தெஹெல்காவின் ஷோமா சௌத்ரி போல காங்கிரஸ் தொழில் நுட்ப பிரிவின் திவ்யா ஸ்பந்தனா பாலியல் புகார் ஒன்றை மறைக்க முயற்சி

காங்கிரஸ் தொழில் நுட்பப் பிரிவின் பெண் பணியாளர் ஒருவர் கொடுத்த்ட பாலியல் புகார் அக்கட்சியின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது

0
2499
காங்கிரஸ் தொழில் நுட்பப் பிரிவின் பெண் பணியாளர் ஒருவர் கொடுத்த்ட பாலியல் புகார் அக்கட்சியின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது
காங்கிரஸ் தொழில் நுட்பப் பிரிவின் பெண் பணியாளர் ஒருவர் கொடுத்த்ட பாலியல் புகார் அக்கட்சியின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது

டில்லி போலீசாரின் உடனடி நடவடிக்கை தேவை

காங்கிரஸ் கட்சியின் தொழில் நுட்பப் பிரிவிலன்மையில் நடந்த பாலியல் முறை கேடு குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அனுப்பியும் அதை விசாரிக்காமல் மூடி மறைத்தது இப்போது வெளியே தெரிய வந்துள்ளது. கட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் நீதி கிடைக்காத அந்த பெண் இப்போது டில்லி போலீசில் கடந்த செவ்வாய் கிழமை புகார் அளித்துள்ளார். நடிகையும் தொழில் பிரிவின் தலைவியுமான திவ்யா ஸ்பந்தனா [தமிழில் சிம்புவுடன் குத்து என்ற படத்தில் நடித்தவர் இதனால் ‘குத்து திவ்யா’ என்று தமிழ் பத்திரிகைகளில் அழைக்கப்பட்டார்.]தனக்கு மிகவும் நெருங்கியவரான சிராக் பட்நாயக் மீது அந்த பெண் புகார் அளித்ததால் அந்த புகாரை அலட்சியப்படுத்தி மூடி மறைக்க முயன்றார்  என்று அவர் மீதும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். புகாரில் அந்த பெண் நேரடியாகவே சிராக் பட்நாயக் மீது குற்றம் சுமத்தியுள்ளார். தெஹெல்கா பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் ஷோமா சௌத்ரியும் முன்பொரு காலத்தில் இதே தவறைத் தான் செய்தார். அவரைப் போலவே ‘குத்து’ திவ்யாவும் தனக்குப் பிரியமானவரை  [குற்றவாளியைக்] காப்பாற்ற முயன்றார். ஆக  குற்றவாளிக்கு துணை போகும் காரணத்தால் திவ்யாவும் குற்றவாளியாகிறார்.

காங்கிரஸ் கட்சியின் தொழில் நுட்பப்பிரிவு டில்லியில் ௧௫, குருத்வாரா ராகப்கஞ் சாலையில் உள்ள ஒரு பெரிய மாளிகையில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் அந்தக் அக்கட்சிக்கு மிகவும் ராசியானதாகும் இதை War Room என்று அந்தக் கட்சியினர் அழைப்பார்கள். மிகப் பெரிய செல்வாக்கான மக்களுக்கே இந்த மாளிகை இதுவரை ஒதுக்கப்பட்டு வந்தது. இங்கு அடிக்கடி ராகுல் காந்தி, அஹமத் பட்டேல், ஜெய் ராம் ரமேஷ் போன்றோர் வந்து செல்வதுண்டு. 2004 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனைகள் இங்கு தான் நடந்தன அந்த தேர்தலில் வெற்றி கிடைத்ததால் இந்த மாளிகையை ராசியானது என காங்கிரசார் கருதுகின்றனர். அரண்மனை போல காட்சி தரும் அனைத்து வசதிகளும் ஆடம்பரங்களும் கொண்ட இந்த மாளிகை கடைசியாக நடிகை ரேகாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது சமீபத்தில் அவருடைய பதவி காலம் முடிவடைந்துவிட்டதால் இனி வேறு யாருக்கு ஒதுக்குவது என்று ஆலோசித்து வருகிறனர். யாருக்கு ஒதுக்கினால் இந்த மாளிகையை நாம் இப்படியே பயன்படுத்தலாம் என்று ஆலோசித்து வருகின்றனர்.  எனவே இந்த மேல்மட்ட ஆலோசனை மாளிகையில் ஒரு சாமான்ய பெண்ணிடம் பாலியல் வன்முறைக்கான முயற்சி நடந்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

புகாரில் அந்த பெண், “என் கணினியில் நான் வேலை பார்க்கும் போது பட்நாயக் பல முறை தனது டிவீட்களை பார்க்க வருவது போல என் பின்னால் வந்து கைகளை இருபுறமும் என்னைச் சுற்றி வைத்து நின்று கொள்வார். அவர் கைகளுக்குள் சிறைப்பட்டிருப்பதை போல உணர்வேன். எனக்கு மிகவும் அசௌகரியாமாக இருக்கும். என்னை நகர விடாமல் சுற்றி வளைத்தபடி நிற்கும் போது அவர் மூச்சுக் காற்று என் மேல் படுவது எனக்கு அருவருப்பாகவும் ஆத்திரமாகவும் இருந்தது’’என்று தனது புகாரில் பட்நாயக்கால் தனக்கு ஏற்பட்ட அடக்குமறை மற்றும் அசௌகர்யங்கள் குறித்து முறையிட்டுள்ளார்”… [புகார் கீழே தரப்பட்டுள்ளது]

மே மாதம் 14 ஆம் தேதி அன்று அந்த பெண் ரம்யா ஸ்பந்தனாவிடம் முறையிட்டார். ஆனால் திவ்யா அவரது புகாரை அலட்சியப்படுத்திவிட்டு அவரது வேளையில் குறைகளை கண்டுபிடித்து திட்டி இருக்கிறார். தொடர்ந்து இவ்வாறும் அந்த பெண்ணுக்கு திவ்யா குடைச்சல் கொடுக்கவும் அவர் வேலையை விட்டு நின்றுவிட்டார். இச்சம்பவம் பெண்களுக்கு எதிரான அநியாயங்கள் கொடுமைகள் நடக்கும்போது அவற்றை மூடி மறைக்க காங்கிரஸ் கட்சிக்குள் இன்னும் பழைய தந்தூரி அடுப்பில் போட்டு பொசுக்கி விடும் கலாச்சாரம் தொடரும் என்பது தெளிவாகிறது.

மேலும் அந்த பெண் தனது புகாரில் ‘’மறு நாள் மே மாதம் பதினான்காம் தேதியும் திவ்யாவிடம் பட்நாயக்கின் நடவடிக்கைகள் சரியில்லை என்று எடுத்துரைக்க முயன்றேன் ஆனால் அவர் என் முறையீட்டை காது கொடுக்க கேட்க மறுத்துவிட்டார். பேச்சை திசை திருப்பி என் பணித் தரம் சரியில்லை என்று என் மீது குற்றம் சுமத்துவதிலேயே குறியாக இருந்தார்.பட்நாயக் தொடர்ந்து என்னை வளைத்து நின்று சிரமம் கொடுப்பதும் அதை சொன்னால் திவ்யா அலட்சியம் செய்து பிடிவாதம் பிடிப்பதும் என்னை அங்கு வேலை பார்க்க மனமில்லாமல் துரத்திவிட்டது. என்று தன நிலைமையை விளக்குகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக மேலாளர் என்ற பொறுப்பில் இருந்தார்.

பாதிக்கப்பட்ட இந்த பெண் டில்லி பொலிசாரிடம் புகார் அளித்த போது தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு புகார் மனு அனுப்பியதாகவும் அதரகு அவரிடம் இருந்து எனக்கு எந்தப் பதிலும் வரவில்லை அவர் திவ்யா ஸ்பந்தனா மற்றும் சிறக் பட்நாயக் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். பாலியல் புகாரை மூடி மறைக்க முயன்ற குற்றத்திற்காக திவ்யா ஸ்பந்தானா மீதும் பாலியல் தூந்தரவு கொடுத்த சிராக் பட்நாயக் மீதும் டில்லி போலீசார் உடனடியாக் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டப்படி அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட வேண்டும் . [அப்பாவி பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் அப்போது தான் அலுவலகங்களில் கணியில் பனி புரியும் மற்றபெங்களுக்கு இந்த தொல்லை ஏற்படாது.]

புகார் மனுவின் நகல்  கீழே தரப்பட்டுள்ளது

<a href=”https://www.pgurus.com/like-tehelkas-shoma-chaudhury-congress-it-cell-head-divya-spandana-hushed-up-a-complaint-on-sexual-abuse-delhi-police-must-act/cong-it-cell-complaint-letter/” rel=”attachment wp-att-46981″><img src=”https://www.pgurus.com/wp-content/uploads/2018/07/Cong-IT-Cell-complaint-letter.jpg” alt=”Cong IT Cell complaint letter” width=”696″ height=”983″ class=”size-full wp-image-46981″ /></a> Cong IT Cell complaint letter

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here