நேஷனல் ஹெரால்டு ஊழல் – நகர மேம்பாட்டு அமைச்சகம் ஹெரால்டு ஹவுசை திரும்பப் பெற முயற்சி

நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில் யங் இந்தியன் பத்திரிகைக்கு நகர மேம்பாட்டு அமைச்சகம் நோட்டீஸ் வழங்கியது

1
1870
நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில் யங் இந்தியன் பத்திரிகைக்கு நகர மேம்பாட்டு அமைச்சகம் நோட்டீஸ் வழங்கியது
நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில் யங் இந்தியன் பத்திரிகைக்கு நகர மேம்பாட்டு அமைச்சகம் நோட்டீஸ் வழங்கியது

டில்லியில் பத்திரிகை நடத்துவதற்காக வழங்கப்பட்ட இடத்தில் பத்திரிகையை நடத்தாமல் நிறுத்திவிட்டதால் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்திய அசோசியேட்டட் ஜர்ணல்ஸ் லிமிட்டட் நிறுவனத்திற்கு நகர் மேம்பாட்டு அமைச்சகம் அந்த கட்டிடத்தை அரசுக்கு திருப்பித் தரும்படி நோட்டீஸ் வழங்கி உள்ளது. டெல்லி பெருநகர் மேம்பாட்டு அமைச்சகம் பத்திரிகை நிறுவனங்களுக்காக சலுகை விலையில் வழங்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட நேஷனல் ஹெரால்டு ஹவுஸ் கட்டிடத்தை அந்த பத்திரிகை நிறுவனம் இப்போது உள்வாடகைக்கு விடுவதால் இம் முறைகேட்டை கண்டித்து பத்திரிகை அலுவலகத்தை மீண்டும் அரசிடமே திருப்பித் தந்து விடும்படி ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீஸ் இப்பத்திரிகையின் தலைமை அலுவலகமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற பதிப்பாளர் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இந்த நிறுவனமே பத்திரிகை நடத்துவதற்காக மலிவு விலையில் இந்த கட்டிடம் உள்ள இடத்தை அலுவலகம் கட்டுவதற்காக அரசாங்கத்திடம் இருந்து வாங்கியது. பத்திரிகை நிறுத்தப்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இத்தகவல்களை புலனாய்வுக் குழு மூலம் கண்டறிந்து உறுதி செய்துகொண்ட  அமைச்சகம் டெல்லி என்கிளேவ் பகுதியில் இருக்கும் ஹெரால்டு ஹவுஸ் என்ற கட்டிடத்தை தன்னிடமே திருப்பித் தந்துவிட வேண்டும் என்று எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது. இனி இந்த பத்திரிகை மீண்டும் தொடங்கி நடத்தப்படுமா என்பது சந்தேகம் என்ற நிலையில் பத்திரிகை நடத்துவதற்காக வாங்கிய இடத்தை திருப்பித் தந்து விடுவது தான் முறை என்று அமைச்சகம் அவர்களுக்கு அந்த நிறுவனத்திற்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது. யங்  இண்டியன் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதை நடத்தி வரும் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இந்த நேஷனல் ஹெரால்டு ஹவுஸ் கட்டிடத்தை பாஸ்போர்ட் சேவா கேந்திராவுக்கு இதன் இரண்டு தளங்களையும் உள்வாடகைக்கு விட்டு மாதத்திற்கு சுமார் 80 லட்ச ரூபாய்க்கு மேல் வாடகை வாங்கி வருகின்றனர். அரசு பத்திரிகையாளர்களுக்கு குறைந்த விலைக்கு கொடுத்த இடத்தில் இவர்கள் பத்திரிகை நடத்தாமல் மற்றொருவருக்கு வாடகை வருமானம் பார்ப்பது முறைகேடான செயலாகும்.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் ஏ ஜே எல் நிறுவனத்திடமிருந்து முறைகேடான பித்தலாட்ட வழிகளைப் பின்பற்றி யங் இந்தியன் என்ற பெயரில் தொடங்கப்பட்ட புதிய நிறுவனத்திற்காக ஏ ஜே எல் நிறுவனத்தை முறைகேடாக கைப்பற்றிய சோனியா காந்திக்கும் அவர் மகன் ராகுல் காந்திக்கும் வருமானவரித்துறை 250 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.அந்த அபராத வழக்கை எதிர்த்து யங் இண்டியன் நிறுவனம்  மேல்முறையீடு செய்ததால்  தில்லி உயர் நீதிமன்றம்  அந்நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் வங்கியில் நிலை வைப்பு தொகை வைக்கும்படி உத்தரவிட்டது.

கடந்த பத்தாண்டுகளாக எந்த நாளிதழையும் ஹெரால்டு ஹவுசில் அச்சிடவில்லை என்பதை புலனாய்வுக்குழு உறுதியாகக் கண்டறிந்து தெரிவித்ததால் நகர மேம்பாட்டு அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.1950களின் நடுவில் ஹெரால்டு ஹவுஸ் இருக்கும் இடத்தை ஏ ஜே எல் நிறுவனம் மற்ற பத்திரிகை நிறுவனங்களைப் போல பிரஸ் கிளப் பகுதியில் சலுகை விலைக்கு நிலத்தை வாங்கியது. அரசாங்கத்துடனான ஒப்பந்தப்படி பத்திரிகை தனது  பதிப்பை நிறுத்திவிட்டால் அந்த இடத்தை அரசாங்கத்திற்கு திருப்பித் தந்துவிட வேண்டும்

ஏ ஜே எல் நிறுவனம் நேஷனல் ஹெரால்டுபத்திரிக்கை நடத்த நாடு முழுக்க முதன்மையான நகரங்களில் தன் அலுவலகத்திற்கான இடத்தை சலுகை விலையில் வாங்கி இருந்தது. லக்னோ, பாட்னா, மும்பை, பஞ்ச்குலா, போபால், இந்தூர் ஆகிய நகரங்களில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்காக ஏஜிஎல் நிறுவனம் குறைந்த விலையில் அரசாங்கத்திடமிருந்து நிலங்களை வாங்கியது. இப்போது இப்பத்திரிகை நிறுத்தப்பட்டதால் இந்த நகரங்களில் வாங்கப்பட்ட நிலங்களையும் இந்நிறுவனம் திருப்பித் தர வேண்டும்

பிஜேபியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி முக்கிய மனுதாரராக இருந்து புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதன்பேரில் நகர் மேம்பாட்டு அமைச்சகம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சுவாமி மனு தாக்கல் செய்த பிறகு பல்வேறு செய்தி நிறுவனங்களும் பிரஸ் என்கிளேவ் பகுதியில் பத்திரிகை நடத்தாமல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. பல கட்டிடங்களில் இப்போது பத்திரிகை நிறுவனங்கள் செயல்படவில்லை. அவற்றை அந்நிறுவனங்கள் வேறொருவருக்கோ நிறுவனங்களுக்கோ வாடகைக்கு விட்டுள்ளன.

சுப்ரமணியன் சுவாமி மனுதாரராக இருந்து தொடுத்த இவ்வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் ஜூலை 21 அன்று சாட்சி கூறினார்.  அடுத்த விசாரணை ஆகஸ்ட் 25ஆம் நாள் நடைபெறும். இவ்வழக்கில்  குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர்களும் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் இவ்வழக்கு பற்றி தங்களை அவமானப்படுத்தும் வகையில் சுவாமி ட்விட்டரில் தெரிவிக்கும் பதிவுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் அவற்றை நீதிமன்றம் தடை செய்ய வேண்டும் என்று  ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர்.

1 COMMENT

  1. Where ever Congress , there will be some type of hidden type of work . This type of work is after Sonia come to the power.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here