கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி. சொத்து முடக்கம்

ஐ என் எக்ஸ் ஊழல் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத் துறையினரால் முடக்கம்

0
1466
ஐ என் எக்ஸ் ஊழல் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத் துறையினரால் முடக்கம்
ஐ என் எக்ஸ் ஊழல் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத் துறையினரால் முடக்கம்

அமலாக்கத் துறை ப சிதம்பர்த்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஐ என் எக்ஸ் ஊழல் வழக்கில் தொடர்பு கொண்டிருப்பதால் அவருடைய 54 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது. இச்சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பு 150 கோடி ரூபாய் ஆகும்.

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தின் ஒரே  மகனான கார்த்தி சிதமப்ரத்தின் 54 கோடி ரூபாய் சொத்துக்களை கடந்த வியாழக் கிழமை [11-10-18] அன்று அமலாக்கத் துறையினர் முடக்கினர். ஐ என் எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் தொடர்பு கொண்டிருந்ததால் கார்த்தியின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. இவரது Advantage Strategic Consulting Private Limited (ASCPL)  மற்றும் டில்லியில் ஜோர் பாக் என்ற இடத்தில் உள்ள பங்களாக்கள், ஊட்டி, கொடைகானல், இலண்டன் மாநரில் உள்ள சொத்துக்கள், ஸ்பெயின் நாட்டில் உள்ள டென்னிஸ் அகாடெமி, ஆகியவற்றுடன் இவர் பெயரில் உள்ள வங்கிகணக்குகளும் முடக்கப்பட்டன. கணக்குப்படி 54 கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் இச்சொத்துக்கள் இன்றைய சந்தை மதிப்பில் 150 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டத்துக்கு புறம்பாக பணப் பரிவர்த்தனை செய்த வழக்கில் சிக்கியுள்ளதால் கார்த்தியின் 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். கார்த்தியும் அவரது அட்வான்ட்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்ட்டிங் பிரைவேட் லிமிட்டட் நிறுவனமும் ஐ என் எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் சிக்கியுள்ளன.  கார்த்திக்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள சொத்துக்களை மட்டுமின்றி பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் உள்ள சொத்துக்களையும்அமலாக்கத் துறையினர் முடக்கி விட்டனர்.   அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெறுவதற்காக பீட்டரும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜியும் நிதி அமைச்சர் ப. சிதமபரத்தை சந்தித்து முறைகேடாக அனுமதி பெற்றதற்காக அவர்கள் இருவரும் இப்போது சிறையில் இருந்து வருகின்றனர்.

ஐ என் எக்ஸ் எவ்வாறு கார்த்திக்கு பணத்தைச் செலுத்தியது?

பீட்டர் முகர்ஜி கார்த்தியின் நிறுவனத்துக்கும் [ASCPL] அத்துடன் தொடர்புடைய வேறு சில நிறுவனங்களுக்கும் பணம் செலுத்தினார். அமலாக்கத் துறையினர் சோதனை செய்த போது வேறு சில நிறுவனங்களின் பேரில்  பெற்றுக்கொண்ட பணம் அனைத்தையும் கார்த்தியின் நிறுவனத்துக்கே அனுப்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர பரிவர்த்தனையே நடந்திராத போது அவ்வாறு நடந்த மாதிரியும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. கார்த்தியின் நிறுவனம் பணத்தை பெற்று வாசன் ஐ கேர் நிறுவனத்தில் பங்குகள் வாங்கி முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனம்  இந்தப் பங்குகளை பின்னர்  41 கோடி ரூபாய் இலாபத்திற்கு விற்றுள்ளது. மேலும் கார்த்தியின் நிறுவனம் இன்னொரு நிறுவனத்தின் பங்குகளை ரூ.29.49 கோடிக்கு விற்றதிலும் அதற்கு ரூ 18.49 கோடி இலாபம் கிடைத்திருக்கிறது. இந்த இலாபத் தொகையும் கறுப்பு பணமாகவே கருதப்படும். என்வே கார்த்திக்கு சொந்தமான நிறுவனம், அது நடத்திய பணப் பரிவர்த்தனைகள் அவர் வாங்கிய சொத்துக்கள் ஆகிய அனைத்தையும் அமலாக்கத் துறையினர் முடக்கிவிட்டனர்.

கார்த்தியின் நிறுவனத்துக்கு சொந்தமான ஊட்டியில் உள்ள பங்களாக்கள், கொடைக்கானலில் உள்ள விவசாய நிலங்கள்,அவரது நிறுவனத்தின் பேரில் சென்னை நுங்கம்பாக்கம் கிளையில் உள்ள DCB  வங்கியில்  இருக்கும் தொன்னூறு இலட்சம் பணம், டில்லி ஜோர் பாக் பகுதியில் உள்ள பங்களாவில் கார்த்தியின் பங்கு, சென்னை நுங்கம்பாக்கம் கிளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கார்த்தி பேரில் உள்ள பணம் ஆகியனவும் முடக்கப்பட்டுள்ளது. இவை தவிர  பிரிட்டனில் பெத்தெல்டனில் உள்ள சுரிட்ஜ் பண்னை முடக்கப்பட்டது. பிரிட்டனில் உள்ள இச்சொத்து கார்த்தியின் நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளையின் பேரில் வாங்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவில் உள்ள டென்னிஸ் கிளப்  மற்றும் அங்குள்ள நிலமும் கார்த்தியின் Advantage EstrategiaEsportiva S.L.U என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. அதுவும் அமலாக்கத் துறையினரின் முடக்கப்பட்ட சொத்து பாட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இன்னும் கார்த்தி செய்த மற்ற குற்றங்களையும் கறுப்பு பண விவரங்களையும் கண்டறியும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிதம்பர ரகசியம்

நமது பி குருஸ் செய்திதளம் பதினான்கு நாடுகளில் சிதமப்ரம் குடும்பத்தினர் வாங்கி குவித்திருக்கும் 15,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பற்றி ஏற்கெனவே செய்தி கட்டுரை ஒன்றை விரிவாக வெளியிட்டுள்ளது. படித்து பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here