ராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமையை நிறுவுவதில் ஏன் இந்த தாமதம்?

கடந்த பதினாறு மாதங்களாக ராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமையை விசாரித்து அம்பலப்படுத்துவதில் உள்துறை அமைச்சகம் கால தாமதம் செய்வது ஏன்?

0
1800
ராகுல் இந்தியரா இல்லை ஆங்கிலேயரா?
ராகுல் இந்தியரா ஆங்கிலேயரா?

ராகுல் காந்திக்கு பல நாட்டு குடியுரிமை இருப்பதை சுப்பிரமணிய சுவாமி முறையிட்ட பிறகும் அதை உள்துறை அமைச்சகம்  விசாரித்து உண்மையை வெளிப்படுத்த முனையவில்லை. இதற்குள் இருக்கும் மர்மம் என்ன?

அவர் ரகசியமாக வைத்திருக்கும் பேகாப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் இவர் பிரிட்டிஷ் குடிமகன் என்பது பதிவாகி உள்ளது.

ராகுல் காந்தி தன்னை பிரிட்டிஷ் குடிமகன் என்று பதிவு செய்ததற்கான ஆவணம் இருப்பதை கண்ட பிறகும் அது குறித்து அவரிடம் காரணம் கேட்டு உள்துறை அமைச்சகம் நோட்டிசு அனுப்பாதது ஏன் என்பது இன்னும் விடை தெரியாத வினாவாக உள்ளது. அவர் பிரிட்டிஷ் குடிமகன் என்பது வெறும் வதந்தியோ கற்பனையோ குற்றச்சாட்டோ அல்ல. இது ஆவணப்படுத்தப்பட்ட பதிவு. பிரிட்டன் நாட்டில் உள்ள நிறுவனம் ஒன்றில் உள்ள பதிவேட்டில் அவர் அந்நாட்டு குடிமகன் என்பதும் அவர் குடியிருக்கும் வீட்டு முகவரி என்று  பிரிட்டனில் உள்ள ஒரு  வீட்டு முகவரியும் இன்னொரு வீட்டு முகவரியும் தரப்பட்டு பதிவாகி உள்ளது. அவர் ரகசியமாக வைத்திருக்கும் பேகாப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் இவர் பிரிட்டிஷ் குடிமகன் என்பது பதிவாகி உள்ளது. இந்த உண்மையை ஊரறிய உணர்த்திவிட்டால் அவரது இந்தியக் குடியுரிமை ரத்தாகிவிடும். அவரது பிரதமர் கனவும் பாழாகிவிடும். அவருக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் தான் உள்துறை இந்த உண்மையை அம்பலப்படுத்தாமல் இருக்கிறதோ என்ற ஐயம் தேச பக்தர்களுக்கு உண்டாகிறது.

2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பி ஜே பி தலைவர் சுப்பிரமணிய சுவாமி உள்துறை அமைச்சகத்தில் ராகுல் காந்தி ராவுல் வின்சி  என்ற பெயரில் ரகசிய வங்கி கணக்கு வைத்திருப்பதாகத் தெரிவித்து அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனு அளித்தார். இந்த பதினோரு பக்க மனுவில் எல்லாமே தெளிவாக சொல்லப்பட்டிருந்தும் இன்னும் உள்துறை அமைச்சகம் ராகுல் மீது ஒரு விசாரணையும் ஆரம்பிக்கவில்லை. உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என்று  விளக்கம் கேட்டு கூட ராகுலுக்கு ஒரு நோட்டீசு கூட இன்னும் இத்துறை அனுப்பவில்லை.

ராகுல்  ஒரு பிரிட்டிஷ் குடிமகன்

சுவாமி அனுப்பிய மனுவில் ராகுல்  தான் ஒரு பிரிட்டிஷ் குடிமகன்  என்றும் தான் 51 Southgate StreetWinchesterHampshire SO23 9EH என்ற முகவரியில் வசிப்பதாகவும்  பிரிட்டிஷ் நிறுவனங்களைப் பதிவு செய்யும் பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார். தான் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் இன்னொரு முகவரியையும் கொடுத்திருக்கிறார். அந்த முகவரி 2, Frognal Way,  London. இந்த பதிவுகளை ராகுல் இந்தியாவில் இந்திய குடிமகன் என்று பதிவு செய்து மக்களவைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று பாராளுமன்ற  உறுப்பினராக இருந்த  போது தான் செய்திருந்தார்.

ராகுல் பிரிட்டிஷ் அரசையும் இந்திய அரசையும் வாக்களித்த மக்களையும் ஒரு சேர ஏமாற்றிவிட்டார்.  இவர் அங்கு ஆரம்பித்த அந்த ரகசிய நிறுவனமும்  2௦௦9 இல் மூடப்பட்டுவிட்டது

ராகுல் காந்தி இலண்டனில் உள்ள பர்க்லேய்ஸ் வங்கியில் 504664922071640796  என்ற என்னுடைய கணக்கை  ராவுல் வின்சி என்ற பெயரில் வைத்திருக்கிறார் என்பதையும் ஆதாரத்தோடு தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  அதில் ராவுல் வின்சி என்பவரின் பிறந்த நாள் தேதியும் ஒத்திருந்தது. அதையும் சுவாமி தன மனுவில் சுட்டிக்காட்டி இருந்தார்.

“ராகுல் காந்தி வெளிநாடுகளில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு காரணங்களுக்காக  ராவுல் வின்சி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். இலண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டியல் படிப்பதற்கு இந்த பெயரில் தான் மாணவனாகப் பதிவு செய்திருந்தார்” என்றும் சுவாமி தனது மனுவில் தெளிவாக பெயர் மாற்றம் குறித்தும் தெரிவித்திருந்தார்.

1996ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18 ஆம் தேதி இந்த வங்கிக் கணக்கு ராவுல் வின்சி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு 2௦14 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1௦ ஆம் தேதி முடிந்துவிட்டது. காரணம் இங்கு இந்தியாவில் பி ஜே பி ஆட்சி மலர்ந்து விட்டதால் இனிமேல் புது குடியுரிமையை வைத்து கொண்டு இந்திய அரசையும் மக்களையும் ஏமாற்ற முடியாது என்ற முடிவுடன் வங்கி கணக்கை அங்கு முடித்துவிட்டனர். ஆனால் சுவாமி கொடுத்த முகவரியில்தான் பிரிட்டிஷ் குடிமகனான ராவுல் வின்சி குடியிருந்ததாக அந்த பிரிட்டிஷ் நிறுவனங்களின் பதிவேட்டில் காணப்பட்டது.  இந்த ராவுல் வின்சி என்ற பெயரில்  ராகுல் காந்தி தான் பிறந்த  1970 ஆம் ஆண்டு ஜுன் 19ஆம் தேதியை தான் பிறந்த நாள் சான்றாக அளித்திருந்தார். இதில் இருந்து ராகுல் காந்தி ரகஸ்யமாக பல நாட்டு பாஸ்போர்ட்கள் வைத்திருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது.

2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுவாமி ராகுல் பற்றிய இந்த தகவல்களை பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். இவரது தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பி ஜே பி கட்சியின்  எம். பி. யான   மகேஷ் கிரி என்பவர் ராகுலை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை  விட்டு விலக்கும்படி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்னிடம் கோரிக்கை மனு அளித்தார்.  சபாநாயகர் இந்த மனுவை மக்களவை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவரான அத்வானியிடம் அனுப்பி வைத்தார்.

மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழு

மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழுவிலிருந்து ராகுல் காந்திக்கு விளக்கம் கேட்டு  ஒரு நோட்டிசு அனுப்பப்பட்டது. அதற்கு ராகுல் தான் ஏன் பிரிட்டிஷ் குடிமகன் என்று அந்த நிறுவனங்களின் பதிவேட்டில் பதிவு செய்து கொண்டார் என்ற கேள்விக்குத் தெளிவாக பதில் அளிக்கவில்லை. மாறாக தான் ஒரு இந்தியக் குடிமகன் தான் என்றும் தன்னை யாரும் சந்தேகப்பட வேண்டாம் என்றும் ஒரு வெற்று பதில் அளித்தார்.

இது சரியான முழுமையான பதில் அல்ல. அவர் ஏன் தன்னை ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்று பிரிட்டிஷ் நிறுவனங்களில் பதிவேட்டில் பதிவு செய்தார் என்பதற்கு தக்க விளக்கம் அளித்திருக்க வேண்டும். அவர் பிரிட்டிஷ் குடிமகன் என்றால் அவர் மக்களவை உறுப்பினராகக் பதவி வகிக்க தகுதியற்றவர் ஆகிவிடுவார். இந்தியாவில் உள் துறை அமைச்சகம் மட்டுமே குடியுரிமை பற்றிய பொறுப்புடையது என்பதால் ராகுலிடம் விளக்கம் கேட்டு பெற்ற பிறகு மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழு  உள் துறைக்கு அந்த பதிலை அனுப்பி அவரது குடியுரிமையை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

அத்வானி இந்த பிரச்னையில் பொறுமையாக இருந்ததால் சுவாமியே உள்துறை அமைச்சகத்திடம் மனு அளித்தார். ஆனால் அந்த அமைச்சகம் கடந்த ஒன்றரை வருடங்களாக ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சோம்பேறியாக இருக்கிறது,. நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு தகவல்  இது. ராகுல் இந்தியரா இத்தாலியரா பிரிட்டிஷாரா அவர் எந்த  நாட்டுக் குடிமகன் என்ற கேள்வி அனைவரின் உள்ளத்திலும் எழுந்துள்ளது. அவர் தன்னை ஓர் இந்தியர் போல காட்டிக்கொண்டு நானே அடுத்த பிரதமர்  என்று பகல் கனவு கண்டு வருகிறார். உள்துறை இந்த பிரச்சனையின் தீவிரத்தை அறியாத பச்சை பிள்ளை போல நடிக்கிறது.  இந்த பிரச்சனையிலும் மோடி அவர்கள் வந்து தான் விசாரணையை முடுக்கிவிட வேண்டுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here