ஏன் பெட்ரோலை பங்கில் குறைந்த  விலையில் விற்கலாம் – [பகுதி 2]

சர்வதேச அளவில் பங்கு சந்தையில் கச்சா எண்னெயின்  விலை மாறி இருப்பதால் இந்தியாவிலும் விலை குறைக்கப்பட்டு நடப்பு கணக்கு பற்றாக்குறையின் மீதான அழுத்தம் குறையலாம்

1
2206
பெட்ரோல் விலை இன்னும் குறையலாம்
பெட்ரோல் விலை இன்னும் குறையலாம்

இந்த தொடரின் முதல் பகுதி இங்கே

இந்தியாவில் பெட்ரோல் விலை ஏன் அதிகரித்துள்ளது என கேட்டால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது அதனால் ரூபாயின் மதிப்பு குறைந்து விலை ஏறுகிறது என்பர். ஈரான் இந்தியாவிலிருந்து டாலர்களை பெற்றுக்கொண்டு கச்சா எண்ணெயை விற்பனை செய்வதால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்துகொண்டே போகிறது.  விரைவில் இப்பிரச்சனை தீர்க்கப்படலாம்.

அக்டோபர் மாதம் பத்தாம் தேதி கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜீரோஹெட்ஜ். காம் சௌதி அராம்கோ என்ற சவுதி அரேபியாவை சேர்ந்த எண்ணெய் நிறுவனம்  இந்தியாவுக்கு வரும் நவம்பர் மாதத்தில் இன்னும் கூடுதலாக நான்கு மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் தரப் போவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. இது இந்நிறுவனத்தின் மிகப் பெரிய மாத விற்பனை ஆகும். இப்போது இந்தியாவுக்கு அதிக அளவில் எண்ணெய் விற்கும் போது இங்கு விலை குறைய வாய்ப்புக்கள் உருவாகும்.

கச்சா எண்ணெய்க்கான வருநாள் விலை

இன்றைய நிலவரப்படி எண்ணெய்க்கான வருநாள் விலை வரும் ஜனவரி முதல்  குறைந்துகொண்டே போகிறது. இவ்விலை குறைப்பு 77 டாலர் முதல் 65 டாலர் வரை குறைந்துள்ளது.  தொழிற்சாலை சராசரி கணக்கை காட்டும் டௌ குறியீடு கடந்த இரண்டு நாட்களாக கச்சா எண்ணெயின்விலைஇன்னும் குறையும் என்று கணித்துள்ளது.

பங்குச் சந்தை நிலை

இந்தியாவின் பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மூலமாக கடந்த நான்கு ஆணடுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது அதிகம் [ஐம்பது சதவீதம்] உயர்ந்துவிட்ட்து. அதாவது ஒரு வருடத்துக்கு சராசரியாக 12.5% உயர்வு என்ற கணக்குப்படி உயர்ந்துள்ளது.  அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைத் திரும்ப பெறுவதால் இந்திய சந்தையின் பங்குகளின் மதிப்பு குறையும் என்று கொள்ளக் கூடாது.  சிலரின் கணக்குப்படி கடந்த முப்பது நாட்களில் இந்தியாவின் அந்நிய முதலீடு குறைந்துள்ளது. ஆனால் பேரா.எம் டி. நலபட் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முன்கூட்டியே கணித்துச் சொன்னது போல இது ‘உருவாக்கப்பட்ட ஒரு சரிவு நிலை’ என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ரூபாயின் மதிப்பு உயர வேண்டும்

பிரதமர் மோடி ரூபாயின் மதிப்பு உயர்வதற்கு தேவையான  நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு  முணுமுணுப்போரின் வாயை அடைக்க வேண்டும். வேண்டுமென்றே ரூபாயின் மதிப்பை குறைக்கும் செயல்களை பங்கு சந்தையில் சிலர் மேற்கொள்கின்றனர் என்ற பேச்சுக்கு இடமளிக்க்க் கூடாது. அப்படி யாராவது செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாபொருளாதார ரீதியாக சர்வதேச அளவில் விரைந்து முன்னேறி வரும் நாடு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ரூபாயின் மதிப்பை பிரதமர் உயர்த்தி காட்ட வேண்டும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here