவையும் இந்தியர்களையும் உலகம் மரியாதையுடன் பார்க்க வேண்டும். இப்போது மோடியும் அவரது குழுவினரும் உலக அரங்கில் இந்தியாவின் பெயரை உயர்த்தியுள்ளனர்.  இன்னும் நம் நாட்டை அவர் பல உயரங்களுக்கு கொண்டு செல்வார் என்று ஆத்மார்த்தமாக நம்புகிறேன்.
  1. கல்வி துறை, வேலை சந்தை, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்கள் ஆகியன வளர்ந்து சர்வதேச அளவில் புதிய பல முத்திரை பதிக்க வேண்டும்.

இந்தியாவின் தொழில்முனைவோர்  சூழலை மேம்படுத்த முத்ரா யோஜனா என்ற பெயரில் நாற்பது மில்லியனுக்கும் அதிகமான கடன்கள் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க ‘’ஒரே நாடு ஒரே வரி’’ .என்ற முறையில் ஜி எஸ் டி முறை அறிமுகம் செய்யப்பட்டதால்  நாட்டின் தொழில் துறை  அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.  Insolvency and Bankruptcy Code (IBC) மூலமாக வாராக்கடன்கள் வசூலிக்கப்பட்டன. வருமான வரி பாக்கி இல்லாமல் நட்பு முறையிலும் கண்டிப்பாகவும்  வரி வசூல் நடந்தது.. இன்னும் இது போல பல புதுமையான அணுகுமுறைகளை மோடி அறிமுகம் செய்து நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவியாய் இருப்பார் என்று நம்புகிறேன்.

  1. இறுதியாக, பாரதம் ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்டதல்ல அல்லது எழுபது ஆண்டுகளாக சீரழிக்கப்பட்டதும் அல்ல என்பது தெரியும். நாட்டின் ஆத்மாவை குலைக்கும் முயற்சிகள் சுமார் எழு நூறு ஆண்டு காலமாக காலனியாதிக்கம் மற்றும் சமய துன்புறுத்தல்கள் மூலமாக நடத்தப்பட்டன. எனவே இவற்றை சீர்படுத்த குறைந்த பட்சம் இருபது ஆண்டுகளாவது வேண்டும்.

பல அரசு திட்டங்களை பார்க்கும்போது வரி செலுத்தும் என்னை போன்றோரின் மனங்கள் மகிழ்ச்சி அடைகின்றன. நமது வரிப்பணம் வீணாக்கப்படவில்லை. அது பல் நல்ல திட்டங்களுக்கு  பயனுள்ள வகையில் செலவாகின்றது என்ற மன  நிம்மதி கிடைக்கின்றது.

முடிவாக, வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று வரும் மோடி அரசு  அடுத்த சில ஆண்டுகளில் இப்போது செயல்படுத்த முடியாமல் இருக்கின்ற  பொது சிவில் சட்டம், ஜம்மு காஷ்மீருக்கு ஆதரவாக இருக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது, இந்துக்கோயில்களுக்கு வரி நீக்கம், பாரபட்சமான கல்விக்கான உரிமை சட்டம் ஆகியவற்றை விரைவில்  செயல்படுத்தும என்று நம்புகிறேன். எனவே வரும் தேர்தலிலும் நான் மோடியைத்தான் ஆதரிப்பேன்.

இந்த ஆதரவு நமது  நாட்டை உண்மையிலேயே இறையான்மை உள்ள நாடாக ஆக்கும் முயற்சி ஆகும். அரசாங்கத்தில் மதம் இருக்கக்கூடாது. மதம் என்பது தனிப்பட்டவர் விவகாரம் என்பதும் மதத்தின் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் தகாது .என்பதும் உணர்த்தப்பட வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here