அயோத்யா வழக்கில் புதிய தீர்ப்பு, புதிய நம்பிக்கை

மதச் சார்பின்மை ஆயுதம் ஏந்தி தடுக்க முனைந்தவர்களை புறக்கணித்த உச்ச நீதிமன்றம்

0
1818
மதச் சார்பின்மை ஆயுதம் ஏந்தி தடுக்க முனைந்தவர்களை புறக்கணித்த உச்ச நீதிமன்றம்
மதச் சார்பின்மை ஆயுதம் ஏந்தி தடுக்க முனைந்தவர்களை புறக்கணித்த உச்ச நீதிமன்றம்

அயோத்யா வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில்  இந்த வழக்கை ஆராய்வதில் மத நம்பிக்கை ஒரு காரணியாக கருதப்பட மாட்டாது என்று தெரிவித்துவிட்டது.

மதச் சார்பின்மை என்ற பெயரில் எதிர்ப்பாளர்கள் சதி செய்தனர், திட்டமிட்டனர், வழக்கை முடிக்க விடாமல் இழுத்தடித்தனர், தடை போட்டனர், ஆனால் முடிவில் இன்று தோற்று போயினர். 1993இல் இருந்து இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. 2019இல் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த வழக்கு முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு உதவியாக இவ்வழக்கு தடைகளை தகர்த்து வெற்றி நடை போட நேற்றைய தீர்ப்பு உதவியிருக்கிறது.

பாபர் மசூதி இருந்த இடத்தை அரசு கையகப்படுத்திய போது அது முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் அதை கையகப்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.   அதற்கு பதிலடி கொடுத்தவர் நீதிமன்றத்தில் “இஸ்லாமில் வழிபாட்டுத் தலம் என்ற கருத்தாக்கமே கிடையாது. எனவே அந்த இடத்தை வழிபாட்டுத் தலம் என்று கருத வேண்டாம்” என தன் மனுவில் தெரிவித்துவிட்டார்.  இதனால் அந்த இடத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என்ற தடை விலகுகிறது. மதச் சார்பின்மை என்ற பெயரில் அயோத்யாவை முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலம் என்ற பெயரில் தடை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை நேற்றைய தீர்ப்பால் தகர்த்தெறியப்பட்டது. அயோத்யா  [Ayodhya title deed ] என்ற பெயரை பயன்படுத்துவதற்கு கூட வழக்கு போடப்பட்டது. ஆனால் இப்போது அந்த பிரச்சனையை நேற்றைய தீர்ப்பு தீர்த்துவிட்டது.

காங்கிரஸ் தலைவரும் மூத்த வக்கீலுமான கபில் சிபல் சில மாதங்களுக்கு முன்பு மதச் சார்பின்மை என்ற போர்வையில் இந்த வழக்குக்குள் புகுந்து தடை விதிக்க முனைந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு தடை விதித்து விட்டது. அவர் 2019 பாராளுமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்கும் வரை இந்த வழக்கு முடியக் கூடாது என்று அவர் திட்டமிட்டு செயல்பட்டார். ஆனால் அவருடைய திட்டங்கள் தவிடு பொடியாயின. அவர் தன் சார்பாக முன்னிறுத்திய சுன்னி வக்ஃப் வாரியத்தின் நீதிமன்றச் செயல்பாடு  அவருக்கு எதிராக அமைந்துவிட்டது. இது அவருக்கு பலத்த அடியாக போய்விட்டது.

மதச் சார்பின்மை என்ற பெயரில் இந்த வழக்கை இழுத்தடித்து முடிக்க விடாமல் பெருங்குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்த கோஷ்டி இப்போது அடி மேல் அடி வாங்கி திணறிக்கொண்டிருக்கிறது.

2010இல் இந்த வழக்கு அலகாபாத் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட போது சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரித்து மூன்று தரப்பினரும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அப்போது முஸ்லீம் சமய நம்பிக்கை ஒரு முக்கிய காரணியாக அவ்வழக்கில் அமைந்தததால் அவர்களுக்கும் நிலம் பிரித்தளிக்கப்ப்ட்டது. இந்து, முஸ்லிம் என பிரித்து பார்த்து தீர்ப்பு வழங்கப்பட்டது,. ஆனால் இப்போது சமய நம்பிக்கை எதையும் இவ்வழக்கின் விசாரனைக்கு அடிப்படையாகக் கொள்ளவேண்டியதில்லை என்றதால் இதை விடுத்து வழக்கு விசாரணையை தொடங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தேதி குறித்துவிட்டது.  இனி இவ்விசாரணை விரைவாக நடந்து தீர்ப்பு வெளியாகிவிடும். இதுவரை இவ்வழக்கு விசாரணைக்கு வருவதில் இருந்த தடை நேற்று விலக்கப்பட்டது.

தீபக் மிஷ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வு நீதிமன்றம் 1994இல் சமய நம்பிக்கையை ஓர் அடிப்படையாக கொண்டதை ‘கேள்விக்குரிய கவனிப்புகள்’ [questionable observations”.] என்று தெரிவித்துள்ளார். அப்போதைய வழக்கில் நிலம் கையகப்படுத்துதல் [ acquisition] தொடர்பாக விவாதிக்கப்பட்டது.  இப்போது இவ்வழக்கு குடியுரிமை வழக்காக நிலத் தகராறு [ land dispute] வழக்காககருதப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

1994இல் நடந்த வழக்கின் தீர்ப்பு மேல் முறையிட்டுக்கு வந்த போது அத்தீர்ப்பு 2:1 என்ற முறையில் அமைந்திருந்தது. அதாவது இருவர் ஆதரித்தனர், ஒருவர் ஆதரிக்கவில்லை. அப்போது அந்த தீர்ப்பை ஆதரிக்காத நீதிபதி  எஸ். ஏ. நசீர்  1994இல் அளிக்கப்ப்ட்ட தீர்ப்பை அடியொற்றி இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கருதினார்.  ஆனால் இபோது இந்த வழக்கில் நேரடியாக உயர் நீதிமன்ற வழக்கின் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, இவ்வழக்குக்கு மசூதி முஸ்லிம்களின் வழிபாட்டு தலமாக கொள்ள முடியாது என்பதை ஆராய ஒரு பெரிய அமர்வு தேவைப்பட்டது.  [முஸ்லிம்கள் எங்கு வேண்டுமென்றாலும் தொழுகை நடத்தலாம். அதற்கு மசூதியோ அல்லது குறிப்பிட்ட ஓரிடமோ  தேவை என்பதில்லை. இது தான் முஸ்லிம்களின் கோட்பாடு என்று நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது].

மதச் சார்பின்மை என்ற போர்வையில் வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியை அலட்சியப்படுத்தக் கூடாது. கவனமாக இருந்து அந்த முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.  உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை அதி சீக்கிரமாக முடித்து தீர்ப்பளிப்பது சட்டத்துக்கு மட்டுமல்ல; நாட்டுக்கும் நல்லதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here