ஜின்னாவின் இரட்டை முகம் – பாகம் 1

ஜின்னா அறிவித்த மதச் சார்பற்ற ஜனநாயகக் கொள்கைக்கு முற்றிலும் வேறாக 1949 ஆம் ஆண்டு மார்ச் ஏழாம் தேதி நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் இருந்தன

2
2011
ஜின்னா அறிவித்த மதச் சார்பற்ற ஜனநாயகக் கொள்கைக்கு முற்றிலும் வேறாக 1949 ஆம் ஆண்டு மார்ச் ஏழாம் தேதி நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் இருந்தன
ஜின்னா அறிவித்த மதச் சார்பற்ற ஜனநாயகக் கொள்கைக்கு முற்றிலும் வேறாக 1949 ஆம் ஆண்டு மார்ச் ஏழாம் தேதி நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் இருந்தன

ஜின்னா ஆகஸ்ட் 11 அன்று  “மதம், சாதி, இனம் என எதுவும் இந்நாட்டில் முக்கியத்துவம் பெறாது’’ என்று பேசிய பேச்சை கேட்ட பிறகு சில வாரங்கள் கழித்தே அந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அந்த உரையை அவர் தொடங்கிய போதே “நாம் எல்லோரும் இந்நாட்டு குடிமக்கள். இந்நாட்டின்  சம உரிமையுள்ள குடிமக்கள்’’ என்று ஆரம்பித்தார்.

பாராளுமன்றத்தில் கொள்கை முடிவுகள் [objectives resolution] எடுக்கப்பட்ட போது இதே இஷ்தியாக் ஹுசைன் குரேஷி அவற்றை ஆதரித்தார். அப்போது பாகிஸ்தானில் மிஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச இந்துக்களின் உரிமைகள் முற்றிலும் பறி போயின.

ஜின்னா அறிவித்த மதச் சார்பற்ற ஜனநாயகக் கொள்கைக்கு முற்றிலும் வேறாக 1949 ஆம் ஆண்டு மார்ச் ஏழாம் தேதி நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் இருந்தன. இவை அடுத்த ஐந்து நாட்களில் சட்ட வடிவம் பெற்றன. இஸ்லாம் வழங்கும் சமத்துவம் என்று கொள்கை மாற்றியமைக்கப்பட்டதால் அங்கு வாழும் சிறுபான்மையினருக்குத் தேவையான சலுகைகள் வழங்கப்படும் என்பது முடிவாயிற்று.

இஷ்தியாக் ஹுசைன் குரேஷி தனது நூலில் முஸ்லிம் அல்லாதவர் முஸ்லிம்களோடு ஒத்துப்போக வேண்டும்; தமக்கு கொடுக்கப்பட்ட உரிமைகளைச் சலுகைகளை பெரியதாகக் கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும். ‘முஸ்லிம்கள் மற்றவர்களுக்கு எதுவும் தரமாட்டார்கள் சம உரிமை மற்றும்  தேவையான சலுகைகள் என்ற வார்த்தைகளை தவிர’. ஜாகிர் ஹுசைன் மற்றும் மஹ்முத் ஹுசைன் என்ற இரு சகோதரர்களின் குணத்திலேயே முஸ்லிம்களின் இரட்டை முகம் தெரிந்தது.

இந்த சகோதர்களின் முன்னவர் ஜாகிர் ஹுசைன் காந்தியடிகளிடம் வந்து அங்கு வாழும் முஸ்லீம்களுக்காக மன்றாடினார்.  இந்துக்கள் மற்றும் சீக்கியரின் தாக்குதலில் இருந்து முஸ்லிம்களை காப்பாற்ற காந்தியடிகளீன் காலில் விழாத குறையாக கெஞ்சினார். அதே சமயம் அவரது சகோதரர் பாகிஸ்தானில் இருந்து கொண்டு கொள்கை முடிவுகளுக்கு ஆதரவாக கையெழுத்திட்டார். இதனால் அங்கு வாழ்ந்த சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிராக அவர் நடந்துகொண்டார். ஆனால் இந்தியாவில் இருந்த ஜாகிர் ஹுசைன் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு மதிப்பளித்து இந்தியர்கள் அவரை குடியரசுத் தலைவர் ஆக்கினர். இது போன்ற விநோதங்கள் இந்தியாவில் தான் நடக்கும் .

தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய குடியரசு

கொள்கை முடிவுகள் என்று பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட தீர்மானத்தை ஜின்னாவின் கொள்கைக்கு முரணானது என்று இந்துக்கள் எதிர்த்தனர். ஆனால் கம்யுனிஸ்டுகள் மூச்சு விடவில்லை. ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

லியாக்கத் அலி கான், இஷ்தியாக் ஹுசைன் குரேஷி, மஹுமூத் ஹுசைன் [ஜாகிர் ஹுசைனின் சகோதரர்] உமர் ஹயத் மாலிக் [பஞ்சாபில் இருந்து] என பலரும் கொள்கை முடிவுகளுக்கு [Objectives Resolution] ஆதரவாக பேசினர்.

அதன் பிறகு மியான் இஃப்திகருதீன்  என்ற இடது சாரியாளர் கொள்கை முடிவுகளுக்கு ஆதரவாக கையெழுத்திட்டிருந்தாலும் வேறு வகையாக இதற்கான எதிர்ப்பை பதிவு செய்தார்.

நிலவுடைமைத்துவமும் சுரண்டலும் இஸ்லாமிய அமைப்பில் நிரந்தரமாகிவிடுமோ என்ற அச்சத்தில் அவர் ‘’தனக்கு இது ஏமாற்றம் அளிப்பதாக’ ஒரு விமர்சனம்  போல தெரிவித்தார்.

பேரா அகமத்  பாகிஸ்தானின் முதல் வெளியுறவுத் துறை அமைச்சரான ஜஃபாருலா கான் கொள்கை முடிவுகளை ஆதரித்தார்.  இவர் அஹமதி சமூகத்தை சேர்ந்தவர்; அந்த சமூகத்தினரை முஸ்லீம் அல்லாதவர் என கருதிய பாகிஸ்தானியர் அதை தமது அரசியலுரிமை சட்டத்திலும் சேர்த்துவிட்டனர்.

அரசியலும் மதமும் தனித்தனியாக இருக்க அவெண்டும் என்ற முக்கிய கொள்கையை இந்த கொள்கை முடிவுகள் என்ற திட்டம் சுக்கு நூறாக்கிவிட்டது. இதற்கு எந்த எதிர்ப்பும் வராதவகையில் எதிர்க்கருத்து உடையவர்களே அந்தக் குழுவில் இல்லாதபடி கட்டமைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இடது சாரி சிந்தனையாளர் ஒருவர் கூட அந்தக் குழுவில் சேர்க்கப்படவில்லை, என்கிறார் அகமத்.

1956இல் இயற்றப்பட்ட அரசியல் உரிமைச் சட்டம் பாகிஸ்தானை இஸ்லாமிய குடியரசாக அறிவித்தது. அதன் தலைவராக ஒரு முஸ்லிமே வர முடியும்.பாகிஸ்தானின் அனைத்து சட்டங்களும் குரானும் ஷரியத்தும் தழுவினவாகவே இயற்றப்படும்.

இஸ்லாமியத்துக்குள் இன்னும் ஆழமாக…

1956இல் இயற்றப்பட்ட அரசியல் உரிமைச் சட்டத்தை 1958இல் இராணுவ தளபதியாக ஃபீல்டு மார்ஷலாக இருந்த அயுப் கான் மாற்றி காட்டினார். சர்வாதிகாரியாக நடந்து கொண்ட அயுப் கான் தனது  ஆட்சியில் 1962இல் பாகிஸ்தானை குடியரசு நாடாக [Republic of Pakistan] அறிவித்தார்.

முதல் முறையாக அயுப் கான் துணிச்சலுடன் சிறிதளவு இறையாண்மையை தன் நாட்டுக்குள் கொண்டு வந்தார். அவர் தன் நாட்டை இஸ்லாமியக் குடியரசு என்ற பெயரில் இருந்து மாற்றிக் காட்டினார்.

இது குறித்து விவாதிக்கும் பேரா. அகமத்  ‘பாகிஸ்தானை உருவாக்கியதில் மதச்சார்பின்மை எங்கே இருக்கிறது? மதச் சார்பின்மையை நாம் பாகிஸ்தானில் எங்கே தேடப் போகிறோம் என்றார்.

1970 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் போரை சந்தித்த பாகிஸ்தான் அதில் கிழக்கு பாகிஸ்தானை இழந்ததும் 1973இல்  புதிய அரசியல் உரிமைச் சட்டம் தோற்றுவித்தது. அதனை அலி பூட்டோவின் அரசு  தயாரித்தது.

புதிதாக 1973இல் தயாரான இரண்டாவது அரசியல் உரிமைச் சட்டம் இஸ்லாமியவாதத்தை இன்னும் கடுமையாக்கியது. இச்சட்டம் பாகிஸ்தானின் அதிபர் மட்டுமல்ல பிரதமரும் முஸ்லிமாகவே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. நாட்டை முகம்மது நபிகள் காட்டிய பாதையில் [doctrine of ‘Khatm-e-Nabwat) கொண்டு செலுத்த வேண்டும் என்று இச்சட்டம் எடுத்துரைத்தது. , என்றார் பேரா. அகமத்.

9174இல் நாடில் வாழும் அஹமதிகளை முஸ்லிம் அல்லாதவர் என்று அலி பூட்டொவின் தலைமையிலான அரசாங்கம் அறிவித்தது, காரணம் அவர்கள் முகம்மது நபியின் வாழ்வியல் முறைகளை [doctrine of ‘Khatm-e-Nabwat] பின்பற்றுவதில்லை.

1984இல் அஹமதிகள் தங்கள் இறை நம்பிக்கையை, சமயத்தை மற்றவரிடம் பிரச்சாரம் செய்யக் கூடாது, யாருக்கும் பிரசங்கம் செய்யக் கூடாது என்று அவர்களுக்கு உத்தரவு இடப்பட்டது. அவர்களை முஸ்லிம் அல்லாதவர்களாக கொண்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவ்வாறு செய்தால் அவர்கள் பாகிஸ்தானின் அபராதச் சட்டப்படி இறைமறுப்பு குற்றத்தில் ஈடுபட்டதாக கருதி தண்டிக்கப்படுவர் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.. ஜியா உல் ஹக் அதிபராக இருந்த வரை  [1978 முதல் அவர் 1988இல் மறையும் வரை] இந்நிலை நீடித்தது.

பாகிஸ்தானின் அபராதச் சட்டத்தில் இறை மறுப்பு குற்றம் என்ற சட்டப் பிரிவு 1986இல் பிரிவுகள் 295-B மற்றும் 205-C , பாகிஸ்தானில் நபிகள் நாயகத்துக்கு எதிராக அவர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவரது கருத்துகளை மறுத்துப்  பேசுவோர் அல்லது  பிரசங்கம் செய்வோர் ஆகியோர் தண்டனைக்குரிய குற்றங்கள் செய்தவராக கொள்ளப்படுவர்.

ஜியா ஆட்சியில் உருவாக்கப்பட்ட இச்சட்டப் பிரிவுகள் [blasphemy] பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாதோர் தமது சமயம் குறித்து அடுத்தவரிடம் பேசினால் கடும் அபராதம், ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தன்டனை பெறுவர், என்ற நிலையை கொண்டு வந்தது.

இவ்வாறு மூன்று விதத் தண்டனைகளில் ஏதேனும் ஒன்று கிடைக்கும் என்றிருந்த நிலையும் அடுத்து வந்த ஆட்சியில் மாறிவிட்டது. 1990இல் இராணுவத்தின் சர்வாதிகாரப் போக்குக்கு மாறாக ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட அடுத்த அரசு நவாஸ் ஷெரிஃப் தலைமையில் உருவானதும் மத்திய ஷரியத் நீதிமன்றம் இனி இறை மறுப்பு குற்றத்துக்கு தூக்கு தணடனை மட்டுமே என்ற தணடனையை அறிவித்தது.

பாகிஸ்தானின் சுருக்கமான வரலாறு  ஜின்னா முதல் வேறெந்த தலைவராக இருந்தாலும் அரசாக இருந்தாலும் பாகிஸ்தானை மதச் சார்பற்ற நாடாக உருவாக்க முன்வரவில்லை என்பது தெளிவாகிறது.

ஜின்னாவோ அவருக்குப்பின் வந்த ஆட்சியாளர்களோ சோசலிச கம்யுனிச சிந்தனைகளை தங்கள் நாட்டில் தலையெடுக்க விடவில்லை.

கம்யுனிஸ்ட் கட்சி புதிய பாகிஸ்தானில் தனக்கு நிறைய கடமைகளும் பொறுப்புகளும் இருப்பதாகக் கனவு கண்டுகொண்டிருந்தது. ஆனால் ஆரமபத்திலேயே ஜின்னா 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் நாள் மாஸ்கோவை சேர்ந்த கம்யூனிசக் கொள்கையாளர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவித்துவிட்டார்.

பாகிஸ்தான் தோற்றுவிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே மார்க்சியக் கொள்கைகளை [இறை மறுப்பு] புறக்கணித்தே வந்தது. அங்கு ஜனநாயக ரீதியிலான  மக்களாட்சி முறையே கிடையாது. அங்கு சாதாரணமாகவே ஜனநாயகப் பண்பு இருக்காது. பிறகு எப்படி கம்யுனிசத்துக்கு இடம் இருக்கும் என்று கேள்வி எழுப்புகிறார் பேரா. அகமது

பாகிஸ்தான், பேருக்கு [for name sake]ஒரு நாளைக்கு கூட ஜனநாயகக் குடியரசாக இருந்ததில்லை என்பது அவரது ஆணித்தரமான கருத்தாகும்.

பாகிஸ்தானை ஜனநாயக நாடு என்றால் அது பெரும்பான்மையினருக்கான ஜனநாயக நாடு என்று சொல்லலாம். பூட்டொவின் அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. அந்த அரசுதான் அகமதிகளை முஸ்லிம் அல்லாதவர் என்று அறிவித்தது.  இந்த சர்வாதிகாரப் போக்கை அறிமுகம் செய்தவர் பூட்டோ அதை பின்பற்றியவர் ஜியா உல் ஹக்.

தொடரும்…

2 COMMENTS

  1. Sir, it’s astonishing in between our Freedom struggle we had such people & they managed to divide our homeland and unleash such things.
    Aside Note: Sir, please bring about a android app of PGurus channel & website. It’ll be helpful for us to follow PGurus hassle free. Currently we take to different platforms like Twitter, YouTube, webpage to get updated with PGurus. Thanks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here