மோடியின் நான்கு வருட ஆட்சி

நடவடிக்கைகள் தேவைப்பட்ட இடத்தில் எல்லாம் நிதி சார்ந்த அல்லது அரசியல் சார்ந்த சிக்கல் எதுவும் இன்றி மோடியின் அரசு திறமையாகச் செயல்பட்டது

நடவடிக்கைகள் தேவைப்பட்ட இடத்தில் எல்லாம் நிதி சார்ந்த அல்லது அரசியல் சார்ந்த சிக்கல் எதுவும் இன்றி மோடியின் அரசு திறமையாகச் செயல்பட்டது
நடவடிக்கைகள் தேவைப்பட்ட இடத்தில் எல்லாம் நிதி சார்ந்த அல்லது அரசியல் சார்ந்த சிக்கல் எதுவும் இன்றி மோடியின் அரசு திறமையாகச் செயல்பட்டது

சமதர்மம் மற்றும் பிரிவினைவாதத்தை அகற்ற வேண்டும் என்ற விருப்பம்  கொண்டுள்ளதால் மோடி அரசால் அதிகம் செய்ய  முடியவில்லை.

மோடி பதவியேற்று நான்கு ஆண்டுகாலம் முடிந்த பிறகு சொல்லக் கூடிய ஒரு சிறப்பான விஷயம் – நல்ல வேளை – இது காங்கிரசின் ஆட்சி அல்ல என்பது மட்டுமே. மக்களிடம் நிறைய நம்பிக்கைகளை உண்டாக்கிய வாக்குறுதிகளை அளித்த பிரதம மந்திரி பற்றி சொல்வதற்கு இது ஒரு நல்ல வாசகம் ஆகாது. இப்படி சொல்வதால் மொஎடியின் ஆட்சியில் அவர் எதுவுமே சாதிக்கவில்லை என்பது பொருள் அல்ல. சில நல்வாழ்வு திட்டங்கள் திறமையாக செயல்படுத்தப்பட்டுள்ளன; இவற்றால் தேர்தலில் வாக்குகள் அதிகரித்துள்ளான. ஆனால் எதிர்பார்ப்புக்கும் விளைவுகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகம் உள்ளது.

மோடிக்கு இருக்கும் கணிசமான பிரபல்யம் அடுத்த வருடம் நடக்கும் தேர்தலிலும் அவருக்கு வெற்றியை தேடி தரும் ஆனால் அவர் சொன்னவற்றை எல்லாம் அவரால் நடத்திக்காட்ட இயலவில்லை. அவரால் நேருவின் கருத்தியலுக்கான வரவேற்புக்கு இன்னும் விடை கொடுக்க முடியவில்லை. நாட்டின் திறன்கள் போதுமான அளவு இல்லாத போதும் நல்வாழ்வுத் திட்டங்கள் நிறைந்த நாடாக உருவாக்கும் முயற்சியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.  அவருடைய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் முக்கியத்துவம் குறைந்த நிலையில் தான் உள்ளன. ஆனால் மோடியின் சமூகத் திட்டங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகின்றன.

தீன் தயாள் உபாத்யாயா கிராம ஜோதி என்ற திட்டம் கிராமங்களுக்கு மின்சார  விளக்கு வசதி அளிக்கும் திட்டமாகும். இத்திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  15  ஆம் நாள் அன்று  1000 நாட்களுக்குள் மின் வசதி இல்லாத கிராமங்களில் எல்லாம் மின் வசதி செய்ய போவதாக அறிவித்தார். 988 நாட்களில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதிக்குள்  18,452 கிராமங்களுக்கு மின் வசதி செய்துதரப்பட்டுள்ளது. இத்திட்டம் மேலும் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் 16,320 கோடி ரூபாய் மதிப்பில் நாற்பது மில்லியன் குடும்பங்களுக்கு நகரிலும் கிராமத்திலும் மின் வசதி அளிக்கும் பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர கர் யோஜன திட்டமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் நான்கு கோடி வீடுகளுக்கு எரி வாயு இனைப்பு தரப்பட்டுள்ளது.

அரசு அலுவலகப் பணிகளை மின்மயமக்கியதால் பாஸ் போர்ட் மற்றும் பிராவிடன்டு  பண்டு போன்றவை இப்போது மக்களுக்கு விரைவாகக் கிடைக்கின்றன.

மேற்கூறிய திட்டங்களை செயல்படுத்துவதில் நிதி சார்ந்த அல்லது அரசியல் சார்ந்த பிரச்சனைகள் எதுவும் இல்லாதபடி திறமையாக மோடி அரசு செயல்பட்டது. எந்த எதிர்க்கட்சித் தலைவரும் கிராமங்களை சுத்தப்படுத்துவதற்கோ மின் வசதி செய்து தருவதற்கோ எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார். அதுபோல பிரச்சனை மிகுந்த நாடுகளில் இருந்து இந்தியர்களை காலி செய்து கொண்டுவருவதற்கோ எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் இந்த செயல்களை மோடி அரசு சிறப்பாக செய்துவருகிறது. ஆனால் இது போன்ற செயல் திட்டங்கள் இப்போது அதிகமில்லை.

சிக்கலான விஷயங்களான வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை கொண்டுவருதல், ஊழலை ஒழித்தல், பொருளாதாரத்தை அதிகரித்தல், முதலீடுகளை ஈர்த்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றில் தீவிரமான முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் அவ்வாறு இன்னும் எடுக்கவில்லை

சில விஷயங்களில் சில நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டுள்ளன. பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா ‘’இது தேர்தலுக்காக புனையப்பட்ட பொய்யுரை அல்ல. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை’’ என்று கண்டிப்பாக சொல்லி இருந்தார். .ஆனால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை அதுபோல ஊழலை எதிர்த்து வழக்காடுவதில் வழக்கறிஞர்கள் பின்வாங்கிவிட்டனர். இக்கட்சி வழக்கறிஞர்கள் 2 ஜி வழக்கில் குற்றவாளிகளுக்கு  தண்டனை வாங்கித்தர தவறிவிட்டனர். பி.ஜே.பி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ப.சிதம்பரம் போன்றவர்கள் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள் சொன்னாலும் அவற்றை இன்னும் நிரூபிக்கவில்லை. சுப்பிரமணியன் சுவாமி பி ஜே பியில் இல்லாத காலத்திலேயே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது வழக்கு தொடுத்தார். அப்போது பி.ஜே.பி ஆட்சியில் கூட இல்லை. அந்த வழக்கை அவர் இன்னும் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்.

நடைமுறைக்கு ஒவ்வாத பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி எஸ் டி வரி  விதிப்பில் ஏற்பட்ட குழப்பம் ஆகியவற்றால் பொருளாதாரம் தடுமாறியது. வரி பயங்கரவாதம் தீவிரத்தன்மை அடைந்துள்ளது. அடித்தட்டு மனிதன் கூட எரிபொருள் விலையின் ஏற்றத்தை உணர வேண்டியுள்ளது.

பொது வங்கிகளை தனியாருக்கு வழங்க மறுத்ததால், [PSBs]  வரி செலுத்துவோர் விருப்பமில்லாமல் 2.11 இலட்சம் கோடி ரூபாயைப்  போன நிதியாண்டிலும் இந்த நிதியாண்டிலும் மறு முதலீட்டுக்காக தம் பணத்தை கொடுத்தனர். இன்னும் திவாலான கணக்குகளின் [IBC] விவரம்  தெரியவேண்டியுள்ளது. ரெரா [RERA] எனப்படும் ரியல் எஸ்டேட் தொழிலை முறைப்படுத்தும் விதிகள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களும் முன்னேற்றங்களும் குறித்து தெரிய வேண்டும்

சாலை உருவாக்கம் நல்ல மாற்றத்தை கண்டுள்ளது. அது போல ஆயுத தயாரிப்பு துறையில் தனியாரின் பங்கேற்பு வரவேற்பு பெற்றுள்ளது. முதன்மையான செலவுகளுக்கே நிதி பற்றாக்குறை உள்ள நிலையில் ராணுவத்துக்கு தயாரிக்க வேண்டிய பல விஷயங்களில் இன்னும் வெகு தொலைவு நாம் பயணிக்க வேண்டியுள்ளது.

நமாமி கங்கே, மற்றும் திறன் இந்தியா போன்ற திட்டங்கள் பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளன. மைக்ரோ யூனிட் வளர்ச்சி, முத்ரா அல்லது மறு நிதி ஏஜென்சி  போன்றவை அதிகமான இளைஞருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது.  ஆனால் இவற்றிற்கு போதுமான சான்றுகள் இல்லை. ஸ்மார்ட் நகரங்கள் என்றால் என்னவென்றே பலருக்கு புரியவில்லை.

பிரதமர் அடிக்கடி பல வெளிநாடுகளுக்கு போயும் வெளியுறவுக் கொள்கைகளும் பெரியளவில் ஊக்கமளிக்கவில்லை. சீனாவின் சர்வதேச ஆதரவுடன் பாகிஸ்தான் இந்தியாவுக்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்துகொண்டு தான் இருக்கிறது. சீனா இந்தியாவை சுற்றி வளைத்து துன்புறுத்துகிறது. சுஷ்மா ஸ்வராஜ் டிவீட்டில் பதில் அளிக்கவும் விசா வழங்கவுமாக தன்னுடைய பணிகளை வரையறுத்துக்கொண்டார்.

சுருக்கமாக கூறினால் மோடி அரசு நேருவின் கருத்தியலான சமதர்மத்தையும் பிரிவினைவாதத்தையும் விரும்பாமல் அவற்றை அகற்ற துடித்தாலும்  நாட்டுக்கு அதிகமாக எதையும் செய்ய இயலவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here