ஊழல் வங்கியாளருக்கு எதிராக சி பி ஐயும் போலிசாரும் எடுக்கும் நடவடிக்கைகளை விமர்சிப்பது ஏன்?
முன்னாள் நிதியமைச்சர் ஜெட்லி தற்போது துறை எதுவும் இல்லாத அமைச்சராக அத்திய அரசில் அங்கம் வகிக்கிறார் அவருக்கு மனநலம் குன்றி விட்டதோ எனக் கேட்கும் வகையில் சிலவற்றை பொதுவெளியில் பேசி வருகிறார். மும்பையில் நடந்த வங்கியாளர் கருத்தரங்கு ஒன்றிற்கு அவர் டில்லியில் உள்ள தனது வீட்டிலிருந்தபடியே காண்ஒளியின் மூலமாக ஒர் உரையாற்றினார். அந்த உரையில் அவர் வங்கி பித்தலாட்டங்களை ஒடுக்க மகாராஷ்ட்டிராவில் சி பி ஐயும் மாநிலப்போலீசாரும் அண்மையில் மேற்கொண்ட கைது நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். கருப்பு பணத் தடை சட்டம் முறையாக இயற்றப்படவில்லை என்றும் அதனை திருத்தி எழுத வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெட்லி அவர்களே சிறிது காலம் ஓய்வெடுத்து உங்களின் பழைய நிலைமை திரும்பியதும் பணிகளைத் தொடருங்கள். இப்போது என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறிர்கள். உங்கள் பதவி காலத்திலும் அதற்கு முன்பு முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பதவி காலத்திலும் ஊழல்வாதிகள் நடத்திய வங்கி முறைகேடுகளால் இந்த நாடு படும் அவஸ்தைகளை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். இந்த முறைகேடுகளை சரி செய்ய பிரதமர் தன்னால் இயன்ற வரை முயன்று வருகிறார் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா? பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியும் கீதாஞ்சலியில் மேஹுள் சொக்சியும் நடத்திய ஊழல்களை நம் நாடு கவனித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் ஊழல் நடந்த கால கட்டத்தில் 2017வரை கீதாஞ்சலி வங்கிக்கு உங்கள் மகள் சோனாலி ஜெட்லியின் சட்ட அலுவலகம் தான் சட்ட விஷயங்களை கவனித்து வந்தது என்பதும் நாடறிந்த தகவல் ஆகும்.
நீங்கள் நிதி அமைச்சராக இருந்த போது தான் 2017ஆம் ஆண்டு ஜனவரி பதினான்காம் நாள் நாடு முழுக்க சோதனை செய்து பெப்ரவரி மாதம் வருவாய் புலனாய்வு துறையும் வருமானவரி துறையும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியும் அவரது உறவினர் மேகுள் சொக்சியும் செய்த வங்கிப் பித்தலாட்டங்களைப் பற்றி அறிக்கை சமர்ப்பித்தது. .நிதி அமைச்சகம் இந்த அறிக்கையில் காணப்பட்ட தகவல்களை சி பி ஐ, அமலாக்கத் துறை மற்றும் நிதி புலனாய்வு துறையினருடன் பகிர்ந்துகொள்ளவில்லை. பித்தலாட்டக்காரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இவர்களின் உதவியை உடனே நாடவில்லை. ஆற அமர பதினோரு மாதங்கள் கழித்து கோப்புகள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்த கால தாமதமான நடவடிக்கை உங்கள் பதவிக்காலத்தில் தான் நடந்தது என்பதை மறந்து விடாதீர்கள். இவை அனைத்தும் உங்கள் கவனிப்பில் நடந்ததால் இந்தக் கால தாமதமான நடவடிக்கைக்கு நீங்கள் தான் பொறுப்பு.
நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இந்த வங்கி பித்தலாட்டக்காரர்களை சட்டத்தின் கையில் ஒப்படைக்க கடுமையான துரிதமான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நிதி குற்றங்களை தண்டிக்க தாமே பொறுப்பெடுத்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் சி பி ஐ மற்றும் மாநிலப் போலீசார் மீது நீங்கள குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்? கருப்பு பணத் தடைச் சட்டம் பற்றி பேசி இருக்கிறீர்கள். அந்த சட்டம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது என்பது எங்களுக்கு தெரியும் அதில் சில மாற்றங்களை கொண்டு வரத் திட்டமிட்டு நீங்கள் சட்ட அமைச்சராகவும் வாஜ்பேய் பிரதமராகவும் இருந்த போது முயற்சி செய்ததும் நன்கு அறிவோம்.
அந்தச் சட்டத்தை நீர்த்து போகச் செயது நீங்கள் என்ன சாதிக்க போகிறீர்கள்? குற்றவாளி ப சிதம்பரத்தை தப்பிக்க விடப் போகிறீர்களா? அவரை ஐ என் எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் வழக்குகளில் சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள காத்திருக்கிறது. இந்த நிலையில் நீங்கள் இவ்வாறு பேசுவது நீங்கள் குற்றவாளிகளுக்குஆதரவாக இருப்பதாகவே தோன்றுகிறது.
உங்கள் மனம் எப்போதும் நீதிமன்றத்தில் கிரிமினல் குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் ஒரு வக்கீலின் நிலையில் தான் இருக்கிறது. நீங்கள் ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் உங்களுக்கென ஒரு துறை இல்லாவிட்டாலும் நீங்கள் இப்போதும் மத்திய அரசின் அமைச்சகத்தில் அங்கம் வகிக்குமோர் அமைச்சர் தான். ஏறத்தாழ அனைத்து பி ஜே பி தலைவர்களும் போன தேர்தலில் வெற்றி வாகை சூடிய பொது சுமார் இரண்டு லட்சம் வாக்குகளில் அம்ரித்சாரில் தோற்று போனவர் நீங்கள் . அந்த நிலையிலும் பிரதமர் மோடி உங்களை அமைச்சரவையில் இணைத்து கொண்டார். அதற்கு நீங்கள் விசுவாசத்துடன் நடந்துகொள்ள வேண்டும். அவரது ஊழல் எதிர்ப்பு கொள்கையை நீங்கள் நாட்டுக்காகவும் அவருக்காகவும் ஆதரிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நாட்டின் நிதி நிலைமை குட்டி சுவராகும்படி வங்கி பணத்தை சுருட்டிய ஊழல்வாதிகளை நீங்கள் ஆதரிக்க கூடாது.
உங்களுக்கு ஓர் அறிவுரை! உடல் நலத்தில் கவனம் செலுத்தி பழைய நிலைமைக்கு திரும்ப வர பாருங்கள். நன்றாக ஒய்வு எடுங்கள். நிதி அமைச்சகப் பணிகளில் தலையிட வேண்டாம். தற்போதைய நிதி அமைச்சர் பியுஷ் கோயல் அவர் அமைச்சகத்தில் நன்றாக உழைக்கட்டும். நீங்கள் நிதி உதவியை குறைத்த போதும் சி பி ஐ தன கடமைகளை செவ்வனே செய்து வருகிறது. வங்கி பணத்தை சுருட்டியவர்களை அது ஒருபோதும் விட்டு வைக்காது. அவர்களை சட்டத்தின் கையில் ஒப்படைக்க சி பி ஐ தயங்காது.