அரசு இயந்திரமே ஒரு தனி மனிதரை ஒரு அதிகாரியை பாதுகாக்க முனைகிறது என்றால் அப்படி என்ன அவசியம் வந்துவிட்டது? அவரை ஏன் பாதுகாக்க முயற்சி எடுக்கின்றனர்? என்ற வினா நம் முன் எழுகிறது அல்லவா? டி ஐ ஜி சின்ஹா உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து ஒரு பிரமான வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். அதில் எதிர்பார்த்ததை விட அதிக அச்சுறுத்தல் தென்படுகிறது.
அஸ்தானா, சோமேஷ் மற்றும் ரா அமைப்பு ஆகிய மூன்றும் தவறாக செயல்பட்டு அஸ்தானாவை பாதுகாக்க போலியான அறிக்கைகளை தயாரித்தது இருப்பது தெரியவந்துள்ளது.
அந்த வாக்குமூலத்தில் “குற்றப் பத்திரிகையின் வழியில் அமையும் புலனாய்வை திசை திருப்பவே இந்த இடமாற்ற முயற்சி நடைபெறுகிறது. இதனால் சாட்சிகள் பிரளும். இப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்துக்கொள்வர்; அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க நிறைய ஆதாரங்கள் இப்போது உள்ளன. ஆனால் இந்த நிலையில் அதிகாரியை இங்கிருந்து 1200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாக்பூருக்கு மாற்றி விட்டால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். பொது ஆர்வத்தை காரணம் காட்டி இப்படி இடமாற்றம் செய்வது அர்த்தமற்றது. அந்த அதிகாரி இங்கிருக்கும் போது எந்தவித விருப்பும் வெறுப்பும் இன்றி நேர்மையாகத் தனது கடமைகளை செய்துவந்தார்.”
இப்போது அவரை சி பி ஐயின் சிறப்பு இயக்குனராகப் பதவி உயர்வளித்து [பிரதமர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் முதன்மை செயலர் பி கே மிஸ்ரா உத்தரவை அனுப்பவும்] நள்ளிரவில் வேறு இடத்துக்கு மாற்றிவிட்டனர். சி பி ஐ இயக்குனரிடம் இருந்து மறுப்பு வந்த பிறகும் அவரை இட மாற்றம் செய்துள்ளனர்.
சி பி ஐ இயக்குனர் அலோக் வர்மா இந்த பதவி உயர்வை கடுமையாக எதிர்த்தார். தனது சிறப்பு இயக்குனரைப் பற்றி பின்பொரு காலத்தில் சி பி ஐ பல விசாரணைகளை மேற்கொள்ள வேண்டி வரும் என்றார். இருப்பினும் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சக நியமனக் குழு அந்த சிறப்பு இயக்குனர் பதவிக்கான நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டது.
சி பி ஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அறிந்து தான் அவரை விடுமுறையில் அனுப்பி வைத்துவிட்டனர் என்பது அனைவரும் அறிந்த ரகசியம் தான். இவ்வழக்கை விசாரித்து வரும் அனைத்து சி பி ஐ அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டனர். இது சி பி ஐ வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளி ஆகும். அனைவரும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். பிரச்சனை இப்போது உச்ச நீதிமன்றத்தின் கைகளில் உள்ளது.
2018, அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி அன்று இப்போது குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் பிரசாத்தை அவர் துபையில் இருந்து டில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய போது சி பி ஐ அதிகாரிகள் கைது செய்து தலைமையக அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். மனோஜ் அங்கு மிகவும் பிடிவாதமாக முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். டி ஐ ஜி எம் கே சின்ஹா அவரிடம் விசாரணை நடத்திய போது குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள முக்கியஸ்தர்களின் பெயர்களை குறிப்பிடாமல் தனக்கு அவரை தெரியும் இவரை தெரியும் என்று பிரபலஸ்தர்களின் பெயர்களை குறிப்பிட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் முரண்டு பிடித்தார்.
மனோஜ் பிரசாத் கூற்றுப்படி, மனோஜ் மற்றும் சோமேஷுக்கு தந்தையான தினேஷ்வர் பிரசாத்துக்கு இப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கே டோவலுக்கும் ரா அமைப்புக்கும் நல்ல பழக்கம் இருந்தது. என் எஸ் ஏ ஆலோசகரான டோவலுக்கு அறிமுகமான மனோஜை எப்படி கைது செய்து சி பி ஐ அலுவலகத்துக்கு கொண்டு வரலாம் என்று அதிகாரிகளிடம் கேட்டு மனோஜ் முரண்டு பிடித்தார்.
“அவர் தன சகோதரரான சோமேஷுக்கு துபாயில் உள்ள ஒரு பெரிய அதிகாரியை தெரியும் என்றும் [அவர் சொன்ன பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை] R &AW வின் தற்போதைய சிறப்பு செயலர் சமந்த் கோயலுக்கு தான் மிகவும் நெருங்கியவர் என்றும் கூறி மிரட்டினார். விசாரிக்க வந்திருக்கும் சி பி ஐ அதிகாரிகளை வேலையை விட்டு ‘தூக்கிவிடுவேன்’ அவர்களை ‘முடித்துவிடுவேன்’ என்று அதட்டினார். அந்த அதிகாரிகள் தங்கள எல்லையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் தன்னை உடனே விடுவிப்பதே அவர்களுக்கு நல்லது என்றும் அறிவுரை கூறினார். மேலும் அவர் தன சகோதரன் சோமேஷும் சமந் கோயலும் என் எஸ் ஏ அதிகாரி அஜித் டோயல் தனிப்பட்ட முறையில் ஒரு முக்கியமான பிரச்சனையில் சிக்கி கொண்ட போது உதவி செய்தனர் என்றும் தெரிவித்தார். சர்வதேச போலிசுக்கு இது தேவையில்லாது என்று இந்தியாவே தெரிவித்துவிட்டது என்றார். மனோஜ் சொல்லியதை கேட்டு என் எஸ் ஏ டோவலிடம் ஏன் விசாரித்து தெரிந்துகொள்ளவில்லை என்று சி பி ஐ அதிகாரிகள் பற்றி டி ஐ ஜி சின்ஹா உச்ச நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை அபிடவிட் தாக்கல் செய்துள்ளார்.
“புலனாய்வு அதிகாரியான் ஏ கே பஸ்ஸி சமந்த் கோயலும் சோமேஷும் நேரடியாக பேசி கொள்வதை நிறுத்திவிட்டு வாட்சப்பில் தகவல்களை மட்டும் பரிமாறிக்கொள்கின்றனர் என்பதை அறிந்து அலைபேசிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றார். அரசு அதிகாரிகளின் அலைபேசிகளில் அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்களை பெற சி பி ஐ முயன்றது. சி பி ஐ இயக்குனர் இதற்கு உடனே அனுமதி வழங்கவில்லை மாறாக அவர் என் எஸ் ஏ அனுமதி வழங்காது எனக் கூறி மறுத்துவிட்டார்.” என்று இந்த வாக்குமுலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டர்போளில் விசாரித்த போது மனோஜ் சொன்னது சரி என்பதும் தெரிய வந்தது. இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
இலண்டனில் உள்ள ஸ்டெர்லிங் பையோடேக் நிறுவனத்தை சேர்ந்த நிதின் சந்தேசாராவை தான் சந்தித்திருப்பதாக மனோஜ் தெரிவித்தார். ஸ்டேர்லிங் பயோடெக் நிறுவன ஊழல் வழக்கில் நிதினும் அவரது சகோதரர் சேத்தனும் தான் முக்கிய குற்றவாளிகள். இவ்வழக்கில் காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேலுடன் அவரது மகனும் மருமகனும் சேர்க்கப்பட்டுள்ளனர். ராகேஷ் அஸ்தானவும் இவ்வழக்கில் 2011 இல் சுமார் நான்கு கோடி [3.9] இலஞ்சம் வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
“ஆரம்பத்தில் மனோஜ் அதிகமாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாலும் பிறகு அமைதியாகி விட்டார். அவர் விசாரணையின் போது தெரிவித்த தகவல்கள் அனைத்தும் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டன. அவர் முதலில் சொன்னதை எல்லாம் பதிவு செய்தனரா என்பது மனுதாரருக்கு தெரியவில்லை’’ என்று டி ஐ ஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
மனோஜ் இப்போது போலிஸ் பாதுகாப்பில் இருக்கிறார். அவருடைய அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அவருடைய ஒரு அலைபேசியில் மட்டும் இரண்டு வருடங்களாக அவர் அனுப்பிய தகவல்களும் கிடைத்த பதில்களும் அழிக்கப்படாமல் இருந்தன, மனோஜுடன் சனா சதீஷ் பாபு மற்றும் சோமேஷ் ஆகியோருக்கான தகவல் பரிமாற்றங்களை ஆராய்ந்ததில் இலஞ்சம் கொடுத்த விஷயங்கள் பதிவாகி இருந்தன. ஆனால் எந்த அரசு அதிகாரியின் பெயரும் அதில் குறிப்பிடப்படவில்லை. அதில் அதிக அதிகாரம் படைத்தோர் என்றும் பாஸ் என்றும் மட்டுமே குறிப்புகள் காணப்படுகின்றன. அந்த அலைபேசி தகவல்களில் ஒரு சி பி ஐ வழக்கில் இலஞ்சம் கொடுத்ததால் மனோஜும் சோமேஷும் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் இருந்தன. இவர்களின் ‘பாசு’க்கும் இன்னொருவருக்கும் இடையே இந்த இருவரும் இடைத்தரகர் போல செயல்பட்டுள்ளனர். அந்த இன்னொருவர் சி பி ஐ அதிகாரி ஆவார். இதை அத்தகவல்கள் வாயிலாக அறிய முடிந்தது.
அஸ்தானா, சோமேஷ் மற்றும் ரா அமைப்பு ஆகிய மூன்றும் தவறாக செயல்பட்டு அஸ்தானாவை பாதுகாக்க போலியான அறிக்கைகளை தயாரித்தது இருப்பது தெரியவந்துள்ளது.
இப்போது இன்டலிஜென்ஸ் பிரோ எனப்படும் புலனாய்வு அமைப்பின் பணி குறித்து வாக்குமுலத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை அறிவோம்.
“சி பி ஐ தலைமையகத்தில் இருந்து மனோஜ் பிரசாத் அக்டோபர் பதினாறாம் தேதி துபாயில் இருக்கும் தனது சகோதரன் சோமேஷுடன் பேசினார். அந்த அலைபேசி எண்ணை கண்காணித்து வந்தனர். சி பி ஐ யின் சிறப்பு பிரிவினர் மூலமாக அந்த எண் கண்காணிக்கப்பட்டது. மனோஜிடம் சோமேஷ் ஒரு உரையாடல் பதிவில் தன்னை யார் வந்து என்ன விசாரித்தாலும் தன்னால் சமாளிக்க முடியும் என்கிறார். சோமேஷ் தான் எப்போது இந்தியா வந்தாலும் அவரை சி பி ஐ அதிகாரிகளும் சிறப்பு பிரிவினரும் கண்காணிப்பதாகவும் தனது உரையாடலின் போது தெரிவித்துள்ளார். இந்த தகவலும் வாக்குமூலத்தில் உள்ளது.
ரா அமைப்பும் ஐ பி எனப்படும் புலனாய்வு அமைப்பும் சோமேஷ் தெரிவித்த தகவலுக்கு பதில்களை தயாராக அவைத்துள்ளது.
துபாயில் உள்ள ரா அமைப்பின் அதிகாரி சமந்த் கோயல் பற்றிய தகவல்கள்;
“சிறப்பு பிரிவினர், தமது தொழில் நுட்ப கண்காணிப்பு முறைகள் மூலமாக இவர்களை கண்காணித்து இவர்களின் அலைபேசி அழைப்பு தகவல்களையும் பதிவு செய்துவிட்டனர். இந்த வருடம் அக்டோபபர் மாதம் பதினேழாம் தேதி அதிகாலை மனோஜ் கைது விவகாரத்தையும் வெளியிட்டு விட்டது. மனோஜ் கைது பற்றி அறிந்தவுடன் சோமேஷ் ,தனது நண்பர் ரா அமைப்பைச் சேர்ந்த சமந்த் கோயலுடன் பேசினார் சமந்த் உடனே சி பி ஐ யின் அஸ்தானாவுக்கு பேசினார். பதினேழாம் தேதி மதியத்துக்குள் சமந்துக்கும் அஸ்தானாவுக்கும் இடையே நான்கு அழைப்புகள் பதிவாகி உள்ளன. மனோஜின் தந்தை தினேஷ்வர் பிரசாத்தும் தன மகனுக்காக சமந்த் கோயலிடம் ஒரு முறை பேசினார்.
அமைச்சரவை செயலர் பி கே சின்ஹாவும் அஸ்தானாவைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் குறித்து டி ஐ ஜி எம் கே சின்ஹாவின் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘’இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதினேழாம் தேதி டில்லி போலிசாரின் சிறப்பு படை பிரிவின் டி சி பி யிடம் இருந்து சி பி ஐ யின் டி எஸ் பியான ஏ கே பஸ்ஸிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. ஆனால் அவர் அந்த அழைப்பை ஏற்கவில்லை. பிறகு இன்னொரு ஆய்வாளரை அழைத்து மனோஜ் கைதாகி உள்ளாரா என்று கேட்கப்பட்டது. இந்த அழைப்பு அமைச்சரவை செயலகத்தில் இருந்து வந்துள்ளது.
கீழ்க்காணும் அலைபேசி அழைப்புக்கள் மூலமாக அஸ்தானா செய்த அதிகார துஷ்பிரயோகங்களை அறிந்துகொள்ளலாம்.
- சோமேஷ் தனது மாமனாரான சுனில் மிட்டலுக்கு தகவல் தெரிவிக்கிறார்.
- அஸ்தானா அடுத்தது அப்னாவுக்கு தெரிவிக்கிறார்.
- மனோஜ் முன்று நான்கு முறை அஸ்தானவை சந்தித்திருக்கிறார்.
- சமந்த் சி பி ஐயின் அஸ்தானாவுக்கு நெருக்கமாக இருக்கிறார்.
- சமந்த் கோயல் சோமெஷிடம் ‘எக்காரணம் கொண்டும் இந்தியாவுக்கு வராதே ‘’ என்கிறார்.
- பிரதமர் மோடியின் அமைச்சர் ஒருவரும் இந்த அஸ்தானாவை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
“சி பி ஐ இயக்குனர் நேரடியாக தனது பணி நிலவரங்களை தெரிவிக்க கடமைப்பட்டுள்ள பொதுமக்கள் துயரம் மற்றும் ஓய்வூதியத் துறையின் அமைச்சரவை அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளிடம் அமைச்சர் ஹரிபாய் பேசியிருப்பதாக சனா குறிப்பிட்டுள்ளார்’’
இலஞ்ச ஒழிப்பு வாரியத்தின் கே வி சவுத்திரி இப்போது ஒரு காரியம் செய்தார். பிரச்சனைக்குள்ளான சி பி ஐ இயக்குனரை விடுப்பில் போகும்படி கூ’றிவிட்டார். அஸ்தானா மற்றவர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவை செயலரிடம் சொல்லி விசாரிக்கும்படி பணித்தார்.
“டில்லி பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் ஹைதிராபாத் நகரில் பள்ளி ஒன்றை நடத்தி வரும் கோரன்டியா ரமேஷ் என்பவருடன் டில்லிக்குச் சென்று சவுத்ரியை சதீஷ் பாபு சனா சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ரமேஷ் இலஞ்ச ஒழிப்பு வாரியத்தின் சவுத்ரிக்கு உறவினர் ஆவார். ரமேஷ் தான் நிலம் விற்ற பணம நான்கு கோடியை சனாவிடம் கொடுத்தார். அதில் ஐம்பது இலட்ச ருபாயை மொயின் குரேஷிக்கு சனா கொடுத்தார். இதனால் சி பி ஐ மொயின் குரேஷி வழக்கில் சனாவை விசாரித்தது.
“சவுத்ரி அஸ்தானாவை தனது வீட்டுக்கு அழைத்து விசாரித்ததாக சனா தெரிவித்துள்ளார். அந்த விசாரனைக்குப் பெரிய ஆதாரங்கள் ஒன்றும் இல்லை என்று அஸ்தானா குறிப்பிட்டுள்ளார். இதில் முறை கேடு ஒன்றும் இல்லை என்றாலும் பதிவுக்காக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்பிறகு எந்த சரிபார்ப்பும் செய்யப்படாமல் இந்த விசாரணையை இத்துடன் சனா முடித்து விட்டார்.
இப்போது தான் பெரிய வெடிகுண்டே வருகிறது. அதாவது பிரதமர் அலுவலகம்
வாக்குமூலத்தின் படி,
‘’இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருபத்து மூன்றாம் தேதி சிறப்பு பிரிவு டி ஐ ஜி மூலமாக மனுதாரருக்கு ஒரு தகவல் வருகிறது. சண்டிகாரில் இருந்த சமந்த் கோயலிடம் யாரோ பேசிவிட்டாதாகவும் அதற்கு சமந்த் கோயல் தான் பிரதமர் அலுவலகத்திடம் பேசிவிட்டேன் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னதாகவும் தகவல் கிடைக்கிறது. அன்றிரவே புலனாய்வு குழுவினர் மாற்றப்படுகின்றனர்.
மத்திய அரசின் சட்ட செயலர் சுரேஷ் சந்திரா அமைச்சரவை செயலர் சார்பாக அஸ்தானாவை காப்பாற்ற இடைத்தரகர் பணியை மேற்கொள்கிறார். அமைச்சரவை செயலர் ஏன் உச்ச நிதிமன்றத்தில் உ உள்ள இவ்வழக்கில் தலையிட்டு ஊழல்வாதி அஸ்தானாவை காப்பாற்ற முயல் வேண்டும்?
வாக்குமூலம் கீழ்க்கண்டவாறு அழகாக நிறைவடைகிறது.
‘’சனாவின் செயல்பாடு இந்தியாவின் தலைமை புலனாய்வு அமைப்பான சி பி ஐ யின் பணிகளில் குறுக்கிடுகிறது. சனாவினால் மனுதாரர் அதிக தொல்லைக்கு ஆளாகிறார். இது நிரூபிக்கப்பட்ட குற்றம் ஆகும் இதனால் நாட்டில் நீதி பரிபாலனம் சிக்களைச் சந்திக்கிறது. குறிப்பாக சி பி ஐ தனது கடமைகளை நிறைவேற்ற இயலாமல் தடுமாறுகிறது.
ஒரு தனி மனிதனைப் பாதுகாக்க இந்திய அரசாங்கமே இவ்வளவு பாடுபடுவது என்?
இதற்கு யார் பொறுப்பு? உச்ச நீதிமன்றம் தலையிட்டு இதற்கு ஒரு விசாரணை நடத்த சொல்லுமா? உண்மை எப்போது வெளிவரும்?
2019ஆம் ஆண்டின் துரியோதனனா ராகேஷ் அஸ்தானா?