பக்தர்களே சபரிமலைக்கு இந்த சீசனுக்கு வராதீர்கள்  மார்க்சிஸ்ட் கட்சி [CPI – M] சதித் திட்டம் – மத்திய அரசின்  மௌனம் – ஒரு  புரியாத புதிர் 

கேரளாவில் ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கட்சி ஐயப்ப பக்தர்களை கோவிலுக்குள் வர விடாமல் துன்புறுத்தி சதி செய்கிறது.   மத்திய அரசும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது.  அது ஏன் என்று புரியவில்லை

0
1822
கேரளாவில் ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கட்சி ஐயப்ப பக்தர்களை கோவிலுக்குள் வர விடாமல் துன்புறுத்தி சதி செய்கிறது.   மத்திய அரசும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது.  அது ஏன் என்று புரியவில்லை
கேரளாவில் ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கட்சி ஐயப்ப பக்தர்களை கோவிலுக்குள் வர விடாமல் துன்புறுத்தி சதி செய்கிறது.   மத்திய அரசும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது.  அது ஏன் என்று புரியவில்லை

மார்க்சிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவில் மாநில  அரசு சபரிமலைக்கு பக்தர்கள் வராமல் தடுக்க தன்னாலான  அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரமும் அங்கு போலிஸ் நடத்திய அராஜக நடவடிக்கைகளை கவனிக்கும் போது பக்தர்களை பாதகாப்பு என்ற பெயரில் பயமுறுத்துவது புரிகிறது. கம்யுனிஸ்ட் மற்றும் பிரிவினைவாதிகளின் சதியில் இருந்து கோயில் மரபை காப்பாற்ற வேண்டும் என்பதில் ஆரம்பத்திலிருந்து தீவிரமாகச் செயல்பட்டு வரும் பாரதிய ஜனதா கட்சியின் இளம் தலைவரான கே சுரேந்திரனை சனிக்கிழமை இரவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இருமுடி கட்டி சுரேந்திரன் கோயிலுக்கு போன போது  திருவனத்தபுரம் அருகே கழக்கோட்டம் என்ற இடத்தில் போலீசார் அவரை மறித்து தலையில் வைத்திருந்த இருமுடியை பிடுங்கி கைது செய்தனர். இடி வண்டி எனப்படும் வண்டியில் ஏற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இந்த இடி வண்டியில் தான் போலிஸ் தனக்கு பிடிக்காத கைதிகளையும் மற்றவர்களையும் ஏற்றி சென்று அடித்து உதைத்து சில வேளை கொன்றும் போடுவதுண்டு.

கேரளாவின் இந்து ஐக்கிய முன்னணியின் தலைவியான கே பி சசிகலாவை கைது செய்த 24 மணி நேரத்துக்குள் இளம் தலைவர் கே சுரேந்திரனையும் கேரளப் போலிஸ் கைது செய்தது இந்து மதத்துக்கும் கோயில் மரபுக்கும் எதிராக திட்டமிடப்பட்ட  சதியாகக் கருத தோன்றுகிறது. சசிகலாவும் இருமுடி கட்டி கோயிலுக்கு போகும் வழியில் கைது செய்யப்பட்டு ரணி காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர். அவர் இரவு முழுக்க சபரிமலை சாஸ்தாவின் பக்தி கீதங்களை பாடியபடியே இருந்தார். சசிகலாவின் கைதை எதிர்ஹ்த்டு பல்வேறு இந்து அமைப்புகள் சனிக்கிழமை அன்று கேரளாவில் கடையடைப்பில் ஈடுபட்டன. இதனால் சகஜ வாழ்க்கை ஸ்தம்பித்தது. பின்பு பிற்பகலில் திருவல்லாவில் உள்ள நீதிமன்றத்தில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

சசிகலா,  சுரேந்திரன் போன்ற இந்து தலைவர்களைக் கைது செய்து அடைத்துவிட்டு பாத்திமா, மேரி போன்ற செயற்பாட்டாளர்களுக்கு அரசு பாதுகாப்பாக கோயிலுக்கு செல்ல வழி அமைத்து கொடுக்க ஆலோசனை செய்து வருகிறது. செங்கணூரில் இருந்து மேரி என்ற ஸ்வீட்டி மேரி சபரிமலை கோயிலுக்கு கிளம்பிய போது பக்தர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்திவிட்டனர்.

சந்நிதிக்குள் கொண்டு போன பிறகு மட்டுமே திறந்து காணிக்கை செலுத்த வேண்டிய இருமுடியை சுமந்து வரும் பக்தர்களை போலிசார் வழிமறித்து அவர்களின் இருமுடியை பிடித்து இழுத்து கட்டை அவிழ்த்து சிதறடிக்கின்றனர்.. மனித்த உரிமை மீறல் குற்றங்களில் ஈடுபடும் போலிஸ் பக்தர்களிடம் வன்முறை நடவடிக்கை மேற்கொள்கிறது. சபரிமலை யாத்திரையின் போது வேறு எங்கும் இருமுடியை பிரிக்க கூடாது என்ற சம்பிரதாயம் இருப்பது தெரிந்தும் போலிஸ் இந்த அராஜகத்தில் ஈடுபடுகிறது.

சனிக்கிழமை அன்று சபரிமலை கோயிலுக்கு வந்த இரண்டு பக்தர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சபரிமலைக்கு நெடுங்காலமாக வந்து கொண்டிருக்கும் பக்தர்கள் போலிஸ் பந்தோபஸ்து என்ற பெயரில் நடத்தும் கெடுபிடிகளையும் வன்முறை நடவடிக்கைகளையும் பார்த்து அவர்களுக்கு தீவிர மன உளைச்சலும் மாரடைப்பும் வருகிறது. மாரடைப்பு வந்த இருவரும் ஐம்பது வயதுக்கும் குறைவானவர்கள்; ஆனாலும் மாரடைப்பால் இறந்துவிட்டனர்.

இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான சோசலிஸ்ட் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற [SDPI) என்ற அமைப்பின் துணையுடன் மார்சிஸ்ட் கட்சி கேரளாவின் மற்ற பகுதிகளில் இந்துக்களை துன்புறுத்துவதும் கொலை செய்வதுமாக இருக்கின்றனர். கேரளா முழுக்க சபரிமலை ஐயப்ப பக்தர்களை அடித்து கொடுமைப்படுத்தும் பணியை இவர்கள் செய்துவருகின்றனர். ஜனம் டிவி செய்தி ஒளிபரப்பின் படி மாநிலம் முழுவதும் சி பி ஐ – எம் கட்சி மற்றும் எஸ் டி பி ஐ அமைப்பினரின் யின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே இந்துக்களை துன்புறுத்துவது தொடர்கிறது.

சனிக்கிழமை அன்று காலை சி பி ஐ –எம் கட்சியின் அமைச்சரான கடகம்பள்ளி சுரேந்திரன் அடிக்கடி சபரிமலைக்கு சசிகலா வருவதன் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார். [இவர் திருவனந்தபுரம்  செங்கல்சூளையில் ரவுடித்தனம் செய்துகொண்டிருந்தவர்; இப்போது அரசியலில் குதித்து அமைச்சராகி இருக்கிறார்] ‘நஞ்சை கக்கும் இந்த பெண் அடிக்கடி சபரிமலைக்கு வருகிறார். ஒரு மாதத்துக்கு இரண்டு மூன்று முறை இவர் எதற்காக சபரிமலைக்கு வருகிறார்? இவருக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று திருவனநதபுரத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசியிருக்கிறார்.

பி ஜே பி மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பினரை பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேள்வி கேட்க விடாமல் தடுக்கும் பத்திரிகையாளர்கள் இந்த சந்திப்பின் போது தாம் எந்த கேள்வியும் கேட்காமல் சுரேந்திரன் சொன்னதை மட்டும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். அவரிடம் எந்த குறுக்கு கேள்வியும் எவரும் எழுப்பவில்லை. குறுக்கே பேசினால் அவருக்கு கோபமும் ஆத்திரமும் வரும் என்பதால் அவரது கோபத்துக்கு அஞ்சி அனைவரும் அமைதியாக இருந்துவிட்டனர்.

நேற்றைய மாலை செய்தியில் அனைத்து தொலைக்காட்சிகளும் சபரிமலையையும் அதை சுற்றிலும் நடந்த சோகச் சம்பவங்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. சபரிமலையில் எங்கேயும் குடி நீர் கிடைக்கவில்ல்லை. கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் பொங்கி வழிந்தன. கழிவு நீர் வாய்க்கால் பராமரிப்பின்றி  குப்பை கூளங்களால் அடைத்துகிடந்தன.  இதனால் சபரி மலைக்கு பக்தர்கள் போனால் நோய்தொற்று ஏற்படும் என்ற நிலை நிலவுகிறது. சுத்தம் சுகாதாரம் என்பது இம்மியளவு கூட அங்கு பராமரிக்கப்படவில்லை. எனவே மருத்துவர்கள் பக்தர்கள் அங்கு கொஞ்ச காலம் சபரிமலைக்குப்  போக வேண்டாம் என்றும் அங்கு இப்போது போனால் காலரா, டைபாய்டு மஞ்சள் காமாலை மற்றும் தோற்று நோய்கள் வர வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here