சுனந்தாவின் மர்ம மரணம் – டில்லி போலீசார் சுனந்தாவின் மரணத்துக்கு காரணம் விஷம் தான் – டில்லி போலிஸ் உறுதி

டில்லி போலீசார் சுனந்தாவின் மரணத்துக்கு காரணம் விஷம் தான் என்பதை உறுதி செய்துள்ளனர்

0
2037
டில்லி போலீசார் சுனந்தாவின் மரணத்துக்கு காரணம் விஷம் தான் என்பதை உறுதி செய்துள்ளனர்
டில்லி போலீசார் சுனந்தாவின் மரணத்துக்கு காரணம் விஷம் தான் என்பதை உறுதி செய்துள்ளனர்

உடம்பில் உள்ள 12 காயங்கள் குறித்து விசாரணை தேவை

சுனந்தாவின் மர்ம மரணத்துக்கு காரணம் அவரது கணவர் சசி தரூர் தான்  என்று தெரிவிக்கும் டில்லி போலிசாரின் குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையை  வரும் ஜுன் மாதம் ஐந்தாம் தேதிக்கு  விசாரணை நீதிமன்றம ஒத்திவைத்தது. திங்கட்கிழமை நடந்த இவ்வழக்கு விசாரணையில் அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா சுனந்தாவின்  மரணத்துக்கு காரணம் விஷம் என்பதை எய்ம்ஸ் மருத்துவமனையும் எஃப் பி ஐ [FBI] குற்றப் புலனாய்வு துறையும் உறுதி செய்துள்ளது என்றார். கூடுதல் தலைமை பெருநகர் நீதிபதி சமர் விஷால் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த போது அவர் சுனந்தாவின் உடம்பில் காணப்பட்ட பன்னிரெண்டு காயங்கள் குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

டில்லி போலிசார் சுனந்தாவின் மரணம் தற்கொலை தான் என்பதை உறுதிசெய்யும் வகையில் அவர் லீலா ஒட்டலில் இறந்து கிடந்ததற்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு சசி தரூருக்கு அனுப்பிய இரண்டு மின் அஞ்சல்களை  நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதில், “எனக்கு வாழ பிடிக்கவில்லை. என் மரணத்தை நான் வேண்டுகிறேன்’’ என்று எழுதப்பட்டிருந்தது. மூத்த காவல்துறை அதிகாரிகளான மனிஷ் சந்திரா மற்றும் வி. கே. பி. எஸ். யாதவ் தலைமையிலான  போலிஸ் குழுவினரும் இந்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் இருந்தனர்.

நீதிமன்றம் தொடங்கியதும் சசி தரூருக்காக வாதாடும் பெண் வழக்கறிஞர் வாதாடத் தொடங்கினார். அவர் மூத்த வழக்கறிஞர் விகாஸ் பாஹ்வாவின் சட்ட அலுவலகத்தை சேர்ந்தவர். அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா அப்போது அவர் வாதாடக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். குற்றப் பத்திரிகையின் அடிப்படையில் அரசு வழக்கறிஞர் வாதாடும் பொது குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் எதுவும் சொல்லக்கூடாது என்றார்.

குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சசி தரூருக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்று வாதாடிய போது போலிஸ் தரப்பில் இருந்து விஷ மாத்திரையால் சுனந்தாவின் மரணம் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது அறையில் இருப்பதேழு அல்ப்ராக்ஸ் மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆனால் சுனந்தா  எத்தனை உட்கொண்டார் என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

போலீசார், சமூக வலைத்தளங்களிலும் மினனஞ்சலிலும் சுனந்தா வெளியிட்டிருந்த கருத்துக்கள் அவரது ‘மரண வாக்குமூலமாக’ எடுத்துக்கொள்ளப்பட்டன என்றனர். மரணத்துக்கு காராணம் விஷம் என்றாலும் அவரது உடம்பில் காணப்பட்ட 12 காயங்கள்  குறித்து புலன் விசாரணை தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

பிஜேபி தலைவரும் மனுதாரருமான சுப்பிரமணியன் சுவாமி நாள் முழுக்க நீதிமன்றத்திற்குள்  உடகார்ந்திருந்து வழக்கு விசாரணையை கவனித்துக்கொண்டிருந்தார்.  பின்பு வெளியே வந்து ஊடகத்தாரிடம் இணை ஆணையர் விவேக் கோகியா தலைமையில் முதல் கட்ட  விசாரணையின் போது நடந்த விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து பின்பு டில்லி நுண்ணறிவு [விஜிலன்ஸ்] போலிசாரிடம் அறிக்கை அளிக்கும்படி கேட்பேன் என்றார். சசி தரூர் பிரேதப் பரிசோதனையில் தலையிட முயன்றதையும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவருவேன் என்றார்.

மூவாயிரம் பக்கமுள்ள குற்ற பத்திரிகையில் போலீசார் சசி தரூர் ஒருவர் மீது  மட்டுமே குற்றம் சுமத்தியுள்ளனர். அவர் தன மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.   காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர் மீது இந்தியக் குற்றவியல் பிரிவுகள் 498A  [கணவன் அல்லது உறவினர் பெண்ணை கொடுமைப்படுத்துதல்] மற்றும் 306இன்  [தற்கொலைக்கு தூண்டுதல்] கீழ் குற்றம் சுமத்தியுள்ளனர். 498A பிரிவில் குற்றம் உறுதி செய்யப்பட்டால் மூன்றாண்டு தண்டனை கிடைக்கும் 306இன் கீழ் குற்றம உறுதியானால் பத்தாண்டு சிறைத் தண்டனை கிடைக்கும். வழக்கின் முக்கிய சாட்சியாக விட்டு வேலைக்காரரான நாராயண் சிங் என்பவர் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

சுனந்தா மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகுந்த கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் என்று குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here