ஆதியா மீது நடவடிக்கை எடுக்கும்படி சுவாமி நிதியமைச்சருக்கு  கடிதம்

நிதி செயலர் ஹஸ்முக் ஆதியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?

2
3121
ஆதியா மீது நடவடிக்கை எடுக்கும்படி சுவாமி நிதியமைச்சருக்கு  கடிதம்
ஆதியா மீது நடவடிக்கை எடுக்கும்படி சுவாமி நிதியமைச்சருக்கு  கடிதம்

குற்றவியல் சட்டப் பிரிவு 197 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 19இன் கீழும் நடவடிக்கை தேவை, என சுவாமி வலியுறுத்தல்.

பி ஜெ பி கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நிதி செயலர் ஆதியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மேஹுல் சோக்சியும் நீரவ் மோடியும் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அதைத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடிப்போக உதவியாக இருந்தவர் இந்த ஹஸ்முக் ஆதியா என்பதால் அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று நம் செய்தி தளத்தில் பல முறை செய்தி கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம். 2017ஆம் ஆண்டு வருவாய் புலனாய்வு துறையினர்  மேற்படி ஆட்களின் அலுவலகங்களில் மற்றும்  ஷோ ரூம்களில் வருமான வரி சோதனை நடத்திய போது கிடைத்த பல ஆவணங்களை ஆதியா மூடி மறைத்து அவர்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க விடாமல் அவர்களை தப்பிக்க வைத்து விட்டார்.

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதிநீரவ் மோடி அலுவலகங்களில் தேடுதல் வேட்டை நடத்த அனுமதி பெறப்படடது.மறு நாள் சோதனை நடத்தப்பட்டது. மும்பையில் பதினைந்து இடங்களீலும் டில்லி மற்றும் ஜெய்ப்பூரில் ஒவ்வொரு இடத்திலுமாக மொத்தம் பதினேழு இடங்களில் சோதனை நடந்தது. ஃபையர் ஸ்டார் டயமன்ட், ஃபையர் ஸ்டார் டிரேடிங், ஃபையர் ஸ்டார் இன்ட்டர்னேஷனல், கீதாஞ்சலி எக்ஸ்போர்ட்ஸ், கீதாஞ்சலி ஜெம்ஸ், கீதாஞ்சலி ஜுவல்லரி ரீடெய்ல்ஸ், கீதாஞ்சலி பிரான்ட்ஸ் போன்ற நிறுவனங்களில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர்.

நீரவ் நோடியும் மேஹுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து புரிந்துணர்வு கடிதம் மூலமாக [Letter of understanding –LoU] ஏராளமான தொகையை கடன் என்ற பெயரில் பெற்று மோசடி செய்துள்ளனர். இந்தக் கடித வசதியை இவர்கள் முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர். இந்தக் குறுக்கு வழி பரிவர்த்தனை முறைகள் இந்திய வங்கியளில் காணப்படுவது அதன் சாபக் கேடாகும்

நீரவ் மோடியும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் புரிந்துணர்வு கடிதமும்

வங்கிகள் தனது வாடிக்கையாளருக்கு கடன் வழங்க பல முறைகளை கையாளுகின்றன. ஒரு தொழிலின் அளவும் திறனும் அடிப்படையாக கொண்டு அந்த தொழிலுக்கு கடன் வழங்கஅளவு நிர்ணயிப்பதுண்டு. இதனை வர்த்தக நிதி முறை அல்லது முக்கிய பணப் பரிவர்த்தனை விவரக் கலம் [Trade Finance system or Core Banking system -CBS ]  என்பர். இது ஒரு வகை சாஃப்ட்வேர்.  இதில் வங்கியின் புரிந்துணர்வு கடிதம், வங்கி உத்தரவாதம் மற்றும் கடனுக்கான கடிதம் என் அனைத்து நடைமுறைகளும் இடம்பெறும்.

பொதுவாக புரிந்துணர்வு கடிதத்தை முக்கிய பணப் பரிவர்த்தனை விவரக் கலத்துக்கு தான் [CBS] வழங்குவர். அதன் பிறகு ஸ்விஃப்ட் எனப்படும் [LoU SWIFT -Society for Worldwide Interbank Financial Telecommunication) சர்வதேச வங்கிகளுக்கு இடையிலான தொலை தொடர்பு கழகத்துக்கு அனுப்பப்படும்.  கீழ்க்காணும் படம் இந்த போக்கை தெளிவாக உணர்த்தும்.

Figure 1. Correct LoU
Figure 1. புரிந்துணர்வு கடிதம் முக்கிய பணப்பரிவர்த்தனை கலம் ஸ்விஃப்ட்

இவ்வாறு முறையான கடிதப் போக்குவரத்து நடைபெறாமல் நீரவ் மோடியின் வங்கி பரிவர்த்தனைகள்அனைத்தும்  முறை கேடாக நடந்துள்ளன. நீரவ் மோடிக்கு வழங்கிய கடனை வங்கியின் முக்கிய பணப் பரிவர்த்தனை மென்கலத்தில் [சாஃப்ட்வேர்] பதிவிடாமல் அதன் வழியாக புரிந்துணர்வு கடிதத்தை அனுப்பாமல் தனியாக ஸ்விஃப்டூக்கு அனுப்பியது தான் அங்கு நடந்த முறை கேடான செயல். இதனால் முக்கிய பணப் பரிவர்த்தனை கலத்தில் நீரவ் மோடி வாங்கிய கடனகள் குரித்து எந்தப் பதிவும் காணப்படவில்லை. அவரது புரிந்துணர்வு கடிதம் குறித்து எந்த தகவலும் அதில் இல்லை.  கீழ்க்காணும் படத்தை பார்த்து தெளிவு பெறுங்கள்

Figure 2. Bypassed LoU
Figure 2. புரிந்துணர்வு கடிதம் ஸ்விஃப்ட் வழியாக தகவல் வெளியேற்றம்

ஆதியாவும் தங்க பிஸ்கட்டும்

2018ஆம் ஆண்டு தெ வயர் [The Wire] என்ர செய்திதளம் நிதிச் செயலர் ஆதியா அன்பளிப்பாக தங்க பிஸ்கட்டுகளை பெற்றார் என்றும் அது குறித்து எந்த விசாரனைக்கும் அவர் உள்ளாகவில்லை என்ற செய்தி வெளியிட்டது. அதற்கு ஆதியா அந்த செய்தி தளத்துக்கு அளித்த பதிலில் தனக்கு தங்க பிஸ்கட்டுகள் அன்பளிப்பாக அனுப்பப்பட்டது உண்மை தான் என்றும்   ஆனால் யார் அதை எனக்கு அனுப்பியது என்பது தெரியாது என்றும் விளக்கம் அளித்திருந்தார். ஆதியா யாரை முட்டாளாக்க பார்க்கிறீர்கள்?  ஓர் அரசு உயர் அதிகாரி என்ற முறையில் நீங்கள் சி பி ஐ அல்லது டில்லி போலிசிடம் இது குறித்து தெரிவித்திருக்க வேண்டாமா. அதை விடுத்து அதை தோஷகானாவில் ஒப்படைத்தது சட்ட மீறல் அல்லவா? [தோஷாகானா என்பது குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள கருவூலம்].

தோஷாகானாவில் தங்க கட்டிகளை ஒப்படைத்தது குறித்து பிரதமருக்கு சுவாமி எழுதிய கடிதத்தில் ‘நீரவ் மோடி அன்பளிப்பாக கொடுத்த இந்த தங்கக் கட்டிகள் அடங்கிய பார்சலை தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல வந்த இன்னொரு ஐ ஏ எஸ் அதிகாரி முன்பு ஒரு பணியாள் தவறுதலாகத்  திறந்துவிட்டதால் தோஷாகானாவில் ஒப்படைத்தோம் என்று விளக்கம் அளிப்பது சட்ட மீறலாகும்.இந்த விள்க்கத்தை ஏற்பதன் மூலமாக நீங்கள் தங்க கட்டிகள் அனுப்பியவரை காப்பாற்ற முனைகிறீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.ஆனாலும் அவர் தன் கடிதத்தில் யாருக்கு இந்தத் தங்கக் கட்டிகள் வந்தன என்று அதிகாரியின் பெயரை குறிப்பிடவில்லை. அதே வேளையில் தோஷாகானாவிலும் அந்த தங்க கட்டிகளின்  இருப்பு பற்றிய எந்த பதிவும் காணப்படவில்லை.

தொலைந்த கட்டிகளும் தொலைந்து போன மனிதரும் ஒரு நாள் திரும்பி வந்து ஆதியாவை மிரட்ட போவது என்னவோ உண்மை.

நிதி அமைச்சருக்கு சுவாமி எழுதிய கடிதத்தின் நகல் கீழே தரபட்டுள்ளது:
Page 1

Figure 3. Pages 1, 2 of Swamy;s letter to Jaitley
Figure 3. Pages 1, 2 of Swamy;s letter to Jaitley

2 COMMENTS

  1. தயவு செய்து தமிழைச் சரியாக உபயோகிக்கவும். ஒற்றை முழுவதுமாக தவிர்த்தது ஏன்?!!

  2. ஒற்று எழுத்து தவிர்த்தல் என்று நீங்கள் எதை சுட்டுகிறீர்கள். சந்தி பிழை என்றால் சில சமயம் அதில் தட்டெழுத்துச் சிக்கல் ஏற்படுகின்றது. அதனால் பொருள் மாறுபடும் இடங்கள் தவிர மற்ற இடங்களில் ஒற்றெழுத்தை தவிர்க்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here